நவராத்திரி சமயம் நடக்கும் கும்மி, கோலாட்டம்!

நவராத்திரி சமயம் நடுவில் யானையின்
சித்திரத்தை வைத்து பெண்கள் சுற்றிலும்
கை கோர்த்து நின்று கொண்டு கும்மியடிக்கும்
வழக்கம் உள்ளது. இதன் ஆன்மீக சாஸ்திரம் என்ன?

(கும்மியடித்தல் என்பது நவராத்திரியில் செயல்பாட்டிலுள்ள ஸ்ரீதுர்காதேவியின் லக்ஷ்மி ரூபத்தை பிரார்த்தனை செய்து லக்ஷ்மி தத்துவத்தின் ஸேவகனான யானையை பூஜை செய்வது ஆகும்) நவராத்திரி காலத்தில் ப்ரம்மாண்டத்தில் ஸ்ரீ துர்காதேவியின் செயல்படும் சக்தி அதிர்வலைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. லக்ஷ்மிதத்துவத்தின் தூதுவனாக யானை கருதப்படுகிறது. ஸ்ரீ கணபதி தத்துவத்தின் அம்சம் யானையில் உள்ளது. அதோடு லக்ஷ்மி தத்துவத்தின் சின்னமாக யானை விளங்குவதால் எப்பொழுதும் விஷ்ணுலோகத்தில் அதன் வாஸம் உள்ளது. கும்மியடித்தல் என்பது நவராத்திரியில் எப்பொழுதும் செயல்பாட்டிலுள்ள ஸ்ரீ துர்காதேவியின் லக்ஷ்மி ரூபத்தை வீட்டில் நிலைத்திருக்கச் செய்ய பிரார்த்தனை செய்து ஆவாஹனம் செய்வதாகும். இதற்காக லக்ஷ்மி தத்துவத்தின் தாஸனான, தூதுவனான யானையை பூஜை செய்து அதன் மூலம் லக்ஷ்மி தத்துவத்தை விழிப்படையச் செய்ய முடிகிறது. லக்ஷ்மி தத்துவத்தை விழிப்படைய செய்வதன் மூலம் விஷ்ணு தத்துவத்தின் பலனைப் பெறுவதே கும்மியடித்தலின் முக்கிய நோக்கம். யானையிடமிருந்து வெளிப்படும் அதிர்வலைகளில் ப்ருத்வி தத்துவமும் தேஜ தத்துவமும் அதிக அளவில் உள்ளன. யானையின் வடிவத்தை பூஜை செய்வதால் ப்ரம்மாண்டத்தில் லக்ஷ்மி தத்துவத்திலுள்ள ப்ருத்வி மற்றும் தேஜ அதிர்வலைகள் விழிப்படைகின்றன. லக்ஷ்மி தத்துவத்திலிருந்து வெளிப்படும் தனதான்ய செழிப்பைத் தரும் அதிர்வலைகள் யானையின் தும்பிக்கை வழியாக முழு ப்ரம்மாண்டத்திலும் பரவுகிறது; அதனால் நவராத்திரி காலத்தில் யானையை மகிழ்வித்து அதன் மூலமாக லக்ஷ்மி தத்துவத்தின் அருள் பார்வை சம்பாதிக்கப்படுகிறது. நவராத்திரி சமயம் பயிரிடுவதற்கு ஏற்ற ஸாதகமான காலமாகும். இக்காரணத்தால் லக்ஷ்மியின் இருபுறமும் தும்பிக்கையை உயர்த்திய நிலையில், அதாவது செயல்படும் நிலையை குறிக்கும் யானைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு வித்வான், [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 22.2.2005, மதியம் 1.42]

நவராத்திரி ஒன்பது
இரவுகளும் கோலாட்டம் ஆடும் வழக்கம்

கோலாட்டம் (கர்பா) ஆடுவது என்றால் என்ன? : ஹிந்து தர்மத்தில் லயத்துடன் கூடிய தாள வாத்தியங்களோடு பக்திரஸம் ததும்ப தேவியின் புகழைப் பாடி ஆடுதலே கோலாட்டம் ஆடுதல் என்பர். கோலாட்டம் ஆடுவது என்பது தாளத்தின் நாதமய உபாஸனை மூலமாக ஸ்ரீ துர்காதேவியை தியான நிலையிலிருந்து எழுப்புவித்து ப்ரம்மாண்டத்தில் செயல்படுவதற்காக அழிக்கும் ரூபத்தை எடுக்க அழைப்பு விடுவதாகும்.

