குடும்பத்தினரின் ஸாதனையில் ஈடு இணையற்ற முன்னேற்றம் ஏற்படச் செய்த ஒப்புயர்வற்ற பூஜ்ய பாலாஜி (தாதா) ஆடவலே! (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையார்) – 2

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையான பரம் பூஜ்ய பாலாஜி ஆடவலே (ப. பூ. தாதா) அவர்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து  ‘ப. பூ. தாதா அவர்கள், தன் குடும்பத்தினரிடம் என்ன மற்றும் எப்படி ஸம்ஸ்காரங்களை பதிய வைத்தார்?’ என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் ‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் குடும்ப மற்றும் ஆன்மீக பின்னணி எவ்வாறு இருந்தது?’ என்பதும் வாசகர்களுக்கு தெரிய வரும்.

1. ப. பூ. பாலாஜி (ப. பூ. தாதா) வாஸுதேவ் ஆடவலே அவர்களின் அறிமுகம்

1 அ. ப. பூ. தாதா அவர்களின் பிறப்பு மற்றும் தேக தியாகம்

‘ப. பூ. பாலாஜி (இன்னொரு பெயர் ஸ்ரீகிருஷ்ண) வாஸுதேவ் ஆடவலே அவர்கள் என் தந்தையாவார். அவரை நாங்கள் ‘தாதா’ என அழைப்போம். அவர்  9.9.1905 அன்று நாசிக்கில் பிறந்தார். 28.1.1995 அன்று எங்களின் ‘சிவ’, மும்பை வீட்டில் அவர் தன் இன்னுயிரைத் துறந்தார். அந்த சமயத்தில் அவரின் ஆன்மீக நிலை 83% ஆக இருந்தது. அவரின் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

1 ஆ. ப. பூ. தாதாவின் குண விசேஷங்கள்

1 ஆ 1. ஆதர்ச தாய்-தந்தை : தாதா மற்றும் தாயி (அம்மாவை நாங்கள் ‘தாயி’ என அழைப்போம்) அவர்கள் சிறு வயதிலிருந்தே 5 சகோதரர்களான எங்களை உலகக் கல்வி கற்பிக்க வைத்ததுடன் கூட ஸாத்வீகத் தன்மை மற்றும் ஸாதனை பற்றிய சம்ஸ்காரங்கள் எங்களுக்குள் ஏற்பட செய்தனர். அதனால் நாங்கள் ஸாதனையில் ஈடுபட்டோம். தாய்-தந்தையரிடையே சண்டை வந்து நாங்கள் ஐவரும் எங்கள் ஆயுளில் இதுவரை பார்த்ததில்லை. அதோடு ஐந்து சகோதரர்களான  எங்களிடையேயும் எப்போதும் சண்டை வந்ததில்லை. எங்களிடையே அன்புப் பிணைப்பு இருந்தது, இன்றும் உள்ளது. தாதா மற்றும் தாயி எங்களிடம் ஏற்படுத்திய சம்ஸ்காரங்களால் இது சாத்தியமாயிற்று.

1 ஆ 2. ஆதர்ச ஆசிரியர்  : தாதா அவர்கள் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவர் தன் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைப் பார்வையிடுவார். மாணவர்களின் எழுத்துகள் இலக்கணப் பிழை எதுவும் இல்லாமல் இருக்க கற்றுத் தருவார். அவரின் எழுத்துகளும் எவ்வித பிழைகளும் இல்லாமல் இருந்தன. மாணவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக பல்வேறு நூல்களை வாசித்து, அதைப் பற்றி சிந்தனை செய்து கணிதம், ஆங்கிலம் போன்ற எல்லா விஷயங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதிக் கொள்வார். விஷயங்களை சுலபமாக்கி மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார். அவர் வருடம் 1966-ல் தன்னுடைய 60-வது வயதில் ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

1 ஆ 3. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 30 வருடங்களாக மற்றும் இறுதியில் அவர் நோயுற்ற போதும் கூட எழுதுவதையும் வாசிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் : 1995-ல் அவர் உயிர் துறக்கும்வரை அதாவது 1966 முதல் 1995 வரையுள்ள 30 வருட காலத்தில் அவர் நிறைய எழுதினார். வாழ்வின் இறுதி 5 வருடங்கள் அவர் நோயுற்றபோதும் கூட ஆன்மீக சாஸ்திரம் பற்றி அவர் தொடர்ந்து எழுதி வந்தார். மீதுயுள்ள நேரத்தில் வாசிப்பதிலும் நாமஜபத்திலும் தன் நேரத்தை செலவிட்டார்.

