எல்லோரும் படிக்க வேண்டிய பகவத் கீதை ஒரு ராணுவ கையேடாகும் : மேஜர் ஜெனரல் சுபாஷ் ஷரன்

மீரட் (உபி) – ‘பகவத் கீதை என்பது ஒரு ராணுவ கையேடாகும். எல்லா இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும்’, என்று உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பணியின் அடிஷனல் டைரக்டர் ஜெனரலாக உள்ள மேஜர் ஜெனரல் சுபாஷ் ஷரன் அவர்கள் கூறினார். மேலும் அவர் மீரட்டில் 21 ஜீன் அன்று மேற்கு உபியின் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பணியின் முதல் சுற்று முடிந்த பின் கூறினார், ‘நம் வாழ்வின் எல்லா சம்பவங்களுக்கும் கீதை நம்மைத் தயார்படுத்துகிறது.’

மேலும் அவர் விவரித்தார், ‘பகவத் கீதை என்பது ஒரு மதம் சார்ந்த நூல் இல்லை. வாழ்வின் எல்லா சம்பவங்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை நமக்குத் தருகிறது என்பதால் எல்லா இளைஞர்களும் இந்நூலை படித்தறிந்து கொள்வது அவசியம். பகவத் கீதை என்பது ஒரு ராணுவ கையேடு. யுத்த களத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை உள்ளடக்கியது. யுத்தகளத்தில் நாம் யுத்தத்தை பற்றி மட்டுமே பேசுவோம். அதனால் நான் பகவத் கீதையை ஒரு ராணுவ கையேடு எனக் கூறினேன்.’

அவர் மேலும் ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார், அமெரிக்க ராணுவம் யுத்தத்தில் சிக்குண்ட இராக் பகுதிக்கு தன் ராணுவத்தினரை அனுப்பும்போது தங்களின் வீரர்களுக்கு விநியோகிக்க பாரதத்திலிருந்து 30,000 பகவத் கீதை நூல்களை வாங்கிக் கொண்டனர். தங்களின் ராணுவ வீரர்களுக்கு ‘கர்மயோகத்தை’க் கற்றுத் தந்து ஊக்கமளிக்க நினைத்தனர். அதாவது தங்களின் ராணுவ வீரர்கள் பலனை எதிர்பாராமல் கடமை உணர்வுடன் யுத்தத்தில் ஈடுபட வேண்டும் என விரும்பினர்.

அதோடு ராணுவ சரித்திரத்தில் ஒரு பெரும் திருப்புமுனையாக பெண்கள் ஜவான்களாக நியமிக்கப்படுவர் என்பதையும் மேஜர் ஜெனரல் அப்போது அறிவித்தார்.

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment