பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் இருப்பை உணர வைக்கும் சில இடங்களின் புகைப்படங்களுடன் கூடிய திவ்ய தரிசனம்!

கோபியரை பரமானந்தத்தில் மூழ்க வைக்கும்,
கணத்திற்கு கணம் ஸ்ரீஹரியை உணர வைக்கும் |
அனைவரையும் மதுரபக்தியில் தோய வைக்கும்,
கிருஷ்ண பாத ஸ்பர்சத்தால் பாவனமாக்கும் |
கோகுல, பிருந்தாவன, துவாரகா பூமிக்கு
சிரம் தாழ்த்திய அனந்த கோடி நமஸ்காரம் ||

ஸ்ரீகிருஷ்ணனைப் போன்ற ஒரு நண்பன், குரு, தாய்-தந்தை வேறு எவரும் இருக்க முடியாது என்பதை உணர்பவனே உண்மையான பக்தன்! பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் பரிபூரணமாக சரணாகதி செய்யும் பக்தன் சம்சாரத்திலிருந்து முக்தி அடைகிறான். ஸ்ரீகிருஷ்ணனின் மேல் அபரிமித பக்தியுணர்வு மேலிட வைப்பதுவும் அவனின் திவ்ய ஜீவனுக்கு நெருக்கமாயும் உள்ள கோகுலம், பிருந்தாவனம் மற்றும் துவாரகை ஆகிய தெய்வீக க்ஷேத்திரங்களின் புகைப்படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்பட ரூபமான நன்றியறிதலின் மூலமாக ஸ்ரீகிருஷ்ணனின் இருப்பை அனுபவிப்பதற்கு முயற்சி செய்வோம்!

ஜகத்குரு ஸ்ரீகிருஷ்ணன் என்றால் ஸாக்ஷாத் பரிபூரண அவதாரம் |
பக்தி, ஞானம் மற்றும் கர்மாவின் இறுதி இலக்கான இருப்பிடம் ||

கோபாலனின் பாலலீலையை அனுபவித்த கோகுலம்!

மாதவ குஞ்ஜ் கலீ (இங்கு ஸ்ரீகிருஷ்ணன் அவனின் சகாக்களுடன் வெண்ணெய் திருடித் தின்றான், அவ்வப்பொழுது ஓடி ஒளிந்தும் கொள்வான்.)

 

பகவத்பக்தியில் திளைத்து கிருஷ்ணமயமாகி
உள்ள தீர்த்த க்ஷேத்திரம் : பிருந்தாவனம்!

முரளீதரனின் வேணுகானம் மதுரமாய்ப் பொழிந்தது | மொய்த்தனர் அங்கு பசு பட்சிகளும் கோப-கோபியரும் || மூங்கில் வனத்தின் ஒவ்வொரு மரக்கிளையினின்றும் | மனமோகன மாதவனின் புல்லாங்குழலிசை எழுந்ததுவே ||
ராஸலீலையின் முக்கிய ஸ்தானம். இவ்விடத்தில் தினமும் இரவு ஸ்ரீகிருஷ்ணனும் கோபியரும் ராஸலீலை புரிந்தனர். 

 

ஸ்ரீஹரியின் இருப்பை உணர்த்தும் துவாரகை!

ஓரிரவில் 4 வேதங்களை ஓதி தேவதச்சனான விஸ்வகர்மா கட்டிய பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த கோவில்
தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment