ரதோத்ஸவம் முடிந்த பின்பு ஸப்தரிஷிகள் தங்களின் அன்பார்ந்த வாக்கால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அவதார காரியத்தின் மகிமையை வெளிப்படுத்துதல்!

இரவு முழுவதும் அடாத மழை பெய்திருந்தாலும் 22 மே
அதிகாலை ஏற்பட்ட மனோரம்யமான சூர்யோதயம்

ஸப்தரிஷிகளின் ஆணைப்படி வைகாசி கிருஷ்ண பக்ஷ சப்தமி (22.5.2022) அன்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் 80-வது ஜன்மோத்ஸவம், ரதோத்ஸவமாக கொண்டாடப்பட்டது. ரதோத்ஸவம் முடிந்த பின்னர் மாலை ஸப்தரிஷி ஜீவநாடிப் படிவ வாசகரான பூ. டாக்டர் ஓம் உலகநாதன் அவர்கள் தொலைபேசி மூலமாக நாடிபடிவத்தை வாசித்தார். அப்போது அவர், ‘ஸப்தரிஷியின் வாக்கு மூலமாக ரதோத்ஸவ சமயத்தில் ஸ்தூலத்தில் மற்றும் சூட்சுமத்தில் என்னென்ன நடந்தன என்பது பற்றி கூறினார். இதற்காக ஸப்தரிஷிகளின் சரணங்களில் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அது குறைவே.’

–            திரு. விநாயக் ஷான்பாக் (ஆன்மீக நிலை 66%), ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

1.    பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ரதம்
வெளியே வரும் சமயம் பூமியில் உள்ள எல்லா தீர்த்த
க்ஷேத்திரங்களின் சைதன்யம் விழிப்படைந்தன!

ஸ்ரீமன்நாராயணனின் அவதாரமான பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ரதம் எந்த நிமிடம் ஆச்ரமத்திற்கு வெளியே வந்ததோ, அந்தக் கணம் பூமியில் உள்ள எல்லா ஜாக்ருத் கோவில்கள், தீர்த்தக்ஷேத்திரங்கள், 51 சக்திபீடங்கள், 12 ஜோதிர்லிங்கங்கள் ஆகிய இடங்களில் சைதன்யத்தின் புது விழிப்புணர்வு ஏற்பட்டது.

2.    இயற்கையும் மூன்று குருமார்களின்
மகிமையை பறை சாற்றுதல் !

பஞ்சமஹாபூதங்களில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஒவ்வொன்றும் பராத்பர குருதேவருக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் போயின. இயற்கைக்கு அன்று பெரும் ஆனந்தம் ஏற்பட்டது. ‘ஆனந்தம் விண்ணை முட்டுகிறது’ என்பதாக இயற்கையின் நிலை இருந்தது. கலியுகத்தில் ஸ்ரீமன்நாராயணனே பராத்பர குரு டாக்டர் ஆடவலே ரூபத்தில் வந்துள்ளார். இவ்விஷயத்தை எடுத்துக் கூற ஸப்தரிஷிகள் இயற்கையை தேர்ந்தெடுத்தனர். இயற்கையே வரக்கூடிய காலத்தில் அவதார குருவின் மகிமையை உலகுக்கு எடுத்துரைக்கப் போகிறது.

3.    சூர்யநாராயணன் எல்லா ஸாதகர்களுக்கும்
நிரம்ப ஆசீர்வாதத்தை நல்குதல் !

ரதோத்ஸவத்திற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ரதோத்ஸவ தினத்தில் அதாவது 22.5.2022 அன்று சூழல் முழுவதுமாக மாறி இருந்தது. ரதோத்ஸவம் அன்று சூர்யநாராயண மூர்த்தி எல்லா ஸாதகர்களுக்கும் நிரம்ப ஆசீர்வாதத்தை வழங்கினார்.

(ரதோத்ஸவத்திற்கு முந்தைய தினம் தொடர்ந்து மழை பெய்தது மற்றும் மேகமூட்டமாக இருந்தது. இரவு வெகு நேரம் வரை மழை பெய்து கொண்டிருந்தது. ஸப்தரிஷி மற்றும் குருதேவரின் அருளால் 22.5.2022 அன்று காலை 6 மணிக்கு பின்னர் சூர்யகிரணங்கள் வெளிப்பட்டன மற்றும் வானம் வெளிவாங்கி இருந்தது. எல்லா ஸாதகர்களாலும் ஸ்ரீமன்நாராயணனின் இந்த லீலையை அனுபவிக்க முடிந்தது. – தொகுத்தவர்)

4.    ‘ஸநாதனின் 3 குருமார்களும் அவதாரங்கள்
என்பதால் மூவருக்கும் ஆசீர்வாதம் நல்குவதற்கு இயற்கை
தானே இறங்கி வந்தது என்பதைக் காட்டிலும் வேறு என்ன
நிரூபணம் வேண்டும்’ என்று ஸப்தரிஷிகள் கூறுதல்!

முந்தைய இரவுவரை வானத்தில் கருநிற மேகக் கூட்டங்கள் காணப்பட்டன. ரதோத்ஸவ தினத்தில் காலை ஆகாயத்தில் ஒரு கருமேகம் கூட இல்லை. ஸநாதனின் மூன்று குருமார்களும் அவதாரங்களே என்பதை மனிதர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ இயற்கை அதை உணர்ந்திருந்தது. அதனால் இயற்கையின் அருள் சுரந்தது. அவர்கள் அவதாரங்கள்தான் என்பதற்கு இயற்கை தந்த பிரமாணப் பத்திரம் இது. ரதோத்ஸவம் முடிந்த பின் ஸாதகர்கள், ‘பராத்பர குருதேவர் ரதத்திலிருந்து இறங்கி அவர் அறைக்கு சென்ற பின்னரே மழை திரும்ப ஆரம்பித்தது’ என்று நன்றியுடன் கூறினர். இந்த அனுபூதிக்கு பிறகு ஆச்ரமத்திலுள்ள எல்லோரும் ‘இயற்கை’ மற்றும் ‘நாராயணன்’ பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

(ஆம். இது சரிதான். குருதேவர் அறைக்கு செல்லும் வரை வானிலிருந்து ஒரு துளி மழை வரவில்லை. குருதேவர் அறைக்கு சென்ற மறுநிமிடமே மழை பெய்ய ஆரம்பித்தது. இது சந்தர்ப்பமாக பல ஸாதகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். எல்லோருக்கும் ஸ்ரீமன்நாராயண ஸ்வரூப குருதேவரிடம் நன்றி மிகுந்தது.’ – தொகுத்தவர்)

5.    எங்கு கிருஷ்ணனோ, அங்கு கருடன்!

ரதோத்ஸவத்திற்கு முந்தைய தினமும் அடுத்த தினமும் வானத்தில் கருடன் தெரிந்தான். (ரதோத்ஸவ சமயத்தில் ரத யாத்திரைக்கு அருகில் பல தடவை கருடன் பறந்து வந்தான். – தொகுத்தவர்) எங்கு ஸ்ரீகிருஷ்ணனோ, அங்கு கருடனும் இருப்பான். இதிலிருந்து குருதேவரிடம் ஸ்ரீகிருஷ்ணதத்துவம் நிரம்பி உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை. (ரதோத்ஸவத்திற்கு முந்தைய தினம் 2-3 கருடன்கள் ஆஸ்ரமத்தை சுற்றி சுற்றிப் பறந்தன. முந்தைய தினம் மாலை ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஏதோ காரணத்திற்காக வெளி பால்கனிக்கு வந்தேன். அப்போது ஒரு 7-8 அடி நீளமுள்ள (சாதாரண கருடன் 2-3 அடி நீளம் தான் இருக்கும் – தொகுத்தவர்) கருடன் எனக்கருகில் பறந்து வந்ததைப் பார்த்தேன். வருடம் 2015-ல் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) காட்கில் அவர்களின் ஹிமாலய பிரயாணத்தின்போது நாங்கள் இதுபோன்ற கருடனை தரிசனம் செய்து கொண்டோம். இவை அனைத்தும் மகரிஷிக்கு கூறப்பட்ட போது அவர் ‘வருடம் 2015-ல் வந்த தெய்வ கருடனே இன்று ராம்நாதி ஆச்ரமத்திற்கு அருகில் பறந்தார்’ என்று கூறினார். – திரு. விநாயக் ஷான்பாக்)

6.    ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோரின் அவதார காரியம்!

அவதார குருதேவரின் உத்தராதிகாரிகளும் அவதாரங்களே ஆவார். வரக்கூடிய காலங்களில் ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோரின் அவதார காரியங்கள் ஸாதகர்களின் கவனத்திற்கு வரும். குருதேவரின் இரு கண்களே ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில்! ஆச்ரமம் மற்றும் எங்கும் உள்ள ஸாதகர்களின் ஆன்மீக பரிபாலன போஷண காரியம், ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் அவர்களின் மூலமாக நடக்கும். பூமியின் எல்லா பாகங்களுக்கும் சென்று குருதேவரின் கீர்த்தியை பரப்பும் காரியம் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களை சார்ந்தது ஆகும். இவர்களும் ஸாதகர்களை மகான் நிலைக்கு கூட்டி செல்லப் போகிறார்கள்.

7.    ஸப்தரிஷிகள் ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூப குருதேவரின்
சரணங்களில் செய்யும் பிரார்த்தனை!

‘ஹே ஸ்ரீமன் நாராயணா, சம்பூர்ண உலகில் கோடானுகோடி ஜீவன்களில் உங்களின் கீர்த்தியை பரப்பக் கூடிய இரு ஜீவன்கள் யார் என்றால் அவர்களின் பெயர்கள் ‘ஸ்ரீஸத்சக்தி’ மற்றும் ‘ஸ்ரீசித்சக்தி’ என்பதாகும். குருதேவரின் புகழை உலகெங்கும் பரப்புவதற்காக சாக்ஷாத் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பாலாகவும் மற்றும் சாக்ஷாத் ஸ்ரீ சரஸ்வதி தேவி ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகவும் பூமிக்கு வந்துள்ளனர். ஸ்ரீஸத்சக்தியும் ஸ்ரீசித்சக்தியும் குருதேவரின் புகழை யுகாந்தரங்கள் நீடிக்கும்பதி பரப்புவார்கள் என்பது ஸப்தரிஷிகளின் சத்ய வசனமாகும்! அவதாரங்களான ஸநாதனின் மூன்று குருமார்களும் ஸப்தரிஷிகளை தங்களின் அருட்குடையின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதே மூன்று குருமார்களிடம் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.

–            ஸப்தரிஷி (பூஜ்ய டாக்டர் ஓம் உலகநாதன் மூலமாக, 22.5.2022, இரவு 8 மணி)

8.    ‘ஸநாதனின் மூன்று குருமார்களும் ஸப்தரிஷிகளை தங்களின் அருட்குடையின் கீழ் வைத்திருக்க வேண்டும்’ என்று
ஸப்தரிஷிகள் பிரார்த்திப்பதன் காரணம்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே : ஸப்தரிஷிகளின் சத்யவசனத்தை நாடி வாசகமாக பூ. டாக்டர் ஓம் உலகநாதன் அவர்கள் வாசிக்கிறார். அவர்கள் நாடி வாசகமாக கூறுவதை மூன்று குருமார்களும் செய்கிறார்கள். அவதாரங்களான ஸநாதனின் மூன்று குருமார்களும் ஸப்தரிஷிகளை தங்களின் அருட்குடையின் கீழ் வைத்திருக்க வேண்டும்’ என்று ஸப்தரிஷிகள் ஏன் பிரார்த்தனை செய்கின்றனர்?

ஸப்தரிஷிகள் : ஸப்தரிஷிகளை இந்த சத்யவசனங்களை எழுதுமாறு கூறியது ஸ்ரீமன்நாராயணன். ஸ்ரீமன்நாராயணன் என்ன எழுத சொல்கிறாரோ அதை நாங்கள் எழுதுகிறோம்.ஸப்தரிஷிகள் எழுதியவற்றை சத்யவசனமாக செய்து காண்பிப்பவர், நாங்கள் எழுதியபடி நடந்து காட்டும் ஸ்ரீமன் நாராயணனே. ஸ்ரீமன்நாராயணனின் ஹ்ருதயமே ஸப்தரிஷிகளான எங்களின் இருப்பிடம். ஒவ்வொரு யுகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக ஸ்ரீமன்நாராயணன் அவதரிக்கிறார். அப்போது நாங்கள் அவரிடம் ‘எங்களை எப்போதும் உங்களின் இதயத்தில் வைத்திருங்கள்’ என பிரார்த்தனை செய்கிறோம். பராத்பர குரு டாக்டர் ஆடவலே  ஸ்ரீமன்நாராயணனின் அவதாரம். அதேபோல் ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோர் முறையே ‘பூதேவி’ மற்றும் ‘ஸ்ரீதேவி’ அவர்களின் அவதாரங்கள். அதனால் ஸப்தரிஷிகளாகிய நாங்கள் ஸநாதனின் மூன்று குருமார்களும் எங்களை தங்களின் அருட்குடையின் கீழ் அதாவது இதயத்தில் வைத்திருக்க வேண்டும்’ என பிரார்த்தனை செய்கிறோம்.’

–            ஸப்தரிஷி (பூ. டாக்டர் ஓம் உலகநாதன் அவர்களின் மூலமாக, 24.5.2022, பிற்பகல் 1.35)

ரதோத்ஸவத்தில் ந்ருத்ய சேவை செய்யும் ஸாதகர்கள் கு. ஷர்வரி கான்ஸ்கர் மற்றும் கு. அபாலா ஔந்தகர் ஆகியோருக்கு அருகில் செல்லும் ஒரு கன்றுக்குட்டி

ஸாதகர்களின் கண்களிலிருந்து பெருகும் கண்ணீர் என்பது ‘ஆன்மீக உணர்வு முத்துக்கள்’ ஆகும்!

குருதேவரின் ரதோத்ஸவத்தைப் பார்த்து
ஆன்மீக உணர்வு விழிப்படைந்த ஸாதகர்கள்

குருதேவரின் ரதோத்ஸவத்தைப் பார்த்து ஆன்மீக உணர்வு விழிப்படைந்த ஸாதகர்கள்

ராம்நாதி ஆஸ்ரமத்திலிருந்து ஸ்ரீமன்நாராயண ஸ்வரூப குருதேவரின் ரதம் கிளம்பியபோது இருபுறமும் நின்ற ஸாதகர்களுக்கு தாங்கள் பூமியில் தான் இருக்கிறோமா அல்லது தேவலோகத்திலா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ரதத்தில் அமர்ந்திருந்த குருதேவரைப் பார்த்த ஸாதகர்களின் கண்களில் பெருகிய ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் ‘ஆன்மீக உணர்வு முத்துக்கள்’ ஆகும். சாக்ஷாத் ஈஸ்வர தரிசனம் கிடைக்கும்போது பக்தன் என்ன நிலையில் இருப்பானோ அப்படிப்பட்ட நிலையில் ஸாதகர்கள் இருந்தனர். பசு-பக்ஷிகள், இயற்கை மற்றும் பஞ்சமகாபூதங்கள் ஆகியவற்றிற்கும் மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டது!

