குருக்ருபாயோகத்தில் கூறப்பட்டுள்ள அஷ்டாங்க ஸாதனையின் அங்கங்களில் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனையின் மகத்துவம்!

‘வ்யஷ்டி ஸாதனை (%) ஸமஷ்டி ஸாதனை (%)
1. ஆளுமை குறைகளைக் களைதல் 50 50
2. அஹம்பாவம் களைதல் 10 10
3. நாமஜபம் 10 5
4. ஸத்சங்கம் 10 5
5. ஸத்சேவை 4 11
6. ஆன்மீக உணர்வு 6 4
7. தியாகம் 8 7
8. ப்ரீதி 2 8
மொத்தம்  100 100

மேலே உள்ள அட்டவணையின் மூலம்
இக்குறிப்புகள் கவனத்திற்கு வருகின்றன

1.   ஸாதனை வ்யஷ்டியாக இருந்தாலும் ஸமஷ்டியாக இருந்தாலும் அதற்கு அஷ்டாங்க ஸாதனையிலுள்ள அங்கங்கள் மகத்துவம் நிறைந்ததாக உள்ளன.

2.   வ்யஷ்டி அல்லது ஸமஷ்டி ஸாதனையில் ஈடுபடும்போது ஆளுமை குறைகளைக் களைவதற்கான முயற்சி அசாதாரண மகத்துவம் நிறைந்தது என்பதை உணர முடிகிறது. ஸனாதனின் பெரும்பான்மையான ஸாதகர்கள் ஸமஷ்டி ஸாதனை செய்து வருகின்றனர்.  அதிலும் பல ஸாதகர்கள் ஸமஷ்டி ஸாதனையின் ஒரு அங்கமான ‘சேவை’ என்ற விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறைக்கு சிறிதளவே முக்கியத்துவம் தருகின்றனர். ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை நடைமுறைப்படுத்தும்போது ஸாதகர்களின் மனங்களில் அதிக போராட்டம் நடக்கிறது. அதனால் ஸாதகர்களுக்கு இவ்வழிமுறையை கடைபிடிப்பது கடினமாக உள்ளது. மருந்து கசப்பாக இருந்தாலும் ஆரோக்கியம் மேம்பட அதை உட்கொள்ள வேண்டி உள்ளது. அதேபோல் ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை பிடிக்கிறதோ இல்லையோ ஸாதகர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3.   முன்பு, குருக்ருபாயோகப்படி ஸாதனையின் அங்கமாக உள்ள ஸத்சங்கம், ஸத்சேவை, ஆன்மீக உணர்வு மற்றும் தியாகம் ஆகியவற்றிற்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டது. இன்று இவற்றின் மகத்துவம் குறைந்து ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் அஹம்பாவத்தை நீக்குதல் ஆகியவற்றிற்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காலத்திற்கேற்றபடி ஸாதனையின் அங்கங்களின் பிரமாணம் எவ்வாறு மாறுகிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தால் ஸாதகர்களின் மனங்கள் மாசடைந்து போகின்றன. அதனால் ஸாதகர்கள் எவ்வளவு சேவை, தியாகம் ஆகியவற்றை செய்தாலும் ஸாதனையின் மூலம் எந்த அளவிற்கு சைதன்யம் கிடைக்க வேண்டுமோ அந்த அளவிற்கு கிடைப்பதில்லை. இதன் பலனாக இத்தகைய ஸாதகர்களின் முன்னேற்றம் போதிய அளவு நடைபெறுவதில்லை. சில ஸாதகர்களின் ஆளுமை குறைகளால் ஸமஷ்டிக்கு பெரும் தீமை ஏற்படுவதால் அவர்களின் ஸாதனை அதோகதியை அடைகிறது. தற்பொழுது தீய சக்திகளின் தாக்குதலும் அதிகரித்து உள்ளன. ஸாதகர்களின் மாசடைந்த மனங்களை உபயோகித்து தீய சக்திகள் ஸாதகர்களுக்கு கஷ்டம் தருவது சுலபமாக உள்ளது. இத்தகைய காரணங்களால் காலத்திற்கேற்றபடி ‘ஆளுமை குறைகளைக் களைதல்’ மற்றும் ‘அஹம்பாவத்தை களைதல்’ ஆகியவை அதிக மகத்துவம் பெறுகிறது.

4.   ஸனாதனின் எவ்வளவோ ஸாதகர்களுக்கு ‘ஆச்ரமத்தில் இருந்து கொண்டு ஸாதனை செய்ய முடியவில்லை’ என்றும் ‘ஏதோ தடங்கல்களால் ஸமஷ்டி ஸாதனையில் பங்கெடுக்க முடிவதில்லை’ என்றும் வருத்தம் ஏற்படுகிறது; அத்தகைய ஸாதகர்கள் வருந்தத் தேவையில்லை. ஏனென்றால் ஸத்சங்கம் மற்றும் ஸத்சேவை ஆகிய இரு அங்கங்களும் சேர்ந்து ஸாதனையில் 16% முக்கியத்துவமே பெறுகின்றன. அதனால் அவர்கள், ‘வீட்டிலிருந்து கொண்டே ஸாதனை செய்து நல்ல முன்னேற்றம் அடைய முடியும்’ என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும். ஸனாதனின் எவ்வளவோ ஸாதகர்கள் வீட்டில் இருந்து கொண்டே ஸாதனை செய்து 60% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை அடைந்துள்ளனர்.

5.   பொறுப்பு ஏற்றுள்ள ஸாதகர்கள் ‘எல்லா ஸாதகர்களுக்கும் ஆளுமை குறைகள் களையும் செயல்முறை மற்றும் அஹம்பாவத்தை களையும் செயல்முறையை நடைமுறைப்படுத்த போதிய நேரம் கிடைக்கிறதா?’ என்பதைக் கண்காணிக்க வேண்டும்; அத்துடன் ‘அவர்கள் மூலமாக சரியான முறையில் இந்த செயல்முறை நடக்கிறதா?’ என்பதைப் பற்றியும் நடுநடுவே மதிப்பாய்வு செய்ய வேண்டும்.’

–       (பூஜ்ய) திரு. ஸந்தீப் ஆளஷி, ஸனாதன் ஆச்ரமம், கோவா.

தீய சக்திகள் : சுற்றுப்புற சூழலில் நல்ல சக்திகள் மற்றும் தீய சக்திகள் செயல்பாட்டில் உள்ளன. நல்ல சக்திகள் நல்ல காரியங்களுக்காக மனிதர்களுக்கு உதவுகின்றன மற்றும் தீய சக்திகள் அதில் கஷ்டங்களை ஏற்படுத்துகின்றன. முற்காலத்தில் ரிஷிகள் முனிவர்கள் நடத்தும் யாகங்களில் ராக்ஷசர்கள் மாமிசத்தைப் போட்டு தடங்கல்களை ஏற்படுத்தும் பல கதைகள் வேத-புராணங்களில் உள்ளன. அதர்வ வேதத்தில் பல இடங்களில் தீய சக்திகளை, உதாரணத்திற்கு அசுரர், ராக்ஷசர், பிசாசுகள் ஆகியவற்றை தடை செய்யக் கூடிய மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட பல்வேறு ஆன்மீக உபாயங்களை வேதம் முதலிய தர்ம கிரந்தங்கள் கூறுகின்றன.

குருக்ருபாயோகப்படியான வ்யஷ்டி
ஸாதனையின் முந்தைய மற்றும் நவீன வரிசைகிரமம்

ஆன்மீக சாஸ்திரப்படி, ஸாதனை செய்வதற்கு ‘மனிதனுக்கேற்ற இயல்பு, இயல்புக்கேற்ற ஸாதனை வழி’ என்பது நியதி ஆகும். இறைவனை அடைவதற்காக குருக்ருபாயோக வழிப்படி ஸாதனை செய்யும்போது கீழே குறிப்பிட்டுள்ள 7 படிகள் உள்ளன – நாமம், ஸத்சங்கம், ஸத்சேவை, தியாகம், ப்ரீதி, ஆளுமை குறைகளைக் களைதல், அஹம்பாவத்தைக் களைதல் மற்றும் ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்தல். இந்தப் படிகளின் வரிசைகிரமத்தைப் பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள கட்டுரையில் பார்க்கலாம்.

