சுக்குப் பொடி

வைத்திய மேகராஜ் பராட்கர்

சுக்குப் பொடியின் குணதர்மம் உஷ்ணம் மிகுந்தது மற்றும் கபம், வாதத்தைப் போக்கக் கூடியது.

1.     குணதர்மம் மற்றும் கிடைக்கும் பயன்கள்

‘சுக்குப் பொடியின் குணதர்மம் உஷ்ணம் மிகுந்தது மற்றும் கபம், வாதத்தைப் போக்கக் கூடியது. நோயுற்று இருக்கும்போது இதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன; இயல்பு, இடம், பருவம் மற்றும் ஏனைய நோய்களுக்கு ஏற்றபடி சிகிச்சையில் மாற்றம் ஏற்படக் கூடும். அதனால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயன் மருந்து உட்கொள்ளும் முறை கால அளவு
அ. குளிர்காலம் முடிந்து வரக்கூடிய இளவேனில் காலத்திலும் அதோடு கார்காலத்திலும் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்க 1  லிட்டர் குடிக்கும் தண்ணீரில் கால் ஸ்பூன் சுக்குப் பொடி போட்டு கொதிக்க விடவும் மற்றும் இதை பாட்டிலில் அல்லது தாமிர பாத்திரத்தில் நிரப்பி வைக்கவும். தாகம் எடுக்கும்போது இதை சிறிது சிறிதாக குடிக்கவும். குளிர்கால குளிர் குறைவதற்கு 15 நாட்கள் முன்பும் முழு கார்காலமும்
ஆ. சளி, இருமல் மற்றும் நெஞ்சில் சளி கட்டும்போது கால் ஸ்பூன் சுக்குப்பொடி அரை ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை குழைத்து ஒரு நாளில் 2−3 முறைகள் நக்கி சாப்பிடவும். 5 முதல் 7 நாட்கள் வரை
இ. சளியால் தலைவலி வேண்டிய அளவு சுக்குப் பொடியை வெந்நீரில் குழைத்து நெற்றியில் மெலிதான பற்று போடவும். 5 முதல் 7 நாட்கள் வரை
ஈ. நாவில் ருசி தெரியாமல் இருத்தல், பசியெடுக்காமல் இருத்தல், வயிற்று வலியோடு மலம் கழித்தல், பைல்ஸ், அமிலத்தன்மை மற்றும் ஜீரணமின்மை சுக்குப் பொடி, நெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கால் ஸ்பூன் எடுத்து கலந்து இதை நாளில் 2−3 முறை முடிந்தால் உணவுக்கு அரை மணி முன்பு சப்பி சாப்பிடவும். 2−3 நாட்கள்
உ. தொண்டை மற்றும் மார்பில் எரிச்சல் ஏற்படுதல், புளித்த ஏப்பம் வருதல், வாந்தி உணர்வு மற்றும் வாந்தி எடுத்தல் ஒரு நாளில் 3−4 முறைகள் கால் ஸ்பூன் சுக்குப் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரை கலவையை சப்பி சாப்பிடவும். 7 நாட்கள்
ஊ. வாயுவால் மார்பில் வலி ஏற்பட்டு கஷ்டப்படுதல் மற்றும் தொடர்ந்து ஏப்பம் வருதல் எப்போது கஷ்டம் ஏற்படுகிறதோ அப்போது கால் ஸ்பூன் சுக்குப் பொடியை அரை ஸ்பூன் தேனில் குழைத்து நக்கவும். 2−3 நாட்கள்
எ. சாதாரண வாயுப்பிடிப்பு (தோள் பிடிப்பு, அதிலும் அதிகாலை தோள்வலி ஏற்படுதல், தோள் வீக்கம்) மதியம் மற்றும் இரவு உணவுக்கு முன்னர் கால் ஸ்பூன் சுக்குப் பொடியை ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் கலந்து குடித்து பின் அரை கப் வெந்நீர்த் குடிக்கவும். அதன் பின்பு உடனே உணவு உட்கொள்ளவும். அதோடு இரவு உணவுக்கு பின்னர் வேண்டிய அளவு சுக்குப் பொடியை வெந்நீரில் குழைத்து வலியுள்ள தோள்பட்டையில் தடித்த பற்று போடவும். 15 நாட்கள்
ஏ. கர்ப்பவதி பெண்ணுக்கு ஏற்படும் ஜுரம் மற்றும் வெள்ளைப் போக்கு அதிகாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சுக்குப் பொடி, அரை கப் பாலுடன்  ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அது ஒரு கப் அளவு ஆனவுடன் குடிக்கவும். இந்த மருந்தை உட்கொள்ளும் சமயம் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் குடிக்க, சாப்பிடக் கூடாது. 15 நாட்கள்
ஐ. அசதி மற்றும் உடல் எடை குறையும்போது, அதோடு வீர்யவிருத்திக்கு அதிகாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சுக்குப் பொடி மற்றும் அரை ஸ்பூன் ஜாதிக்காய் தேய்த்து எடுக்கப்பட்ட பொடி, ஒரு கப் பால் மற்றும் இரு ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும். இந்த மருந்தை உட்கொள்ளும் சமயம் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் குடிக்க, சாப்பிடக் கூடாது 3 மாதங்கள்
ஒ. சுக்குப் பொடியின் மற்ற பயன்கள் 1. உணவு சமைக்கும்போது மசாலா ரூபத்தில் சுக்குப் பொடியை உபயோகிக்கலாம்.

