கோகுலாஷ்டமி

பூர்ணாவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ராவண மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் பூமியில் அவதரித்தான். அவன் குழந்தைபிராயத்திலிருந்தே தன்னுடைய அசாதாரண காரியங்களால் பக்தர்களின் சங்கடங்களைப் போக்கினான். இக்கட்டுரையில் கோகுலாஷ்டமி சம்பந்தமான விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!

 

கோகுலாஷ்டமி

திதி : ஸ்ராவண மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி

 

இதிஹாசம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு ஸ்ராவண மாத அஷ்டமியில் நடு இரவில் ரோஹிணி நக்ஷத்திரத்தில் சந்திர வ்ருஷப ராசியின்போது ஏற்பட்டது.

 

மகத்துவம்

1. ஜன்மாஷ்டமி அன்று ஸ்ரீகிருஷ்ண தத்துவம் மற்ற நாட்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது. இந்த திதியில் ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்ற நாமஜபத்தையும் ஸ்ரீகிருஷ்ணனின் மற்ற உபாசனை வழிகளையும் ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்தால் ஸ்ரீகிருஷ்ண தத்துவத்தின் அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு உதவும்.

2. மாதவிலக்கு, தீட்டு போன்றவை பெண்களின் மீது ஏற்படுத்தும் பரிணாமம் இந்த தினத்தில் கடைபிடிக்கும் உபாசனையால் மற்றும் ரிஷிபஞ்சமி விரதத்தால் குறைகிறது. (ஆண்களின் மீது ஏற்படும் பரிணாமம் குடுமி வைத்துக் கொள்ளுதல் போன்ற பிராயச்சித்த கர்மாக்களாலும் வாஸ்து மீது ஏற்படும் பரிணாமம் உதகசாந்தியாலும் குறைகிறது.)

 

உற்சவத்தை கொண்டாடும் முறை

இன்றைய தினம் நாள் முழுவதும் உபவாசம் இருந்து இரவு 12 மணிக்கு பாலகிருஷ்ணனின் பிறப்பை கொண்டாடுகின்றனர். அதன் பிறகு பிரசாதம் உட்கொண்டு உபவாசத்தை நிறைவு செய்கின்றனர் அல்லது மறுநாள் விடியற்காலை தஹிகாலா பிரசாதத்தை உட்கொண்டு உபவாசத்தை நிறைவு செய்கின்றனர்.

 

தஹிகாலா

பல்வேறு உணவுப் பொருட்கள், தயிர், பால், வெண்ணெய் ஆகியவற்றின் கலவையே ‘காலா’ என்பது. ஸ்ரீகிருஷ்ணன் வ்ரஜபூமியில் பசுக்களை மேய்க்கும்போது தன்னுடைய மற்றும் சகாக்களின் உணவை ஒருங்கே கலந்து உணவுக் கலவையாக்கி அனைவருடனும் பகிர்ந்து உண்பான். இக்கதையை அனுசரித்து பின்பு கோகுலாஷ்டமிக்கு மறுதினம் உணவுக்கலவை செய்யும் வழக்கமும் உறியடி உற்சவமும் ஏற்பட்டுள்ளது.

 

தஹிகாலா சம்பந்தமாக
நடக்கும் தவறான செயல்களை தடுப்பீர்!

இன்று தஹிகாலா நிமித்தமாக ஆபாச, கர்ணகடூர நடனம், பெண்களை கிண்டலடித்தல் போன்ற தவறான செயல்கள் நடக்கின்றன. இத்தகைய தவறான செயல்களால் உற்சவத்தின் தூய்மை நஷ்டமடைந்து உற்சவத்தின் மூலம் கிடைக்க வேண்டிய தெய்வ தத்துவத்தின் பலனும் கிடைக்காமல் போகிறது. மாறாக தர்மத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. இது போன்ற தவறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு முயற்சி எடுப்பதால் உற்சவத்தின் தூய்மை பாதுகாக்கப்பட்டு எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும். இதை செய்வதே ஸமஷ்டி நிலையில் செய்யப்படும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் உபாசனையாகும்.

 

ஹிந்துக்களே, தர்மத்திற்கு ஏற்படும் தீங்கை
தடுத்து ஸ்ரீகிருஷ்ணனின் அருளிற்கு பாத்திரமாகுங்கள்!

தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய
க்ருதநிஷ்சய: | (ஹே, அர்ஜுனா, எழு, யுத்தத்திற்கு தயாராகு!)

ஸ்ரீகிருஷ்ணனின் மேற்கூறப்பட்ட ஆணைப்படி அர்ஜுனன் தர்மத்தைக் காத்து ஸ்ரீகிருஷ்ணனுக்கு பிரியமானவன் ஆனான்! ஹிந்துக்களே, தெய்வங்களின் நிந்தனை, மதமாற்றம், ‘லவ் ஜிஹாத்’, கோவில் திருட்டு, பசுவதை, சிலைகளை சேதப்படுத்துதல் போன்ற தர்மத்தின் மீது நடக்கும் தாக்குதல்களை எதிர்த்து உங்களின் சக்திக்கேற்ப சட்டத்திற்கு உட்பட்ட முறையில் போராடுங்கள்!

தகவல் : ஸனாதனின் நூல் ‘பண்டிகைகள், தார்மீக உற்சவங்கள் மற்றும் விரதங்கள்’

Leave a Comment