அக்னிஹோத்ரம்

மகான்கள், தீர்க்கதரிசிகள், ஜோதிடர்கள் மற்றும் பலர் வரக்கூடிய காலம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என கணித்திருக்கின்றனர். அப்போது நம்முடைய ஆரோக்கியம் மட்டுமன்றி நம் உறவினர்களின் ஆரோக்கியமும் பெரும் சவாலாக இருக்கும். ஆபத்துக் காலத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம். நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு செல்வதோ யாராவது மருத்துவரை தொடர்பு கொள்வதோ அல்லது மருந்துகள் வாங்குவதோ முடியாமல் போகலாம்.

முக்காலமும் உணர்ந்த மகான்கள் ஆபத்துக் காலம் வரப் போவதையும் உலக மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கை மடியப் போவதையும் முன்கூட்டியே கணித்துள்ளனர். இந்த ஆபத்துக் காலம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. மூன்றாம் உலகப் போர் இந்த ஆபத்துக் காலத்தில் நடைபெறும். இரண்டாம் உலக யுத்தத்துடன் ஒப்பிடும்போது இதில் பல நாடுகள் மேலும் அழிவை உண்டாக்கும் ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இவற்றை ஒருவர் மீது மற்றொருவர் பிரயோகம் செய்து கொள்ளலாம். இந்த யுத்தத்தில் உயிருடன் தப்பிக்க அணு ஆயுதங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தேவை. அதேபோல், அணு ஆயுதங்களால் ஏற்படும் ரேடியேஷன் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகளும் தேவை. இதற்கு வெறும் ஸ்தூல உபாயங்கள் போதாது, ஏனென்றால் அணுகுண்டு சாதாரண குண்டைக் காட்டிலும் அதிக சூட்சுமமானது. படிப்படியாக அதிக தாக்கமுள்ள உபாயங்களை மேற்கொள்வது சிறந்தது. முதலில் ஸ்தூலம் (உதாரணத்திற்கு எதிரியை அம்பு கொண்டு கொல்வது), ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் (மந்திர உச்சாரணத்துடன் அம்பு எய்வது), சூட்சுமம் (மந்திர உச்சாரணம் மட்டுமே) மற்றும் அதி சூட்சுமம் (மகான்களின் சங்கல்பம்). சூட்சும நிலை ஸ்தூல நிலையைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்தது. அதனால் அணுகுண்டு போன்ற அழிவுபூர்வ ஆயுதங்களால் ஏற்படும் சூட்சும பாதிப்புகளை எதிர்கொள்ள சில சூட்சும உபாயங்களைக் கைக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதன்படி ரிஷிகள் அக்னிஹோத்ர விதியை செய்யும்படி ஆலோசனை கூறியுள்ளனர். இந்த உபாயம் மிகவும் சுலபமானது, சிறிது நேரமே எடுக்கக் கூடியது. ஆனால் சூட்சும பலன்களை உடைய மிக சக்தி வாய்ந்த வழிமுறை இது. அதன் மூலம் சூழலில் சைதன்யம் நிரம்பி ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது.

அக்னிஹோத்ரத்தை தினமும் செய்வது, ஆபத்துக் காலத்திற்கு மட்டுமன்று, மற்ற எல்லா நேரங்களிலும் கூட பயனளிக்கக் கூடியது. இங்கு நாம் வாசகர்களுக்கு அக்நிஹோத்ரத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அக்னிஹோத்ரம் பற்றிய விரிவான விஷயங்கள் ஸநாதனின் புனித நூலில் உள்ளது. வாசகர்கள் இந்நூலையும் வாங்கிப் பயனடையலாம்.

1.    அக்னிஹோத்ரத்தின் வரைவிலக்கணம்

அ. அக்னியில் ஆஹுதி இட்டு செய்யப்படும் தெய்வீக உபாசனை.

