‘ஸன்பர்ன்’ – ஒரு தர்மவிரோத நிகழ்ச்சி!

கடந்த சில வருடங்களாக நம் தேசத்தில் ‘ஸன்பர்ன்’ போன்ற தர்மவிரோத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் நவீன சங்கீதம் மற்றும் நடனம் இவற்றுடன் மது மற்றும் போதைப் பொருட்களின் தாராளமான உபயோகம் பெருமளவு நடக்கிறது; முக்கியமாக இளைய தலைமுறையினர் இதில் பங்கேற்கின்றனர். இதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசாங்கம் எந்த அளவிற்கு தாழ்ந்துள்ளது என்பதை இது காண்பிக்கிறது. இளைய சமுதாயத்தை பாரதீய கலாச்சாரத்திற்கு விரோதமாக போக ஊக்கமளிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும். இவ்வருடம் இந்த நிகழ்ச்சி புனே நகரத்தில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த தவறியபோதும் அரசு அனுமதி வழங்கியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இது போன்ற தர்ம விரோத நிகழ்ச்சிகளைப் பற்றி பராத்பர குரு பாண்டே மகாராஜ் அவர்கள் கூறியுள்ள ஒளி மிகுந்த சிந்தனையை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

1. ‘ஸன்பர்ன்’ போன்ற ரஜ-தம
நிகழ்ச்சிகளுக்கு பெரும் ஆதரவு
இருப்பதால் அவற்றை ஏற்பாடு
செய்ய அதிக சிரமம் தேவை இருப்பதில்லை

‘இன்றைய காலகட்டத்தில் இது போன்று பணத்தை தண்ணீராக செலவழிப்பது மிகவும் தவறான காரியமாகும். சிலர் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தங்களின் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கவும் முயல்கின்றனர். நல்ல காரியங்களை செய்வதற்கு மிகுந்த பொறுமை தேவை, ஸாதனையும் அவசியம். ஆனால் ‘ஸன்பர்ன்’ போன்ற ரஜ-தம நிறைந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு அதிக சிரமம் எடுத்துக் கொள்ள தேவை இருப்பதில்லை. இதன் காரணம் கலியுகத்தில் மனித குணம் அதிக ரஜ-தம தன்மை கொண்டதாக உள்ளது. அவர்கள் நல்ல வழியில் திரும்புவதற்கு ஸாதானையின் பலம் தேவைப்படுகிறது. அதை செய்யாமல் மனிதர்களின் சுபாவத்தை அதோகதிக்குத் தள்ளும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் காரணம் இவர்களுக்கு ஊக்கமளிக்கும் கும்பல் அதிகரித்திருப்பது தான்.

 

2. அவசியத்திற்கு அதிகமாக
பணம் கையில் இருந்து தமோ குணமும்
இருந்தால் சிந்தனை பிரண்டு போகிறது

ஒவ்வொருவருக்கும் செலவிற்கு மேல் வரவு அதிகமிருந்தால் அவர்களின் தமோ குணத்தால் சிந்தனை பிரண்டு போகிறது. அதாவது அவர்களின் கவனம் உலக சுகங்களின் பக்கமே சாய்கிறது. அச்சமயம் தங்களுக்கு எது நல்லது என்று பகுத்தறியும் திறன் அவர்களிடம் இருப்பதில்லை. இதில் அலக்ஷ்மியின் லக்ஷணமே தெரிகிறது. இது போன்ற சமயங்களில் சட்டங்களும் ஏதும் செய்வதில்லை; ஏனென்றால் இன்று சட்டங்களும் தர்மத்திற்கு புறம்பாக மாறி வருகின்றன. சில சட்டங்கள் வெறும் பெயருக்களவில் உள்ளன, பின்பற்றப்படுவதில்லை.

 

3. ‘ஸன்பர்ன்’ போன்ற
நிகழ்ச்சிகள் இறைவனின் திட்டத்தின் கீழ் வருகிறதா?

3அ. நல்லவை மற்றும் கெட்டவை ஆகிய இரண்டுமே
மாயையுடன் சம்பந்தப்பட்டவை ஆதலால் படைப்புத்
தொழில் தொடர்ந்து நடப்பதற்கு இரண்டும் தேவையாக உள்ளது

‘ஸன்பர்ன்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக தீய சக்திகள் செயல்படுவதால் அவற்றை எதிர்த்து நல்ல சக்திகள் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுதல் : ‘ஸன்பர்ன்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக தீய சக்திகள் செயல்படவில்லை என்றால் நல்ல சக்திகள் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படாது. எல்லாமே நல்லவையாக நடந்தால் எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். அதனால் ‘நல்லவற்றிற்கு பரீட்சை வைத்து அவை மேலும் வலுப்பெறுவதற்காக ‘இது இறைவனின் திட்டமாக இருக்கலாம்’ என்று எனக்குத் தோன்றுகிறது. இருள் இருந்தால் தான் வெளிச்சத்தின் மகத்துவம் புரிய வரும். நல்லவை மற்றும் கெட்டவை ஆகிய இரண்டும் மாயையை சேர்ந்ததால் படைப்புத் தொழில் தொடர்ந்து நடப்பதற்கு இரண்டுமே அவசியம் ஆகும். அதன் மூலம் சக்தி கிடைக்கிறது. எங்கு நல்லது, கெட்டது ஆகிய இரண்டும் உள்ளதோ அங்கு த்வைதமும் உள்ளது. இதன் மூலம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரிகிறது.

3ஆ. நல்லவை மற்றும் கெட்டவை ஆகிய
இரண்டிலுமே இறைவனின் சக்தியே செயல்பட
வைக்கிறது என்றாலும் படைப்புத் தொழில் நடைபெற
எதிர்ப்பு சக்தி அதே அளவிலும் சமமாகவும் இருக்க வேண்டும்!

நல்லவை மற்றும் கெட்டவை செயல்படும்போது அவற்றை இறைவனின் சைதன்ய சக்தியே இயக்கி வைக்கிறது. துஷ்ட சக்திகளை தோற்கடித்து அழிப்பதற்கு நல்ல சக்தியை அதிகமாக்குவது அவசியமானதால் ‘இறைவனும் அதையே நமக்கு உணர்த்துகிறார்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது மின்சார விளக்கில் ஒளி பாய்வதற்கு ‘பாசிடிவ்’ மற்றும் ‘நெகடிவ்’ ஆகிய அங்கங்களும் தேவை. ஒவ்வொரு மனிதனுள்ளும் நல்ல மற்றும் கெட்ட ஆகிய இரு சக்திகளும் உள்ளன.

தீய சக்திகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள பொறுமை தேவை. பூமியில் தக்ஷிணாயனம் மற்றும் உத்தராயணம் உள்ளது. வெறும் உத்தராயணம் மட்டும் இருந்தால் என்ன ஆகும்? உத்தராயணம் என்றால் தியாகம்! தக்ஷிணாயனம் என்றால் போகம்! போகமும் மிதமாக இருத்தல் வேண்டும். அது பொறுமையால் சாத்தியமாகும். பொறுமையில்லாமல் போகத்தை அனுபவிக்க நினைத்தால் அது விகாரமாகி விடும். இதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன என்பது தெரிகிறது; அதாவது விரோத சக்தியும் தேவை; ஆனால் அது அளவில் சமநிலையோடு இருக்க வேண்டும்.

 

4. உலக விஷயங்களை தியாக
சிந்தனையுடன் அனுபவிக்க
வேண்டும், அதற்கு சுபாவமே மாற வேண்டும்!

