ஆடி மாத ஏகாதசியின் இதிகாசம்!

‘முன்பு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. கும்ப அசுரனின் மகனான ம்ருதுமான்யன் கடுந்தவம் செய்து சங்கரனிடம் இறவாவரம் பெற்றான். அதனால் அவன் பிரம்மா, விஷ்ணு, சிவனால் வெல்ல முடியாதவனாகி விட்டான். அவனிடமுள்ள பயத்தினால் தேவர்கள் திரிகூட மலையில் தாத்ரி என்ற மரத்தின் அருகில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டனர். அவர்கள் அந்த ஆடி மாத ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டி இருந்தது. மழையில் நனைந்து குளிக்கும்படியாக ஆயிற்று. திடீரென்று அவர்களின் மூச்சுக் காற்றில் ஒரு சக்தி பிறந்தது. அந்த சக்தி குகையின் வாயிலில் இருந்த ம்ருதுமான்ய அசுரனை கொன்றது. இந்த சக்தி தேவியே, ஏகாதசி தெய்வமாகும்.

ஆடி மாத ஏகாதசியின் மகத்துவம்

அ. ஆடி மாத ஏகாதசி விரதத்தால் எல்லா தெய்வங்களின் தேஜ தத்துவங்களும் ஒருங்கிணைகிறது.

ஆ. காமிகா ஏகாதசி, மனதில் உள்ள விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஏகாதசி ஆகும்.

(படியுங்கள் சனாதனின் நூல் ‘தார்மீக உற்சவங்கள் மற்றும் விரதங்களின் சாஸ்திரம்’)

Leave a Comment