குதுப்மினார் பற்றிய சில உண்மைகள்

Contents

‘தில்லியிலுள்ள ஸாகேத் நீதிமன்றத்தில் குதுப்மினார் யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய ஒரு வழக்கு போடப்பட்டது. அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் 17 அக்டோபர் 2022 அன்று வாதாடப்பட உள்ளது. பெரும்பாலும் பல முஸ்லிம்கள் குதுப்மினார் மீது தங்களுக்கே உரிமை உள்ளதாகக் கூறுகின்றனர்; ஆனால் உண்மையில் குதுப்மினாரை யார் கட்டினார்கள்? அது என்னவாக இருந்தது? இது பற்றி வெளிச்சம் காட்டும் கட்டுரை இங்கு வழங்கப்படுகிறது.

ஆச்சார்ய வராஹமிஹிரர்

ஆச்சார்ய வராஹமிஹிரர் பல வேதயந்திரங்கள் மற்றும் வேதசாலைகளை உருவாக்கியவர். தில்லியின் மிஹரௌலியில் உள்ள மேருஸ்தம்பம் என்பது வராஹமிஹிரர் அவர்களின் அற்புத வேதசாலையே என்பதை நிரூபணம் செய்வதற்கான ஒரு முயற்சியே இது. இதற்கு நீங்கள் அதன் நிர்மாணத்தின் அவசியம், நிர்மாணிக்கப்பட்ட காலம், அதன் வடிவமைப்பு, அதன் உடைந்த பாகங்கள், அதன் இதிகாசம், அதன் கட்டடக்கலையின் எல்லா விஷயங்கள் ஆகியவற்றை மிக உன்னிப்பாக பயில்வது அவசியமாகிறது.

ஜோதிடர் டாக்டர் ஜிதேந்திர வியாஸ்

1.    கொடூர குத்புதீன், ஹிந்துக்களின் இனப்படுகொலை செய்து கோவில்களை இடித்து அங்கு மசூதிகளை எழுப்புனான்

‘தப்காத்-ஏ-நாஸிரி’ என்ற இதிஹாச நூலில் குத்புதீனின் சிறுவிரல் அறுபட்டதாக குறிப்பு வருகிறது. அதனால் அவன் ‘ஐபக்’ (விரல்களில் குறைபாடு) என்று கூறப்படுகிறான். மற்றொரு இதிஹாச நூலான ‘தாஜுல்-மா-ஆஸீர்’-ல் குத்புதீன், காஃபிர்களை (ஹிந்துக்களை) அழித்தவன் என்ற குறிப்பு வருகிறது. அவன் தன் கூர் வாளால் மூர்த்தி பூஜை செய்பவர்களின் வாழ்க்கையை நரகக் குழியில் தள்ளினான். விக்ரஹங்கள், மூர்த்திகள் ஆகியவற்றை எல்லாம் மசூதி மற்றும் மதரஸாக்களின் படிக்கட்டுகள் ஆக்கினான். அவனுடைய இந்த கொடூர செயல்களால் நௌஷேரா, ருஸ்தம் மற்றும் ஹாதிமதாயீ ஆகியோரின் தாக்குதல்களும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

வருடம் 1206 முதல் 1210 வரை ஹிந்துஸ்தானத்தின் முஸ்லிம் பெரும்பான்மை பூபாகங்கள் சுல்தான் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இந்த 4 வருடங்களில் குத்புதீனின் அதிகபட்ச நேரம் பல இடங்களில் அவனை எதிர்ப்பவர்களை அடக்குவதில் கழிந்தது. இக்காலத்தில்தான் 2 முறை கஜனி படையெடுத்தான், சில சிறிய பெரிய யுத்தங்களில் அவனின் மற்ற நேரம் கழிந்தது; நவம்பர் 1210 முதல் நாளில் லாஹூரின் நாற்முனை சவுக்கத்தில் குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்து போனான்.

2.    எந்த ஒரு இதிஹாசக்காரரும் குதுப்மினாரைக்
கட்டிய பெருமையை குத்புதீனுக்கு அளிக்காதிருத்தல்

உலகிலுள்ள எந்த இதிஹாசக்காரரும் குதுப்மினாரைக் கட்டிய பெருமையை குத்புதீனுக்கு அளிக்கவில்லை. பிரபல இதிஹாசக்காரரும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் நீதிபதியுமான ஆர். பி. கம்வர் சென் அவர்கள் இதுபற்றி ஒரு முழு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் ‘குத்புதீன் ஐபக்கிற்கும் இந்த குதுப்மினாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக்கி உள்ளார். அதே பெயரைக் கொண்டு வேறு ஒருவர் கட்டினார் என்று வைத்துக் கொண்டாலும்  ‘அவர் இந்தப் பணியை எப்போது துவங்கினார்,? அதற்காக மொத்தம் எவ்வளவு நபர்கள் ஈடுப்பட்டனர்? கட்டிட அமைப்பாளர்கள் யார் யார்? இதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இது முழுமையாக எப்போது முடிக்கப்பட்டது? மற்றும் குத்புதீன் ஐபக்கின் குறிப்பேடுகளில் எங்கும் கி.மு. 280 வருட புராதனமான ‘கருடஸ்தம்பம்’ ஏன் இடம் பெறவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

3.    முஸ்லிம் இதிஹாசக்காரர்கள் ‘குதுப்மினார்’
கட்டிய பெருமையை குத்புதீனுக்கு வழங்குதல்

‘குதூப்’ என்பது ஒரு உருது வார்த்தை; அதன் அர்த்தம் ‘துருவ’ என்பதாகும். குதுப்மினாரின் சாதாரண அர்த்தம் ‘துருவஸ்தம்பம்’ அதாவது ‘துருவ நக்ஷத்திரங்களைப் பார்க்கும் இடம்’ என்பதாகும். அரபு மொழியிலும் குதுப்மினாரின் அர்த்தம் ‘நக்ஷத்திர பரிசீலனை ஸ்தம்பம்’ என்பதாகும். அதாவது இந்த ஹிந்து ஸ்தம்பம் நக்ஷத்திரங்களை ஆய்வு செய்ய பயன்பட்டது. அதனால் சாதாரண வழக்கு மொழியில் இது ‘குதுப்மினார்’ என அழைக்கப்பட்டது. இன்றும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு திசைகளைக் காட்டும் காம்பஸ் யந்திரத்தை சாதாரண வழக்கில் ‘குதுப்நாமா’ அல்லது ‘குதுப்கடிகாரம்’ என்று கூறும் வழக்கம் உள்ளது. முஸ்லிம் இதிஹாசக்காரர்கள் இந்த சாதாரண வார்த்தையை குத்புதினுடன் சேர்த்து குதுப்மினார் கட்டிய பெருமையை குத்புதீனுக்கு வழங்கியுள்ளனர்.

4.    தில்லியில் குதுப்மினார் என்று கூறப்படும்
இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பல
தெய்வங்களின் மூர்த்திகள் கிடைத்தல்; ஆனால்
அவை மர்மமாக மறைக்கப்பட்டு காணாமல் போதல்

மேருஸ்தம்பத்தின் உண்மையான அமைப்பு இன்று போல் கிடையாது, அது மிக விசாலமானதாக இருந்தது. 27 நக்ஷத்திரங்களைப் புரிந்து கொள்வதற்காக அதன் நான்கு பக்கங்களிலும் 27 நக்ஷத்திர பவனங்கள் இருந்தன. இன்றைய கணக்குப்படி அவற்றைக் கட்ட பல கோடி ரூபாய்கள் செலவாகலாம். இந்த ஸ்தம்பம் ‘தில்லியின் அலை’, பிருத்விராஜனின் ‘விஜய்ஸ்தம்பம்’, ‘சூர்யஸ்தம்பம்’, ‘வேத ஸ்தம்பம்’, ‘விக்கிரமஸ்தம்பம்’ போன்ற பெயர்களில் பிரபலமாக இருந்தன. வருடம் 1976-ல் தில்லியில் குதுப்மினார் என்று அழைக்கப்படும் இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் பல தெய்வ மூர்த்திகள் கிடைத்தன. சில மூர்த்திகள் அடித்தளத்தைத் தோண்டும்போதும் சில சுவற்றிலிருந்தும் கிடைத்தன. அந்தக் காலத்தில் தொல்பொருள் ஆராய்ச்சித் துறைக்கு ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மந்திரியாக இருந்தார். குதுப்மினார் பற்றிய குறிப்புகளிலிருந்து மேலும் தெரிவது என்னவென்றால் பல ஹிந்து ராஜாக்கள் மற்றும் முஸ்லிம் சுல்தான்கள் அவ்வப்பொழுது இதை சரி செய்துள்ளனர்; ஆனால் எங்கும் இந்த கட்டிட அமைப்பின் பெயர் ‘குதுப்மினார்’ என்று குறிப்பிடப்படவில்லை, அதோடு இதை கட்டியதாக குத்புதீன் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவ்விரு விஷயங்களும் அதோடு குதுப்மினாரில் ஹிந்து சின்னங்கள் கிடைத்ததும் அவருக்கு சரியாகப் படவில்லை. அகழ்வாராய்ச்சியில் என்னென்ன ஹிந்து சிலைகள் கிடைத்தனவோ அவை அன்றிரவே பதுக்கப்பட்டு வெகு தூரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மறைக்கப்பட்டன.