1 ஆ 4. ப. பூ. தாதா அவர்கள் நாமஜபம் செய்வதைக் காட்டிலும் டாக்டர் ஆடவலே மற்றும் பூ. அப்பா (டாக்டர் ஆடவலே அவர்களின் முதல் மூத்த சகோதரர்) ஆகியோரின் கட்டுரைகளைப் படித்து சரி பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் : தாதாவின் நாமஜபம் அகண்டமாக நடந்து வந்தது. தினமும் அவர் குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது நாமஜபம் செய்தார். ஸாதனை மகத்துவம் நிறைந்தது என்றாலும் என்னுடைய மற்றும் அப்பாவின் கட்டுரைகளை சரி பார்ப்பதற்கும் மொழி பெயர்ப்பதற்கும் நாங்கள் அவரிடம் தந்தால் நாமஜபத்திற்கு பதில் இதற்கு முன்னுரிமை தருவார்.

1 ஆ 5. தனக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் கட்டுரைகளை உடனே சரி பார்த்துத் தருவார் மற்றும் மொழிபெயர்ப்பும் செய்வார்

1 இ. ப. பூ. பக்தராஜ் மகராஜ், ‘உன்னுடைய தந்தை ஒரு மகான்!’ என்று கூறுவார்!

தாதா மகான் நிலையை அடைந்தவர் என்பதால் ப. பூ. பக்தராஜ் மகராஜ் தாதாவைத் தன் அருகில் ஊஞ்சலில் அமரச் சொல்வார். நான் என் தந்தை ஒரு மகான் என்று உணர்வதற்கு 26 வருடங்களுக்கு முன்பே ப. பூ. பக்தராஜ் மகராஜ் தாதாவை ஒரு மகான் எனக் கூறியுள்ளார்.

1 ஈ. ப. பூ. தாதாவின் ஆன்மீக நிலை மற்றும் அஹம்பாவம்

1 உ. ப. பூ. தாதா அமர்ந்திருந்த இடம் வழவழப்பானது

‘அப்பா மற்றும் டாக்டர் ஜெயந்த் ஆடவலே ஆகியோர் அளித்த கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்ய எந்த இடத்தில் தாதா எப்பொழுதும் அமர்வாரோ அந்த இடத்தின் தரை மிகவும் வழவழப்பாகியுள்ளது.’ – டாக்டர் விலாஸ் ஆடவலே (ப. பூ. தாதாவின் கடைசி மகன்), மும்பை (10.3.2014)

சூட்சும பிரயோகம்

2. ப. பூ. தாதா அவர்களின் புகைப்படத்தைப் பார்க்கும்போது
மனதில் என்ன தோன்றுகிறது என்று பயிலுங்கள்!

மேற்கூறப்பட்ட பத்திகளில் ப. பூ. தாதா அவர்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். இங்கு தரப்பட்டுள்ள அவரின் புகைப்படத்தைப் பார்த்து மனதில் என்ன தோன்றுகிறது என்பதை ஆர்வலர்கள் பயிலலாம்.

இந்த புகைப்படத்தைப் பார்த்து ஸநாதனின் ஸாதகர்கள் உணர்ந்த சிறப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அதைப் படித்தபின் ஆர்வலர்களுக்கும் ஸநாதனின் ஸாதகர்களுக்கும் தோன்றிய விஷயங்களை ஒப்பிடலாம். இவ்வாறு உணர்வதை ‘புத்திக்கு அப்பாற்பட்ட விஷயம்’ எனக் கூறுவர். ஸாதனையில் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் உணரும் விஷயமும் தவறில்லாமல் இருக்கும். இவ்வாறு உணரும் மொழி அவரவரின் ஸாதனை வழிக்கேற்ப வெவ்வேறாக இருக்கும்.

2 அ. ஸநாதனின் ஸாதகர்கள் ப. பூ. தாதாவின் புகைப்படத்தில் உணர்ந்த சிறப்புகள்

‘ப. பூ. தாதாவின் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஆன்மீக உணர்வு விழிப்படைந்தது. அவரின் விழிகள் கருணையால் நிரம்பி வழிகின்றன என்பதை என்னால் உணர முடிந்தது. அதாவது ஸநாதனின் ராம்நாதி (கோவா) மற்றும் தேவத் (பன்வேல்) ஆச்ரமங்களிலுள்ள ஸாதகர்களிடம் ‘இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?’ என்ற பிரயோகம் செய்யப்பட்டது. அப்போது ஸாதகர்களுக்கு இந்த புகைப்படம் யாருடையது என்பது தெரியாது. புகைப்படத்தைப் பார்க்கும்போது ஸாதகர்களுக்கு தோன்றிய விஷயங்கள் மற்றும் ஏற்பட்ட அனுபூதிகள் இங்கு தரப்பட்டுள்ளன. இதிலிருந்து ‘பெரும்பான்மை ஸாதகர்கள் நன்கு பரிசீலனை செய்கின்றனர்’ என்பது கவனத்திற்கு வந்தது.’ – (பராத்பர குரு) டாக்டர் ஜெயந்த் ஆடவலே (10.4.2013)