1.   முந்தைய வரிசைகிரமம்

1. நாமம், 2. ஸத்சங்கம், 3. ஸத்சேவை, 4. தியாகம், 5. ப்ரீதி, 6. ஆளுமை குறைகளைக் களைதல், 7. அஹம்பாவத்தைக் களைதல் மற்றும் 8. ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்தல்

2. நவீன வரிசைகிரமம்

1. ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் குணங்களை வளர்த்துக் கொள்ளுதல், 2. அஹம்பாவத்தைக் களைதல், 3. நாமம், 4. ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்யும் முயற்சிகள், 5. ஸத்சங்கம், 6. ஸத்சேவை, 7. தியாகம் மற்றும் 8. ப்ரீதி.

3. வரிசைகிரமம் மாறியதன் காரணம் –
எல்லா செயல்களும் மனம் இருப்பதாலே நடக்கின்றன

அ. மனிதன் மூலமாக என்னென்ன செயல்கள் நடக்கின்றனவோ அவை மனம் மூலமாக நடக்கின்றன. உடலால் செய்யப்படும் செயல்களுக்கும் மனதே காரணமாகின்றன. மனம் நல்லதாக இருந்தால் அதாவது ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் அற்றதாக இருந்தால் உடல் மூலமாக யோக்யமான செயல்கள் நடக்கின்றன மற்றும் ஆளுமை குறைகள், அஹம்பாவத்தால் அயோக்கிய செயல்கள் நடக்கின்றன.

ஆ. எந்த யோக வழி மூலமாக ஸாதனை செய்தாலும் ஓரளவிற்காவது ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை களைந்தால் ஒழிய ஸாதனையில் முன்னேற்றம் அடைய முடியாது. உதாரணத்திற்கு தியான யோகம் பயில்பவர்கள் தியான நிலை சித்திப்பதற்கு எவ்வளவு முயன்றாலும் அவர்களிடமுள்ள ஆளுமை குறைகளால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் தியான நிலை அடைய முடிவதில்லை. ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை ஓரளவிற்காவது குறைத்த பின் தான் உண்மையான முன்னேற்றம் நடக்க ஆரம்பிக்கிறது.

இ. அஷ்டாங்க ஸாதனையில் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் ஆகிய இரண்டும் துர்குணங்கள் ஆகும், மற்ற ஆறும் நற்குணங்கள் ஆகும். துர்குணங்களை தூர விரட்டினால் ஒழிய நற்குணங்களை வளர்க்க முடியாது.

ஈ. நற்குணங்களை வளர்த்து பின் குறைகளைக் களைவதற்கு பல வருடங்கள் ஆகும். அதற்கு மாறாக குறைகளை முதலில் களைந்தால் நற்குணங்கள் விரைவில் வளரும்.

4. கலியுகத்தில் ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும்
அஹம்பாவத்தை களைதல் மகத்துவம் நிறைந்ததாகிறது

முந்தைய யுகங்களில் இவற்றின் பிரமாணம் மிகக் குறைவாக இருந்தது. அதனால் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை களையும் செயல்முறை அவசியமில்லாமல் இருந்தது. அப்பொழுது பல்வேறு யோக வழிகளின்படி ஸாதனை செய்ய முடிந்தது. கலியுகத்தில் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தின் பிரமாணம் அதிகமாக இருப்பதால் இவற்றை முதலில் களைய வேண்டும். இல்லையேல் ஸாதனை நன்கு நடைபெற முடியாது.

5. யுகப்படி சர்வ சாதாரண மனிதனின்
ஆன்மீக நிலை மற்றும் அவனிடமுள்ள ஆளுமை
குறைகள் மற்றும் அஹம்பாவத்தின் பிரமாணம்

யுகம்  ஆன்மீக நிலை (%) ஆளுமை குறைகள் (%) அஹம்பாவம் (%)
ஸத்ய 90 10 5
த்ரேதா 70 20 15
த்வாபர 50 30 20
கலி 20 50 30

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் கலியுகத்தில் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைதல் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பது கவனத்திற்கு வருகிறது.

–  (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே (7.12.2015)

 

Leave a Comment