பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவரது தாமரைப் பாதங்களில் பூங்கொத்தாக ஸமர்ப்பிக்கப்படும் வார்த்தைகள்!

எதிர்பார்ப்பில்லாத அன்பின் திருவுருவம் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே

ஸ்ரீ குருவின் புகழைப் பாடுவது என்பது ஒரு சிஷ்யனுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்! ஜன்மோத்ஸவ சிறப்பு இதழில் பராத்பர குருவின் தெய்வீக பணியை நன்றியுடன் வழங்குகிறோம். அதன் மூலம் சமூகத்தினருக்கு அவருடைய அசாதாரண தெய்வீகப் பண்புகள் தெரிய வரும்!

கடந்த வருடம் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் 78-வது பிறந்த நாள் 13 மே அன்று வந்தது. பொதுமுடக்கம் காரணமாக அந்த சமயத்தில் இந்த சிறப்பு இதழை வெளிக்கொண்டு வர இயலவில்லை; இருந்தாலும் குருவருளால் இப்போது அது சாத்தியமாகி உள்ளது!

ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ஆன்மீக பிரசாரப் பணி 29 வருடங்களில் பிரம்மாண்ட ஆலமரமாக தழைத்துள்ளது. நூற்றுக்கணக்கான ஸாதகர்கள் தங்கள் இல்லங்களைத் துறந்து முழு நேர தர்ம பிரசார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்படி பட்டாம்பூச்சிகள் பூக்களை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றனவோ அதேபோல் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் அவரை நோக்கி வருகிறார்கள்.

அவரது பிறந்தநாளில் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு மனிதகுலத்தின் மீதுள்ள அபரிமிதமான அன்பின் சில கணங்களை இப்போது நாமும் உணரலாம்!

ஸாதகர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்பு!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், ஸனாதனின் ஸாதகரான திரு விநாயக் ஷான்பாக் (64% ஆன்மீக நிலை அடைந்தவர்) மற்றும் ஷில்பா கரி அவர்களது திருமணத்தின்போது நல்வாழ்த்து தெரிவித்தல். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே ஸாதகர்களின் மகிழ்ச்சியில் எப்போதும் பங்கேற்றுக் கொள்வார். இக்காரணத்தால் ஸனாதன் ஸன்ஸ்தா வெறும் ஸ்தாபனமாக இல்லாமல் ஒரு பெரும் ‘குடும்பமாக’ உருவாகியுள்ளது!

ஹிந்து பற்றுள்ளவர்களின் ஆன்மீக ஆதாரம்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், பூஜ்ய (டாக்டர்) சிவநாராயன சென் (வங்காளத்தில் உள்ள ‘சாஸ்திர தர்ம பிரசார் சபா’) அவர்களை அன்புடன் தழுவுதல். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் இதயபூர்வமான ஆன்மீக ஆதாரத்தால் பல ஹிந்துப் பற்றுள்ளவர்கள் தர்மப் பணியோடு கூட இறைவனை அடைய ஆன்மீக பயிற்சியும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்!

ஸாதகர்கள் மற்றும் மகான்கள் மீது பொழியும் ஆசி!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், ஸனாதனின் மகான் தம்பதியான பூஜ்ய (டாக்டர்) பகவந்த் குமார் மென்ராய் மற்றும் பூஜ்ய (மறைந்த) திருமதி சூரஜ்காந்தா மென்ராய் அவர்களை பூக்களுடன் வரவேற்றல். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் இயல்பான ப்ரீதியால் இக்கலியுகத்தின் ரஜ-தம சூழலிலும் ஸாதகர்கள் இறைவனை உணர்வதற்காக வேகமாக பயணிக்கிறார்கள்!

 

Leave a Comment