பராத்பர குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலேஜியின் புதுவருட செய்தி!

சித்திரைப் புதுவருடமன்று, புதுப் பொருட்களை வாங்குவதிலும் புதுக் காரியங்களை ஆரம்பிப்பதிலும் நேரத்தை வீணாக்குவதற்கு பதிலாக வரப்போகும் யுத்த காலத்தை கருத்தில் கொண்டு உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தயாராகுங்கள்!

சித்திரை வருடப்பிறப்பே ஹிந்துக்களுக்கான புது வருடப்பிறப்பு. இது மூன்றரை சுப முஹூர்த்தங்களில் ஒன்று ஆனதால் உகாதி சுபதினத்தில் மங்கள காரியங்கள் செய்யப்படுகின்றன, புது காரியங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. இன்றைய தினம் புதுப் பொருட்களை வாங்குவதற்கும் புது காரியங்களை ஆரம்பிப்பதற்கும் ஏற்ற சுபநாளாகும்.

இருந்தாலும் தற்போது நாடும் உலகமும் ஒரு சந்திக் காலத்தை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. உலகளாவிய தொற்றுநோய்கள், பொருளாதார சரிவு, யுத்தநிலை போன்றவை பாதகமாக காலத்தின் சின்னங்கள். அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகள் பாதகமான சூழல் ஏற்படும். உலகத்திற்கு பெரும் உயிரிழப்பு, நிதிநிலை சரிவு ஏற்படும். கடையில் கிடைக்கும் சாதாரண ரொட்டி கூட கிடைப்பதற்கு அரிய பொருளாகி விடும். இந்த சந்திக் காலத்தை கருத்தில் கொண்டு புதுவருடத்தில் புதுப் பொருட்கள் வாங்குவதிலும், புது காரியங்களை ஆரம்பிப்பதிலும் நேரத்தை வீணாக்குவதைக் காட்டிலும், வரக்கூடிய யுத்த காலத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறந்தது.

இந்த யுத்தகாலம் முடிந்த பிறகு உலகத்திற்கான புது நல அமைப்பை உருவாக்க பாரதத்தில் ராமராஜ்யத்திற்கு ஒப்பான ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை ஸ்தாபனம் செய்வது அவசியமாகிறது. அதனால் ஹிந்துக்களே, இந்த புதுவருடமன்று உலக நலனுக்காக பாரதத்தில் ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை ஸ்தாபனம் செய்ய உறுதி பூணுவோம்!

– பராத்பர குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே, ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஊற்றுக்கண்.

 

Leave a Comment