ஸ்ரீ துர்காதேவியின் நாமத்தை ஜபித்தல்

Article also available in :

தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கான வழிபாட்டு முறைகள் ஒவ்வொரு யுகத்திற்கும் வேறுபடும். ‘கலியுகத்தில் கடவுளை அடைவதற்கு கடவுளின் பெயரை மட்டுமே வழியாக’ மகான்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது கலியுகத்தில் கடவுளின் பெயரை உச்சரிப்பது சிறந்த ஆன்மீக பயிற்சி என்பதை இது குறிக்கிறது. ஆழ் மனதில் நாமஜபத்தை பற்றிய எண்ணம் பதியும் வரை, சத்தமாக உச்சரிப்பது நன்மை பயக்கும். ஒரு தெய்வத்தின் வடிவம், சுவை, வாசனை மற்றும் ஆற்றல் ஆகியவை அதன் பெயருடன் உள்ளன. தெய்வத்தின் பெயரை உச்சரிக்கும்போது அல்லது அதைக் கேட்கும்போது, இதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

 

 இந்த மந்திரத்தை உங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யாதீர்கள் அல்லது பதிவு செய்து பகிராதீர்கள்.

‘துர்கா’ என்ற வார்த்தையின் பொருள் விளக்கம்

‘ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ’ என்ற நாமஜபத்தில், ‘துர்கா’ என்ற சொல்லில் உள்ள ‘த’ என்ற எழுத்து அசுரர்களை அழிப்பதைக் குறிக்கிறது. துர்காவிலுள்ள  ‘துர்’ என்பது தீய சக்தியையும் (எதிர்மறையையும்), ‘கா’ என்பது வெளியேறுதல் அல்லது அழிவைக் குறிக்கிறது. இவ்வாறு தீமையை அழிப்பவள் துர்க்கை.

காக்கும் அல்லது அழிக்கும் வடிவிலுள்ள தெய்வங்களின் மந்திரம் காக்கும் அல்லது அழிக்கும் நாமஜபம்  என்று அழைக்கப்படுகிறது.

முக்கியமாக மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கருத்து என்னவென்றால், நவராத்திரி பண்டிகையின்போது, தேவி தத்துவம்  மற்ற நாட்களை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். எனவே, தேவி தத்துவத்தின் முழு பலனைப் பெற, ‘ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ’ என்று அதிகபட்ச அளவு உச்சரிக்க வேண்டும்.

மகான்களின் வழிகாட்டுதலுடன் உருவாக்கப்பட்ட நாமஜபங்கள்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாமஜபங்களின் சிறப்பு என்னவென்றால், ஸனாதனத்தின் பெண் ஸாதகர் குமாரி தேஜல் பாத்ரிகர் அவர்கள், பரம் பூஜ்ய  (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்ட அறிவியல் சோதனைகள் மூலம்  உருவாக்கியவை ஆகும்.

இந்த நாமஜபங்களைக் கேட்க இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும் : www.Sanatan.org/Chaitanyavani 

 

 

 

Leave a Comment