ஸாத்வீக உணவின் மகத்துவம்

1. ஸாத்வீக உணவின் மகத்துவம்

எந்த உணவை உட்கொள்வதால் ஒருவருக்கு ஸாத்வீகத் தன்மை கிடைக்கிறதோ அதுவே ஸாத்வீக உணவாக கருதப்படுகிறது. உதாரணம் – பால், மோர், தானியங்கள், பழங்கள், காய்கறிகள். ஸாத்வீக உணவின் மூலமே ஸாத்வீக பிண்டம் உருவாகிறது. இந்த பிண்டமே ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட தகுதி வாய்ந்தது. உணவு, தமோ குணம் நிறைந்ததாக இருந்தால், அந்த தமோ குண சக்தியை கொண்டு இயங்கும் உடல் பாவ காரியங்களை செய்கிறது. பாவகர்மாக்கள், அவற்றின் சூட்சும அதிர்வலைகளை பெருமளவு சூழலில் வெளியிடுகின்றன. அந்தந்த நிலைகளில் அவை திடப்பட்டு குறிப்பிட்ட செயல்கேந்திரியங்களாக மாறுகின்றன. சரியான ஸாத்வீக உணவால் வளர்க்கப்பட்ட ஜீவன்கள், நல்ல சிந்தனைகளோடு நல்வழியில் நடப்பவர்களாக உள்ளனர். பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் சீரிய உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டனர். ஸாத்வீகத் தன்மையைத் தரும் தேஜ தத்துவத்தை வழங்கும் சரியான உணவு, ஒருவகை தேஜ அதிர்வலைகளை உடலில் நிர்மாணித்து அந்தந்த நிலையில் அந்தந்த ஜீவன்களை யோகிகளாக்குகின்றது. உணவு கட்டுப்பாடு கொண்டு வருவது, அதாவது நாவை அடக்குவது என்பது கடினமான விஷயம். நாவை, வாக்கை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜீவன் யோகி ஆகிறான்.

2. ஸாத்வீக உணவால் பஞ்சபிராணன் செயல்பட்டு உடலில் சங்கமிக்கின்றன

நம்முடைய உடல் என்பது இறைவனால் இயக்கப்படும் ஒரு கருவியாகும். அன்னத்தை உட்கொள்வதால் உடலில் உண்டாகும் சக்தி யக்ஞத்தில் உருவாகும் தேஜ தத்துவ சக்தியுடன் சம்பந்தப்பட்டது. ஸாத்வீக உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஸாத்வீக அதிர்வலைகள் மூலம் உடலில் நாபி பகுதியில் இருக்கும் பஞ்சபிராணனின் செயலுக்கு கதி கிடைக்கிறது. எந்நாள் வரை நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஸாதனையை செய்ய ஆரம்பிக்கவில்லையோ அந்நாள் வரை நம் உடலில் மறைந்து காணப்படும் பஞ்சபிராணன் தூய்மை அடைவதில்லை. ஆனால் ஸாத்வீக உணவை உட்கொள்வதால் பஞ்சபிராணன் செயல் பட்டு உடலில் சங்கமிக்கின்றன. அதனால் தான் அன்னத்தை ‘பூரண பிரம்மம்’ அதாவது ‘பஞ்ச பிராணனை தூய்மையாக்கும் சக்தி படைத்தது ‘ என்று கூறுகிறோம்.

– ஒரு வித்வான் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 30.1.2005, மதியம்12.58.

3. ஸாத்வீக உணவால் ஏற்படும் படிப்படியான மாறுதல்கள்

அ. வைராக்கியம் : சரியான உணவால் ஒவ்வொரு அணுவும் தேஜ தத்துவத்தின் உதவியோடு ஊட்டம் பெறுகிறது. அதனால் ஆன்மீக பயிற்சி மூலம் அந்தந்த நிலையில் நிர்மாணமாகும் ஆன்மீக சக்தி, அந்தந்த உயிரணு கேந்திரங்களில் திடப்பட்டு அந்த ஆன்மீக சக்தியின் பலத்தால் ஜீவன் வைராக்கியத்தை நோக்கி பயணப்பட்டு ஆசைகளின் மீதுள்ள பற்றுதல் விலகுகிறது.

