சாந்தி விதி

Contents

1. நோக்கம்

வயதாகும் போது, இந்த்ரியங்கள் சிறிது சிறிதாக வலுவிழக்கத் துவங்குகின்றன. உதாரணமாக, காது கேளாமல் போவது, பலவித வியாதிகள் வருவது போன்றவை. தெய்வங்களின் க்ருபையால் அந்த நபருக்கு பரிகாரம் கிடைக்கவும் எஞ்சிய வருடங்களை அமைதியாக கழிக்கவும் சாஸ்திரப்படி 50 வருடத்திலிருந்து 100 வயதுவரை ஒவ்வொரு ஐந்தாவது வருடமும் சாந்தி விதி செய்யப்பட வேண்டும்.

2. சாந்தி செய்யும் நாள்

ஒவ்வொரு சாந்தி விதியையும் அந்த நபரின் பிறந்த நாளன்று செய்ய வேண்டும். அன்று சுபதினமாக இல்லாது போனால் அவரின் ஜென்ம – நக்ஷத்திரம் வரக்கூடிய மற்றொரு தினம் அல்லது வேறு சுபதினத்தில் செய்யலாம்.

3. வயதிற்கு தகுந்த சாந்தி விதி, சாந்தியின் முக்கிய தெய்வம் மற்றும் ஹோமத்திற்கான பொருட்கள்

வரிசை எண் சாந்தி விதியின் வகை நடத்தப்படும் வயது பிரதானதெய்வம் ஹோம திரவியம்
1 வைஷ்ணவி சாந்தி 50 விஷ்ணு ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
2 வாருணீ சாந்தி 55 வருணன் ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
3 உக்ரரத் சாந்தி 60 மார்கண்டேயர் ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம் அருகம்புல்
4 ம்ருத்யுஞ்ஜய மஹாரதி சாந்தி 65 ம்ருத்யுஞ்ஜய மஹாரத் ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
5 பைமரதி சாந்தி 70 பீமரதம்ருத்யுஞ்ஜய ருத்ர உருக்கிய நெய்யில் ஊறிய எள்ளு
6 ஐந்த்ரி சாந்தி 75 இந்திரகௌசிக ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
7 ஸஹஸ்ர சந்திரதர்ஷன் சாந்தி 80 சந்திரன் உருக்கிய நெய்
8 ரௌத்ரி சாந்தி 85 ருத்ரன் ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
9 செளரி சாந்தி 90 காலஸ்வரூப சூர்யன் ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
10 த்ரயம்பக ம்ருத்யுஞ்ஜய சாந்தி 95 ம்ருத்யுஞ்ஜயருத்ர ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்
11 மஹா ம்ருத்யுஞ்ஜய சாந்தி 100 மஹாம்ருத்யுஞ்ஜய ஸமித்து, உருக்கிய நெய், அன்னம், பாயசம்

4. ஸஹஸ்ரசந்திரதரிசன  சாந்தி விதியின் மஹத்துவம்

‘பூஜை செய்யும் இடத்தில் ஏழு பாக்குகளில் ஸப்தரிஷிகளின் ஆவாஹனம் செய்யப்பட்டது.  அவற்றில் ஒன்று விழிப்படைந்து. அதிலிருந்து மிக ப்ரகாசமான மஞ்சள் நிற ஒளி வெளிப்பட ஆரம்பித்தது. அந்த ஸ்தானத்தில் மஹரிஷி வியாஸரின் தரிசனம் எனக்கு ஏற்பட்டது., நான் அவரிடம் பிரார்த்தனை செய்தேன். ‘ஈச்வரனிடமிருந்து ஞானம் கிடைக்க எந்த குணம் தேவை, பகவானிடமிருந்து ஞானம் பெறும்போது எந்த பாவத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்றுத் தர வேண்டும்’. அதற்கு அவர் புன்முறுவல் பூத்து கண்களை மூடி ஸஹஸ்ரசந்திரதரிசன விதிக்குரிய ஞானத்தை எனக்கு தந்து அருளினார்’. – குமாரி மதுரா போஸ்லே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

4 அ. சிவனின் தாரக(காக்கும்) ரூபத்தால் சந்திரனுக்கு ஸமானமான சைதன்யமும் ஆனந்தமும் கிடைக்க வேண்டியும் ஆயிரம் சந்திரனுடைய குளுமையும் மற்றும் சைதன்யத்தையும் வழங்கக்கூடிய ஆற்றல் படைத்த சந்திரனின் சூட்சும தரிசனம் பெறவும் சஹஸ்ரசந்திரதரிசன விதி செய்யப்படுகிறது

