திறப்புவிழா மற்றும் மரியாதை செய்தல்

1. திறப்புவிழா(உத்காடன்)

‘உத்காடன்’ என்ற வார்த்தையில் ‘உத்’ என்றால் வெளிப்படுத்துவது. தெய்வ அதிர்வலைகளை வெளிப்படுத்தி வாஸ்துவில் அதை ஸ்தாபனம் செய்ய பிரார்த்தனை செய்வதே ‘உத்காடன்’ அல்லது ‘திறப்பு விழா’ ஆகும்.

1 அ. மஹத்துவம்

ஹிந்து தர்மத்தில் ஒவ்வொரு காரியமும் ஆன்மீக சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒரு ஜீவன் தர்ம நெறியை வழுவாமல் கடைபிடிக்கும் போதுதான் தர்மசாஸ்திரம் முழு பலனைத் தருகிறது. எந்த ஒரு பண்டிகைக்கும் காரியஸித்திக்கும் தெய்வங்களின் ஆசீர்வாதம் மிகவும் தேவை. சாஸ்திரப்படி திறப்பு விழா செய்வதன் மூலம் தெய்வீக அதிர்வலைகள் அந்த வாஸ்துவிற்கு வந்து பாதுகாப்பு கவசம் ஏற்பட உதவி புரிகிறது. அங்குசத்தால் தீய சக்திகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் திறப்புவிழாவை விதிப்படி, ஆன்மீக சாஸ்திரப்படியே  செய்ய வேண்டும்.

1 ஆ. திறப்பு விழாவின் வழிமுறைகள்

தேங்காய் உடைப்பது, குத்துவிளக்கு ஏற்றுவது ஆகியவை வாஸ்துசுத்தி ஏற்படுத்துவதற்கும் திறப்புவிழாவிற்கும் தேவையான மிக முக்கிய விதிகள்.

சொற்பொழிவுகள், ஸாஹித்ய ஸம்மேளனங்கள் மற்றும் ஸங்கீதவிழாக்கள் ஆகியவற்றிற்கு குத்துவிளக்கேற்றி திறப்பு விழா செய்யப்படுகிறது. மேடையை நிர்மாணிக்கும் முன்பு தேங்காய் உடைத்து விழாவை குத்துவிளக்கேற்றி திறப்பு விழா செய்ய வேண்டும்.  வாஸ்துசுத்திக்காக தேங்காய் உடைக்கப்படுகிறது. வியாசபீடம்   ஞானதானம் வழங்கும் இடமாதலால் அது ஞானபீடமாகிறது. அதனால் குத்து விளக்கு ஏற்றுவது மிக மஹத்துவம் நிறைந்த செயலாகும்.

கடைகள், நிறுவனங்கள் ஆகியவை பெரும்பாலும் உலக விஷயங்களோடு சம்பந்தப்பட்டவை. அதனால் அவற்றின் திறப்புவிழாவில் குத்துவிளக்கேற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதனால் தேங்காய் மட்டும் உடைக்கப்படுகிறது.

1 இ. மஹான்களின் கர – கமலங்களினால் திறப்பு விழாவை நடத்துவதன் மஹத்துவம்

மஹான்களின் இருப்பால் மட்டுமே ப்ரம்மாண்டத்திலிருந்து அவசியமான தெய்வங்களின் அதி சூட்சம அதிர்வலைகள் அவ்விடத்திற்கு ஆகர்ஷிக்கப்பட்டு செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால் சுற்றுப்புற சூழ்நிலை சைதன்யம் நிரம்பியதாகவும் தூய்மை நிறைந்ததாகவும் ஆகிறது. அதோடு அந்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது. அதனால், மஹான்களின் கர-கமலங்களினால் செய்யப்படும் திறப்பு விழாவில் தேங்காய் உடைக்க வேண்டிய அவசியம் இல்லை.

2. மரியாதை செய்வது(ஸத்கார்)

2 அ. ஆன்மீக அர்த்தம் மற்றும் அதன் மஹத்துவம்

‘ஸத்கார்’ என்றால் ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் ஒரு ஜீவனின் தேகத்திலிருந்து வெளிப்படும் ஸாத்வீக அதிர்வலைகளால் சுற்றுப்புறத்தில் உருவான ஸாத்வீகமான வாயு மண்டலத்திற்கு செய்யும் பூஜை ஆகும்.  மரியாதை செய்வது என்பது ஸகுண உபாஸனையின் ஒரு அங்கமாகும்.

