மகரசங்கராந்தி

மகர சங்கராந்தி அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார். ஹிந்து தர்மத்தில் சங்கராந்தி, தெய்வமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் எள் இனிப்பை மற்றவருக்கு வழங்கி அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். மகரசங்கராந்தியின் மகத்துவம், அன்றையை தினம் செய்ய வேண்டிய தார்மீக விதிகள் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

 

1.   திதி

இந்த பண்டிகை திதிப்படி இல்லாமல் அயனப்படி உள்ளது. இன்றைய தினத்தில் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இவ்வருட மகரசங்கராந்தி 14 ஜனவரி அன்று வருகிறது. சூரியகதியில் ஏற்படும் வித்தியாசத்தை சரிக்கட்ட சில சமயங்களில் சங்கராந்தி தினம் ஒரு நாள் முன்னால் தள்ளப்படுகிறது.

 

2.   இதிகாசம்

சங்கராந்தி தெய்வமாக கருதப்படுகிறது. சங்கராந்தி தெய்வம், சங்கராசுரன் என்ற தைத்யனை வதம் செய்தார் என்பது கதை.

 

3.   சங்கராந்தி சம்பந்தமாக பஞ்சாங்கத்திலுள்ள தகவல்கள்

பஞ்சாங்கத்தில் சங்கராந்தியின் ரூபம், வயது, வஸ்திரம், போகக்கூடிய திசை போன்ற தகவல்கள் தரப்படுகின்றன. இது கால மகாத்மியப்படி ஏற்படும் மாறுதல்களுக்கு தக்கவாறு உள்ளது.

 

4.   மகத்துவம்

இன்றைய தினத்தில் பஞ்சாங்கம் நிர்ணயித்துள்ள வழிப்படி சூரிய பகவானின் உத்தராயண பிரயாணம் ஆரம்பமாகிறது. கர்க சங்கராந்தி முதல் மகர சங்கராந்தி வரையுள்ள காலம் ‘தக்ஷிணாயனம்’ எனப்படுகிறது. தக்ஷிணாயனத்தில் மரணம் அடையும் நபர், உத்தராயணத்தில் மரணம் அடைபவரைக் காட்டிலும் தக்ஷிண லோகத்திற்கு (யமலோகத்திற்கு) செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம்.

அ. ஸாதனை கண்ணோட்டத்தில் மகத்துவம்

இன்றைய தினம் பஞ்சாங்கம் நிர்ணயித்துள்ள வழிமுறைப்படி சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரையுள்ள காலத்தில் சூழல் அதிக சைதன்யம் மிகுந்ததாக இருப்பதால் ஸாதனை செய்பவருக்கு இந்த சைதன்யத்தின் பயன் கிடைக்கிறது.

 

5.   பண்டிகை கொண்டாடும் வழிமுறை

அ. மகரசங்கராந்தி காலத்தில் தீர்த்த ஸ்நானம்
செய்வதால் மகாபுண்ய பலன் கிடைக்கிறது

மகரசங்கராந்தி அன்று சூர்யோதயம் முதல் சூர்யாஸ்தமனம் வரை முழுவதுமே புண்ய காலம் ஆகும். இக்காலத்தில் தீர்த்த ஸ்நானம் செய்வது அதிக மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கங்கா, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி போன்ற நதிதீரங்களில் உள்ள க்ஷேத்திரங்களில் ஸ்நானம் செய்வதால் மகாபுண்ய பலன் கிடைக்கிறது.

ஆ. தானம்

1. பர்வகாலத்தில் தானத்தின் மகத்துவம்

தானம் தருதல்

மகரசங்கராந்தி முதல் ரதஸப்தமி வரையுள்ள காலம் பர்வகாலம் ஆகும். இந்த பர்வ காலத்தில் செய்யப்படும் தானம் மற்றும் புண்ய கர்மா விசேஷ பலனை அளிக்க வல்லது.

2. தானம் அளிக்கப்படும் பொருள்

புது பாத்திரங்கள், வஸ்திரம், அன்னம், எள், எள்பாத்திரம், வெல்லம், பசு, குதிரை, தங்கம் மற்றும் பூமி ஆகியவற்றை அவரவர் சக்திக்கேற்றபடி தானம் தரலாம். இன்றைய தினம் சுமங்கலிகள் தானம் தருகின்றனர். சுமங்கலிகள் குமாரிகாவிடமிருந்து எதையாவது பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எள் இனிப்பை தருகின்றனர். அன்றைய தினம் சுமங்கலிகள் மற்றவருக்கு மஞ்சள்-குங்குமம் தாம்பூலம் தரும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். பரிசுப் பொருட்களும் தருகின்றனர்.

3. பரிசுப் பொருள் தருவதன் மகத்துவம்

இன்னொருவருக்கு பரிசு அளித்தல் என்பது அவரிடமுள்ள தெய்வ தத்துவத்திடம் உடல், மனம், செல்வத்தை அர்ப்பணித்து சரணடைதல் ஆகும். சங்கராந்தி காலம் ஸாதனைக்கு ஏற்ற காலம் ஆனதால் இக்காலத்தில் அளிக்கப்படும் பரிசால் தெய்வத்தின் அருள் கிடைக்கப் பெற்று ஜீவன் விரும்பும் பலன் கிடைக்கிறது.

