ப.பூ. குருதேவரின் விஜயதசமி செய்தி!

ஹிந்துக்களே, எதிர்ப்புசக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்!

‘தசரா என்றால் விஜயதசமி! இன்றைய தினம், வெறும் பாரம்பரிய உணவுகளை உண்டு வன்னி மர இலைகளை விநியோகித்து ஆனந்தமாக கொண்டாடும் உற்சவம் மட்டுமில்லை, மாறாக அதர்மத்தை எதிர்த்து தர்மத்திற்கும், அநியாயத்தை எதிர்த்து நியாயத்திற்கும் கிடைத்த வெற்றியின் உற்சவமாகும். பிரபு ஸ்ரீராமன் ராவணனை வதம் செய்து இன்றைய தினம் தர்மக்கொடியைப் பறக்க விட்டார். மகிஷாசுரமர்த்தினி துர்கை இன்றே தீய சக்திகளை அழித்தாள் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ், ஸ்வராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிக்க இன்றைய முஹுர்த்தத்தில் ‘சீமோல்லாங்கன்’ என்பதாக எல்லையைத் தாண்டினார். இத்தகைய பராக்கிரம இதிகாசத்தை நினைவுகூர்வது இன்று அவசியமாகிறது.

இன்று ‘அடி வாங்குபவன் ஹிந்து’ என்பதாக ஹிந்துக்களின் பலவீனம் முத்திரை குத்தப்படுகிறது. அண்டை நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்களின் மீது இழைக்கப்படும் கொடுமை ஆகட்டும் அல்லது நம் தேசத்திற்குள் பல்வேறு காரணங்களுக்காக ஹிந்து ஊர்வலங்களின் மீது நடக்கும் தாக்குதல் ஆகட்டும், பெரும்பான்மை ஹிந்துக்கள் வெறும் பேச்சளவில் கருத்துக்களை மட்டுமே தெரிவித்து இக்கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கின்றனர். ஹிந்துக்களே, இதை கவனத்தில் கொள்ளுங்கள், அநியாயத்தை சகித்துக் கொண்டிருப்பது தர்மத்தின் லக்ஷணம் இல்லை, மாறாக அது நம் பலவீனத்தின் லக்ஷணம். ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடந்த பிறகு வெறும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு மௌன ஊர்வலம் எடுப்பது மட்டுமே போதுமானதா? மனதை உள்முகப்படுத்தி இதுபற்றி சிந்தியுங்கள்!

ஹிந்துக்களே, விஜயதசமி என்பது எல்லைத் தாண்டுதலின் சின்னமாகும். இன்றைய எல்லைத் தாண்டுதல் என்பது, ஹிந்து சமூகத்தினரின் தாழ்வு மனப்பான்மை மற்றும் தோற்றுப் போகும் மனப்போக்கு ஆகிய எல்லைகளைத் தாண்டி, சுய அபிமானம் மற்றும் வீரம் ஆகியவற்றை அங்கீகரிப்பது ஆகும். ஒவ்வொருவருக்கும் தங்களை, தங்கள் குடும்பத்தை மற்றும் செல்வத்தைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமையை சட்டம் வழங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் மற்றும் வரக்கூடிய பயங்கர ஆபத்துக் காலத்தில் தங்களை, தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்ற எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்!

– ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜெயந்த் ஆடவலே, ஸ்தாபகர், ஸனாதன் ஸன்ஸ்தா.

Leave a Comment