சாதாரண காரியங்கள் மூலம் வெளிப்படும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ஸாதகர்கள் மீது வைத்துள்ள எல்லையில்லா அன்பு!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே

‘குருவில்லாமல் சிஷ்யனில்லை; சிஷ்யனில்லாமல் குரு இல்லை’. சிஷ்யனின் சந்தோஷத்திலேயே குருவின் சந்தோஷம் அடங்கியுள்ளது. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மை. ஸனாதனின் ஒவ்வொரு ஸாதகரும், மிகவும் கஷ்டமான காலத்தில் அவரின் ப்ரீதியை (எதிர்பார்ப்பில்லாத தூய அன்பு) அனுபவித்துள்ளனர். நம்முடைய குடும்பத்தினரும் உறவினர்களும் அவர்களின் சக்திக்கேற்ப உடலளவில், மனதளவில் மட்டுமே நமக்கு உதவ முடியும். இதற்கு மாறாக குருவே தன் சிஷ்யர்களின் உடலளவிலான, மனதளவிலான மற்றும் ஆன்மீக அளவிலான எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வைக்கிறார் என்ற அனுபூதியை ஸனாதனின் ஸாதகர்கள் நேரிடையாக அனுபவித்துள்ளனர்.

உண்மையில் சிஷ்யனே குருவிற்கு சேவை செய்ய வேண்டும். குருவே நடத்துபவர், நடத்துவிப்பவராக இருந்தாலும் ஒரு சிஷ்யன் முழு ச்ரத்தையுடன் சேவை செய்து குருவை கவனித்துக் கொள்ள வேண்டும். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களோ மிகத் தீவிர உடல் வேதனை இருந்தாலும் ஸாதகர்கள் மீது அவர் கொண்டுள்ள அபரிமித அன்பால் அவர்களின் விருப்பு-வெறுப்புகளை மனதில் கொண்டு தொடர்ந்து அவர்களுக்காக ஏதாவது செய்து வருகிறார். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதியை ஸாதகர்கள் எவ்வாறு அனுபவித்துள்ளனர் என்பதற்கான சில உதாரண சம்பவங்கள் இதோ!

தொகுத்தவர் : குமார் சைலி டின்க்ரே, ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (5.5.2020)

நோயுற்ற ஸாதகர்களை எல்லா விதங்களிலும் கவனித்துக் கொள்ளும் பக்தவத்ஸலன்!

அ. நோயுற்ற ஸாதகருக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக அவரைப் பற்றி தொடர்ந்து விசாரித்தல் : பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களால் படிகளில் ஏற முடியாது என்றாலும் ஒரு நோயுற்ற ஸாதகரை சந்திக்க படியேறி செல்வார். ஸாதகரை சந்தித்து அவருக்கு வேறு ஏதாவது தேவையா என அன்புடன் விசாரிப்பார். மற்ற ஸாதகர்களிடம் நோயுற்ற ஸாதகருக்கு பிடித்தமான உணவை தயார் செய்து தருமாறு கூறுவார். அந்த ஸாதகருக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவார். அதே சமயம் பல்வேறு நிவாரண வழிகளைக் கண்டுபிடித்து அந்த ஸாதகரை விரைவில் குணப்படுத்தி விடுவார்.

– குமார் திருப்தி காவ்டே, ராம்னாதி, கோவா. (10.5.2018)

ஆ. இறக்கும் தருவாயில் உள்ள ஸாதகர் துன்பப்படக் கூடாது என்பதற்காக ஆன்மீக உபாயங்களின் மூலம் அவரின் பிராணனை மேல் நோக்கி செலுத்துதல் : தீவிர நோயால் மரணப் படுக்கையில் உள்ள பெண் ஸாதகரின் வேதனையைக் குறைக்க பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தானே இறைவனின் நாமஜபத்தை செய்தார். அதனால் இறக்கும் தருவாயில் துன்பப்படாமல் மகிழ்வுடன் இறப்பை அவரால் எதிர்கொள்ள முடிந்தது. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதியால் பல ஸாதகர்களின் வாழ்வும் இறப்பும் சகித்துக் கொள்ளும்படியாக மாறி உள்ளன.

– குமாரி மதுரா போஸ்லே, ராம்னாதி, கோவா. (8.1.2013)

இ. சரும வியாதியால் அவதிப்பட்ட ஒரு அயல்நாட்டு ஸாதகர் தன் முழு உடம்பையும் மறைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் எதிரே செல்லத் தயங்கிய அந்த ஸாதகரை முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு அவரின் நோயின் தீவிரத்தை அறிய அந்த ஸாதகரின் காலுறையை கழட்டச் சொன்னார். இதன் பலனாக அந்த ஸாதகரின் மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது.

– வக்கீல் யோகேஷ் ஜல்தரே, ராம்னாதி, கோவா.

2002-2003-ல் ஆன்மீக கஷ்டங்களால் மீரஜ் ஆச்ரமத்தில் இருந்த சில ஸாதகர்களுக்கு மனோரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் அவர்கள் அவதிப்பட்டார்கள். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் நடு இரவிலும் கண் விழித்திருந்து அவர்களுக்கு ஆறுதல் வழங்குவார். அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்குரிய ஆன்மீக நிவாரணங்களைக் கூறுவார். அவர்களுக்காக நாமஜபமும் செய்வார். சிலருக்கு தீவிர தலைவலை, உடல்வலி, மூச்சுத்திணறல் போன்ற கஷ்டங்கள் இருந்தன. அப்போதெல்லாம் அவர் அந்த ஸாதகர்களுடன் முழு இரவும் கூடவே உட்கார்ந்து நாமஜபம் செய்வார். அவரின் இருப்பால் ஊக்கம் பெற்ற ஸாதகர்களும் அதிகத் தரமுள்ள நாமஜபத்தை செய்வார்கள். அதிக பலனும் அடைவார்கள். அதனால் அவர்களின் ஆன்மீக கஷ்டங்களும் குறைந்தன.

– வக்கீல் யோகேஷ் ஜல்தரே, ராம்னாதி, கோவா. (21.5.2016)

மணப்பெண்ணுக்கு என்னென்ன விருப்பமோ அவற்றை வாங்குங்கள்!

2006-ல் திருமணமாக இருந்த ஒரு பெண் ஸாதகரை நான் சந்திக்க இருந்தேன். நான் கிளம்பும்முன், பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் என்னிடம் சிறிது பணத்தைக் கொடுத்து, “நீங்கள் இருவரும் கடைக்கு சென்று மணப்பெண்ணுக்கு என்னென்ன விருப்பமோ அவற்றை வாங்குங்கள். இந்தப் பணத்தைக் ஏதாவது உணவு உண்பதற்கும் பருகுவதற்கும் கூட உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தக் குறையும் வைக்க வேண்டாம். இக்காலத்தில் என்ன விலை இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும் பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். அவளுக்கு பிடித்தமான ஐஸ்க்ரீம் அல்லது வேறு ஏதாவது இருந்தாலும் வாங்கித் தாருங்கள். நம் சார்பாக திருமணத்திற்கு முன்பு செய்யப்படும் சடங்கை செய்யுங்கள். நம்மை விட்டால் வேறு யார் அவளை இவ்வாறு சந்தோஷப்படுத்துவார்கள்?”

–        திருமதி மனீஷா பான்சாரே, ராம்னாதி, கோவா.

குமாரி கீதா சௌத்ரி 

ஸாதகர்களுக்கு ஆன்மீக கஷ்டங்கள் ஏற்படும்போது அவர் பல மணி நேரத்திற்கு அதே ஹாலில் அமர்ந்தோ அல்லது நின்று கொண்டோ நாமஜபமும் ஆன்மீக உபாயங்களையும் செய்வார். காலை உணவுக்கு பின் ஆரம்பித்து இரவு படுக்கும்வரை தொடர்ந்து அவர் நாமஜபம் செய்வார்.

அவர் தன்னுடைய உணவு, உறக்கம், தாகம் ஆகியவற்றையும் மறந்து விடுவார். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் மற்றவர்களுக்காக நாமஜபம் செய்வதால் தீய சக்திகள் அவரைத் தாக்கும். அவர் இத்தகைய தாக்குதல்களை அனுபவித்துள்ளார். இருந்தாலும் எங்களிடம் இதுபற்றி அவர் தெரியப்படுத்தியதில்லை.

– குமாரி கீதா சௌத்ரி, ஸனாதன் ஆச்ரமம், கோவா. 

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் குழந்தை நந்தனுக்கு
(ஸனாதன் ஸாதகர் திருமதி சௌம்யா குதர்வல்லியின் மகன்)
அன்னப்ராஷன விதி செய்யும்போது (2014)

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் பூஜ்ய (டாக்டர்) நீல்காந்த் தீக்ஷித்
(வயது 91, பெல்காவ், கர்நாடகா) அவர்களின் சக்கர நாற்காலியைத் தள்ளுதல்;
அருகில் திருமதி விஜயா தீக்ஷித்

தீவிர நோயால் இறந்த (ஸனாதன் ஆச்ரமத்தை சேர்ந்த)
மங்கல் மாயேகரின் உடலில் சந்தனக்கட்டையை பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே
அவர்கள் வைக்கும் நெகிழ்ச்சியான காட்சி (2008)

Leave a Comment