மொழி மற்றும் மாநிலங்கள் ஆகிய தடைகளைத் தகர்த்து பொங்கிப் பெருகும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதி (எதிர்பார்ப்பில்லாத அன்பு)!

‘ஹிந்து ராஷ்ட்ர’ பணியில் ஹிந்து ஒற்றுமைக்கான ஆதாரத் தூணாக விளங்குபவர் அவர்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே

‘ஸனாதன் பிரபாத் உங்களுக்கான ஒலிபெருக்கியே’ என்று ஹிந்துத்வவாதிகளிடம் கூறுதல்!

சமூகம் ‘ஸனாதன் பிரபாத்’ ‘ஸனாதன் ஸன்ஸ்தா’வின் ஒலிபெருக்கி என கருதுகிறது. ஆனால், பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ‘ஸனாதன் பிரபாத்’-ஐ  ஹிந்துத்வவாதிகளின் ஒலிபெருக்கியாக இயங்க வேண்டும் என்று ஸாதகர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அவர் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஹிந்துத்வவாதியிடமும் கூறுவார் – ‘ஸனாதன் பிரபாத்-ஐ உங்களின் பத்திரிக்கையாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஸ்தாபனத்தின் செய்தியை வெளியிடுவதற்கு ஸனாதன் ப்ரபாத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்!’ கர்நாடகாவிலுள்ள ஒரு ஸ்தாபன பொறுப்பாளர்களிடம் – ‘உங்கள் ஸ்தாபனத்திற்காக ஒரு பக்கத்தை நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம். நீங்கள் அவசியமான செய்தியை அனுப்பி வையுங்கள். அதை வெளியிடுகிறோம்’ என்று கூறினார்.

ஹிந்துத்வ வலைதளங்களிலேயே அதிக வாசக எண்ணிக்கை கொண்ட ‘HinduJagruti.org’ வலைதளமும் தொடர்ந்து பல ஸ்தாபனங்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இவற்றை செய்யும்போது பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் கண்ணோட்டம் இதுதான் ‘ஹிந்துத்வவாதிகள் புரியும் மகத்தான பணிக்கு நம்மாலான சிறு பங்களிப்பு’.

சங்கடத்திலுள்ள ஹிந்துக்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு உதவுதல்

தர்ம ரக்ஷண காரியங்களில் ஈடுபடும்போது காவல்துறையினரால் மற்றும் தர்மவிரோத சக்திகளால் தாக்குதல்கள், அநியாயமான கைதுகள் ஆகியவை தொடர்ந்து நடக்கின்றன. ‘இந்த சமயங்களில் ஸாதகர்கள் தங்களின் பந்துக்களாக கருதி தாக்குதலுக்கு உள்ளான மற்ற ஸ்தாபன செயல்வீரர்களை சென்று பார்க்க வேண்டும்’ – என்பதே ஸாதகர்களுக்கு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அறிவுரையாகும். ‘நாம் சங்கடத்தில் இருக்கும்போது நமக்கு உதவ யாராவது முன்வந்தால் அவர்களின் ஆதரவை நம்மால் உணர முடிகிறது. அதேபோல் மற்றவர்களும் உங்களின் ஆதரவை உணர வேண்டும்.’, என்பதே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் கண்ணோட்டம். அதனால் ஒரு ஹிந்துப் பற்றுள்ளவர் அல்லது ஸ்தாபனம் சங்கடத்தில் உள்ளது என்பது அவருக்கு தெரிய வந்தால் அவர் உடனே கேட்பார், ‘நீங்கள் யாராவது சென்று அவரை சந்தித்தீர்களா இல்லையா, அவர்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?’

சங்கடத்திலுள்ள ஹிந்து ஸ்தாபனங்களுக்கு அவர் தந்துள்ள ஆதரவிற்கான இரு உதாரணங்கள் இதோ –

சங்கட காலத்திலுள்ள ஒரு ஹிந்துத்வ தலைவருக்கு மன அளவிலும் ஆன்மீக அளவிலும் உதவி வழங்குதல்

உட்பூசல்களால் ஒரு ஸ்தாபனத்தின் நடவடிக்கைகள் முழுவதுமாக முடக்கப்பட்ட நிலையில் இருந்தன. உறுப்பினர்கள் மீது காவல்துறையினரின் கொடூரங்கள், நீதிமன்றத்தில் பல வழக்குகள், பல மாநிலங்களில் உள்ளே நுழைய தடையுத்தரவு, நிதியலவிலான கஷ்டங்கள் போன்றவை. அதன் பலனாக அதன் முக்கிய தலைவர் பெரும் மன அழுத்தத்தில் இருந்தார். அவர் சமூக வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கி விடலாம் என்ற முடிவுக்கு வர நினைத்தார். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு இதுபற்றி தெரிய வந்தபோது அவர் அந்த தலைவருக்கு மனோரீதியான ஆதரவு வழங்கினார். அவர் மன ஊக்கம் பெறுவதற்கான மருந்துகளை பரிந்துரை செய்தார் மற்றும் அவரின் ஸ்தாபனத்திற்கு எல்லா விதங்களிலும் உதவுவதாக கூறினார். இதன் பிறகு அவ்வப்பொழுது அந்தத் தலைவர் மற்றும் அவரின் பணி பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் தன்னார்வத் தொண்டர்களிடம் எல்லா விதங்களிலும் உதவுமாறு கூறினார்.

சிறு ஸ்தாபனங்களின் பணி வளர்வதற்குரிய வழிகாட்டுதல் மற்றும் உதவி வழங்குதல்

ஹிந்துத்வவாதிகளை ஒன்றிணைக்கும் பணியில் சில சிறு ஸ்தாபனங்களும் நம் தொடர்பில் வருகின்றன. இந்த ஸ்தாபனங்களின் பொறுப்பாளர்களுக்கு ஹிந்துத்வ பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இருந்தாலும் ஸ்தாபன வளர்ச்சிக்கு எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், அந்தந்த ஸ்தாபன தலைமையிலேயே பணிகளைத் தொடருமாறு கூறினார். அதோடு அந்த திசையிலே பயணிக்கத் தேவையான பல்வேறு பயிற்சி முறைகளையும் பரிந்துரைத்தார்.

இந்த பயிற்சி முறையின் கீழ், சில பொறுப்பாளர்களிடம் நம் ஸனாதன் ஆச்ரமத்திற்கு வந்து சில நாட்கள் தங்கி ஆச்ரம நிர்வாக பொறுப்பை எவ்வாறு வகிப்பது என்பது பற்றி கற்றுக் கொள்ள சொன்னார். அதோடு சில ஹிந்துத்வவாதிகளை பல இடங்களுக்கு சென்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி காரியகர்த்தாக்களுடன் சேர்ந்து ஹிந்து ஒற்றுமைக்காக எவ்வாறு காரியங்களில் ஈடுபடுவது என்பது பற்றிக் கற்றுக் கொள்ள சொன்னார்.

Leave a Comment