2 அ 1. மனோதேஹத்திற்கு கிடைத்த அநுபூதி (நாமஜபம் ஆரம்பித்தல்) : ‘புகைப்படத்தை கையில் வாங்கியவுடன் என்னுடைய நாமஜபம் ஒரே லயத்தில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.’ – கு. தீபாலி மத்கர், திருமதி பாத்யே மற்றும் திருமதி சுனிதா சித்ளே

2 அ 2. சூட்சும-ஞாநேந்த்ரியங்களுக்கு கிடைத்த அநுபூதி

1. பிருத்வி தத்துவ அநுபூதி (சுகந்தத்தை உணர்தல்) : ‘புகைப்படத்தை கையில் வாங்கியவுடன் அஷ்டகந்தா சுகந்தத்தை நுகர முடிந்தது மற்றும் கையில் அந்த புகைப்படம் உள்ளவரை சுகந்தமும் தொடர்ந்து இருந்தது. இவ்வாறு இருமுறை நடந்தன.’ – திரு தைவத் வாக்மாரே

2. தேஜ தத்துவ அநுபூதி (புகைப்படத்தை ஜீவனுள்ளதாக உணர்வது) : ‘புகைப்படத்தைப் பார்க்கும்போது அது ஜீவனுள்ளதாகத் தோன்றியது.’ – திருமதி மானசி ஸஹஸ்ரபுத்தே, திரு. ஆனந்த் ஜாகோடியா மற்றும் திரு பரத் மிர்ஜே

3. வாயு தத்துவ அநுபூதி (குளுமையை உணர்வது) : ‘புகைப்படத்தைக் கையில் வாங்கியவுடன் உடல் மிகவும் குளுமையாக ஆனதை உணர முடிந்தது, கைகளும் குளுமையாக இருந்தன.’ – கு. தீபாலி மத்கர்

2 அ 3. ஜீவாத்மாவுக்கு கிடைத்த அநுபூதி : ‘புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஆன்மீக உணர்வு விழிப்படைந்தது.’ – திரு ஆனந்த் ஜாகோடியா மற்றும் கு. பிரியங்கா லோட்லிகர்

2 அ 4. சைதன்யத்தை உணர்தல்

1.  புகைப்படத்திலிருந்து வெளிப்பட்ட சைதன்யத்தை சுவாசத்துடன் உள்வாங்கியபோது மிகுந்த ஆனந்தம் மற்றும் சாந்தியுணர்வு ஏற்பட்டது : ‘புகைப்படத்திலிருந்து வெளிப்படும் சைதன்யத்தால் ஒவ்வொரு முறையும் சுவாசத்தை உள்ளிழுக்கும்போது ‘நான் சைதன்யத்தை உள்வாங்கிக் கொள்கிறேன்’ என்பதை உணர முடிந்தது. இந்த அநுபூதி வெறும் சுத்தமான காற்றை உள்ளிழுக்கிறோம் என்பதைக் காட்டிலும் அதிக ச்ரேஷ்டமானது என்பதால் என்னால் ஆனந்தம் மற்றும் சாந்தியை உணர முடிந்தது.’ – கு. கிறிஸ்டி ல்யுங்க் (இன்றைய ராதா மல்லிக்), வான்கூவர், கனடா.

2.  புகைப்படத்தைப் பார்க்கும்போது ‘அது பராத்பர குரு டாக்டருக்கு நிகரான சைதன்யத்தை வெளிப்படுத்துகிறது’  என்று உணர முடிந்தது’ – கு. ஜ்யோஜ்வேர், ஹங்கேரி, ஐரோப்பா.

2 அ 5. சாந்தியை அனுபவித்தல்

1.  ‘புகைப்படத்தைப் பார்க்கும்போது சாந்தியை உணர முடிந்தது.’ – கு. சாய்லி காட்கில் (தற்போது திருமதி சாய்லி கரந்திகர்)

2.   ‘புகைப்படத்தைப் பார்த்தவுடன் மனம் எண்ணமற்ற நிலைக்கு சென்றது. புகைப்படத்தை கைகளில் ஏந்தியவுடன் மனதின் எண்ணமற்ற நிலை மேலும் அதிகமாகி சாந்தியை உணர முடிந்தது. அதன் பிறகு இத்தகைய சாந்தி நிலை 30 நிமிடங்கள் நீடித்தது.’ – வக்கீல் யோகேஷ் ஜல்தாரே

2 அ 6. புகைப்படத்தில் உள்ளவரின் கண்களைப் பார்த்தவுடன் உணர்ந்த அநுபூதி

1.  ‘அவரின் கண்களில் வாத்சல்ய பாவத்தை உணர முடிந்தது. புகைப்படத்தில் உள்ளவர் என்னைப் பார்த்து பேசுவது போல் உணர முடிந்தது.’ – திருமதி ஆரத்தி ம்ஹைச்கர்

