பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன் ஸ்தாபன நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து ஹிந்துத்வவாதிகளுக்கும் உதவி புரிந்து ஹிந்து ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்!

திரு நாகேஷ் காடே

பல வருடங்களுக்கு முன்பு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்களுக்காக ஒரு நான்கு வரிக் கவிதையை எழுதி இவ்வாறான ஆன்மீக உணர்வைக் கொள்ளுமாறு கூறினார்.

‘ஸ்தூல உடலுக்கே இடம், காலம் ஆகிய கட்டுப்பாடுகள். எல்லோரிடமும் எல்லா நேரமும் நான் எவ்வாறு இருக்க முடியும்.

ஸனாதன தர்மமே என் நித்யஸ்வரூபம். இந்த ஸ்வரூபத்தில் நான் எங்கும் எப்போதும் உள்ளேன்’.

காலப்போக்கில் பல ஹிந்துத்வவாதிகள் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களை நோக்கி ஆகர்ஷிக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்களுள் பலர் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களை தங்களின் ‘குரு’வாகவே கருதுகின்றனர். ‘பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸனாதன தர்மத்திற்கே சொந்தம்’ என்று நமக்கு இப்போது விளங்குகிறது.

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் எப்போதும் தன் ஸ்தாபன ஸாதகர்கள், தன் ஸ்தாபனம் மற்றும் ஹிந்துத்வவாதிகள், அவர்களின் ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு இடையே பேத உணர்வு கொண்டதில்லை. அதனால் ஸாதகர்களைப் போல ஹிந்துத்வவாதிகளுக்கும் அவரால் ஆன்மீக வழிகாட்டுதல் வழங்க முடிந்துள்ளது. பல ஹிந்துத்வவாதிகள் ஹிந்துத்வ பணிகளில் ஈடுபாடு கொண்டு அதோடு கூட இறைவனை அடையும் பாதையிலும் பயணிக்கின்றனர்.

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின், ஹிந்துத்வவாதிகளிடம் கொண்ட அனன்ய அன்பின் சில உதாரணங்கள் இதோ.

–  திரு நாகேஷ் காடே, கூட்டு ஆசிரியர், ஸனாதன் பிரபாத் பத்திரிக்கைகள்

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஹிந்துத்வவாதிகளுடன் உரையாடுதல் : (இடமிருந்து) திரு மறவன்புலவு சச்சிதானந்தன் (இலங்கை), வக்கீல் ரபீந்திர கோஷ் (‘பங்களாதேஷ் மைனாரிட்டி வாட்ச்’) மற்றும் டாக்டர் மாதவ் பட்டராய் (தலைவர், ‘ராஷ்ட்ரீய தர்மசபா நேபால்’, காத்மாண்டு).

ஹிந்துத்வ ஸ்தாபனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்போது பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன் செயல்களின் மூலம் மற்ற ஸ்தாபனங்களின் பணிகளும் நம் பணியே என்ற உணர்வுடன் எப்படி திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளார். எந்த ஹிந்துத்வ ஸ்தாபனமாக இருந்தாலும் எந்த தனிநபராக இருந்தாலும் தன் அகண்ட ப்ரீதியால் அனைவரையும் தன்னுடையவராக்கிக் கொண்டுள்ளார்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் அன்புக்கடல், அவர் ஹிந்துத்வவாதிகளிடம் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தாருடன் கூடவும் நெருங்கிய பந்தம் கொண்டிருக்கிறார்!

(இடமிருந்து உட்கார்ந்திருப்பவர்) பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், பூஜ்ய ஹரி சங்கர் ஜெயின் (உச்சநீதிமன்ற வழக்கறிஞர்) மற்றும் அவர் மனைவி திருமதி உமா ஜெயின், (இடமிருந்து நின்றிருப்பவர்) பூஜ்ய ஹரி சங்கர் ஜெயின் அவர்களின் மகன் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், மருமகள் திருமதி தோனா பேரன் வ்ருஷான்க், மகள் திருமதி வைஷ்ணவி மற்றும் மருமகன் திரு சோஹம் தாவே.

இக்குடும்பத்தின் இரு சந்ததியினரான – வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் மற்றும் அவர் மகன் வ்ருஷான்க் ஆகியோரும் 61% ஆன்மீக நிலை அடைந்தவர்கள்.

 

 

Leave a Comment