2.     சாதாரண டீயில் சுவைக்கேற்ப சுக்குப் பொடி சேர்க்கலாம்.

3.     மதிய உணவில் மோர் குடிக்கும்போது அதில் சுவைக்கேற்ப சுக்குப் பொடி மற்றும் கருப்பு உப்பை சேர்த்து குடிக்கலாம்.

2. குறிப்புகள்

அ. 3 வயதிலிருந்து 7 வயதிற்குள் உள்ளவருக்கு கால் ஸ்பூனும் 8 வயதிலிருந்து 14 வயதிற்குள் உள்ளவருக்கு அரை ஸ்பூனும் உபயோகிக்கலாம்.

ஆ. டயாபடீஸ் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் தண்ணீருடன் கலந்து நக்கி சாப்பிடவும்.

இ. உஷ்ணத்தின் அறிகுறிகள் உள்ளபோதும் (உஷ்ண பதார்த்தங்களை சாப்பிட முடியாதபோது, வாய்ப்புண் உள்ளபோது, சிறுநீர் கழிக்கும் பாதையில் எரிச்சல், உடலில் கொப்பளங்கள், மயக்கம் போன்றவை) முதுவேனில் மற்றும் கார்காலத்திற்கு பிறகு வரும் குளிர்காலத்தில் (அக்டோபர் வெப்பம்) சுக்குப் பொடியை குறைவாக உபயோகிக்கவும் அல்லது உபயோகிக்க வேண்டாம்.

ஈ. உஷ்ணம் அதிகரித்துவிட்டால் சுக்குப் பொடி எடுத்துக் கொள்வதை ஓரிரு தினங்களுக்கு நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக எலுமிச்சை சர்பத் பருகலாம்.

உ. சுக்குப் பொடி பற்று காய்ந்த பின் தண்ணீரால் கழுவிக் கொள்ளலாம். அவ்விடத்தில் எரிச்சல் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தால் மீண்டும் பற்று போட வேண்டாம். எரிச்சலைக் குறைக்க அவ்விடத்தில் எலுமிச்சை சாரை தடவவும்.

ஊ. சுக்குப் பொடியில் பூச்சிகள் வராமலிருக்க அதை குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்; அல்லது ஒரு மாதத்திற்குள் உபயோகித்து விடவும்.

3. மருந்தின் நல்ல பரிணாமம் ஏற்பட இதை தவிர்த்து விடுங்கள்!

மைதா மற்றும் கடலைமாவில் செய்த பண்டங்கள்; உப்பு, காரம் மற்றும் எண்ணெய் மிகுந்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், தயிர், பன்னீர், சீஸ், பழையது, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, சரியான அளவில் இல்லாத உணவு, வெயிலில் சுற்றுதல் மற்றும் இரவில் விழித்திருத்தல் ஆகியவை.

4.     மருந்தை உட்கொள்ளும் சமயம்
உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும்!

ஹே தெய்வமே, நான் இந்த மருந்தை உங்களின் திருவடிகளில் சமர்ப்பித்து அதை உங்களின் பிரசாதமாக உட்கொள்கிறேன். இதன் மூலம் என் நோய் குணமாகட்டும்.

–  வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (11.6.2021)

தகவல் : ஸனாதனின் ஹிந்தி நூல் ‘ஆயுர்வேதப்படி தினசரி நடந்து மருந்தில்லா ஆரோக்கிய வாழ்வை வாழுங்கள்!’

Leave a Comment