5.    அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மூர்த்திகள் இவ்வாறு
பதுக்கப்பட்டதை எதிர்த்து பிரபல இதிஹாசகாரர் மறைந்த
பு. நா. ஓக், அன்றைய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் தலைவரிடமும் ஜனாதிபதியிடமும் முறையீடு செய்தல்

தெய்வ மூர்த்திகளின் பதுக்கல் பற்றி பிரபல இதிஹாசக்காரரான மறைந்த பு. நா. ஓக் அவர்கள் மார்ச் 1987 மற்றும் 1988-ல் பல முறையீடுகளை பாரதத்தின் அன்றைய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் தலைவரான ஜாகதபதி ஜோஷி அவர்களிடமும் அன்றைய ஜனாதிபதியான சங்கர் தயாள் சர்மா அவர்களிடமும் சமர்ப்பித்தார். ஆனால் அவர்கள் இருவரும் மௌனமாக இருந்து விட்டனர். மேற்கூறிய எல்லாவற்றிலிருந்தும் அடிமை வம்சத்திய சுல்தானான குத்புதீனுக்கும் குதுப்மினாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. குத்புதீன் போன்ற நாசபுத்தி கொண்டவன் இதைக் கட்டியவனாக இருக்கவே முடியாது.

6.    குதுப்மினாருக்கு அருகில் உலகிலேயே அதிக
சுத்தமான இரும்பால் ஆன ‘கருடஸ்தம்பம்’ இருத்தல்

இது நிர்மாணிக்கப்பட்ட காலத்தைக் கவனத்தில் கொண்டால் மேருஸ்தம்பம் நிச்சயமாக ஆழ்ந்த சிந்தனை கொண்ட, அழகாக திட்டமிடத் தெரிந்த அமைதியான ஒரு ஹிந்து சாம்ராட் அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஹிந்து கட்டடக் கலையின் அதி உன்னத உதாரணம் என்பதை உணரலாம். அதை அன்றைய சாம்ராட்கள் தயாள மனதுடன் செல்வம் மற்றும் நேரத்தைத் தந்து மிகுந்த அன்போடு உருவாக்கியுள்ளனர். குதுப்மினார் என்று கூறப்படுவதன் அருகில் கம்பீரமாக நிற்கும் கருடஸ்தம்பத்தின் இரும்பு எவ்வளவு சுத்தமானது என்றால் அது உலகிலேயே அதிக சுத்தம் வாய்ந்த வார்ப்பு இரும்பாக கருதப்படுகிறது. இந்த ஸ்தம்பத்தில் இரும்பு 99.720% கார்பன் 0.080% மற்றும் பாஸ்பரஸ் 0.119% என்ற விகிதாசாரத்தில் உள்ளன. இந்த இரும்பு ஸ்தம்பத்தில் இதுவரை எந்த கீறலும் ஏற்பட்டதில்லை, எந்தப் புழுதியும் சேர்ந்ததில்லை. இன்று பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகியும் மழை, காற்று, வெயில் ஆகியவற்றின் எந்தப் பரிணாமமும் இதன் மீது ஏற்பட்டதில்லை. அகில உலகில் ‘பாரதீய தாதுவிஞ்ஞானத்தின்’ அற்புத உதாரணமாக இது விளங்குகிறது. இதற்கு ஈடாக உலகில் வேறு எதுவும் இல்லை. வராஹமிஹிரர் அவர்களின் ‘ப்ருஹத் ஸம்ஹிதை’ அத்யாயம் 57, ஸ்லோகம் 1-8 -ல் ‘வ்ரஜலேபாத்யாயத்தில்’ தாதுக்களின் கூட்டு பற்றியும் வ்ரஜலேபனம் பற்றியும் விதிகள் கூறப்பட்டுள்ளன. அதன்படி உருவாக்கப்பட்டவை ஒரு கோடி வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது.

