ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி சுபதினத்தில் ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே அவர்கள் கூறிய ‘தயிர்பானை உடைத்தல்’ பின்னுள்ள அழகான உள்ளர்த்தம் !

பாலகிருஷ்ணன் கோபியரின் தலை மீதிருந்த பானையை உடைத்தல், தயிர்பானை உடைக்கும் உற்சவம், நவராத்திரியில் நடக்கும் ‘கடஸ்தாபனம்’ ஆகியவற்றைப் பற்றி ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே கூறியுள்ள உள்ளர்த்தங்கள், அத்துடன் இன்றைய காலத்தில் ‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே யோகேச்வரனான ஸ்ரீகிருஷ்ணனைப் போன்று எவ்வாறு காரியங்களை செய்கிறார்?’ ஆகியவற்றைப் பற்றி கொடுத்த விளக்கங்களை இங்கே தந்துள்ளோம்.

 

1. பாலகிருஷ்ணன்
கோபியரின் தலை மீதுள்ள
பானைகளை உடைத்த லீலையின்
உள்ளர்த்தம் – பாலகிருஷ்ணன் கோபியரின்
தலை மீதுள்ள பானைகளை உடைத்ததன் மூலம்
அவர்களை சுற்றியிருந்த ஆவரணத்தைக் களைந்து
பரமாத்மாவை நோக்கி செல்வதற்கு வழி வகுத்தான் !

‘கிருஷ்ணனின் தோழியரான கோபியர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை பானைகளில் நிரப்பி தலை மீது வைத்துக் கொண்டு செல்லும்போது பாலகிருஷ்ணன் கோபியரின் பானைகளை உடைத்தான். இதன் உள்ளர்த்தம் பின்வருமாறு.

அ. கோபியரின் ஆன்மீக முன்னேற்றம் அவர்களின் ஆக்ஞா சக்கரம் வரை நடந்திருந்தது; ஆனால் அவர்களின் குண்டலினி சக்தி ஸஹஸ்ரார சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருந்தது. பாலகிருஷ்ணன் கோபியரின் பானைகளை உடைத்தான் அதாவது அவர்களின் ஆத்மாவை சுற்றியிருந்த முக்கியமாக ஸஹஸ்ரார சக்கரத்தை சுற்றியிருந்த ஆவரணத்தை சிறிது சிறிதாக பிளந்தான்.

ஆ. யோகேச்வரனான ஸ்ரீகிருஷ்ணன் கோபியரை சுற்றியுள்ள ஆவரணத்தைக் களைந்து அவர்களின் ஆத்மா பரமாத்மாவில் லயிக்கும்படியான யோகத்தைத் தந்தருளினான். அதனால்தான் பானைகள் உடைந்தாலும் கோபியருக்கு கிருஷ்ணன் மீது கோவம் ஏற்படவில்லை; மாறாக ஆனந்தமே உண்டானது. இதன் காரணம் வெளியில் பானைகள் உடைந்தது போல் தெரிகிறது, ஆனால் உண்மையில் ஆத்மாவை சுற்றியிருந்த ஆவரணம் குறைந்து மற்றும் களையப்பட்டதால் அவர்களுக்கு ஆனந்த அனுபவமே உண்டானது.

‘பாலகிருஷ்ணன் பானைகளை உடைத்தான்’ என்பதன் உண்மையான லீலாவிநோதம் இதுதான்.

 

2. மோக்ஷகுருவானவர்
சிஷ்யர்களின் அஹம்பாவம்
என்ற பானையை உடைத்து
அவர்களை பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒன்றிணைய செய்கிறார், இக்காலத்தில்
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
ஸமஷ்டி நிலையில் ஸ்ரீகிருஷ்ணனின் பானைகளை
உடைக்கும் லீலையாகிய காரியத்தை செய்து வருகிறார்!

இன்றைய காலத்தில் ‘தயிர்பானையை உடைத்தல்’ என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வது அவசியமாகிறது. வெறும் அவதார புருஷர் அல்லது மோக்ஷ குருவால் மட்டுமே சிஷ்யனின் பானை என்ற தடங்கல்களை உடைத்து, அதாவது ஸஹஸ்ராரத்தை பிளந்து அவனின் ஆத்ம ஸ்வரூபத்தை பரமாத்ம ஸ்வரூபத்துடன் ஒன்றிணைய செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸ்ரீகிருஷ்ணனின் பானைகளை உடைக்கும் காரியத்தை ஸமஷ்டி நிலையில் செய்து ஸாதகர்களை வழிநடத்தி வருகிறார்.

 

3. நவராத்திரி கடஸ்தாபனம்
மற்றும் கோகுலாஷ்டமி தயிர்பானை
உடைத்தல் இவற்றின் ஒப்பீடு மற்றும் உள்ளர்த்தம்!

3 அ. நிர்குணத்தை பானையில் அதாவது ஒரு
வடிவத்தில் கட்டுப்படுத்தி ஸகுணத்தில் வெளிப்பட
வைக்கும் செயல்பாடே நவராத்திரியின் கடஸ்தாபனம்!

நவராத்திரியை ‘கடஸ்தாபனம்’ என்றும் அழைப்பர். நிர்குண பரப்ரம்மத்தை கடத்தில் அதாவது பானையில் கட்டுப்படுத்தி ஸகுணத்தில் வெளிப்பட செய்யும் செயல்பாடே கடஸ்தாபனம் என்பது! இந்த செயல்பாடு சைதன்ய நிலையில் நடக்கும்போது அது தேவியின் நவராத்திரியாகிறது. அந்த சமயத்தில் கடத்தில் சைதன்யம் நிரம்புகிறது மற்றும் வெளியிலும் சைதன்ய ரூபத்தில் செயல்பாட்டில் உள்ளது.

3 ஆ. ஜீவாத்மா ரூபமான கடத்தை உடைப்பது
என்பது ஆத்மாவை பரமாத்மாவுடன் இணைய வைப்பது

இன்னொரு அர்த்தத்தில் கடாகாசம் என்றால் அது ஜீவாத்மாவைக் குறிக்கிறது. பானையின் வடிவம் என்பது மாயையின் ஆவரணத்தைக் குறிக்கிறது! இந்த ஆவரணத்தால் கடத்தினுள் உள்ள ஜீவாத்மா, சைதன்யத்தை உணர முடியாமல் தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை மறந்த நிலையில் உள்ளது. இந்த கடத்தை உடைத்து, அதாவது பானையை (இறுதி ஆவரணத்தை) உடைத்து அதிலுள்ள சைதன்யத்தின் அனுபூதியை உணர்ந்து அதனை வெளியிலுள்ள சைதன்யத்துடன் ஒன்றிணைய வைப்பது என்பது ஆத்மாவை பரமாத்மாவுடன் ஒருங்கிணைய செய்வது ஆகும். இது ஜீவனின் பயணத்தில் அதாவது நவராத்திரியின் முக்கிய ஆன்மீக காரியமாகும்.

3 இ. ஸாதகர்களின் வாழ்வில் உண்மையான அர்த்தத்தில் விஜயதசமி
மற்றும் தசரா கொண்டாடுவது என்பது மோக்ஷத்தை அடைவது ஆகும்

ஜீவனின் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சி என்பது மீண்டும் வரும் ‘நவராத்திரியை’ போன்றது, ‘மோக்ஷபிராப்தி’ என்பது ஸாதகர்களுக்கு உண்மையான அர்த்தத்தில் ‘விஜயதசமி மற்றும் தசராவைக் கொண்டாடுவது’ ஆகும். இதற்கு ஸ்ரீகுருவின் அருள் மிகவும் அவசியம். ஸாதகர்கள் நவராத்திரியின் உண்மையான மறைபொருளை அறிந்து கொண்டு ஆன்மீக கண்ணோட்டத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ளுதல் மகத்துவம் நிறைந்தது ஆகும். ஸாதனை பற்றி தெரியாத மற்றும் ஸாதனை செய்யாத மக்கள் தயிர்பானை உடைத்தல் என்ற செயலை வெளிமுகமாக புரிந்து கொண்டு உயரத்தில் தயிர்பானையைக் கட்டி அதனை உடைக்கின்றனர். ஆனால் வெளிமுகமாக அர்த்தம் கொள்ளாமல் தர்மசாஸ்திரம் மற்றும் புராணத்தின் சாரத்தை ஆத்ம பிரயாணத்திற்கு பயன்படுத்தும் ஜீவன் ஸாதனையில் விரைவான முன்னேற்றத்தை அடைகிறது. ஸ்ரீ குருவும் இத்தகைய ஜீவன்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகின்றார்.

 

4. யோகேச்வரனான
ஸ்ரீகிருஷ்ணனைப் போன்று ஏழு
நிலைகளிலுள்ள சக்கர வியூகத்தில் மாட்டிக்
கொண்டுள்ள ஜீவாத்மாக்களை பரமாத்மாவிடம் சுகமாக
பிரயாணப்பட வைக்கும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே !

4 அ. ‘ஏழு நிலைகளில் ஏறி பின்பு
தயிர்பானையை உடைப்பது என்பது ஜீவன் ஆறு
சக்கரங்களில் பிரயாணித்து ஸஹஸ்ராரத்தை பிளப்பது என்பது
ஆகும்’, என்பதால் ஸ்ரீ குருவின் அருளால் இந்த பிரயாணம் சுலபமாக நடத்தல்

தயிர்பானையை உடைக்க ஒருவர் மீது ஒருவர் ஏறி பின் மேலே கட்டப்பட்டுள்ள தயிர்பானையை உடைக்கின்றனர். இதில் ‘ஒருவர் மீது ஒருவர் ஏறி நிற்றல்’ என்பதன் ஆன்மீக அர்த்தம் மூலாதாரத்திலிருந்து ஸ்வாதிஷ்டானம், ஸ்வாதிஷ்டானத்திலிருந்து மணிபூரகம் பின்பு அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா சக்கரம் வழியாக ஸஹஸ்ராரத்திற்கு செல்லுதல் ஆகும். ‘பானை உடைத்தல்’ என்பது ஸஹஸ்ராரத்தை பிளந்து செல்வதை குறிக்கிறது. எப்படி கீழேயுள்ள நிலைகளில் ஏறுவதைக் காட்டிலும் மேலே உள்ள நிலைகளில் ஏறுவது கடினமாக உள்ளதோ அதேபோல் கீழே உள்ள சக்கரங்களைக் காட்டிலும் மேலே உள்ள சக்கரங்களை பிளந்து செல்வது கடினம் ஆகும். ஸ்ரீ குரு வழிகாட்டுபவராகவும் அருள் நிரம்பியராகவும் இருப்பதால் இந்த பிரயாணத்தை சஹஜமாக சுலபமாக செய்ய முடிகிறது.

4 ஆ. ஏழு நிலைகளிலுள்ள சக்கர
வியூகத்தில் மாட்டிக் கொண்டுள்ள அஞ்ஞான
ஜீவன்கள் ஸ்ரீ குருவின் அருளால் முக்தி அடைவது என்பது
ஆத்மாவை பரமாத்மாவுடன் ஒருங்கிணைக்கும் செயல்பாடாகும் !

ஜீவாத்மாவானது ஏழு சக்கரங்களில் அதாவது ஏழு நிலைகளிலுள்ள சக்கரங்களில் மாட்டிக் கொண்டுள்ளது. குருவானவர் தன் சைதன்ய அருளால் இந்த வழியை திறந்து விட்டு அஞ்ஞான ஜீவனை விடுவிக்கிறார். இறுதியில் அந்த ஜீவாத்மாவானது கடத்தை உடைத்துக் கொண்டு பிரம்மரந்த்ரம் வழியாக வெளியேறுகிறது. அதாவது மாயை என்ற ஆவரணத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. அதேபோல் கர்ம பிராரப்தம் மற்றும் ஸஞ்சிதம் ஆகிய கர்ம பந்தங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறது. இதுவே ஆத்மாவானது பரமாத்மாவுடன் ஒருங்கிணையும் செயல்பாடாகும். இதுவே ‘யோகம்’ ஆகும் என்பதால் பகவான் ஸ்ரீகிருஷ்ணனை ‘யோகேச்வரன்’ என அழைக்கிறோம்.

மோக்ஷ குருவும் யோகேச்வரராக உள்ளார். இந்த கண்ணோட்டத்தில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் இக்காலத்தின் யோகேச்வரராக உள்ளவர். பல ஸாதகர்களுக்கு இந்த அனுபூதி கிடைத்துள்ளது.

4 இ. சந்நியாசிகளுக்கு
மரணத்திற்கு பின்பு நடக்கும்
கபால மோக்ஷம் போன்று உயிருடன் இருக்கும்
ஸாதகர்களுக்கு ‘யோக’ வழியில் செல்லும் வழிகாட்டுதலை
வழங்கும் ‘யோகேச்வர்’ பராத்பர குரு டாக்டர் ஆடவலே ஆவார் !

ஏழு சக்கரங்களைப் பிளந்து ஒரு ஜீவன் சிவத்துடன் இணைகிறது. ‘சந்நியாசிகளுக்கு மரணத்திற்குப் பின் அவர்களின் ஆத்மா பிரம்மரந்திரம் (உச்சந்தலை) வழியாக வெளியேறுகிறது மற்றும் பரமாத்மாவுடன் ஒன்றிணைகிறது’, எனக் கூறுவர். இதையே ‘கபால மோக்ஷம்’ எனவும் கூறுவர். சந்நியாசிகள் இறந்தவுடன் அவர்களை அக்னியில் இட்டபின் அவர்களின் கபாலம் பிளக்கும் ஒலி எழும்போதே ‘இறுதி சடங்கு பூரணமானது’, எனக் கூறுவர். மற்ற சமயங்களிலும் மனிதர்களின் கபாலம் பிளக்கும் ஒலி கேட்ட பின்னரே இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் திரும்பி செல்வர். உயிருடன் உள்ளபோதே ஏழு சக்கரங்களும் பிளந்து மற்றும் ஆத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் செயல்பாடே உண்மையான ‘யோகம்’ ஆகும்! அதனால்தான் கிருஷ்ணன் மற்றும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே யோகேச்வரராக விளங்குகின்றனர். நாம் எல்லோரும் பராத்பர குரு டாக்டரின் அருட்கொடையின் கீழ் இருக்கிறோம் என்பது நாம் செய்த பரம பாக்கியமாகும்.’

(ஸத்குரு) டாக்டர் சாருதத்த பிங்களே, வடக்கு பாரத்தின் பிரசார சேவகர், புது தில்லி. (ஆகஸ்ட் 2018)

Leave a Comment