உலக விஷயங்களை அனுபவிக்கும்போது தியாக சிந்தனையுடன் செய்ய வேண்டும். அதிலுள்ள சைதன்யத்தை மட்டும் க்ரஹித்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டும்; ஆனால் நாமோ அதற்கு நேர்மாறாக செய்கிறோம். ஏனென்றால் ஆசைகளால் பந்தப்பட்டு உள்ளோம். அதனால் ‘ஆசைகளுக்கு பலியாவது’ என்பது தீயது ஆகும். அதற்கு நம் சுபாவமே மாற வேண்டும். ஆனால் நாம் அதை பற்றி சிந்திப்பதில்லை. நல்ல சிந்தனைகளுக்காக கடவுள் நமக்கு புத்தியை தந்துள்ளார். புத்தி தூய்மையாவதற்கு ஸாதனை செய்வது அவசியம். சரியான ஸாதனை செய்வதற்கு குரு அவசியம்.

 

5. செயல் சிந்தனையை சார்ந்துள்ளது

அ. வெறும் சிந்தனை நன்றாக இருந்து செயல் நடக்கவில்லை என்றால் அதனால் பிரயோஜனம் இல்லை. செயலை செய்வதற்கு சிறிதளவாவது ரஜோ குணம் தேவை. க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மதேஜ் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தமோகுணம் நஷ்டமடையும். உதாரணம், பரசுராமர் ஒருவராக 21 முறை பூமியை வலம் வந்து தீய க்ஷத்ரியர்களை அழித்தார்.

ஆ. எந்த ஒரு சிந்தனையோட்டமும் ஒரு விதத்தில் நிர்குணம் ஆனதால் ‘அதன்படி செயல் செய்வது’ என்பது ஸகுணம் ஆகும். ஆனால் சிந்தனையின் நல்ல அல்லது தீய பரிணாமத்தை ஸகுணத்தில் பார்க்க முடிகிறது. இன்றைய பரிணாமம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. காரணம், இன்றைய சிந்தனையோட்டம் சரியான தர்மவழி சிந்தனை இல்லாததால் தமோகுண பிரதானமாக உள்ளது.

 

6. காரியம் செய்வதற்கு
எப்பொழுதும் ஸாதனை செய்வது அவசியமாகிறது!

இதற்கு நல்ல சக்திகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. கலவரத்தில் ஈடுபடுவது, விபசாரம் போன்ற தீய காரியங்களை செய்வதற்கு தீய சக்திகள் எப்பொழுதும் தயாராக உள்ளன. ஆனால் அதுவே நல்ல காரியங்களை செய்வதற்கு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டி உள்ளது. தீய சக்திகள் அதிகம் உள்ளன, அத்துடன் அவற்றிடம் ரஜ-தம தாக்கமும் உள்ளன. அதற்கு தினமும் ஆன்மீக ஸாதனையில் ஈடுபட வேண்டும் மற்றும் தன்னை சுற்றியுள்ள கருப்பு ஆவரணத்தையும் நீக்க வேண்டும். எப்படி துடைப்பத்தால் பெருக்குவதால் வீடு சுத்தமாகிறதோ அப்படியே காரியங்கள் நன்கு நடப்பதற்கு ஸாதனையை தொடர்ந்து செய்வது அவசியமாகிறது.

 

7.ரஜோகுண காரியத்தை ஸத்வ
குணத்துடன் இணைத்தால் அது வெற்றி
பெறுகிறது மற்றும் ரஜோகுணமும்
தமோகுணமும் இணைந்து காரியம்
நடந்தால் அது அதர்ம வழியாகி தீய காரியமாகிறது

