குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது ‘சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதன் ஆதர்ச உதாரணம்!

ஸந்த் ஞானேஷ்வர்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே

‘ஸந்த் ஞானேஷ்வர் மகாராஜ் அவர்களின் தந்தையார்  ஒரு உத்தம ஸாதகர் ஆவார். குருவின் ஆணைப்படி அவர் க்ரஹஸ்தாச்ரமத்தை மேற்கொண்டார்.  ‘க்ரஹஸ்தாச்ரமத்தில் இருந்து கொண்டே ஸாதனை மார்க்க வாழ்க்கையின் லட்சியம் கண்முன் எப்போதும் தெரிய வேண்டும்’ என்ற நோக்கத்தில் அவரின் குழந்தைகளுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுத்தார்.

‘நிவ்ருத்தி’நாத் : சம்சாரத்திலிருந்து நிவிருத்தி அடைந்தால்தான் அதாவது மாயையின் மீதுள்ள பற்றுதல் குறைந்தால்தான், தியாகம் செய்தால்தான் ஸாதனை நடக்கும்.

‘ஞான’தேவ் : நிவ்ருத்தி அடைந்த ஸாதகருக்கு உண்மையான ‘ஞானம்’ கிடைக்கிறது.

‘ஸோபான’தேவ் : ஞானம் அடையப்பெற்ற ஸாதகர் இறைவனை அடையும் மார்க்கத்தில் முன்னேறுகிறார்.

‘முக்தா’பாய் : அவ்வாறு இறைவனை அடையும் மார்க்கத்தில் முன்னேறும் ஸாதகருக்கு அவரின் ஸாதனையின் பலன் கிடைக்கும்போது முக்தி அடைகிறார்.

‘முந்தைய காலத்தில் மக்கள் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்தார்கள்’ என்பது இதிலிருந்து நம் கவனத்திற்கு வருகிறது!’

–  (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே

Leave a Comment