பக்திமய சூழலில் நடந்த ஸ்ரீவிஷ்ணு ரூப பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்களின் சைதன்யம் நிறைந்த ‘ரதோத்ஸவம்’!

ராம்நாதி (கோவா) – பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஜன்மோத்ஸவம் என்பது ஸாதகர்களுக்கு ஆனந்தம் அளிக்கும், பக்தியுணர்வை விழிப்படைய செய்யும் ஒரு விழா ஆகும்! வைகாசி கிருஷ்ண ஸப்தமி, அதாவது 22 மே 2022 ஆகிய சுபதினத்தில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் 80-வது ஜன்மோத்ஸவம் கொண்டாடப்பட்டது. நாடிபடிவங்களின் மூலமாக ஸப்தரிஷிகள் ‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஜன்மோத்ஸவ நிமித்தமாக அவரின் ரதோத்ஸவம் கொண்டாடப்பட வேண்டும்’ என்று ஸநாதனின் ஸாதகர்களுக்கு ஆணையிட்டுள்ளார். மகரிஷிகளின் ஆணையால் நடந்த இந்த ஜன்மோத்ஸவத்தில் ஸாதகர்களுக்கு, குருதேவரின் அவதார தத்துவத்தை முழுக்க முழுக்க அனுபவிக்க கிடைத்தது.

ரதத்தில் ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தில் வீற்றிருந்த பராத்பர குரு டாக்டர் ஆடவலே மற்றும் அவரின் இருபுறமும் வீற்றிருந்த அவரின் ஆன்மீக உத்தராதிகாரிகளான ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா நீலேஷ் ஸிங்க்பால், ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் ஆகியோர் ரதத்தில் ஏறி புறப்பட்ட சமயம்  ‘ராமராஜ்யத்தைப் போன்ற ஹிந்து ராஷ்ட்ரத்தின் ஸ்தாபனத்தில் ஏற்படும் அனைத்து தடைகளும் தூர விலகுகின்றன’ என்று உணர முடிந்ததால் ஸாதகர்களின் ஆன்மீக உணர்வு மிகுந்தெழுந்தன. பக்திமய சூழலில் நடந்த இந்த குருதேவரின் 80-வது ஜன்மோத்ஸவத்தில் வைகுண்டம் பூமிக்கு வந்தது போன்ற உணர்வை ஸாதகர்களால் அனுபவிக்க முடிந்தது. குருமௌளியின் பிரத்யக்ஷ இருப்பு, அதீத பக்திமயமான சூழல் மற்றும் அவரின் சரணங்களில் சேவையை அர்ப்பணிக்கக் கூடிய வாய்ப்பு ஆகிய எல்லாம் சேர்ந்து ஸாதகர்களின் மனக்கோவிலில் எழுந்த ஆன்மீக உணர்வு அவர்களின் முகங்களில் பிரகாசமாக பளிச்சிட்டது.

இவ்வாறு நடந்தது ஆனந்தமய ரதோத்ஸவம் !

ஊர்வலத்தில் ஸாதகர்கள்

மதியம் ரதோத்ஸவ ஆரம்ப ஸ்தானத்திற்கு ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூப பராத்பர குரு டாக்டர் ஆடவலே மற்றும் அவரின் ஆன்மீக உத்தராதிகாரிகளான ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா நீலேஷ் ஸிங்க்பால், ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் ஆகியோரின் மங்களமய வரவு நடந்தது. ஆரம்பத்தில் மூவரும் பல்லக்கில் வைக்கப்பட்டிருந்த ‘ஸ்ரீராம சாலிகிராம’த்தை தரிசனம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஸாதகர்களால் ஆன்மீக உணர்வோடு மலர்களைக் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வேத மந்திர கோஷங்களுடன் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஏறி அமர்ந்தார். அதன் பிறகு ஸ்ரீமன்நாராயண ஸ்வரூபமான குருதேவரின் ஆசனத்திற்கு அருகே இடதுபுறம் ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா நீலேஷ் ஸிங்க்பால் அவர்களும் வலப்புறம் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் அவர்களும் அமர்ந்தனர்.

சங்கநாதம் முழங்கி ரதோத்ஸவம் ஆரம்பமானது. ரதோத்ஸவ ஆரம்பத்தில் தர்ம கொடி ஏந்துவோர், பிறகு மங்கள கலசங்களை கைகளில் ஏந்திய சுமங்கலிகளின் வரிசை மற்றும் ஸநாதனின் மகான்கள் இருந்தனர். அவர்களுக்கு பின்னே தாளங்களும் காவிக் கொடிகளும் ஏந்திய ஸாதகர்களின் வரிசை சென்றன.

