ஒரு மாபெரும் பாவம்!

‘சம உரிமை’ என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐம்பது வயதிற்கு உட்பட்ட இரு பெண்கள் 2-ம் ஜனவரி அன்று சபரிமலை ஐயப்ப கோவிலுக்குள் நுழைந்து கோவிலின் புராதன பாரம்பரியத்தை நசித்துள்ளனர். ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் அவர்களின் நடத்தையை அனுமதித்தது மட்டுமல்லாமல் காவல்துறை அவர்களுக்கு 2-3 நாட்களுக்கு முன்பிருந்தே பாதுகாப்பையும் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் உலக ரீதியாக இது பெரும் குற்றமாக கருதப்படவில்லை என்றாலும் ஆன்மீக ரீதியாக இச்செயல் பெரும் பாவச் செயலாகிறது. ஒரு மாபெரும் பாவம் என்பது தெரியாமல் செய்யப்படும் பாவம் அல்ல, தெரிந்தே செய்யப்படும் பாவம் ஆகும். கடவுளின் சந்நிதானத்தில் இதற்கு மன்னிப்பே கிடையாது. கர்மவிதிப்படி இதோடு சம்பந்தப்பட்டவர்கள் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

 

தவறான கம்யூனலிஸம் !

நாஸ்திக அமைப்புகளின் கும்பல்கள் ‘ஆண்-பெண் சம உரிமை’ என்ற பெயரில் கோவில்களுக்குள் அத்துமீறி நுழைந்து அதன் பவித்ரத்தன்மையை அழிக்க முயல்கின்றனர்; இருந்தாலும் ஹிந்துக்கள் தெருவிற்கு வந்து என்றுமே நடக்காத அளவிற்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பாரம்பரியப் பெண்களும் தாங்கள் எதற்கும் சளைத்தவர்களல்ல என்று தர்மத்திற்காக போராடியுள்ளனர். தர்மத்தின் மீது அதீத பற்றுதல் கொண்ட இவர்கள் ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்துள்ளனர் – ‘காத்திருக்கத் தயார்’ (ஸ்ரீ ஐயப்ப தரிசனம் கிடைக்க நாங்கள் 50 வயது வரை காத்திருக்கத் தயார் என்பதே இதன் அர்த்தம்).

இருந்தாலும் ஹிந்து விரோத கேரள அரசு ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி அவர்களின் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போட கங்கணம் கட்டியுள்ளது. கேரளாவின் கம்யூனிச அரசு இதற்கான விலையை அனுபவித்துதான் ஆக வேண்டும். புராணங்களில் கூறியுள்ளபடி பண்டைய காலங்களில் அசுரர்களும், 3-4 நூற்றாண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களும் ஹிந்துக்களின் மத உணர்வை மிதித்து கோவில்களை உடைத்தெறிந்தனர். இன்று அரசியல் சாசன சட்டத்தை பின்பற்றுகிறோம் என்ற பெயரில் ஆன்மீக கண்ணோட்டம் பற்றிய ஞானமே இல்லாது செயல்படுபவர்களுக்கும் அந்த அசுரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஹிந்துக்களின் அளவிற்கு மீறிய சகிப்புத்தன்மையால் தான் இன்று யார் வேண்டுமானாலும் ஹிந்து தர்மத்தை, ஹிந்துக்களை அவமதிக்கும் அவலம் நடந்தேறுகிறது. இதற்கு மாறாக மற்ற மதத்தினரின் தீவிர மதப் பற்றுதலால் (அது நம்பிக்கையோ அல்லது கண்மூடித்தனமான மூட நம்பிக்கையோ) அவர்களின் மத உணர்வுகள் மட்டும் வெகு ஜாக்கிரதையாக காப்பாற்றப்படுகிறது. இவையெல்லாம் மதசார்பற்ற அரசாங்க நிர்வாகத்தின் கசப்பான விளைவுகள். இத்தகைய மதசார்பற்ற அமைப்பில் மசூதிகளில் பெண்கள் நுழைய தடை என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை; சர்ச்சுகளில் கன்னிகாஸ்த்ரீகளின் மீது நடக்கும் கற்பழிப்பு அட்டூழியங்கள் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை; ஆனால் உன்னத ஆன்மீக உள்ளர்த்தம் இருந்தும் ஹிந்து பழக்க வழக்கங்களை பாரம்பரியத்தை மட்டும் வாய் கிழிய குற்றம் சாட்டுகின்றனர். அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவது பற்றிய வழக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் இழுபறியாக தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, சபரிமலை வழக்கில் மட்டும் ஹிந்து தார்மீக தலைவர்களை கலந்தாலோசிக்காமல் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 

சரணாகதி உணர்வே முக்கியம்;
‘உரிமை’க்கான அட்டகாசம் அல்ல!