ஹிந்து தர்மத்தில் ஒவ்வொரு ஜீவனுக்கும் (உதாரணம் சுவாஸினி) மரியாதை செய்து, நன்றி உணர்வோடு சைதன்யம் மிகுந்த பரிசுகளை அளிப்பது மிகுந்த நன்மை அளிப்பதாகும். இதனால் ஒவ்வொரு செயலின் மூலமும்  நம் ஸாதனை பக்தி பூர்வமாக ஆகிறது.

2 ஆ. மரியாதை யாருக்கு செய்ய வேண்டும்?

இன்று நடைமுறைப் பழக்கத்தில் ‘ஸத்கார்’ என்றால் ‘மரியாதை செய்வது’ என்றாகி விட்டது. ஆனால் ஸத்கார்-ன் ஆன்மீக அர்த்தம், ‘ஸத் காரியங்களில் ஈடுபடும் ஒரு ஜீவன்’ என்பதாகும். ஹிந்து தர்மப்படி, யார் மற்றவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்களோ, அதாவது ஸமஷ்டி ஸாதனையில் ஈடுபடுகிறார்களோ அவரே ஸத்கார் செய்யப்பட தகுதியானவர்.

2 இ.  யார் மரியாதை செய்ய வேண்டும்?

மரியாதை (ஸத்கார்) செய்யும் நபரின் ஆன்மீக நிலை 40 சதவீதத்திற்கு மேலே இருக்க வேண்டும். ஈச்வரனிடம் பக்தி கொண்ட நபரின் மூலம் மரியாதை செய்யும் போது ப்ரம்மாண்டத்திலுள்ள தெய்வங்களின் செயல்பாட்டில் உள்ள அதிர்வலைகளை ஆகர்ஷிப்பது சுலபமாகிறது. அதோடு தெய்வங்களின் தத்துவம் குறைந்த காலத்திற்குள்ளாகவே ஸமஷ்டிக்காக செயல்பட ஆரம்பித்து அங்குள்ள அனைத்து ஜீவன்களுக்கும் ஈச்வர சைதன்யம் கிடைக்கச் செய்கிறது.

2 ஈ. மரியாதையின்போது செய்யப்படும் காரியங்கள்

2 ஈ 1. திலகமிடுதல் 

மஹான் அல்லது மரியாதை  செய்யப்படுபவருக்கு  சந்தன திலகம், குங்குமத்திலகம் அல்லது பெண்மணியாக இருந்தால் மஞ்சள் – குங்குமம் இட வேண்டும். மஹானுக்கு வலது கையின் மோதிர விரலாலும் (உதாரணம் ஹிந்துத்வவாதி) மற்றவருக்கு வலது கையின் மத்ய விரலாலும் திலகம் ( அல்லது மஞ்சள்- குங்குமம்) இட வேண்டும்.

சாஸ்திரம் : குங்குமம் இடுவது என்பது அவருக்குள் இருக்கும் தெய்வத்தன்மைக்கு பூஜை செய்வதாகும்.

2 ஈ 2. பொன்னாடை, வேஷ்டி – அங்கவஸ்திரம் அர்ப்பணம் செய்தல் 

மஹானுக்கு பொன்னாடை அர்ப்பணிக்க வேண்டும். மற்றவருக்கு பொன்னாடை அல்லது வேஷ்டி – அங்க வஸ்திரம் (வேஷ்டி அணியாதவறென்றால் வேறு வஸ்திரம்) அர்ப்பணிக்கலாம். பொன்னாடை அர்ப்பணிக்கும் பொழுது அதை பிரித்து, அவரைச் சுற்றிப் போர்த்த வேண்டும். பிறகு அவருக்கு தேங்காய் அளிக்க வேண்டும். தேங்காயின் குடுமி மரியாதை செய்யப்படுபவரை நோக்கி இருக்க வேண்டும். வேஷ்டி – அங்க வஸ்திரம் (அல்லது வேறு வஸ்திரம்) அளிக்கும் போது அதில் தேங்காயை வைத்து மரியாதை செய்யப்படுபவரிடம் அளிக்க வேண்டும். தேங்காயின் குடுமி மரியாதை செய்ப்படுபவரை நோக்கி இருக்க வேண்டும்