7.    ஹிந்து கட்டிடக்கலையின் ஒரு
அற்புத உதாரணமே மேருஸ்தம்பம்

பிரபல இதிஹாசக்காரரும் தொல்பொருள் நிபுணருமான டாக்டர்  டி.எஸ். த்ரிவேதி அவர்கள் ‘குதுப்மினார் மற்றும் விஷ்ணுஸ்தம்பம்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளார். அதில் மறுப்பே கூற இயலாத அளவு நிரூபணங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி குதுப்மினார், ஹிந்து கட்டிடக்கலையில் ஒரு அற்புத சின்னமாக உள்ளது, அதை கி.மு. 280-ம் ஆண்டு ஹிந்து சாம்ராட் சமுத்ரகுப்தர் எழுப்பினார். இந்த நூலின் நிலைப்பாட்டை இதிஹாச நிபுணர் சர் ராமஸ்வாமி ஐயர் அவர்கள் மேலும் தெளிவாக்கியுள்ளார்; அதாவது சமுத்ரகுப்தர் தன் அரசாட்சி காலத்தில் மொத்தம் 3 வேதசாலைகளை எழுப்பினார். அவற்றில் முதலாவது மிஹாராவலீ, இரண்டாவது கயா (பீகார்) மற்றும் மூன்றாவது பிரோஸ் கா (துருக்கிஸ்தான்) என்ற இடங்களில் உள்ளன. மிஹாராவலீயில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இரும்பு ஸ்தூபி (விஷ்ணுஸ்தம்பம்) அவரின் மகன் சந்திரகுப்த மௌர்யரின் புகழை பறைசாற்றுகிறது.

8.    குதுப்மினார் அகழ்வாராய்ச்சியில் கல்லில்
செதுக்கப்பட்ட சம்ஸ்க்ருத வார்த்தைகள் மற்றும்
தார்மீக சின்னங்கள் காணக் கிடைக்கின்றன

குதுப்மினார் அகழ்வாராய்ச்சியில் கல்லில் செதுக்கப்பட்ட சம்ஸ்க்ருத வார்த்தைகள் மற்றும் சிவப்புப் பாறையில் காமதேனு, வராஹம் போன்ற ராஜ சின்னங்கள் காணக் கிடைக்கின்றன. பசு மற்றும் வராஹம் ஆகிய பிராணிகள் சம்பந்தமாக இஸ்லாமியத்தில் பெரும் எதிர்ப்பு மற்றும் வெறுப்பு உள்ளது. பாரதம் மற்றும் பாரதத்திற்கு வெளியே எந்த ஒரு மசூதியிலும் பசு, ஸ்வஸ்திக், மணி, விஷ்ணு, கருடன், மரம், மலர்த் தோரணம் மற்றும் அலங்காரம் ஆகிய சின்னங்களைப் பார்க்க முடியாது. இதன் காரணம் இஸ்லாமிய மதம் எங்கு தோன்றியதோ அங்கு மரங்கள் இல்லை, அழகான பசு பக்ஷிகள் இல்லை, இலைகளும் இல்லை. அதனால் அவைகளை சித்தரிக்கும் பாரம்பரியமும் அவர்களுக்கு இல்லை. காலப்போக்கில் இந்த பாரம்பரியம் ஒரு விதிமுறையாகவே மாறியுள்ளது. அதேபோல் எந்த ஒரு உயிருள்ள பிராணியின் வடிவத்தையும் உருவாக்காமல் இருப்பது இஸ்லாமிய கலையின் முக்கிய அங்கமாகவே ஆனது. பாரத அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை தில்லியில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அதில் பக்கம் 55-ல் ‘ஜனஸ்ருதி’ப்படி குதுப்மினார் தில்லியின் கடைசி ராஜாவான சாம்ராட் பிருத்விராஜ் சௌஹான் அவர்கள் உருவாக்கினார், அங்கு சென்று அவரின் புதல்வி யமுனா நதியின் தோற்றுவாயை சம்பூர்ணமாக பார்த்தாள் மற்றும் அன்றாடம் பூஜை செய்தாள் என்ற குறிப்பு உள்ளது. இந்த மினாரின் வெளி ரூபம் இஸ்லாமியத்தை சேர்ந்ததாக தோன்றினாலும் இதில் ஹிந்து கட்டிடக்கலையின் வெளிப்பாடு அதிக அளவு நிறைந்துள்ளது. இது சம்பந்தமாக கண்டெடுக்கப்பட்ட தேவநாகிரி கல்வெட்டுகளும் மூர்த்திகளுமே உண்மையின் நிரூபணமாக உள்ளன. (1.10.2012)

–  ஜோதிடர் டாக்டர் ஜிதேந்திர வியாஸ், ஜோத்பூர், ராஜஸ்தான்.

Leave a Comment