உண்மையில் கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும்போது ஒருவர் பூரண சரணாகதி உணர்வுடன் தன்னுடைய அஹம்பாவத்தை, புகழை மற்றும் கர்த்தா என்கிற உணர்வை தெய்வத்தின் சரணங்களில் அர்ப்பணிக்க வேண்டியது அவசியம். கடவுளின் சந்நிதானத்தில் ஒருவரின் உரிமைகள் அல்ல, ஒருவரின் சரணாகதி உணர்விற்கே மதிப்பு. கடவுளை திமிரோடு, கர்வ மனப்பான்மையோடு தரிசனம் செய்ய எண்ணினால் தெய்வத்தின் அருளும் கிடைக்காது; எவ்வித நற்பயனும் ஏற்படாது. ‘கொல்லன் பட்டறையில் ஈ-க்கு என்ன வேலை?’ என்பதைப் போல பக்தி இல்லாதவனுக்கு கோவிலில் என்ன வேலை? எந்த ஒரு அலுவலகத்திலோ ஸ்தாபனத்திலோ விதிமுறைகளை கடைபிடிக்க தயங்காதவர்கள் தார்மீக விஷயங்களின் விதிமுறைகளை கடைபிடிப்பதால் மட்டும் குறைந்து போய் விடுவார்களா என்ன?

பிந்து மற்றும் கனகதுர்கா (வயது முறையே 42 மற்றும் 44) ஐயப்பா கோவிலில் நுழைந்த பின்பு கோவில் பூசாரிகள் ‘தூய்மைபடுத்தும்’ விதிமுறைகளை செய்துள்ளனர். ஆன்மீக சாஸ்திரப்படி செய்யப்படும் இந்த விதிமுறை சடங்கை செய்ததற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு! எந்த ஒரு ஸ்தாபனத்திலும் ஒழுங்குமுறை கைமீறி போகாமல் இருக்க ஒழுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதேபோலத் தான் ஆன்மீக கேந்திரங்களின் தூய்மை மாசடையும்போது அதன் புனிதத்தை புனர் நிர்மாணிக்க சில ஆன்மீக உபாயங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டது போல் புத்தி அளவில், கண்மூடித்தனமான கொள்கைகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம்.

 

தார்மீக வழக்கங்களை, கலாச்சாரத்தைப் பேணி பாதுகாப்பதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும்!

இந்தியாவில் மட்டுமே பெரும்பான்மையினரின் தார்மீக, சமூக, தேசீய உணர்வுகளுக்கு எவ்வித மதிப்பும் முக்கியத்துவமும் தரப்படுவதில்லை. தன்னை ஹிந்துத்வ கட்சி என சொல்லிக் கொள்ளும் ஒரு அரசியல் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த பின்பு இந்திய கலாச்சாரத்திற்கும் ஸனாதன ஹிந்து தர்மத்திற்கும் ‘அச்சே தின்’ (நல்ல காலம்) வருமென்று நம்பிக்கை வைத்திருந்தோம்; ஆனால் ஹிந்துக்களுக்கு இது சம்பந்தமாக பெரும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ‘ஹிந்து கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அந்த சிந்தனை வலுவடைந்துள்ளது.

இது சம்பந்தமாக சில இடங்களில் போராட்டங்கள் நடந்தும் இதுவரை அரசு இத்திசையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக அரசால் ‘அட்ராசிடிஸ் ஆக்ட்’-ல் தாழ்த்தப்பட்டவருக்காக மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது; ஆனால் துரதிர்ஷ்டவசமாக,அமைதியான போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகள் வைத்தும் கூட 10 கோடி ஹிந்துக்களின் தார்மீக உணர்வுகளை பாதுகாக்க இதுவரை எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. இதிலிருந்து எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. “தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’, அதாவது ‘தர்மத்தை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களையே தர்மம் காப்பாற்றுகிறது’ என்பதால் தர்மத்தை பாதுகாப்பது அரசின் கடமையாகிறது. இது போன்ற சம்பவங்களால் யார் தர்மத்தின் பக்கம் உள்ளார்கள், யார் அதர்மத்தின் பக்கம் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

திரு.சேத்தன் ராஜஹன்ஸ், தேசீய செய்தி தொடர்பாளர், ஸனாதன் ஸன்ஸ்தா, தொடர்பு : 7775858387

Leave a Comment