ஆ. தேஹ-புத்தி குறைதல் : உணவின் மூலமாக ஒரு ஜீவன் எண்ணங்களின் வழியில் சைதன்ய உலகிற்குள் பிரவேசிக்கிறது. அச்சமயம் ஜீவனின் தேஹ-புத்தி குறைகிறது.

இ. உணவு பற்றிய நினைவும் குறைதல் : ஸ்தூல தேகத்தைப் பற்றிய நினைவு குறைந்தவுடன் உணவை பற்றி நினைவும் குறைகிறது. உணவு உட்கொள்ளுதல் மற்றும் உட்கொள்ளாதல் ஆகிய இரண்டையும் சமநிலையில் பார்க்க முடிகிறது. அதன் மூலம் உணவு சம்பந்தமான அதிர்வலைகளுக்கு அப்பால் செல்ல முடிகிறது.

ஈ. சைதன்ய பீடத்தில் அமர்தல் : உணவு பற்றிய விருப்பு-வெறுப்பு அகலும் போது உடல், உள்ளிருந்து சைதன்ய நிலையில் இயங்க ஆரம்பிக்கின்றது.

உ. ஸாத்வீக எண்ணங்கள் அதிகரித்தல் : சரியான ஸாத்வீக உணவை உட்கொள்வதன் மூலம் ஸாத்வீக சக்தி நிர்மாணமாகிறது. இந்த சக்தி, மனதில் ஸாத்வீக எண்ணங்களை அதிகரிக்கச் செய்து சித்தத்தில் அதன் மூலம் ஏற்படும் புண்ணிய பலனாகிய எண்ணப் பதிவை ஏற்படுத்துகின்றது.

ஊ. சித்திகள் : இவ்வாறு சேகரிக்கப்பட்ட புண்ணிய பலன் காலப்போக்கில் அடுத்தடுத்த மேம்பட்ட நிலைகளான சித்திகளை தருகின்றது. ஸாத்வீக உணவு – மகானின் நிலையையும், உணவை தியாகம் செய்தல் – ரிஷியின் நிலையையும், உணவை உட்கொள்ளுதல் உட்கொள்ளாததால் ஆகிய நிலை கடந்து செல்லுதல் – தெய்வ  நிலையையும் அளிக்க வல்லவை.

ஹிந்து தர்மம் வகுத்துள்ள சரியான ஆன்மீக உணவு பற்றிய வழிமுறைகள் ஒரு ஜீவனை படிப்படியாக நல்ல மனிதன், ஸாதகர், மகான், ரிஷி மற்றும் தெய்வம் ஆகிய நிலைகளுக்கு உயர்த்தி இறுதியில் இறைவனோடு இரண்டற கலக்கும் நிலையான மோக்ஷத்தை  பெற்று தருகிறது

3. கர்ப்பவதிகள் ஏன் ஸாத்வீக உணவை உண்ண வேண்டும்?

அ. ஸாத்வீக உணவின் மஹத்துவத்தைப் பற்றி ஹிந்து தர்மத்தில் அவ்வப்போது கூறப்பட்டுள்ளது. ஸாத்வீக உணவின் மூலம் உடலின் தசைகள் உண்மையில் வலுவடைகின்றன. இங்கு ஊட்டம் என்பது ஸாத்வீக உணவின் மூலம் கிடைக்கும் பலத்தை குறிக்கும்.

ஆ. ஸாத்வீக உணவின் மூலம் ஸாத்வீக அதிர்வலைகள் நிர்மாணமாகின்றன. அதோடு இந்த ஸத்வ குணம், பிரம்ம மண்டலத்தில் உள்ள சைதன்ய சக்தியை அதிக அளவு ஆகர்ஷிப்பதால் இந்த உணவின் சேர்க்கையால் அந்த சிசுவின் வளர்ச்சி ஆன்மீக நிலையில் நடைபெறுகிறது.

இ. சைதன்ய சக்தியின் ஸ்பரிசத்தால் சிசுவின் சூட்சும தேஹத்தில் தேஜ தத்துவத்தின் பலம் அதிகரிக்கிறது. இதனால் கர்ப்பவாஸத்திலுள்ள எல்லா கஷ்டங்களும் நீங்கி தாய், சிசு ஆகிய இருவரின் உடல், மனம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் உன்னத நிலையில் இருப்பதற்கு உதவுகிறது.