‘எங்கும் சைதன்யமே காரியங்களை நடத்துவிக்கிறது’, என்பதை உணர்ந்து காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் முக்குணங்களை அருளியுள்ளான். காரணமில்லாமல் காரியங்கள் நடப்பதில்லை. ரஜோகுணமே காரணமாகிறது. எப்பொழுது ரஜோகுணம் ஸத்வ குணத்துடன் சேர்ந்து காரியங்களை செய்கிறதோ அப்பொழுது அது ஈச்வர சரணங்களில் ஐக்கியமாகிறது. இது போன்று செய்யப்படும் காரியங்கள் வெற்றி பெறுகிறது. ரஜோகுணம் தமோகுணத்துடன் சேர்ந்து காரியங்களை செய்தால் அது அதர்மவழியாகி அதன் மூலம் அயோக்கிய காரியங்கள் நடக்கின்றன. அப்பொழுது அந்த ஜீவன் பகவானிடமிருந்து வெகு தொலைவிற்கு சென்று விடுகிறது. இதன் மூலம் ‘வெற்றிகரமாக காரியங்களை செய்ய எச்சரிக்கையுடன் காரியம் செய்வது எவ்வளவு அவசியமானது’ என்பது தெளிவாகிறது. ‘இறைவன் இல்லாமல் இது நடக்காது’ என்பது உறுதியாகிறது.

 

8. பரம்பரை பரம்பரையாக
தர்மவழி நடப்பதன் மகத்துவம்!

பகவான் ஸ்ரீமத்பகவத்கீதை 3-ம் அத்தியாயம், 16-வது ஸ்லோகத்தில் ‘ஏவம் ப்ரவர்த்திதம் சக்ரம்..’ எனக் கூறியுள்ளார். அதாவது ‘எந்த மனிதன் இவ்வுலகத்தில் பரம்பரையாக நடந்து வரும் சிருஷ்டி சக்கரத்தை அனுசரித்து நடக்கவில்லையோ அதாவது தன் கடமையை செய்யவில்லையோ அவன் இந்த்ரிய சுகங்களுக்கு அடிமையாகி பாவ செயல்களால் மனிதப் பிறவியை வீணடிக்கிறான்.’ மாறாக தர்மவழி நடக்கும் காரியங்கள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து நடப்பதால் ராமராஜ்யத்தை ஒத்த நிலை அங்கு காணப்படும்.

விழும் இரு துளிகளுக்கு இடையே இடைவெளி இருந்தால் அது அகண்ட நீரொழுக்கு ஆகாது. எந்த ஒரு காரியம் செய்யும்போதும் அது தொடர்ந்து நடக்கவில்லை என்றால் தீய சக்தி இடையில் புகுந்து இடையூறு செய்யும் வாய்ப்பு உள்ளது. இதற்கு ஸாதனை கண்ணோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தர்மவழி நடப்பது அவசியமாகிறது. அது வழக்கத்தில் வர வேண்டும். அதற்கு ஸாதனை மற்றும் காரியம் ஆகிய இரண்டுமே மகத்துவமானது ஆகும். காரியத்துடன் கூட ஸாதனையும் நடக்க வேண்டும்.

 

9. காரியம் செய்யும்போது
ஸத்ய-அஸத்யத்தை பரீட்சித்து பார்ப்பது அவசியம்!

9அ. ஸத்யத்தை பரீட்சை செய்தால் ஒழிய அது நிரூபணமாகாது

சாதாரணமாக எங்கும் ஸத்யமே இருத்தல் வேண்டும். சிறிது அஸத்யம் இருந்தாலும் எங்கும் நாசமே ஏற்படுகிறது. பாஸந்தியில் சிறிது உப்பு கலந்தாலும் அது கெட்டு விடுகிறது. ஸத்யத்தை பரீட்சை செய்தால் ஒழிய அது நிரூபணமாகாது. அதனால் ஸத்யத்தை பரீட்சை செய்து உறுதி செய்ய வேண்டியுள்ளது. தங்கத்தை சுட்டால் ஒழிய அதை பரீட்சை செய்ய முடியாது. சுடுவது என்பது ‘தவம் மற்றும் ஸாதனை’ ஆகும். ஒருவர் ஸாதனை நெருப்பால் தகிக்கப்பட்டு அவரின் கருப்பு ஆவரணம் அழிந்தால் ஒழிய அவரிடம் சைதன்யம் வெளிப்படாது. இதிலிருந்து எல்லா இடத்தும் ஸாதனை எவ்வளவு அவசியமானது என்பது தெளிவாகிறது.

9ஆ. ஸத்யத்தை உணர்வதற்கு
அஸத்யத்தை தள்ள வேண்டிய அவசியம்!

ஸத்யம் வெளிப்படுவதற்கு அஸத்யத்தைத் தள்ள வேண்டியது அவசியமாகிறது. சூரியனை மறைத்த மேகம் விலகியவுடன் சூரிய ஒளி தெரிகிறது. சைதன்யம் உள்ளது; ஆனால் அதை வெளிக் கொணர வேண்டும். அதற்கு நல்ல சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

9இ. ஸத்யத்திடம் உள்ள சக்தியால்
அது என்றும் அப்படியே நிலைத்திருக்கும்; ஆனால்
அதை உறுதி செய்வதற்கு பரீட்சை செய்தல் வேண்டும்

முன்பிலிருந்தே ‘ஸத்யமேவ ஜயதே’ என கூறப்படுகிறது. ஸத்யத்திற்கு வெற்றி கிட்டுவதற்கு முதலில் ஜீவனின் ஆத்ம சைதன்யத்தை சுற்றியுள்ள கருப்பு ஆவரணத்தை விலக்க வேண்டும். அதாவது பித்தளை வளையலில் தங்க முலாம் பூசினாலும் சிறிது நாட்கள் கழித்து பித்தளை நிறம் வெளியே தெரிகிறது.

ஸத்யம் என்றும் ஸத்யமாகவே இருக்கும். ஆனால் அதை உறுதிபடுத்த அதை பரீட்சை செய்து பார்க்க வேண்டியுள்ளது. அப்பொழுது அது பொன்னைப் போல் பிரகாசித்து வெளிப்படுகிறது. ஸத்யத்தை நிரூபிக்க முயலும்போது எப்பொழுதும் எதிர்ப்பு ஏற்படுகிறது. அனால் எது ஸத் யமோ அதில் உண்மை இருப்பதால் அது நிலைத்து நிற்க முடிகிறது. அஸத்யம் தாற்காலிகமானது. அதனால்தான் ‘ஸத்யமேவ ஜயதே’ என முழங்குகிறோம்.

9ஈ. ரஜ-தம முலாம் சிறிது பூசிய
பின்பே ஸத்யத்தால் காரியம் செய்ய முடிகிறது!

அரசாங்கம் பெயர்ப் பலகையில் ‘ஸத்யமேவ ஜயதே’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ராஜாங்க அரசியல்வாதிகள் அஸத்யத்திற்கே கட்டுப்பட்டவர்கள். அஸத்யம் இருக்குமிடத்தில் ஜடத்வம் இருக்கும். அஸத்யத்தின் மீது கருப்பு ஆவரணம் இருப்பது ஸ்தூலத்திலும் தெரிய வருகிறது. காரியத்தில் ஈடுபடும்போது ஸத்யம் உண்மை ஸ்வரூபத்தில் சுத்தமாக இருக்க இயலாது; அதனால் அதை ‘அஸத்ய’ எனவும் கூற வேண்டி உள்ளது.

கலப்பில்லாத ஸத்யத்தால் காரியம் செய்ய இயலாது. கலப்பில்லாத தங்கத்தினால் வளையல் செய்தால் அது வளைந்து விடும். அது உறுதியாக நிற்பதற்கு சிறிது தாமிரம் கலக்க வேண்டும். அதேபோல் ராஜாங்க விஷயங்களை நடத்தும்போது ரஜோகுணம் உடைய ராஜா தேவை. பிராம்மதேஜசிற்கு க்ஷாத்ரதேஜஸ் தேவை. இதற்காக ராஜாவை ‘கோபிராம்மண ப்ரதிபாலக்’ என விளித்தனர். இதை ‘இறைவனின் திட்டம்’ எனக் கூறுவர். இதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்; ரஜோகுணம் ஸத்வ குணத்துடன் இணைந்தால் காரியங்கள் நன்றாக் நடக்கும்.

 

10. ‘ஸத்யமேவ ஜயதே’ என்று
பலகையில் மட்டும் போட்டு விட்டு
அஸத்ய வழியில் காரியங்கள் நடக்கின்றன

இன்று ‘ஸத்யமேவ ஜயதே’ என்று பலகையில் மட்டும் போட்டு விட்டு அஸத்ய வழியில் காரியங்கள் நடக்கின்றன. வெளியிலிருந்து உணவருந்தும் விடுதி பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் உள்ளே மது விற்பனை மற்றும் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பகட்டான ஆசாமியின் ஆடை வெளியே பார்ப்பதற்கு நன்றாக உள்ளது; ஆனால் அவனுக்குள்ளே தூஷிக்கத் தகும் எண்ணங்கள் இருக்கலாம். ஒரு கழுதை புலித்தோலைப் போர்த்தி வந்தாலும் அது ஒருபோதும் புலி ஆகாது. அதை அடித்தால் அது புலி போல் உறுமாது; கழுதையைப் போன்றே கத்தும். அதனால் பரீட்சை செய்து பார்த்தாலே உண்மை தெரிய வரும்.

நீதிமன்றத்தில் ‘நான் உண்மையே பேசுகிறேன்’ என்று உறுதி எடுத்துக் கொள்கின்றனர். உண்மையில் அங்கு உண்மை சொல்ல வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அங்கு பல பொய்களே சொல்லப்படுகின்றன. உலகெங்கும் இது போன்று வெளி பகட்டு காரியங்கள் ஸத்யம் போலவே நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றன.

 

11. ‘ஸன்பர்ன்’ போன்ற தர்மவிரோத
நிகழ்ச்சிகளால் சுற்றுப்புற சூழலை மாசடைய
செய்யும் சூழ்ச்சி நடந்து வருவதால் அதை அகற்றுவதற்கு
ஸத்யத்தின் ஆதாரத்தை நாடுவது அவசியமாகிறது

மேற்கூறிய விஷயங்களிலிருந்து மனிதர்கள் ‘இது எல்லாம் உண்மையே’ என்ற அனுமானத்துடன் நடக்கின்றனர் என்பது தெளிவாகிறது. அதனால் உண்மை வெளிவர வெகு காலம் பிடிக்கிறது. ‘ஸன்பர்ன்’ போன்ற தர்மவிரோத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சமூகத்தில் அஸத்யத்தை முன்னிலைப் படுத்தும் சூழ்ச்சி நடந்து வருகிறது. இந்த சூழ்ச்சியை முறியடிக்க ஸத்யத்தை ஆதாரமாகக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கு சமூகத்தில் ஒவ்வொருவர் மனங்களிலும் தர்மவழி நடக்கும் ஸன்ஸ்காரத்தை பதிய வைத்து ஸத்யத்தை நிலைநாட்டுவது அவசியமாகும்.

 

12. ஸனாதன் ஸன்ஸ்தா சமூகத்தில் இது போன்ற தீய வழக்கங்களை களைவதற்கு தர்ம வழி நடப்பதற்கு முக்கியத்துவம் அளித்து ஸத்யத்தை நிலை நிறுத்தும் காரியத்தை செய்து வருகிறது. இது போன்ற காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஹிந்து ராஷ்ட்ரம் அவசியம்!’

‘ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்’

– (பராத்பர குரு) பரசுராம் பாண்டே (மகாராஜ்), ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல் (29.12.2016)

(தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத் பத்திரிக்கை, 30.12.2018)

Leave a Comment