அதன் பிறகு நாட்டியம் ஆடும் ஸாதகர்களின் குழுமம், ‘ஸ்ரீராம சாலிகிராமம்’ உள்ள பல்லக்கு, நாட்டிய சேவை அர்ப்பணம் செய்யும் இன்னொரு குழுமம், ஸ்ரீவிஷ்ணு ரூபத்திலுள்ள குருதேவரின் மங்களரதம், காவிக்கொடி ஏந்திய ஸாதகர்கள், நாட்டிய சேவை புரியும் ஸாதகர்களின் மூன்றாவது குழுமம் மற்றும் காவிக் கோடி ஏந்திய ஸாதகர்கள் என்பதாக இந்த ரதோத்ஸவத்தின் வரிசைகிரமம் இருந்தது. இந்நிகழ்ச்சியின்போது ஸ்ரீமன்நாராயணனின் நாமசங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்துதி செய்யப்பட்டன. குருதேவரின் குணசங்கீர்த்தனம் செய்யும் பல்வேறு ஜயகோஷங்கள், ஸ்ரீவிஷ்ணுவிடம் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு பக்திகீதங்கள் ஆகியவை ஒலிநாடாக்களின் மூலமாக ஒலிக்கப்பட்டன.

குமாரி ஷர்வரி கான்ஸகர்  (வயது 15) அவருடன் கூட மற்ற ஸாதகர்கள் 3 இடங்களில் பக்தி கீதங்களுக்கு நாட்டியம் ஆடினர். ராம்நாதியிலிருந்து நாகேஷி வரையுள்ள 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தெருவின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் கிராமத்தவர்கள் நின்று ஸ்ரீவிஷ்ணு ரூப பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களை ஆன்மீக உணர்வுபூர்வமாக தரிசித்தனர்.

ரதோத்ஸவத்தில் வணக்கத்துக்குரிய ஸநாதனின் ஸத்குருமார்கள் மற்றும் மகான்களும் பங்கேற்றனர். ஸநாதனின் 66% ஆன்மீக நிலை கொண்ட ஸாதகர் திரு. விநாயக் ஷான்பாக் மற்றும் மகரிஷி ஆன்மீக பல்கலைகழகத்தின் சங்கீத துறையின் ஒருங்கிணைப்பாளரான 63% ஆன்மீக நிலை கொண்ட கு. தேஜல் பாத்ரிகர் ஆகியோர் ரதோத்ஸவ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். ஸநாதனின் ராம்நாதி ஆஸ்ரமத்திலிருந்து புறப்பட்டு பாரபதிவாடா வழியாக நாகேஷி என்ற இடத்தை அடைந்து மீண்டும் ஸநாதனின் ஆஸ்ரமத்திற்கு ரதோத்ஸவம் திரும்பி வந்தது.

ஸ்ரீவிஷ்ணுவின் ஆடை அலங்காரத்தை அணிந்தது பற்றி பராத்பர குரு டாக்டரின் சிந்தனை!

குழந்தைகளும் முதியவர்களும் ஒன்று எனக் கூறுவர். இந்த அனுபவத்தை நான் எனது 80-வது பிறந்தநாளில் பெற்றேன். சிறு குழந்தைகளுக்கு ‘ராமன்’ மற்றும் ‘கிருஷ்ணன்’ வேஷம் போடுவார்கள். அதேபோல் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு ஸப்தரிஷிகளின் ஆணைப்படி ஸாதகர்கள் என்னை ஸ்ரீவிஷ்ணுவின் ரூபத்தில் அலங்கரித்தனர்.’

– (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே

மகான்கள் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின்
அவதார ரகசியத்தை வெளியிட்டதன் காரணம்!

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் எப்போதும் தன்னை அவதாரம் என சொல்லிக் கொண்டதில்லை. ஸனாதன் ஸன்ஸ்தாவும் எப்போதும் அவ்வாறு கூறியதில்லை. நாடிபடிவங்கள் என்ற புராதன பிரசித்தி வாய்ந்த ஜோதிடசாஸ்திரப்படி ஸப்தரிஷிகள் ஒவ்வொருவரின் வருங்காலத்தையும் எழுதி வைத்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள ஜீவநாடிபடிவங்களை வாசிக்கக் கூடிய பூஜ்ய டாக்டர் ஓம் உலகநாதன் அவர்களின் மூலமாக ஸப்தரிஷிகள் ஜீவநாடி படிவங்களில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் ஆவார் என்று எழுதி வைத்துள்ளனர். ஸப்தரிஷிகள் செய்துள்ள ஆணைப்படியும் நாடிபடிவங்களில் கூறியுள்ளபடியும் ஜன்மோத்ஸவம் அன்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களுக்கு ஸ்ரீவிஷ்ணு ரூபத்தில் அலங்காரம் செய்யப்பட்டது.

குருதேவரைப் போற்றி எழுப்பப்பட்ட
ஆன்மீக உணர்வுபூர்வமான கோஷங்கள்!

  • சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலேஜி கீ ஜெய் !
  • பராத்பர குரு ஸ்ரீ ஸ்ரீ ஜெயந்த் பாலாஜி ஆடவலேஜி கீ ஜெய் !!
  • ஸநாதன தர்மராஜ்ய ஸம்ஸ்தாபகர், ஸப்தரிஷிகள் கௌரவிக்கும் நாயகர், கலியுக நாராயணர் ஸ்ரீ ஸ்ரீ ஜெயந்த் பாலாஜி ஆடவலேஜி கீ ஜெய் !!!

Leave a Comment