ஒரு பெண் ஸாதகரின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையும் தர சித்தமாயிருத்தல்!

குமாரி தீபாலி மத்கர்

ஸனாதனின் ஸாதகரான குமாரி தீபாலி மத்கரின் (ஆன்மீக நிலை 69%) உடல்நிலை அக்டோபர் 2016-ல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், அவளின் மோசமான நிலை மாற சில மகான்களிடம் இறைவனின் நாமஜபத்தை செய்ய சொன்னார். மகரிஷிகளிடமும் கு. தீபாலியின் நிலைக்கான உபாயம் கேட்கப்பட்டது. அதோடு ஒரு யக்ஞமும் நடத்தப்பட்டது. கு. தீபாலியின் நிலை தேறி அவள் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களை சந்திக்க வந்தபோது மனதை நெகிழ வைக்கும் உரையாடல் அங்கு நடந்தது.

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் : “நான் என் தவறை உணர்ந்தேன். உன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்ற தகவல் எனக்குத் தெரிந்தவுடன் ‘என் உயிரை உனக்காக தர வேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது; ஆனால் மகான்களின் கூற்றுப்படி எனக்கு இன்னும் 2-3 ஆண்டுகளே உள்ளன. இவ்வளவு குறுகிய வாழ்வை உனக்குத் தந்து என்ன பயன்? உனக்கு இந்த பணியில் பங்கேற்க இன்னும் 50-60 வருடங்கள் உள்ளன.”

கு. தீபாலி மத்கர் : உங்களால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். உங்கள் அருளால் மகரிஷி, மகான்கள் மற்றும் ஸாதகர்கள் எனக்காக ஆன்மீக உபாயங்களை செய்தனர். ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் மகரிஷிகளின் வார்த்தைகளை எனக்குக் கூறினார் – ‘பரம குருஜியால் (பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே) மட்டுமே அவளைக் காப்பாற்ற முடியும்’; அதனால் நான் இன்று உயிருடன் இருப்பது உங்களின் கருணையால் மட்டுமே. (என்னுள் நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்தது. இந்த கோர கலியுகத்தில் நான் மட்டுமல்ல, எல்லா ஸாதகர்களுமே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களால் பாதுகாப்பாக உள்ளோம். ஸாதகர்களின் எல்லா கஷ்டங்களையும் அவர் தானே எடுத்துக் கொள்கிறார்.’ – கு. தீபாலி மத்கர்)

Leave a Comment