அ. அக்னிஹோத்ரத்தின் முக்கியத்துவம்

1. அக்னிஹோத்ரத்தின் மூலம் உண்டாகும் அக்னி சூழலில் உள்ள ரஜ-தம அணுக்களை அழித்து வெகு நேரம் அங்கு நிறைந்து காணப்படுகிறது. அதனால் தினமும் இதை செய்வதன் மூலம் ஒருவரை சுற்றி 10 அடி வட்டத்திற்கு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது. சூட்சும பரிமாணத்தில் இந்தக் கவசம் சிவப்பு நிறமாக தோன்றுகிறது.

2. தேஜ தத்துவம் சம்பந்தமான எந்த பொருளும் இந்த கவசத்தின் எல்லைக்குள் வந்தால் பாதுகாப்பு கவசத்திலுள்ள சிவப்பு நிற தேஜ அணுக்கள் அதை ஈர்த்து மேலும் கவசத்தை வலுப்படுத்துகின்றன.

3. ரஜ-தம பிரதானமான தேஜ அணுக்கள் கர்ண கடூர சப்தமும் எழுப்புவதால் அவற்றின் வரவை பாதுகாப்பு கவசத்தால் முன்னரே உணர முடிகிறது. பிரதிபலிப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு கவசம், தன்னுள்ளிருந்து பன்மடங்கு தேஜ அதிர்வலைகளை மிகுந்த ஆற்றலோடு வெளியேற்றி அந்த கர்ண கடூர சப்தத்தையும் அதை உண்டாக்கும் தேஜ அணுக்களையும் அழிக்கிறது. இதன் பலனாக இந்த அழிவு ஆயுதம் தன் ஆற்றலை இழக்கிறது. அணுகுண்டிலிருந்து வெளிப்படும் இந்த அழிவு சக்தி வலைகளை, பாதுகாப்பு கவசம் ஏற்கனவே அழித்து விட்டதால் அதன் கதிர்வீச்சு பரவாமல் தடுக்கப்படுகிறது. அதனால் அணுகுண்டை போட்டாலும் அவ்விடத்தில் மனித உயிர்களின் இழப்பு ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

அணுகுண்டு வெடிக்கும்போது அதிலிருந்து அதிவேகத்தில் பாயும் தேஜ ரூபமான ரஜ-தம அதிர்வலைகள் வளிமண்டலத்திலுள்ள சூட்சும அக்னி கோசத்தைத் தாக்குகிறது, பிறகு அதிலேயே கரைந்து விடுகிறது. அவற்றின் சூட்சும பாதிப்பும் உடனடியாக அழிக்கப்படுகிறது; அதனால் மேலும் நச்சுத் தன்மை பரவும் அபாயத்திலிருந்து வளிமண்டலம் பாதுகாக்கப்படுகிறது.

2.    அக்னிஹோத்ரத்தின் இயல்பும் செயல்முறையும்

சூரியன் சக்தியை வெளிப்படுத்துகிறான், ஈர்த்தும் கொள்கிறான். அதனால் சுற்றுப்புற சூழலில் மாசை அழிக்கக்கூடிய போஷாக்கான நிலை ஏற்படுகிறது. அதன் மூலம் பூமியில் அமைதி நிலவுகிறது.

சக்தியை உண்டு பண்ணும் ஒரு ஜெனரேட்டரைப் போல் அக்னிஹோத்ரம் செயல்படுகிறது; அதில் உண்டாகும் அக்னி ஜெனரேட்டரின் இன்ஜினைப் போன்றது. அக்னி மூலம் பசுஞ்சாண வறட்டி, பசு நெய் மற்றும் முனை முறியாத அக்ஷதை ஒருங்கிணையும்போது ஒரு தனித்துவ சக்தி உருவாகி அது சுற்றிலுமுள்ள பொருட்களைத் தாக்கி, சூழ்ந்து கொண்டு அவற்றிலுள்ள தீய சக்திகளை அழிக்கின்றது. அதன் மூலம் சூழல் போஷாக்கு நிறைந்ததாகிறது. பின்னர் போஷாக்கான சக்தி சூழலுக்கு கிடைப்பதால் சூழலில் உள்ள இயற்கை விஷயங்களின் இருப்பு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்பட அது உதவுகிறது. இது போன்று வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அக்னிஹோத்ரம் நேரிடையாக சரி செய்கிறது.

2 அ. யக்ஞம் (அக்னிக்கு அர்ப்பணம்)

2 அ 1. யக்ஞ பாத்திரம் : அர்ப்பணம் செய்ய தேவையான பாத்திரம்.

2 அ 2. அர்ப்பணப் பொருட்கள் : பசுஞ்சாண வறட்டி, அக்ஷதை (முனி முறியாத அரிசி), பசு நெய்

2 அ 3. அக்னிஹோத்ர வழிமுறை

1.    திசை : கிழக்கு பார்த்து உட்காரவும்.

2.    நெருப்பை மூட்டும் வழிமுறை

ஒரு சிறு, தட்டையான பசுஞ்சாண வரட்டித் துண்டை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் வைக்கவும். அதற்கு மேலே பசு நெய் தடவிய பசுஞ்சாண வரட்டித் துண்டுகளை, நடுவே காற்றோட்டம் இருக்கும்படியாக அடுக்கவும். பிறகு ஒரு பசுஞ்சாண வறட்டித் துண்டில் நெருப்பு பற்ற வைத்து அதை அக்னிஹோத்ர பாத்திரத்தில் வைக்கவும்.

சிறிது நேரத்திற்குள் எல்லா துண்டுகளும் எரிய ஆரம்பிக்கும். நெருப்பைத் தூண்டி விட கைவிசிரியை உபயோகிக்கவும். வாயால் ஊதக் கூடாது, ஏனென்றால் வாயிலிருந்து நுண்கிருமிகள் நெருப்பிற்குள் நுழையக் கூடும். நெருப்பு புகையில்லாமல் எரிய வேண்டும் என்பதற்காக கெரோசின் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.

2 ஆ. உச்சாரணம் செய்ய வேண்டிய மந்திரங்கள்

சூரியோதயத்தின்போது : 1. சூர்யாய ஸ்வாஹா, சூர்யாய இதம் ந மம; 2. ப்ரஜாபதயே ஸ்வாஹா, ப்ரஜாபதயே இதம் ந மம

सूर्याय स्वाहा, सूर्याय इदं न मम ।

प्रजापतये स्वाहा, प्रजापतय इदं न मम

சூரியாஸ்தமனத்தின்போது : 1. அக்னயே ஸ்வாஹா, அக்னயே  இதம் ந மம; 2. பிரஜாபதயே ஸ்வாஹா, பிரஜாபதயே இதம் ந மம

अग्नये स्वाहा, अग्नय इदं न मम ।
प्रजापतये स्वाहा, प्रजापतय इदं न मम ॥

2 இ. அக்னியில் ஆஹுதியை அர்ப்பணம் செய்தல்

இரு சிட்டிகை அக்ஷதையை கையில் அல்லது ஒரு செப்பு தட்டில் எடுத்துக் கொண்டு அதன் மேல் சில துளிகள் பசுநெய்யை சொட்ட விட வேண்டும். சரியாக சூரியோதயம்/சூரியாஸ்தமன சமயங்களில் முதல் மந்திரத்தை உச்சாரணம் செய்து அக்ஷதை, பசுநெய் கலந்த கலவையை நடுவிரல், மோதிர விரல் மற்றும் கட்டைவிரலால் ஒரு சிட்டிகை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அக்னியில் ‘ஸ்வாஹா’ எனக் கூறி சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு அதேபோல் இரண்டாவது மந்திரத்தை உச்சாரணம் செய்து கொண்டே ‘ஸ்வாஹா’ எனக் கூறும்போது இரண்டாவது சிட்டியை அக்ஷதை, பசுநெய் கலவையை சமர்ப்பிக்க வேண்டும்.

தகவல் : ஸநாதனின் புனித நூல் ‘அக்னிஹோத்ரம்’ (ஆங்கிலம்)

3.    அக்னிஹோத்ரம் செய்வதன் பரிணாமம்

அ. அர்ப்பணத்திற்கு உபயோகிக்கப்படும் பொருட்கள்

பசுஞ்சாண வறட்டி

பசுஞ்சாண வறட்டியை எரிப்பதால் உண்டாகும் தேஜ தத்துவம் ஸ்தூல ரூபத்தில் இருப்பதால் அது பூமியின் வளிமண்டலத்தில் வெளிப்பட்ட தேஜ ரூபமாக நிலை பெறுகிறது.

அக்ஷதை

ஆப தத்துவ நிலையில் (நீர்த் தத்துவம்) அக்ஷதை மூலமாக வளிமண்டலத்தில் தேஜ தத்துவத்தின் பாயும் ரூபம் உருவாகிறது. இதுவே தெய்வீக ஒளி வெள்ளமாக தெரிகிறது.

பசுநெய்

பசுநெய் அர்ப்பணத்தால் இந்த தெய்வீக தேஜ ரூபம் குறுகிய காலத்திற்குள் ஆகாய தத்துவத்துடன் கலந்து வெளிப்படாத தேஜஸாக மாறுகிறது. வெளிப்படாத தேஜஸ் என்பது அதி சூட்சும நிலையில் குளுமை உணர்வை அளிக்க வல்லது, சைதன்யத்துடன் சம்பந்தப்பட்டது. இந்த தேஜ ரூபமான சைதன்யமே மக்களை அணுகுண்டு யுத்த விஷ மாசிலிருந்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும்.

ஆ. ஒருவரின் ஆன்மீக நிலை

அணுஆயுத யுத்த சூழலில் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு பற்றி இங்கு விவரிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் அமைதி காலத்தில் அக்நிஹோத்ரத்தால் கிடைக்கக்கூடிய பயனைக் காட்டிலும் இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.

50% ஆன்மீக நிலைக்கு மேற்பட்ட ஒரு ஸாதகரே இந்த யக்ஞத்தை மந்திர உச்சாரணம் செய்து அல்லது பிரார்த்தனை செய்து நடத்த முடியும்.

60% ஆன்மீக நிலைக்கு மேற்பட்ட ஒரு ஸாதகரின் பிரார்த்தனையே நேரிடையாக யக்ஞத்தை செய்த பலனைத் தரும்

யக்ஞம் செய்யக்கூடிய நேரத்தில் இருமுறை இந்த ஸாதகர்கள் பிரார்த்தனை செய்வதால் மட்டுமே நேரிடையாக யக்ஞம் செய்யக்கூடிய பலன் கிடைக்கும். அதோடு ஸாதகர்களை பாதுகாக்கக் கூடிய ஒரு வலிமையான பாதுகாப்பு கவசம் வளிமண்டலத்தில் ஏற்படும். இதன் மூலம் ஒருவரின் ஆன்மீக நிலை மற்றும் பிரார்த்தனையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அக்னிஹோத்ரம் செய்யும் நபரின் ஆன்மீக நிலைக்குத் தகுந்தவாறு பலன்கள் :

ஒருவர் அக்னிஹோத்ரம் செய்யும்போது அணுஆயுத ரேடியேஷனை வலுவிழக்க செய்யும் சக்தி சில விஷயங்களைப் பொருத்து உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அக்னிஹோத்ரம் செய்வதால் ஒருவர் மீது (ஆன்மீக நிலை, ஆன்மீக தன்மையைப் பொருத்தது) ஏற்படும் தாக்கம் தரப்பட்டுள்ளது.