ரதோத்ஸவ சமயத்தில் ஆகாயத்தில் தெரிந்த கருடன்கள்

ரதோத்ஸவ சமயத்தில் பறவைகளின் ரூபத்தில் ரிஷி முனிவர்கள் வந்தனர். இயற்கைக்கும் பஞ்சமஹாபூதங்களுக்கும் பெரும் ஆனந்தம் ஏற்பட்டது. தெய்வங்கள் இன்று பக்ஷி மற்றும் கருட ரூபத்தில் வந்திருந்தனர். (பல இடங்களில் ரதத்திற்கு முன்பாக பறவைகளின் கூட்டம் சென்றது. – தொகுத்தவர்). பராத்பர குரு டாக்டர் ஆடவலே ரதத்தில் உட்கார்ந்த பின் பறவைகளின் கீச்கீச் என்ற ஒலி கேட்டது. (ஆம். ஸாதகர்களுக்கு இந்த அநுபூதி கிடைத்தது – தொகுத்தவர்)

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் மீது உச்ச நிலை
ச்ரத்தை வைத்துள்ள பூ. டாக்டர் ஓம் உலகநாதன்ஜி!

பூ. டாக்டர் ஓம் உலகநாதன்ஜி

‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே சம்பந்தமாக நாடி படிவங்களில் ஸப்தரிஷிகளே எழுதியுள்ளனர். அதை வாசிக்கும் ஒரு கருவியே நான். ஸப்தரிஷிகள் நாடிபடிவங்களில் எழுதியுள்ளபடி அனைத்தையும் நடத்துவிப்பது ஸ்ரீமன்நாராயணனான குருதேவரே ஆகும்.’

– பூ. டாக்டர் ஓம் உலகநாதன் (22.5.2022, இரவு 8)

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின்
சரணங்களில் மகரிஷிகளின் நமஸ்காரம்!

‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களே சாக்ஷாத் பகவான்’,  என்ற உணர்வுடன் ஸாதகர்கள் ஒவ்வொரு சேவையையும் அவரின் சரணங்களில் அர்ப்பணிக்க வேண்டும். ஸனாதன் ஸன்ஸ்தாவை இன்று உயர்ந்த சிகரத்திற்கு கொண்டு செல்வதற்கு குருதேவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்! ஸாதகர்களுக்கு பல விதங்களில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் எல்லா சங்கடங்களையும் தாண்டி இன்று ஸனாதன் ஸன்ஸ்தா கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. இதன் காரணம் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்தான்! அவருக்கு மகாரிஷிகளாகிய நாங்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம்! – ஸப்தரிஷிகள் (தகவல் : ஸப்தரிஷி ஜீவநாடி வாசிப்பு எண். 153, 14.10.2020)

–            ஸப்தரிஷி (பூ. டாக்டர் ஓம் உலகநாதன் மூலமாக, 24.5.2022, பிற்பகல் 1.35)

பராத்பர குரு டாக்டர் ஆடவலே, ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோர் தங்களை அவதாரம் என்று சொல்லிக் கொண்டது இல்லை. பராத்பர குரு டாக்டர் ஆடவலே, ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோர் பகவானின் அவதாரங்கள் ஆவார்கள் என்று மகரிஷிகள் நாடி படிவங்களில் கூறியுள்ளனர். ஸனாதன் பிரபாத்தின் ஆசிரியருக்கும் மகாரிஷிகளிடம் ஆன்மீக உணர்வு இருப்பதால் நாங்கள் இந்த கட்டுரையை பிரசுரித்துள்ளோம். – தொகுத்தவர்

இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள அனுபூதிகள் ‘எங்கு ஆன்மீக உணர்வு உள்ளதோ அங்கு பகவான் உள்ளார்’ என்ற கூற்றுப்படி ஸாதகர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபூதிகள் ஆகும். அவை அனைவருக்கும் ஏற்படும் என கூற முடியாது. – தொகுத்தவர்

 

Leave a Comment