பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் உடலில் மற்றும் பொருட்களில் ரோஸ் நிறம் ஏற்படுதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில்

1.    பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களிடமுள்ள வியாபகமான தெய்வீக ப்ரீதியால் அவரின் உள்ளங்கைகள், பாதங்கள், நாக்கு மற்றும் உதடுகள் வெளிர் ரோஸ் நிறமாக அற்புத நிற மாற்றம் பெற்றுள்ளன

எவ்வாறு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் சருமம், நகங்கள், தலைமுடி வெளிர் மஞ்சளாக மாறினவோஅதேபோல் அவரின் கண்களின் உட்பகுதி, உள்ளங்கைகள், பாதங்கள், நாக்கு மற்றும் உதடுகள் வெளிர் ரோஸ் நிறத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றன. இது அவரிடமுள்ள வியாபகமான தெய்வீக ப்ரீதியின் நிற வெளிப்பாடாகும்.

2.    விரல்நுனிகள் மேலும் ரோஸ் நிறத்திற்கு மாறுதல்

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் விரல்நுனிகள் மேலும் ரோஸ் நிறமாகத் தெரிகின்றன. பொதுவாக விரல்நுனிகள் நுண்ணுணர்வு கொண்டவை, அதனால் ப்ரீதியைக் குறிக்கும் ரோஸ் நிறம் அவரின் விரல்நுனிகளிலிருந்து அதிக அளவு வெளிப்படுகிறது.

3.    பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் பேசும்போது அவரின் உதடுகள், நாக்கு மேலும் ரோஸ் நிறமாகின்றன

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் பேசும் சமயத்தில் அவரின் உள்வாயும் நாக்கும் மேலும் ரோஸ் நிறமாகின்றன. இது ப்ரீதி என்ற குணம் விழிப்படைந்த நிலையில் உள்ளதை காண்பிக்கிறது. சமூக நலனுக்காக ப்ரீதி நிரம்பிய அதிர்வலைகள் அவரின் பேச்சிலிருந்து வெளிப்படுகின்றன.

–        ஸனாதனின் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (10.6.2011)

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதியின் கண்ணுக்குத் தெரிகின்ற வெளிப்பாடு

அவரிடமுள்ள திவ்ய வியாபகமான ப்ரீதியால்
நாக்கு ரோஸ் நிறமாதல் (வருடம் 2011)

கண்களின் உட்பகுதி ரோஸ் நிறமாதல் (வருடம் 2011)

விரல்நுனிகள் ரோஸ் நிறத்திலும் சைதன்யம்
நிரம்பிய நகங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுதல்

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் வெள்ளை குர்தா அங்கங்கு ரோஸ் நிறமாக மாறுதல்

முதன்முதலில் 2009-ல் அங்கங்கு வெளிர் ரோஸ் நிறம்
காணப்பட்ட அவரின் குர்தா 10 வருடங்களில் மேலும் அடர்த்தியாதல்

31.12.2009 அன்று பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் அணியும் குர்தா கைகளில், வயற்றுப் பகுதியில் மற்றும் மார்புப் பகுதியில் ரோஸ் நிறமாக மாறியுள்ளதை கவனிக்க முடிந்தது. சாதாரணமாக துணிகள் பல நாட்கள் உபயோகத்திற்கு பின்னர் வெளிறிப் போகும்; ஆனால் வெள்ளைத் துணி வேறு நிறத்திற்கு மாறுவது என்பதை நாம் கேள்விப்பட்டதில்லை. இந்த மாற்றம் தெய்வீக தத்துவத்தின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது மற்றும் அதன் ஒளிரும் தன்மை சமஷ்டி நலனுக்காக விழிப்படைந்த தெய்வீக தத்துவத்தைக் குறிக்கிறது. மிக உயர் நிலையிலுள்ள மகானான பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் பணி சமூக நலனைக் கருத்தில் கொண்டது. அதனால் அவரின் உடல் மற்றும் பொருட்கள் மூலமாக சமூகத்திற்குத் தேவையான தெய்வீக தத்துவம் விழிப்படைந்துள்ளது.

ஸாதகர்கள் மற்றும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் உடைகள் ரோஸ் நிறத்தில் மாறுவதன் தனித்துவ தன்மைகள்

1.    தீய சக்திகளால் தீவிர ஆன்மீக கஷ்டமுள்ள ஸாதகர்களின் ரோஸ் நிறமாக மாறிய உடைகள் சைதன்யம் செறிந்த இடத்தில் வைத்தபோது ரோஸ் நிறம் மறைந்து போனது : தீய சக்திகளால் தீவிர கஷ்டமுடைய ஸாதகர்களின் உடைகளில் ரோஸ் நிறம் தோன்றியது; அதன் மீது விபூதி தடவியபோது அல்லது அதனுடன் ஸ்ரீகிருஷ்ணனின் படத்தை சேர்த்து கட்டியபோது அல்லது சைதன்யம் செறிந்த இடத்தில் வைத்தபோது அந்த ரோஸ் நிறம் மறைந்து போனது. எட்டு நாட்கள் ஆன பின்பு அந்த மாயாவி ரோஸ் நிறம் சிறிது சிறிதாக மங்கி பின் மறைந்து போன்றது.

2.    தீய சக்திகளின் பாதிப்பு இல்லாத மற்றும் நேர்மறை சக்தி அதிர்வலைகள் கொண்ட ஸாதகர்களின் ஆடைகளில் தோன்றிய ரோஸ் நிறம் : தீய சக்திகளின் பாதிப்பு இல்லாத மற்றும் நேர்மறை சக்தி அதிர்வலைகள் கொண்ட ஸாதகர்களின் ஆடைகளில் தோன்றிய ரோஸ் நிறம் அவற்றை சைதன்யம் செறிந்த இடத்தில்  வைத்தபோது மேலும் அடர்த்தியானத்தை கவனிக்க முடிந்தது.

3.    தீய சக்திகளின் பாதிப்போ அல்லது நேர்மறை சக்தி அதிர்வலைகளோ இல்லாத ஸாதகர்களின் உடைகளில் சிறிதளவு ரோஸ் நிற மாற்றம் : தீய சக்திகளின் பாதிப்போ அல்லது நேர்மறை சக்தி அதிர்வலைகளோ இல்லாத ஸாதகர்களின் உடைகளை சைதன்யம் செறிந்த இடத்தில் வைத்தபோது அவற்றில் சிறிதளவு ரோஸ் நிற மாற்றம் தெரிந்தது.

4.    பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ஆடைகளில் தோன்றும் ரோஸ் நிறத்தின் தனித்துவ தன்மைகள்

அ. அதில் ஒளியும் ஒளி ஊடுருவும் தன்மையும் அதிகம்.

ஆ. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் உடலில் உள்ள பூரண சைதன்யத்தால் அவரின் ஆடைகளில் தோன்றும் ரோஸ் எங்கும் சமமாக உள்ளது.

இ. தெய்வீக சுகந்தமும் குளுமையான அலைகளும் அதிலிருந்து வெளிப்படுகின்றன.

– ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா.

Leave a Comment