கும்மியை இரு தாளகதியிலா அல்லது திஸ்ரநடையில் அடிக்க வேண்டுமா? : (ப்ரம்ம ரூபமான இச்சா அதிர்வலைகள், விஷ்ணு ரூபமான க்ரியா அதிர்வலைகள் மற்றும் சிவஸ்வரூபமான ஞான அதிர்வலைகள் மூலமாக தேவியின் அழிக்கும் ஸ்வரூபம், மூன்று தாளமுடைய திஸ்ர-நடையில் வெளிப்படுகிறது) நவராத்திரியில் படிப்படியாக தேவியின் அழிக்கும் தத்துவம் விழிப்படைகிறது. ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பரமேச்வரனின் மூன்று முக்கிய அம்சங்களாகும். தேவியின் அழிக்கும் ஸ்வரூபம் இந்த மூன்று அம்சங்களின் நிலையில் விழிப்படைய திஸ்ரநடையில் தாளம் இசைத்து ப்ரம்மாண்டத்திலுள்ள தேவியின் சக்திரூபமான ஸங்கல்ப சக்தி செயல்படுத்தப்படுகிறது. அதாவது திஸ்ரநடை கொண்ட லயத்தில் தேவியின் புகழைப் பாடுவது தேவிக்கு மிகவும் ப்ரியமானது; பலனளிக்கக் கூடியது. திஸ்ரநடை தாளத்தின் அர்த்தம் பின்வருமாறு.

அ. முதல் தாளம், ப்ரம்மாவுடன் அதாவது இச்சாசக்தியுடன் சம்பந்தப்பட்டது. அதன் மூலம் ப்ரம்மாண்டத்திலுள்ள ப்ரம்மாவின் இச்சா அதிர்வலைகள் விழிப்படைந்து பக்தனின் பக்தியுணர்விற்கு ஏற்ப அவன் மனதிலுள்ள இச்சைகள் பூர்த்தியாவதற்கான அனுமதி கிடைக்கிறது.

ஆ. இரண்டாவது தாளத்தின் மூலமாக விஷ்ணுரூபமான க்ரியா அதிர்வலைகள் ஜீவனின் இச்சை செயல்பட ஜீவனுக்கு சக்தி வழங்குகிறது.

இ. மூன்றாவது தாளத்தின் மூலமாக சிவரூபமான ஞான அதிர்வலைகள் நேரிடையாக செயல்களை நடத்துவித்து அந்த ஜீவனுக்கு அதற்குரிய பலனைத் தருகிறது.

தாளத்தின் நாதத்தால் தேஜ தத்துவம் நிர்மாணமாகி தேவியின் அழிக்கும் ரூபம் விழிப்படைகிறது. தாளம் வாசிப்பது என்பது தேஜ தத்துவத்தை ஆராதனை செய்வதாகும். வட்ட வடிவில் நின்று கொண்டு தாள லயத்தோடு தேவி தத்துவத்தைப் போற்றும் பஜனைப் பாடல்களைப் பாடுவதால் மனதில் பக்தியுணர்வு தோன்றுகிறது. கர்பாவின்போது வட்டவடிவில் நின்று ஆடுவது குடத்தைக் குறிப்பதாக உள்ளது. – [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 5.10.2005, மதியம் 12.47]

கர்பா உற்சவத்தில் நடக்கும்
தவறான செயல்பாடுகளை தவிர்த்து
அதன் பவித்ரத்தைக் காப்பாற்றுங்கள்!

முன்பெல்லாம் கர்பா ஆட்டத்தின்போது தேவியின், கிருஷ்ணலீலையின், மஹான்களின் பாடல்கள் பாடப்பெறும். பகவானின் இந்த சமூக ந்ருத்ய உபாஸனை இப்பொழுது வக்ர ரூபமெடுத்துள்ளது. ரீமிக்ஸ், மேற்கத்திய சங்கீதம், சினிமா பாடல்கள் ஆகியவற்றிற்கு ஆபாச அங்க அசைவுகள் கொண்ட நாட்டியம் டிஸ்கோ டாண்டியா என்ற பெயரில் ஆடப்படுகிறது. அச்சமயத்தில் ஒழுங்கீனத்திற்கு வழிவகுக்கும் ஆபாச ஆடைகள் அணிதல், ஆண்-பெண் சேர்ந்து ஆடுதல், ஒழுக்கக்கேடுகள் ஆகியவை நடக்கின்றன. பூஜை நடக்கும் இடத்தில் புகை பிடித்தல், மதுபானம் அருந்துதல், உரத்த ஒலிபெருக்கிகள் வைத்தல் போன்ற வேண்டாத விஷயங்களும் நடக்கின்றன. இவை தர்மத்திற்கும் கலாச்சாரத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. இவற்றைத் தடுப்பதே காலத்திற்கேற்ற தர்மவழியாகும்.

கர்பாவில் டிஸ்கோ டாண்டியா ஆடுவதால்
உண்டாகும் தீய சூட்சும விளைவை சித்தரிக்கும் படம்

தகவல் : ஸனாதனின் கையேடு ‘தேவி பூஜையின் சாஸ்திரம்’

Leave a Comment