ஆன்மீக நிலை(%)
20  50  60
1.    அக்னிஹோத்ரம் செய்யும் முறை கர்மகாண்டமாக பக்தியுடன் ஆன்மீக உணர்வுடன் சரணாகதி உணர்வுடன்
2.    பாதுகாப்பு கவசம் (அடிகளில்) 1-2 10 30
3.    சூழல் தூய்மையாதல் (%) 0.75 2 4
4.    தாக்கத்தின் கால அளவு (மணி நேரம்) 1 2 8

ஆன்மீக நிலை :

  • ஒருவரின் ஆன்மீக நிலையே மிக முக்கியமான அம்சம்.
  • அணுஆயுதம் வெடிக்கும்போது 50% ஆன்மீக நிலைக்கு மேற்பட்ட ஒருவர் அக்னிஹோத்ரம் செய்வதாலேயே அவருக்கு பெருமளவு பாதுகாப்பு கிடைக்கிறது. ஆன்மீக நிலை தாழும்போது பலனும் குறைகிறது. சராசரி ஆன்மீக நிலை கொண்ட ஒருவருக்கு (20 – 30%) அக்னிஹோத்ரம் செய்வதால் மிகக் குறைந்த அளவே பாதுகாப்பு கிடைக்கிறது.
  • ஆன்மீக நிலை உயரும்போது, சடங்கு செய்ய வேண்டிய அவசியமும் குறைந்து கொண்டே போகிறது. ஏனென்றால் ஆன்மீக நிலையே பாதுகாப்பிற்கான முக்கிய அம்சம்.
  • மகான்களைப் பொருத்தமட்டில் இத்தகைய அணுகுண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பே தானாகவே அவ்விடத்திலிருந்து அகன்று சென்று விட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்.
  • ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம் : ஆன்மீக நிலையை உயர்த்திக் கொள்வதற்கான ஒரே வழி எட்டு அடிப்படை தத்துவங்களைக் கொண்ட ஆன்மீக பயிற்சியை செய்வது தான். சரியான ஆன்மீக பயிற்சி மூலம் ஒருவர் இப்பிறவியிலேயே விரைவான ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும்.
  • சடங்கை செய்யும்போது இருக்க வேண்டிய மனப்பாங்கு :
  • ஒருவர் ஆன்மீக உணர்வுடன் பக்தியுடன் சடங்கை செய்யும்போது பலனும் பலமடங்கு கிடைக்கிறது.
  • சரணாகதி உணர்வுடன் செய்யும்போது மேலும் பலன் கூடுகிறது.
  • சராசரியாக, 50% ஆன்மீக நிலைக்கு மேற்பட்ட ஒருவராலேயே ஆன்மீக உணர்வுடன் சடங்கை செய்ய முடியும்.

இ. பரிணாமம் நீடிக்கக்கூடிய கால அளவு

கர்மகாண்டப்படி செய்யப்படும் யக்ஞம்

யக்ஞம் ஒரு நாளைக்கு இருமுறை செய்யப்பட்டால் அதன் பாதுகாப்பு கவசம் ஒரு வேளைக்கு 12 மணி நேரம் நீடிக்கும். யக்ஞம் கர்மகாண்டத்தின் ஒரு பகுதியாக செய்யப்பட்டால் பாதுகாப்பு செயல்பாடு மேற்கூறியபடி மணி நேரத்தில் இருக்கும்.

யக்ஞத்தை தொடர்ந்து செய்தல்

அக்னிஹோத்ரத்தை தொடர்ந்து பல நாட்களுக்கு செய்தால் தகர்க்க முடியாத உறுதியான ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகிறது.

ஆன்மீக உணர்வுடன் யக்ஞத்தை செய்யும்போது நான்கு-மடங்கு பலன்கள்

ஆன்மீக உணர்வுடன் யக்ஞத்தை செய்யும்போது அதன் பலன் மாத கணக்கில் நீடிக்கிறது. அதாவது, ஒரு நாளைக்கு இருமுறை யக்ஞம் செய்யும்போது நான்கு நாட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இன்னொரு விதமாகக் கூற வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இருமுறை யக்ஞத்தை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும்போது நான்கு மாதங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

சரணாகத உணர்வுடன் யக்ஞத்தை செய்யும்போது எட்டு-மடங்கு பலன்கள்

யக்ஞத்தை பூரண சரணாகத உணர்வுடன் செய்யும்போது அதன் பலன் வருட கணக்கில் நீடிக்கிறது. அதாவது, ஒரு நாளைக்கு இருமுறை யக்ஞம் செய்யும்போது எட்டு நாட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இது போன்று யக்ஞம் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தால், சரணாகத உணர்வால், பகவானின் அருளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு கவசம் நான்கு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதாவது அதிகபட்சமாக ஒரு வருடம் வரை பாதுகாப்பு கிடைக்கும்.

