நவராத்திரியின்போது தேவி உபாஸனையின் சாஸ்திரம்

நவராத்திரி விரத காரியத்தின் சாஸ்திரம்

நவராத்திரியின்போது கடஸ்தாபனம் செய்யப்படுகிறது. அதாவது, மண் சட்டி அல்லது தாமிர சொம்பில் மண் நிரப்பி அதில் ஸப்த தானியங்கள் தூவப்படுகின்றன. அத்துடன் கூட தண்ணீர், மலர்கள், அருகம் புல், அக்ஷதை, பாக்கு, நாணயங்கள் ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன.

சாஸ்திரம் மற்றும் மஹத்துவம் : மண் அல்லது தாமிர சொம்பிலுள்ள ப்ருத்வி தத்துவ ரூபமான மண்ணில், ஸப்த தானிய ரூபத்தில் உள்ள ஆப மற்றும் தேஜ தத்துவம் தூவப்படுகிறது. அந்த விதையிலிருந்து மற்றும் மூடிய சொம்பிலிருந்து வெளிப்படும் உஷ்ண சக்தியின் உதவியால் நாத அதிர்வலைகள் உண்டாகிறது. அதனால் ப்ரம்மாண்டத்திலுள்ள தேஜ தத்துவ ஆதிசக்தி ரூபமான அதிர்வலைகளை குறைந்த காலத்திற்குள் ஆகர்ஷிப்பது சுலபமாகிறது. மண் பானையிலுள்ள ப்ருத்வி தத்துவத்தின் கன பரிமாணத்தால் ஆகர்ஷிக்கப்படும் அதிர்வலைகளும் இந்த கன பரிமாணத்தைப் பெறுகிறது. அதனால் அதிக காலம் அவை நீடிக்கின்றன. தாமிர கலசத்திலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் வாயுமண்டலத்தில் வேகமாக பரவுவதால் குறிப்பிட்ட காலம் வரை அந்த வாஸ்து முழுவதிற்கும் பயன் கிடைக்கிறது. கடஸ்தாபனத்தால் சக்தி தத்துவத்தின் தேஜரூப ரஜோகுண அதிர்வலைகள் ப்ரம்மாண்டத்தில் செயல்படுவதால் பூஜை செய்பவரின் சூட்சும தேஹம் தூய்மையடைகிறது.

அகண்ட தீபமேற்றுவதன் சாஸ்திரம்

தீபம் என்பது தேஜ தத்துவத்தின் சின்னம். நவராத்திரியில் வாயுமண்டலம் சக்தி மிகுந்த தேஜ தத்துவத்தால் நிறைந்திருப்பதால் அகண்டமாக ஒளிர் விடும் தீப ஒளியிடம் தேஜ தத்துவ அதிர்வலைகள் ஆகர்ஷிக்கப்படுகின்றன. அகண்ட தீபமேற்றுவதால் இந்த அதிர்வலைகள் தொடர்ந்து வாஸ்துவில் நிறைகின்றன. அதனால் நவராத்திரியின்போது அகண்ட தீபமேற்றுவது மஹத்துவம் நிறைந்ததாகும். நவராத்திரியில் செயல்பாட்டிலிருக்கும் தேஜ தத்துவ அதிர்வலைகள் அகண்டமாக தொடர்ந்து வெளிப்படுவதால் அவை அகண்ட தீபம் மூலமாக செயல்பட்டு அந்த வாஸ்துவை தேஜ தத்துவத்தால் நிறைக்கிறது.

தேவியின் மூர்த்திக்கு மலர்மாலை அணிவித்தல்

மாலையிலுள்ள மலர்களின் நிறம் மற்றும் சுகந்தத்தால் வாயுமண்டலத்திலிருந்து ஆகர்ஷிக்கப்படும் தேஜ தத்துவ சக்தி அதிர்வலைகள் தேவியிடம் உடனே ஸங்க்ரமிக்கிறது. அதனுடைய ஸ்பர்சத்தால் மூர்த்தியில் தேவி தத்துவம் குறைந்த காலத்திற்குள் விழிப்படைகிறது. பிறகு இந்த தேவி தத்துவம் வாஸ்துவில் வெளிப்பட்டு பரவ ஆரம்பிப்பதால் வாஸ்துசுத்தி ஏற்பட்டு ஜீவனுக்கு சைதன்யம் கிடைக்க உதவுகிறது.’ – ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 7.9.2006, மாலை 4.20]

கன்யா பூஜை செய்தல்

கன்யா பூஜையை எவ்வாறு செய்வது? நவராத்திரி ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு கன்யா குழந்தையை அல்லது ஒரே நாளில் 9 அல்லது ஒற்றைப்படை எண்ணுள்ள கன்யா குழந்தைகளை வீட்டிற்கு அழைக்கும் வழக்கம் உள்ளது.

1. கன்யா குழந்தைகள் உட்காருவதற்கு ஆஸனம் அளிக்கவும்.

