பராத்பர குரு டாக்டர் ஆடவலே மற்றும் ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால், ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோரின் புருவமத்தியில் தெய்வீக சின்னங்கள் வெளிப்பட்டதன் ஆன்மீகசாஸ்திரம்!

Contents

ஒருவரின் ஆன்மீக நிலை உயர்ந்து கொண்டே இருக்கும்போது அவரின் ஆன்மீக சிந்தனைகள், வழிகாட்டுதல்கள், ஆன்மீக காரியங்கள் ஆகியவற்றுடன் கூட அவரின் தேஹத்தில் தெய்வீக சின்னங்கள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. செப்டம்பர்  2018 -ல் ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகர் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் நெற்றியில் ‘ஓம்’காரத்தைப் போன்ற வடிவம் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. 10.6.2021 அன்று ராம்நாதியில் (கோவா) ஸனாதன் ஆச்ரமத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரி யாகம் நடந்தது. அந்த சமயம் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒரு ஆன்மீக உத்தராதிகாரியான ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் அவர்களின் நெற்றியில் அகல் தீபம் போன்ற வடிவம் காணப்பட்டது. 26.10.2015 -ல் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் இன்னொரு ஆன்மீக உத்தராதிகாரி ஸ்ரீ சித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் நெற்றியில் த்ரிசூலத்தைப் போன்ற வடிவம் தெளிவாகத் தெரிந்தது. ஸநாதனின் குருபரம்பரையினரின் நெற்றியில் காணப்படும் இந்த சுப சின்னங்களின் ஆன்மீக சிறப்புகளை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் நெற்றியின்
நடுவில் வெளிப்பட்டுள்ள ‘ஓம்’ போன்ற வடிவம், வட்டத்திற்குள்
பெரிதாக்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

1.    மூன்று குருமார்களின் புருவமத்தியில்
சுப சின்னங்கள் வெளிப்பட்டதன் ஆன்மீக சாஸ்திரம்

எப்போது ஆன்மீக குருவின் காரியங்கள் ஞானசக்தியின் பலத்தில் நடக்கிறதோ அப்போது அவர்களின் ஸஹஸ்ரார சக்கரத்தில் ஈச்வர ஞானத்தின் பிரவாஹம் ஏற்படுகிறது மற்றும் ஆக்ஞாசக்கரத்தின் வழியே வாயுமண்டலத்தில் பரவுகிறது. அதனால் எப்போது ஞானசக்தியின் பிரவாஹம் ஆக்ஞா சக்கரத்தின் வழியே சமஷ்டியை நோக்கி செல்கிறதோ அப்போது இந்த தெய்வீக காரியத்தின் பிரமாணத்தை தருவதற்காக ஈச்வர இச்சையால் ஆன்மீகத்தில் உன்னத நிலையிலுள்ளவர்களின் கபாலத்தில் பல்வேறு விதங்களில் தெய்வீக சின்னங்கள் வெளிப்படுகின்றன. இதன் மூலம் ஆன்மீக குருமார்களின் மகத்துவத்தைப் பற்றி உலகம் புரிந்து கொள்வது சுலபமாகிறது. இது போன்று ஸனாதனின் 3 குருமார்களான பராத்பர குரு டாக்டர் ஆடவலே, ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோரின் புருவமத்தியில் வெளிப்பட்ட தெய்வீக சின்னங்களின் மூலம் அவர்களுடைய தெய்வீக காரியங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

ஆச்ரமத்தில் நடந்த ஸ்ரீ திரிபுரசுந்தரி யாகத்தின்போது ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் அவர்களின் நெற்றியில் வெளிப்பட்ட அகல்தீபத்தைப்
போன்ற வடிவம், வட்டத்திற்குள் பெரிதாக்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

2.    சக்தியின் வகை, அதன் சூட்சுமத்தன்மை, அதற்கு அதிபதியான தேவதை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குண்டலினி சக்கரம்