2.  ப்ரீதியை உணர முடிந்தது

அ. ‘புகைப்படத்தில் உள்ளவரின் கண்களிலிருந்து ப்ரீதியின் ஊற்று வெளிவருவதாகத் தோன்றியது. புகைப்படத்தை முதன்முதலில் பார்த்தபோது ‘அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்’ எனத் தோன்றியது.’ – கு. திருப்தி காவ்டே

ஆ. ‘புகைப்படத்தைப் பார்க்கும்போது அவரிடம் மிகுந்த அன்புணர்வு இருப்பதை உணர முடிந்தது. ‘அவர் என்னை அன்போடு கட்டியணைக்கிறார்’ என்று எனக்குத் தோன்றியது. அதேபோல் ‘நானும் அவரின் அன்பால் அரவணைக்கப்படுகிறேன்’, என்பதை உணர முடிந்தது.’ – (ஸத்குரு) சிரியாக் வாலே

இ. புகைப்படத்திலுள்ள  நபரின்  ஸாதனைப் பயணம் ‘ஞாநோத்தர பக்தி’ வழியாக உள்ளதால் அவரின் கண்கள் சரணாகதி உணர்வுடன் பிரார்த்தனை செய்வதை உணர முடிகிறது : ‘புகைப்படத்திலுள்ள  நபரின்  ஸாதனைப் பயணம் ‘ஞாநோத்தர பக்தி’ வழியாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. இவரின் லட்சியம் சம்சாரத்திலிருந்தாலும் தெய்வத்திடம் உள்ளது. அதாவது சம்சாரத்தில் இருந்து கொண்டே இல்லாதது போல் உள்ள நிலை. அவரின் கண்கள் சரணாகதி உணர்வுடன் பிரார்த்தனை செய்வதை உணர முடிகிறது.’ – திரு விநாயக் ஆகவேகர்

ஈ. புகைப்படத்திலுள்ளவரின் கண்கள் ஜீவகளையோடு இருப்பதை உணர முடிதல் : ‘புகைப்படத்தில் உள்ளவரிடம் சமஷ்டி நலனுக்கான நோக்கம் அதிகம் இருப்பதால் அவரின் கண்களில் ‘சமஷ்டி காரியம் மற்றும் ஹிந்து ராஷ்ட்ரம் அதி விரைவில் ஏற்பட வேண்டும்’, என்ற ஆழ்ந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. அதனால் அவை ஜீவகளையோடு உள்ளன.’ – கு. நீதா அஹிரே

2 அ 7. மகான் என்ற உணர்வு ஏற்படுதல்

1.  ‘இது யாரோ ஒரு மகான்’ என்ற உணர்வு ஏற்பட்டது.’ – கு. சாய்லி காட்கில் (தற்போது திருமதி சாய்லி கரந்திகர்), கு. அர்ச்சனா முளிக், கு. திருப்தி காவ்டே மற்றும் ஒரு பெண் ஸாதகர்

2.  ‘புகைப்படத்தைப் பார்க்கும்போது அவர் ஒரு மகான் என்பதையும் அவரின் ஆன்மீக நிலை 75% -க்கும் அதிகம் என்பதையும் உணர முடிந்தது.’ – கு. பிரியங்கா லோட்லிகர் (உண்மையில் அவரின் ஆன்மீக நிலை 81% ஆகும்.) – (பராத்பர குரு) டாக்டர் ஜெயந்த் ஆடவலே (10.4.2013)

3.  ரிஷியைப் போன்றவர் இவர் எனத் தோன்றியது : ‘இவர் ரிஷியைப் போன்றவர் மற்றும் அன்புடையவர், ஞானமார்க்கத்தில் செல்பவர், பக்திமார்க்கத்தை கடைபிடிப்பவர் எனத் தோன்றியது.’ – திரு பிரகாஷ் மராட்டே

2 அ 8. நிர்குணத்தை நோக்கி, மோக்ஷத்தை நோக்கி இவரின் பயணம் நடக்கிறது என உணர முடிந்தது

1.  ‘இவர் ஆன்மீக உணர்வு நிலையில் இருந்து கொண்டு சூன்யத்தை நோக்கி செல்கிறார்’ என உணர முடிந்தது.’ – திரு சௌரப் ஸப்ரே

2.       ‘இவரின் பயணம் வெகு வேகமாக நிர்குணத்தை நோக்கி செல்கிறது என உணர முடிந்தது’. – திரு தாதாசாஹேப் காட்கே, கு. பக்தி பார்கர் (தற்போது திருமதி பக்தி மகாஜன்), கு. சுதேஷ்ணா பிம்ப்ளே, திரு விகாஸ் பகத் மற்றும் திரு பரத் மிர்ஜே

Leave a Comment