‘சிவன் ஸமாதியில் லயித்து பெரும்பாலும் வெளிப்படாத நிலையில் உள்ளார். சிவனின் தாரக ரூபம் எப்பொழுதாவது  வெளிப்படுகிறது.  சிவனின் தாரக ரூபத்தால், சந்திரனுக்கு ஸமமான சைதன்யம் மற்றும் ஆனந்தத்தைப் பெற்று வாழ்வில் சிவனின் ஆசிர்வாதம் பெற செய்யப்படும் விதியே சஹஸ்ரசந்திர தரிஸனம் ஆகும். சிவனின் ஆசீர்வாதம் கிடைப்பதால் ஜீவனின் உலக மற்றும் ஆன்மீக கஷ்டங்கள் மறைந்து கவலைகள் அற்றுப் போகின்றன. ஆயுள் விருத்தியும் ஏற்படுகிறது. இந்த விதிப்படி ஒரு சந்திரனை தரிஸனம் செய்வது நம் நோக்கம் அல்ல. மாறாக ஆயிரம் சந்திரனின் குளுமையையும் சைதன்யத்தையும் தரவல்ல சூட்சும சந்திரதேவனை தரிஸிப்பதே இந்த விதியின் நோக்கம்.  இவ்விதியின் மூலம் கிடைக்கும் சைதன்யத்தால் ஒருவரின் லிங்கதேஹத்திற்கு  (சூட்சும சரீரம்)  இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, மாறாக வரக்கூடிய ஜன்மங்களிலும் சைதன்யத்தின் பயன் கிடைக்கிறது.

4 ஆ. சிவன் மற்றும் சந்திரன் மூலம் கிடைக்கும் சைதன்யத்தால் ஒருவரின் ஆன்மீக கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கின்றன

4 இ. மரணத்திற்குப் பின் ஒருவரின் லிங்க தேஹத்தை சுற்றி பாதுகாப்பு கவசம் நிர்மாணமாகிறது

சைதன்யம், வெள்ளி நிற நீரைப் போன்றது.  அதில் கனம் இல்லை.  அது மிகவும் லேசாக இருப்பதால், லிங்கதேஹத்தால் சுலபமாக க்ரஹிக்க முடிகிறது.  மரணத்திற்குப் பின் இந்த சைதன்யம் லிங்கதேஹத்தோடு செல்கிறது.  இந்த சைதன்யத்தின் குளுமை சூட்சும வாயுவை ஸ்பர்ஸிக்கும்போது திடப்பட்டு சைதன்யமய பாதுகாப்பு கவசமாக மாறுகிறது.  இதையே ‘தாரக ரூபத்தில் இருந்து மாரக ரூபத்திற்கு சைதன்யத்தின் மாற்றம்’  என்கிறோம்.

4 ஈ.  விதிகளோடு சம்பந்தப்பட்ட மந்திரங்களை ஜபிப்பதினால் ஏற்படும் பலன்

1. விதிப்படியான மந்திரத்தில், ஸாதனை மற்றும் ஜீவனின் லக்ஷியம் சொல்லப்பட்டுள்ளது.  அதனால் லிங்கதேஹத்தில் சைதன்யத்தோடு கூட ஸாதனை பற்றிய ஸம்ஸ்காரமும் ஏற்படுகிறது.

2. மரணம்வரை மற்றும் இறக்கும் தறுவாயில் இந்த ஞானம் ஞாபகத்திற்கு வருவதால் ஜீவனுக்கு அஹம்பாவம் குறைய வாய்ப்புள்ளது.

3. ஜீவனின் மனதில் ‘ஸத்’ விஷயங்களைப் பற்றிய சிந்தனை ஏற்படவும் அதனின் ஸாத்வீகத் தன்மை அதிகரிக்கவும் உதவி கிடைக்கிறது.

4. இக்காரணத்தால் மீண்டும் ஜன்மம் எடுக்கும்போது தீய சக்திகளின் தாக்குதல்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது.

5. இத்தகைய ஜீவனை கர்ப்பத்தில் தரிக்கும் மாதாவிற்கு பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்தின் போதும், உடல், மனம் மற்றும் ஆன்மீக உபாதைகள் ஏற்படுவது மிகவும் அரிது.  மாறாக, கர்ப்பத்திலுள்ள ஜீவனின் சூட்சும தேஹத்திலுள்ள சைதன்யம் மற்றும் ஸாதனை என்ற ஸன்ஸ்காரங்களால் மாதாவிற்கு அந்த ஜீவனின் ஸத்ஸங்கம் கிடைக்கிறது.  மற்றும் ஆனந்தமும் சைதன்யமும் கிடைக்கிறது.

4 உ. நிகழ்காலத்தில், இந்த ஜன்மாவில், வயதான பின் செய்யப்படும் சாந்தி விதியின் பயன், வருங்காலத்தில் வரக்கூடிய ஜன்மாக்களில் மாயையிலிருந்து விடுபடச் செய்து அதிவிரைவில் ஸாதனையின் பக்கம் திரும்ப வைக்கிறது’

– மஹரிஷி வியாஸ பகவான் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக,05.05.2006,  மதியம் 12)

5. சாந்தி விதி எப்படி செய்யவேண்டும் என்ற விஷயம் தர்மசாஸ்திர நூல்களில் உள்ளன. கீழே தரப்பட்டுள்ள நூலில் முக்கியமாக சாந்திவிதியின் மஹத்துவம் கூறப்பட்டுள்ளது

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘குடும்ப தார்மீக காரியங்கள் மற்றும் ஸமூக காரியங்களின் சாஸ்திரம்’

 

Leave a Comment