ஈ. யாருக்கு அதிக பலன் கிடைக்கிறது?

சடங்கை பார்ப்பவரோடு ஒப்பிடும்போது சடங்கை செய்பவருக்கு அதிக பலன் கிடைக்கிறது. தனி நபர் பாதுகாப்பிற்காக இந்த சடங்கு முக்கியமாக செய்யப்படுகிறது. இருந்தாலும் சடங்கை பார்ப்பவர் தானே அந்த சடங்கை செய்கிறோம் என்ற ஆன்மீக உணர்வு கொண்டிருந்தால் அவருக்கும் அதே அளவு பலன் கிடைக்கிறது.

4.    அக்னிஹோத்ரத்திற்கு பின்னர்
செய்ய வேண்டிய காரியங்கள்

அ. தியானம்

அக்னிஹோத்ரம் செய்த பிறகு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரத்தை தியானத்திற்கு ஒதுக்கவும். நெருப்பு அணையும்வரை மட்டுமாவது தியானம் செய்ய வேண்டும்.

ஆ. விபூதியை பத்திரப்படுத்துதல்

அடுத்த அக்னிஹோத்ரம் செய்வதற்கு முன்பாக யக்ஞ பாத்திரத்திலிருந்து விபூதியை ஒரு கண்ணாடி அல்லது மண் பாண்டத்தில் பத்திரப்படுத்தவும். இதை செடிகளுக்கு உரமாகவோ அல்லது மருந்து தயாரிப்பதற்கோ பயன்படுத்தலாம். அக்னிஹோத்ர விபூதியை சூழலில் ஊதி பரவச் செய்யலாம், உடலில் பூசிக் கொள்ளலாம். வாஸ்து சுத்திக்கு வாஸ்துவில் இந்த விபூதியை ஊதலாம். உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தி விலக பூசிக் கொள்ளலாம். உட்புறம் தூய்மையாவதற்கு நீரில் கலந்து பருகலாம். விபூதியை நுகர்வதால் உடல் சூட்சும அளவில் தூய்மை அடைகிறது. வேண்டாத சிந்தனைகள், சந்தேகங்கள் விலகுகின்றன. மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. ஸாத்வீக தேஜ அதிர்வலைகள் நிரம்பிய எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஒரு அக்னிஹோத்ர யக்ஞத்திலிருந்து கிடைக்கும் விபூதியை இரு நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். அல்லது அதிலுள்ள சைதன்யத்தை மேலும் தக்க வைத்துக் கொள்ள ஒரு ஸாத்வீகமான இடத்தில் அதை பத்திரப்படுத்தலாம்.

5.    ஒவ்வொரு வீட்டிலும் அக்னிஹோத்ரம்,
யாக-யக்ஞங்கள் செய்வதன் அவசியம்

ஒவ்வொரு வீட்டிலும் அக்னிஹோத்ரம், பிரம்மயக்ஞம், யாக-யக்ஞங்கள் மற்றும் ஹோமம் ஆகிய சடங்குகள் ஸமஷ்டி ஸாதனையாக செய்யப்பட்டு வந்தால் வளிமண்டலத்தில் தேஜ தத்துவ நிலையில் மந்திரங்கள் மூலமாக சேரும் சக்தி, தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு கவசமாக இயங்கும். இந்த கவசம், அணுஆயுத ரேடியேஷனை எதிர்த்து அழிக்கும் சக்தி கொண்டது. எவ்வாறென்றால் அதி சூட்சும யக்ஞங்களால் உருவாகும் சக்தி, சூட்சும ரஜ-தம பிரதானமான ரேடியேஷனை அழித்து மனித குலத்தைக் காக்கும்.

 

Leave a Comment