மகரசங்கராந்தி அன்று ஆன்மீக பரிசு அளித்தல்

4. என்ன பரிசுப் பொருள் அளிக்க வேண்டும்?

ஸாத்வீகமில்லாத பரிசை அளிப்பதால் உண்டாகும் தீங்கு : ப்ளாஸ்டிக் பொருட்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் போன்ற ஸாத்வீகமில்லாத பொருட்களை பரிசாக அளிப்பவர் மற்றும் பெறுபவர் ஆகிய இருவர் இடையே கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஏற்படுகிறது.

ஸாத்வீக பரிசை அளிப்பதால் உண்டாகும் லாபம் : ஸாத்வீக பரிசைத் தருவதால் இறைவனுடனான தொடர்பு உண்டாவதால் இருவருக்குமே சைதன்யம் கிடைக்கிறது. ஸாத்வீக பரிசு தருவது என்பது ஒரு வகையில் தர்ம பிரசார காரியம் என்பதால் அதன் மூலம் இறைவனின் அருள் கிடைக்கிறது.

இன்று சோப், ப்ளாஸ்டிக் பொருட்கள் போன்ற ஸாத்வீகமில்லாத பொருட்களை பரிசாக வழங்கும் வழக்கம் உள்ளது. இவற்றைக் காட்டிலும் மங்களகரமான பொருட்கள், ஊதுபத்தி, ஸ்நானப் பொடி, தார்மீக நூல்கள், பாராயண புத்தகங்கள், தெய்வப் படங்கள், ஆன்மீக விஷயம் நிறைந்த ஒலி-ஒளி நாடாக்கள் போன்ற ஆன்மீகமயமான பொருட்களை பரிசு அளிப்பது சிறந்தது.

 

6. தவிர்க்க வேண்டியவை

அ. சங்கராந்தி பர்வ காலத்தில் பல்தேய்த்தல், கடுமையான வார்த்தைகளை பேசுதல், மரம் அல்லது செடியை வெட்டுதல் மற்றும் சிற்றின்பம் ஆகிய செயல்களை தவிர்க்க வேண்டும்.

ஆ. காற்றாடி விடுதல் : இன்று ராஷ்ட்ரம் மற்றும் தர்மம் சங்கடத்தில் உள்ள சமயத்தில் கேளிக்கைக்காக காற்றாடி விடுதல் என்பது ‘ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்’ என்பது போல ஆகும். காற்றாடி விடும் சமயத்தை ராஷ்ட்ர நலனுக்காக செலவிடுவதால் ராஷ்ட்ரம் விரைவில் முன்னேற்ற பாதையில் செல்லும் மற்றும் ஸாதனைக்காக, தர்ம காரியங்களுக்காக செலவிட்டால் தன்னோடு கூட சமூகத்திற்கும் நன்மை ஏற்படும்.

தகவல் : ஸனாதனின் ஆங்கில கிரந்தம் ‘பண்டிகைகள், தார்மீக உற்சவங்கள் மற்றும் விரதங்கள்’

 

ஆபத்துக்காலத்தில் மகரசங்கராந்தியை எவ்வாறு கொண்டாடுவது?

‘கொரோனா விஷத் தொற்றால் கடந்த பல மாதங்களாக பண்டிகை-கொண்டாட்டங்கள் மற்றும் விரதங்களை அனுசரிப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலை முழுவதும் சரியாகவில்லை என்றாலும் சிறிதளவு சாதாரண நிலை ஏற்பட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பண்டிகையைக் கொண்டாடும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

1.   பண்டிகை கொண்டாடுவதில் உள்ள எல்லா ஆசாரங்களை (உதா. மஞ்சள்-குங்குமம் தருவது, எள்ளுருண்டை விநியோகிப்பது போன்றவை) நீங்கள் இருக்கும் ஸ்தானத்தில் உள்ள நிலைக்கு ஏற்றவாறு அரசு கொரோனா சம்பந்தமாக விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி கொண்டாடலாம்.

2.   மஞ்சள்-குங்குமம் தரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது ஒரே சமயத்தில் அனைத்து மகளிரையும் அழைக்காமல் 4-4 பேராக 15-20 நிமிட இடைவெளி விட்டு கூப்பிடவும்.

3.   எள்ளுருண்டைகளை அப்படியே விநியோகிக்காமல் சிறு பாக்கெட்டுகளில் போட்டு விநியோகிக்கவும்.

4.   ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பேசும்போது மாஸ்க் அணிந்து கொள்ளவும்.

5.   எந்த ஒரு பண்டிகை அல்லது உற்சவம் கொண்டாடுவதன் நோக்கமே அதன் மூலம் ஸத்வ குணத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. அதனால் ஆபத்துக் காலத்தில் வழக்கப்படி பண்டிகை-உற்சவங்கள் கொண்டாடுவதில் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் அந்த சமயத்தில் அதிகபட்ச அளவு ஈச்வர ஸ்மரணம், நாமஜபம், உபாசனை போன்றவற்றை செய்து ஸத்வ குணத்தை அதிகரிக்க முயற்சித்தால் உண்மையான அர்த்தத்தில் பண்டிகை கொண்டாடப்பட்டதாக ஆகும்.

Leave a Comment