ஈ. தேஜ தத்துவம் நிரம்புவதால் கர்ப்பத்தை சுற்றி பாதுகாப்பு கவசம் நிர்மாணமாகிறது அதனால் வெளி வாயு மண்டலத்திலிருந்து ஏற்படும் தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் கஷ்டம் தரும் அதிர்வலைகளின் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

4. கட்டுக்கோப்பான உணவு முறையால் ஏற்படும் ஆன்மீக முன்னேற்ற நிலைகள்

ஹிந்து தர்மப்படியான உணவு முறை, கட்டுக்கோப்பான உணவு முறை ஆகும்.

அ. பிண்ட சுத்தி : கட்டுக்கோப்பான உணவு முறையே ப்ரம்மாண்டத்தில் உள்ள பஞ்ச தத்துவ சக்தியின் சமச்சீர் நிலையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதனால் சரியான உணவு முறையால் அந்தந்த நிலையில் உள்ள பஞ்ச தத்துவம் தேவையான அளவு, தேவையான முறையில் உடலில் சேர்ந்து பிண்ட சுத்தி ஏற்படுகிறது.

ஆ. ஸாத்வீக எண்ணங்களால் அகண்டமான என்ன மண்டலம் உருவாதல் : பிண்டசுத்தியால் ஜீவன் ப்ரம்மாண்டத்தை நோக்கி செல்கிறது. தன்னுடைய பிண்டத்தை தாண்டி வெளி வாயு மண்டலத்தை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறது. அதாவது ஸாத்வீகமான உணவு முறையால் பரந்த நோக்குடைய எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன.

இ. மனோலயமும் புத்திலயமும் : இந்த ஸாத்வீக எண்ணங்களால் தன்னைப் பற்றிய எண்ணங்கள் விலகி மனோலயம் ஏற்படுகிறது சைதன்யத்தை கிரஹிப்பதால் புத்தி லயமும் ஏற்படுகிறது.

ஈ. சித்தசுத்தி (மஹான்களின் நிலை) : மனோலயமும் புத்திலயமும் ஏற்பட்டதை உணர்ந்த ஜீவனுக்கு சித்த சுத்தி ஏற்படுகிறது.

. தேஹ புத்தி அகலுதல் : (ரிஷியின் நிலை) சித்தசுத்தி, நித்யஸ்வரூபமான ஜீவனை சைதன்யத்தோடு இணைக்கிறது. அதாவது ஸாத்வீக உணவை உட்கொள்வதால் உடல், ஸ்தூல நிலையில் தூய்மை அடைகிறது. அதன் மூலம் பெரும் ஸாத்வீக தன்மையால் சூட்சும தேஹமும் தூய்மை அடைகிறது. அப்போது உணவில் நாட்டம் குறைந்து உடல் உணர்வு அற்ற நிலைக்குச் செல்ல முடிகிறது. சுருக்கமாக ஸாத்வீக உணவை உட்கொள்வதால் காலப்போக்கில் ஒரு ஜீவனுக்கு உணவின் மீதுள்ள பற்றுதல் நீங்குகிறது. இந்த தியாகத்தால் அந்த ஜீவன் நிவ்ருத்தி மார்க்கத்தை(துறவறம்) நோக்கி பயணிக்கிறது. அதாவது ரிஷியின் நிலையை அடைகிறது. வைராக்கிய குணமே ரிஷியின் தன்மை. ஆசைகள் அடியோடு அழியும்போது வைராக்கியம் சித்திக்கிறது.

ஊ. தெய்வநிலை : வைராக்கிய நிலை முடியும் போது ஜீவன் தெய்வ நிலையை அடைகிறது.

5. முடிவுரை

உணவு எப்படியோ அப்படியே சிந்தனை, சிந்தனை எப்படியோ அப்படியே கர்மா ‘ என கூறப்படுகிறது. கர்மா உன்னதமாக இருந்தால் மட்டுமே ஒரு ஜீவன் ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும். இதன் மூலம் ஆன்மீக ஸன்ஸ்காரங்களின் அடிப்படையாக விளங்குவது ஸாத்வீக உணவே என்பது தெளிவாகிறது. – ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில்.

 

தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘ஸாத்வீக உணவின் மஹத்துவம்’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment