சிவனின் மூர்த்தி விஞ்ஞானம்

ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவமாகும். இந்த தத்துவங்கள் யுகம் யுகமாய் உள்ளன. தெய்வங்களின் தத்துவம் எப்பொழுதெல்லாம் அவசியமோ அப்பொழுது ஸகுண ரூபத்தில் வெளிப்படுகிறது. உதா. பகவான் விஷ்ணு காரியதிற்கேற்றபடி எடுத்துக் கொண்டது ஒன்பது அவதாரங்கள். மனிதன் காலப் போக்கில் தெய்வங்களின் பலவித ரூபங்களை பூஜை செய்ய ஆரம்பித்தான்.

சிவனின் மூர்த்தியில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் –

 

மனித ரூபம்

சிவனின் மனித ரூபத்தில், நான்கு விதமான ஆபரணங்கள் உள்ளன.

1. டமரு

இது சப்த ப்ரம்மத்தைக் குறிக்கின்றது. இதிலிருந்து மூல ஒலியான ஐம்பத்திரண்டு எழுத்துக்களும், பதினான்கு மஹேச்வர சூத்திரங்களும் உருவாயின. இதன் மூலம் வர்ணமாலா உருவானது. பின்னர், ப்ரபஞ்சம் இதிலிருந்து தோன்றியது.

2. திரிசூலம்

திரிசூலத்தின் மூன்று பிளவுகள் குறிப்பதாவது

அ. முக்குணங்கள் : மூன்று குணங்களாகிய ஸத்வ, ரஜ, தம.

ஆ. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு அடித்தளமாக விளங்குவது.

இ. விருப்பம், ஞானம், செயல்பாடு.

3. பாசம் (அல்லது) மான்

பாசம் என்பது காலபாசத்தைக் குறிக்கிறது. மான் நான்கு வேதங்களைக் குறிக்கின்றது.

4. பரசு

இது அறியாமையை அடியோடு வேரறுக்கும் சின்னமாக விளங்குகின்றது.

 

சிவபிண்டியின் வடிவம்

பகாவின் (பெண்குறி) சின்னமாக விளங்கும் சாளுங்காவும், லிங்காவின் (ஆண்குறி) சின்னமாக விளங்கும் லிங்கமும் ஒன்று சேர்ந்து பிண்டி உருவானது. இந்த பூமி, படைத்தலையும், சிவன் தூய்மையையும் உணர்த்துகிறார்கள். அதன்படி சாளுங்கா, வளமை, தூய்மை இரண்டும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது. ஆகையால் இந்த ப்ரபஞ்சம், விந்துவால் உருவாக்கப்- பட்டதல்ல, சிவனுடைய ஸங்கல்பத்தினால் உருவானது.

1. ஜ்யோதிர்லிங்கம்

பாரதத்தின் முக்கிய சிவஸ்தலங்களில் மொத்தம் 12 ஜ்யோதிர்லிங்கங்கள் உள்ளன. அவை ஒளிமயமாக வெளிப்பட்டன. பதின்மூன்றாவது லிங்கத்தின் பெயர் காலபிண்டம். பிண்டாவானது (மோஷத்தை நாடும் ஜீவாத்மா) கால அளவை கடந்து நீடித்திருந்தால் காலபிண்டம் எனப்படுகிறது.

ஜ்யோதிர்லிங்கத்தின் அர்த்தம் : தைத்திரீய உபநிஷத் கீழ்வரும் பன்னிரண்டு கொள்கைகளை ஜ்யோதிர்லிங்கமாக கூறுகிறது. அவை ப்ரம்மன், மாயா, ஜீவன், மனம், அறிவு, ஆழ்மனம், அஹம்பாவம் மற்றும் பஞ்சமஹாபூதங்கள்.

2. பாணலிங்கம்

இது ஒரு விதமான சிவலிங்கம். நர்மதை நதியில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவம் உடைய கல் பாணலிங்கம் எனப்படுகிறது.

யக்ஞவல்க்யசன்ஹிதா குறிப்பிட்டுள்ளபடி, பாணாசுரன் என்னும் அசுரன், பூஜிப்பதற்காக லிங்கங்களை தயாரித்து பின்பு, நர்மதாற்றங்கரையின் பக்கத்தில் உள்ள குன்றுகளில் வீசி எறிந்து விட்டான். அந்த லிங்கங்கள், குன்றுகளில் வழிந்தோடும் தண்ணீரில் மிதந்து வந்து நர்மதையில் சேர்ந்துவிட்டன. கங்கா, யமுனா நதிகளிலும் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன. சிவனுக்கு உகந்த பாணலிங்கமும், விஷ்ணுவிற்கு உகந்த சாளகிராமமும், துளையேயில்லாத சலவைக்கல்லைப் போன்றவை. அதில் தேய்மானம் எதுவும் கிடையாது. அதோடு கனமானவை.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘சிவன்’

Leave a Comment