2. சக்தியின் வகை, அதன் சூட்சுமத்தன்மை, அதற்கு அதிபதியான தேவதை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குண்டலினி சக்கரம்

சக்தியின் வகை சக்தியின் சூட்சுமத்தன்மை சக்திக்கு அதிபதியான தேவதை சக்திக்கு சம்பந்தப்பட்ட குண்டலினி சக்கரம்
1.    இச்சாசக்தி சூட்சுமம் பிரம்மா மற்றும் பார்வதி மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் மற்றும் மணிபூரகம்
2.    கிரியாசக்தி அதி சூட்சுமம் விஷ்ணு மற்றும் லக்ஷ்மி அனாஹத மற்றும் விஷுத்த
3.    ஞானசக்தி சூட்சுமாதி சூட்சுமம் சிவன் மற்றும் சரஸ்வதி ஆக்ஞா மற்றும் ஸஹஸ்ரார

 

3. மூன்று குருமார்களின் நெற்றியில்
தோன்றிய சுப சின்னங்களின் உள்ளர்த்தம்

3 அ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின்
நெற்றியில் ‘ஓம்’கார வடிவம் வெளிப்படுதல்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடமிருந்து நிர்குண-ஸகுண ஞானசக்தி மற்றும் தர்மசக்தி வெளிப்படுவதால் அவரின் நெற்றியின் மத்தியில் நிர்குணம் மற்றும் தர்மத்தின் அடையாளமான ‘ஓம்’ ஆகிய சுப சின்னம் வெளிப்பட்டுள்ளது. அதனால் ஸ்தூலத்தில் சமூகத்தில் ஸாதகர்கள் மூலமாக ‘ஞானசக்தி பணி’ நடந்து வருகிறது. இந்த பணியின் மூலம் ஸநாதனின் நூல்கள் பெருமளவில் சமூகத்தினரை சென்றடைந்துள்ளது; சமூகத்தில் தர்மம் மற்றும் ஆன்மீகம் பற்றிய ஞானபிரசாரம் நடந்துள்ளது. அதன் மூலம் பல ஸாத்வீக ஜீவன்கள் தர்மவழி பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் மற்றும் ஸாதனை செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதனால் சமூகத்தினரின் ஒட்டுமொத்த ஸாத்வீகத் தன்மை அதிகமாக உதவி கிடைத்துள்ளது.

3 ஆ. ஆச்ரமத்தில் நடந்த ஸ்ரீ திரிபுரசுந்தரி யாகத்தின்போது
ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் அவர்களின்
நெற்றியில் அகல் தீபம் போன்ற வடிவம் வெளிப்படுதல்

திரிபுரசுந்தரி தேவியிடத்தில் சக்தி மற்றும் ஞானம் அழகாக ஒருங்கிணைந்துள்ளது. அதேபோல் தர்ம ஸன்ஸ்தாபன காரியத்திற்கு அனுகூலமாகவும் தர்ம ராஜ்யத்தை நடத்துவதற்கான வழிகாட்டியாகவும் அவள் இருக்கிறாள். எப்போது ஸநாதனின் ராம்நாதி ஆச்ரமத்தில் ஸ்ரீதிரிபுரசுந்தரி தேவியின் யாகம் நடந்ததோ, அப்போது தேவியிடமிருந்து தேஜ தத்துவ நிலையில் அதிக அளவு ஞானசக்தி மற்றும் கிரியாசக்தி வெளிப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் அவர்களின் நெற்றியில் அகல் தீபத்தைப் போன்ற வடிவம் வெளிப்பட்டது. இந்த வடிவத்தின் மூலம் தேஜோமய க்ரியாசக்தி வெளிப்பட்டு தர்மம் மற்றும் ஆன்மீக பிரசார காரியத்தில் ஈடுபடும் சமஷ்டி ஜீவன்களுக்கு ஸ்ரீத்ரிபுரசுந்தரியிடமிருந்து வெளிப்படும் தர்மதேஜஸ் கிடைத்துள்ளது. அதன் மூலம் அவர்களின் சமஷ்டி காரியத்திற்கு கதி கிடைத்துள்ளது.

4. ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின்
நெற்றியில் திரிசூலம் போன்ற வடிவம் வெளிப்படுதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் நெற்றியில்
வெளிப்பட்ட த்ரிசூலத்தைப் போன்ற வடிவம், வட்டத்திற்குள்
பெரிதாக்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களிடம் ஸ்ரீதுர்காதேவியின் அழிக்கும் கிரியாசக்தி செயல்பட ஆரம்பித்து பாரதத்தின் தேவஸ்தானங்கள், தீர்த்தக்ஷேத்திரங்கள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபடும் ஸாதகர்கள் ஆகியோர் மீது நடக்கும் தாக்குதல்களை முறியடிக்க வெளிப்படுகிறது. அதனால் ஸ்ரீ துர்காதேவியின் கையிலுள்ள திரிசூலமாகிய சுப சின்னம் அவரின் நெற்றியில் வெளிப்பட்டுள்ளது. இந்த சுப சின்னத்தின் மூலம் வெளிப்படும் ஸ்ரீதுர்காதேவியின் அழிக்கும் சக்தியால் ஆயிரக்கணக்கான ஸாதகர்கள் அதர்ம சக்திகளிடமிருந்து காப்பாற்றப்படுவர்.

நன்றி

‘ஸ்ரீகுருவின் அருளால் ஸநாதனின் மூன்று குருமார்களின் நெற்றிகளில் வெளிப்பட்ட தெய்வீக சின்னங்களின் உள்ளர்த்தம் மற்றும் அவற்றிலுள்ள ஆன்மீக சாஸ்திரத்தை புரிந்து கொள்ள முடிந்ததற்காக நான் மூன்று குருமார்களின் சரணங்களிலும் நன்றி கலந்த நமஸ்காரத்தை அர்ப்பணிக்கிறேன்.’

–            கு. மதுரா போஸ்லே (சூட்சுமத்தில் கிடைத்த ஞானம்), ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞான கண்ணோட்டத்தில்
ஆய்வு செய்பவர்களிடம் ஒரு விண்ணப்பம்!

மகான்களின் தேஹத்தில் புத்திக்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்து அதன் காரணகாரியபாவத்தை கண்டுபிடிப்பதற்கு ஸாதகர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்கு

1.    பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் புருவமத்தியில் ‘ஓம்’ வெளிப்படுவதற்கு என்ன காரணம்?

2.    ஸ்ரீ ஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால் அவர்களின் நெற்றியில் அகல் தீபம் போன்ற வடிவம் வெளிப்படுதற்கு என்ன காரணம்?

3.    ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் நெற்றியில் திரிசூலம் போன்ற வடிவம் வெளிப்படுதற்கு என்ன காரணம்?

இது சந்தர்ப்பமாக நிபுணர்கள், ஆர்வலர்கள், இவ்விஷயம் பற்றி பயிலும் மாணவர்கள் மற்றும் விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்பவர்கள்  ஆகியோரின் உதவி எங்களுக்குக் கிடைத்தால் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’

–            நிர்வாகி, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

தொடர்பு : திரு. ஆஷீஷ் ஸாவந்த்,

இணையதள முகவரி : [email protected]

இதில் பிரசுரிக்கப்பட்டுள்ள அனுபூதிகள் ‘ஆன்மீக உணர்வுள்ள இடத்தில் பகவான்’ என்ற உக்திப்படி மகான்களுக்கு கிடைத்துள்ள அநுபூதி ஆகும். இது எல்லோர்ருக்கும் கிடைக்கும் என கூற முடியாது. – ஆசிரியர்

சூட்சும பரிசோதனை : ஒரு விஷயம் அல்லது செயல் பற்றி சித்தத்தில் (ஆழ்மனதில்) என்ன உணர்கிறோமோ அதையே ‘சூட்சும பரிசோதனை’ எனக் கூறுவர்.

 

 

 

 

 

Leave a Comment