சாஸ்திரம் : மஹானுக்கு பொன்னாடை அர்ப்பணிப்பது என்பது மஹானிடம் செயல்பாட்டிலுள்ள ஈச்வர தத்துவத்திற்கு உருவமளித்து  அது ஸகுண ரூபத்தில் எப்போதும் வந்து செயல்பட வேண்டும்  என பிரார்த்திப்பது  ஆகும். பொன்னாடை மற்றும் தேங்காய் அளிப்பது என்பது அந்த மஹானிடத்திலுள்ள ஈச்வர தத்துவத்திற்கு அளிக்கப்படும் ஸன்மானம் ஆகும். தேங்காய், மஹானிடமிருந்து வெளிப்படும் அதிர்வலைகளை ஆகர்ஷித்து, சூழலில் வெளியிடுவதற்கு உதவுகிறது. தேங்காய், மங்களகாரியங்களின் சின்னமாகும்.

2 ஈ 3.மலர்மாலை அணிவிப்பது 

மஹானுக்கு ஸன்மானம் அளிக்கும்போது அவருக்கு மலர்மாலை அணிவிக்கவேண்டும். மற்றவர்களுக்கும் மலர்மாலை அணிவிக்கலாம் அல்லது மலர் செண்டு வழங்கலாம்..

சாஸ்திரம் : மலர்மாலை அணிவிப்பது என்பது அவருக்கும் அவரை சுற்றியுள்ள ஸாத்வீகமான வாயுமண்டலத்திற்கும் பூஜை செய்வதாகும்.

2 ஈ 4. ஆரத்தி எடுப்பது 

ஆரத்தி தட்டின் மத்ய பாகத்தில் மஹானுக்காக  நெய் தீபம் (மற்றவருக்கு எண்ணெய்  தீபம்), தீபத்திற்கு அருகில் (நம் இடது பக்கம்) சிறிது அக்ஷதை மற்றும் பாக்கு வைக்கவேண்டும். தீபத்திற்கு சந்தனம், மலர் அர்ப்பணிக்கவேண்டும்.

சாஸ்திரம் : ஆரத்தி மூலமாக ஆரத்தி எடுக்கப்படுபவருக்கு தெய்வீக ஆசிர்வாதம் சுலபமாக கிடைக்கிறது.

2 ஈ 5. தாம்பூலம் வழங்குதல்

சுமங்கலிகளுக்கு ரவிக்கை துணி, தேங்காய் மற்றும் புடவையை அர்ப்பணிக்கவும்.

சாஸ்திரம் : பெண்கள் ஆதிசக்தியின் சின்னம், அதனால் அவருக்கு இவ்வாறு தாம்பூலம் வழங்கப்படுகிறது.

2 ஈ 6. பரிசு வழங்குதல்

மஹானுக்கு / மற்றவருக்கு தேசம், தர்மம், அல்லது ஆன்மீகம் சம்பந்தமான புத்தகம் அல்லது ஒலிநாடாவுடன் இனிப்பும் வழங்கவேண்டும். மற்றவருக்கு பொன்னாடை அல்லது வேஷ்டி – அங்க வஸ்திரம் (வேஷ்டி அணியாதவறென்றால் வேறு வஸ்திரம்) வழங்காவிட்டால் பரிசுபொருளுடன் தேங்காய் வைத்து தரவேண்டும். தேங்காயில் குங்குமம் இடப்படவேண்டும். தேங்காயின் குடுமி மரியாதை செய்யப்படுபவரை நோக்கி இருக்க வேண்டும்

 சாஸ்திரம் : மஹானுக்கு பரிசுப்பொருள் அளிப்பதன் மூலம் செய்யப்படும் அர்ப்பணம் ஸத்காரியமாகிறது.

 

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘குடும்ப தார்மீக காரியங்கள் மற்றும் ஸமூக காரியங்களின் சாஸ்திரம்’

 

Leave a Comment