2. அவர்களுக்குள் தேவி தத்துவம் விழிப்படைந்துள்ளது என்ற பக்தி உணர்வோடு அவர்களுக்கு பாதபூஜை செய்யவும்.

3. தேவிக்கு பிடித்தமான உணவை (தேவிக்கு பூரி-பாயஸம் பிடிக்கும்) கன்யா குழந்தைகளுக்கு வாழையிலையில் அளிக்கவும்.

4. கன்யா குழந்தைகளுக்கு புது வஸ்திரத்தை வழங்கி அவர்களை ஆதிசக்தியின் ஸ்வரூபமாக நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

– ப்ரம்மதத்துவம் (திருமதி பாடீல் மூலமாக, 17.1.2005, மதியம் 1.37)

கன்யா பூஜை செய்வதன் சாஸ்திரமும் மஹத்துவமும் : கன்யா குழந்தை என்பவள் தேவி தத்துவத்தின் வெளிப்படாத ஸ்வரூபமாகும். அவளை பூஜிப்பதால் அவளிடமுள்ள சக்தி தத்துவம் விழிப்படைந்து ப்ரம்மாண்டத்திலுள்ள தேஜ தத்துவ அதிர்வலைகள் ஆகர்ஷிக்கப்படுகின்றன. அவள் மூலமாக இந்த தத்துவம் சஹஜமாக சூழலில் வெளிப்பட்டு பரவுகிறது. மற்றவருக்கும் சக்தி தத்துவ அதிர்வலைகளின் பயன் கிடைக்கிறது. ஒன்பது நாட்களும் செயல்பாட்டில் இருக்கும் தேவி தத்துவ அதிர்வலைகள் நம் உடலில் சேர்வதற்கு இக்குழந்தைகளை பக்தியுடன் பூஜை செய்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். கன்யா குழந்தைகளிடம் ஸன்ஸ்காரங்களின் வெளிப்பாடு குறைவாக இருப்பதால் அவர்கள் மூலமாக ஸகுண நிலையில் தேவி தத்துவத்தின் அதிகபட்ச பயன் கிடைப்பது சுலபமாகிறது; அதனால் நவராத்திரியில் கன்யா பூஜை செய்வது மஹத்துவம் நிறைந்ததாகும்.

ஒன்பது நாட்களும் தேவிக்கு நைவேத்தியம் அர்ப்பணித்தல்

நவராத்திரியில் தேவிக்கு அர்ப்பணம் செய்ய சாதாரண ஸாத்வீக நைவேத்தியத்தை தயார் செய்ய வேண்டும். சாதாரணமாக செய்யப்படும் நைவேத்தியத்துடன் கூட விசேஷமாக தயாரிக்கப்படும் போளி, பருப்பு பாயசம் ஆகியவற்றையும் தயாரிக்கலாம். போளி போன்ற நைவேத்தியங்களை தேவிக்கு அர்ப்பணிக்கும்போது வெளிப்படும் ரஜோ குண தன்மையால் ப்ரம்மாண்டத்திலுள்ள சக்தி ரூபமான தேஜ அதிர்வலைகள் அதி விரைவில் அதனிடம் ஆகர்ஷிக்கப்படுகின்றன. அதை பிரஸாதமாக உட்கொள்ளும்போது அதிலுள்ள சக்திரூபமான தேஜ அதிர்வலைகளின் பயன் கிடைத்து ஸ்தூல மற்றும் சூட்சும தேஹங்கள் தூய்மையடைகின்றன. ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 7.9.2006, மாலை 4.20 – 7]

முளை விட்ட தானியங்களின் கதிர்களை
விஸர்ஜனத்தின்போது தேவிக்கு அர்ப்பணிக்கவும்

(முளை விட்ட தானியக் கதிர்களை ஸ்ரீ சாகம்பரிதேவியாக நினைத்து பெண்கள் தலையில் அணிந்து கொண்டு விஸர்ஜனத்திற்கு செல்வர்) முளை விட்ட தானியக் கதிர்களை தேவிக்கு அர்ப்பணிப்பது என்பது தானியத்திலுள்ள தேவியின் செயல்படும் அதிர்வலைகளை மூர்த்தியின் ஸ்திரத்தன்மையோடு ஒன்றிணையச் செய்வதை குறிக்கிறது. விஸர்ஜன காரியமே ஒன்றிணைக்கும் தத்துவத்தை குறிக்கிறது. ஓடும் தண்ணீரிலிருந்து ஸாத்வீக அதிர்வலைகள் வெளிப்பட்டு வாயுமண்டலத்தில் பரவுவதால் அனைவருக்கும் அதன் பயன் கிடைக்கிறது. இதன் மூலம் வ்யஷ்டி காரியத்தின் மூலம் எவ்வாறு ஸமஷ்டி நன்மை ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது. (ஸ்ரீ கணபதி விஸர்ஜனத்தின் போதும் இது போன்ற சமூக பயன் ஏற்படுகிறது.) ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 7.9.2006, இரவு 7.39]

தகவல் : ஸனாதனின் கையேடு ‘தேவி பூஜையின் சாஸ்திரம்’

Leave a Comment