ஸ்ரீராமநவமி

சித்திரை மாத சுக்லபக்ஷ நவமியை ‘ஸ்ரீராமநவமி’ எனக் கூறுவர். ஸ்ரீராமனின் பிறப்பு அன்று நடந்ததால் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புனர்பூச நக்ஷத்திரத்தில், நண்பகலில் கடக லக்னத்தில் சூரியன் உட்பட ஐந்து கிரஹங்கள் உள்ளன, அத்தகைய சுபதினத்தில் அயோத்தியில் பிரபு ஸ்ரீராமனின் பிறப்பு நடந்தது. பல ராமர் கோவில்களில் சித்திரை மாத சுக்லபக்ஷ பிரதமை முதல் ஒன்பது நாட்களுக்கு உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. இராமாயண பாராயணம், கதை-கீர்த்தனங்கள் மற்றும் ஸ்ரீராம விக்ரஹத்தின் பல்வேறு அலங்காரங்கள் ஆகியன செய்யப்பட்டு இந்த உற்சவம் கொண்டாடப்படுகின்றது. நவமி அன்று மதியம் ஸ்ரீராமனின் பிறப்பு பற்றிய கீர்த்தனங்கள் பாடப்படுகின்றன.

மதிய வேளையில் ஒரு தேங்காய்க்கு சிறு குழந்தையின் தொப்பி அணிவித்து தொட்டிலில் வைத்து தொட்டிலை ஆட்டுகின்றனர். பக்தர்கள் அதன் மீது குலால் மற்றும் மலர்களை தூவுகின்றனர். இன்றைய தினம் ஸ்ரீராம விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால் எல்லா விரதங்களின் பலன்களும் கிடைக்கின்றன மற்றும் எல்லா பாவங்களும் தொலைந்து இறுதியில் உத்தம லோகங்களும் கிடைக்கின்றன.

தெய்வங்களின் மற்றும் அவதாரங்களின் ஜன்மதிதி அன்று அவர்களின் தத்துவம் பூமியில் அதிகபட்ச அளவு செயல்பாட்டில் உள்ளது. ஸ்ரீராமநவமி அன்று ராமதத்துவம் ஏனைய தினங்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு செயல்பாட்டில் உள்ளது. இதன் பயனைப் பெறுவதற்கு ராமநவமி அன்று ‘ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற நாமஜபத்தை அதிகபட்ச அளவு செய்ய வேண்டும்.

1. பிரபு ஸ்ரீராமனின் நாமஜபமான ‘ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம’

இது ஸ்ரீராமனின் மிகப் பிரபலமான நாமஜபம் ஆகும். இதில் ‘ஸ்ரீராம’ என்ற வார்த்தை ஸ்ரீராமனை அழைப்பதாகும். ‘ஜய ராம’ என்ற வார்த்தை ஸ்துதி செய்யும் வாசகம் ஆகும் மற்றும் ‘ஜய ஜய ராம’ – இது ‘நம:’ என்று மற்ற நாமஜபங்களில் இறுதியில் வரும் வார்த்தையைக் குறிக்கிறது. இது சரணாகதி செய்வதைக் குறிக்கிறது.

ராமாயணத்தில் ‘ராமனைக் காட்டிலும் ராமநாமம் சிறந்தது’ பற்றிய கதையை நாம் கேட்டுள்ளோம். எல்லோரும் தெரியும், ‘ஸ்ரீராம’ என்று எழுதப்பட்ட கல்லும் சமுத்திரத்தில் மிதந்தது என்று. அதேபோல் ஸ்ரீராமனின் நாமஜபத்தை செய்வதால் நம்முடைய ஜீவனும் இந்த வாழ்க்கைக்கடலைக் கடந்து முக்தி பெறும் என்பது நிச்சயம்.

2. ஹே தர்மஸ்வரூபி ஸ்ரீராமா, நானும்
எப்பொழுதும் தர்மவழி நடக்கும்படி செய்வாய்!

ஸ்ரீராமநவமி அன்று அதிக செயல்பாட்டில் இருக்கும் ஸ்ரீராம தத்துவத்தின் அதிகபட்ச பயனைப் பெற என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீக கண்ணோட்டத்தில் ஒவ்வொரு தெய்வமும் ஒரு குறிப்பிட்ட தத்துவமாகும். ஸ்ரீராமநவமி அன்று பூஜையறையில் ஸ்ரீராம தத்துவத்தை ஆகர்ஷிக்கும் மற்றும் வெளியிடும் கோலத்தைப் போடவும். இக்கோலங்களைப் போடுவதால் அங்குள்ள வாயுமண்டலம் ஸ்ரீராம தத்துவத்தால் நிறையப் பெற்று அங்குள்ள எல்லோருக்கும் அதன் பலன் கிடைக்கிறது.

ஸ்ரீராமனின் ஒரு கையில் வில் உள்ளது. ஒரு கை ஆசீர்வாதத்தை நல்குகிறது. அனாசாரங்கள் மிகுந்துள்ள இன்றைய காலகட்டத்தில் நாம் பிரபு ஸ்ரீராமனின் மீது எவ்வகையில் பக்தி செலுத்துவது?

இன்று தெய்வ நிந்தனைகள் பல விதங்களில் நடக்கின்றன. சொற்பொழிவுகள், நூல்கள் போன்றவற்றின் மூலம் தெய்வங்களின் மீது அவதூறுகள் வாரி இறைக்கப்படுகின்றன. தெய்வங்களின் வேஷங்களை தரித்து பிச்சை எடுக்கின்றனர். வியாபார விளம்பரங்களில் தெய்வங்களை ‘மாடல்’கள் ரூபத்தில் உபயோகிக்கின்றனர். நாடகங்கள், சினிமாக்கள் மூலமாகவும் சர்வ சாதாரணமாக தெய்வ நிந்தனை நடந்து வருகின்றன. தெய்வ உபாசனையின் அடிப்படை ச்ரத்தை ஆகும். தெய்வங்களை இவ்வாறு அவமதிப்பதால் ச்ரத்தையின் மீது தீய பரிணாமம் ஏற்படுகிறது. அதனால் தர்மத்திற்கும் தீங்கு ஏற்படுகிறது. தர்மத்திற்கு ஏற்படும் தீங்கை தடுப்பது காலத்திற்கேற்ற அவசியமான தர்மவழியாகும். இதை செய்யாது தெய்வ உபாசனை பூரணமடையாது. ஸ்ரீராம பக்தர்களே, வாருங்கள் நீங்களும் தெய்வ நிந்தனையை தடுத்து நிறுத்தும் இப்பணியில் ஈடுபடுங்கள்.

 

Leave a Comment