வந்தது வந்தது பெரும் மழைதான் வந்தது |

உடலெனும் ‘ரெயின்கோட்’, உயிரெனும் ‘ஆத்மசைதன்யம்’! 

வந்தது வந்தது பெரும் மழைதான் வந்தது |
உடலைக் காக்க  ரெயின்கோட் கை தந்தது |
மழை நின்றது ரெயின்கோட் பற்றி மறந்து போனது |
உடலென்ற ஆவரணத்தில் ஜீவனாகிய ஆத்மா மறைந்தது || 1 ||

பூர்வபுண்ணியத்தால் பூலோகத்தில் பிறப்பு ஏற்பட்டது |
ஆத்மரக்ஷணத்திற்காக எனக்கு பூவுடலும் கிடைத்தது |
சரீர ரூபமான ரெயின்கொட்டில் என் ஜீவன் ஒளிந்தது |
பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் ஜீவன் சிக்கியது || 2 ||

சுக-துக்கம், பிறப்பு-இறப்பு கொடிய சக்கரத்திலிருந்து விடுபட |
பராத்பர குரு பாண்டே மகாராஜ் சொன்னாரே உபாயம் |
‘ரெயின்கோட்’ ரூபமான உடலெனும் ஆவரணத்தை மற |
நிரந்தர, சத்ய, ஆனந்த சைதன்யத்தை நினை || 3 ||

எப்பொழுதும் நினை ஆத்மரூபமான பகவானின் சைதன்யத்தை |
நித்ய சைதன்யசக்தி ஆனந்தத்தை அளித்து விடுவிக்கும் உன்னை || 4 ||

இதி குஹ்யதம சாஸ்திரம், பராத்பர குரு பாண்டே மகாராஜ் உவாச |

பராத்பர குரு டாக்டரின் சரணங்களில் அர்ப்பணம் |

தொகுத்தவர், பூஜ்ய (திரு) சிவாஜி வட்கர், ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல்.

Leave a Comment