உணவு சம்பந்தமான ஆசார தர்மம் பற்றிய வழிகாட்டுதல்

பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்களின் வழிகாட்டுதல்!

பரம் பூஜ்ய பரசுராம் பாண்டே மகாராஜ்

1. உணவு உட்கொள்வதற்கு முன்பு
ஏன் சித்ராஹுதி அளிக்கப்படுகிறது?

உணவால் மனம் உருவாகிறது. மனத்தால் சங்கல்ப விகல்பங்கள் (நேர்மறை, எதிர்மறை எண்ணங்கள்) உருவாகின்றன. அதன்படி கர்மாக்கள் நடக்கின்றன. கர்மத்தால் நல்ல காரியங்கள் அல்லது தீய காரியங்கள் நடக்கின்றன. தீய கர்மம் அல்லது தவறு நடப்பதால் பாவம் ஏற்படுகிறது. பாவத்தால் துக்கம் சம்பவிக்கிறது. மரணத்திற்கு பின்பு யமவேதனையை அனுபவிக்க வேண்டி உள்ளது. நாம் செய்துள்ள கர்மாக்களின் பலனை சித்ரகுப்தன் பதிவு செய்து கொள்கிறான். நம்முடைய மரணத்திற்கு பின்பு இவை யமனின் முன் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதன்படி யமதர்மராஜன் நியாயப்படியான தீர்ப்பு வழங்கி தண்டனை தருகிறார். இந்த யமவேதனையிலிருந்து தப்பிக்க, இதன் நினைவு நமக்கு எப்பொழுதும் இருக்க, உணவு உட்கொள்வதற்கு முன்பு சித்ராஹுதி அளிக்கப்படுகிறது.

 

2. உணவு உட்கொள்ளும்போது ஏன்
மௌனமாக இருக்க வேண்டும்?

உணவு உட்கொள்ளும்போது பேசுவது கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. உணவு உட்கொள்ளும்போது பேசுவதால் மனம் வெளிமுகமாகிறது. அதனால் நம்மிடம் ரஜ-தம தன்மையின் பாதிப்பு அதிகமாகிறது. இதிலிருந்து தப்பிக்க மௌனமாயிருத்தல் நல்லது. உணவு உட்கொள்ளும் சமயம் முழுவதும் இறைவனின் நாமத்தை ஸ்மரிக்க வேண்டும். அதன் மூலம் அந்த அன்னத்தில் சைதன்யம் நிர்மாணமாகிறது. இந்த சக்தி மற்றும் சைதன்யம் உள்வாங்கப்பட்டு உண்ணும் காரியமே யக்ஞ கர்மாவாகிறது. யக்ஞ கர்மாவால் உருவாகும் மனது நல்லதாக அமைகிறது. இத்தகைய மனத்தில் நல்ல எண்ணங்கள் ஏற்பட்டு நல்ல செயல்கள் நடக்கின்றன. உணவு உட்கொள்ளும்போது இறைவனுடைய நினைவில் ஆழ்ந்து, அவனுடன் உரையாடிக் கொண்டே உட்கொள்ளும்போது சைதன்ய சக்தி அதிகரிக்கிறது; இத்தகைய மனத்தில் விகல்பங்கள், தேவையில்லாத சந்தேகங்கள் எழுவதில்லை.

– பரம் பூஜ்ய பரசுராம் பாண்டே மகாராஜ், சனாதன் ஆஸ்ரமம், பன்வேல். (ஜூன் 2016)

(உணவு பற்றிய பல்வேறு ஆன்மீக விளக்கங்களுக்கு பார்வையிடுங்கள் ஸனாதனின் தமிழ் நூல்கள், ‘ஸாத்வீக உணவின் மகத்துவம்’ மற்றும் ‘ஸாத்வீகமில்லாத உணவின் தீய விளைவுகள்’)

Leave a Comment