ஆளுமை குறைகள் சம்பந்தமான கேள்விகளும் விடைகளும்

இக்கட்டுரையில் ஆளுமை குறைகள் சம்பந்தமான சில பொதுவான கேள்விகளுக்கான விடைகளை வாசகர்களுக்காக இங்கு பகிர்ந்துள்ளோம்.

கேள்வி 1. : ஆளுமை குறைகள் பரம்பரையாக வருவதா?

பதில் :       ஆம். வரக் கூடும். நம்முடைய உடலில் முக்கியமாக ரசாயன அணுக்களில், ஹார்மோன்களில் சமநிலை குலைந்தால் அதன் பரிணாமம் மனோ நிலை மீது ஏற்படுகிறது. இவ்வாறு சமநிலை குலைவது பரம்பரை பரம்பரையாக வருமானால், மன நோய்களும் பாரம்பரியமாக வரக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது. சில சமயங்களில் வைத்திய மருந்துகளால் சமநிலையை மறுபடி கொண்டு வர முடிகிறது. இன்னொரு காரணம் அங்கு நிலவும் சந்தர்ப்ப சூழ்நிலையின் பரிணாமம் குழந்தைகளின் மனங்களில் ஏற்படுகின்றன. இந்த தத்துவப்படி தாய்தந்தையரின் குணங்கள் குழந்தைகளின் மனங்களில் ஸன்ஸ்காரங்களாக படிகின்றன. குழந்தைகள் மற்றவரைப் பார்த்து கற்றுக் கொள்வதால் தெரிந்தோ தெரியாமலோ தாய்-தந்தையரின் குணங்கள் குழந்தைகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த எல்லா காரணங்களையும் சிந்தித்தால் குடும்பத்தினரின் ஆளுமை குறைகள் ஏன் குழந்தைகளிடமும் குறைந்த அல்லது அதிக அளவில் பிரதிபலிக்கின்றன என்பது புரிய வரும்.

கேள்வி 2.  ஆளுமை குறைகளை முழுவதுமாக களைய முடியுமா?

பதில் :       ஆம். ஆளுமை குறைகள் மனதால் உருவாக்கப்படுபவை. ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை ஆழ்ந்த தாபத்துடன், உண்மையாக தொடர்ந்து செய்து வந்தால் ஆளுமை குறைகளை தூர விலக்க முடியும். அதனை ஸாதனையுடன் சேர்ந்து செய்தால் இந்த செயல்முறையே குறைந்த காலத்திற்குள் அதிக பலனை பெற்றுத் தரும்.

கேள்வி 3. இறப்பிற்கு பின்னர் புது பிறவியில் புது உடலை
எடுத்த பின்னர் குறைந்த ஆளுமை குறைகள் இருக்குமா அல்லது அப்பிறவியிலும் புது ஆளுமை குறைகள் ஏற்படுமா?

பதில் : ‘அந்தே மதி: ஸா கதி:’ என்ற வாக்குப்படி இறக்கும் தறுவாயில் என்ன எண்ணம் அந்த ஜீவனின் மனதில் ஏற்படுகிறதோ அதன்படி அதற்கு கதி கிடைக்கிறது. அதேபோல் உயிர் பிரிந்த பின் அந்த ஜீவனின் ஆன்மீக நிலைக்கேற்ப மற்றும் பிராரப்த விதிப்படி அதற்குரிய லோகத்தில் அதற்கு இடம் கிடைக்கிறது. இறப்பிற்கு பின் ஸ்தூல தேஹம் அழிந்து போனாலும் மனோ தேஹம் செயல்பாட்டில் உள்ளது. புது உடல் கிடைக்கும் வரை முற்-பிறவியில் செய்த பாவ-புண்யங்களுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட யோனியில் மாட்டிக் கொள்ளும் வரை அதன் மனோதேஹத்தில் ஸன்ஸ்காரங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மூல ஆளுமை குறை அதிக உறுதி பெறுகிறது. புது உடலை எடுத்த பின் குழந்தை சிறிது பெரியவனாகும் வரை சுற்றுப்புற சூழலிலிருந்து பார்த்து கற்றுக் கொள்வதால் அங்கு நிலவும் சூழ்நிலைக்குரிய ஸன்ஸ்காரங்களும் அதன் மனதில் பதிகின்றன.

கேள்வி 4. அஹம்பாவம் மற்றும் ஆளுமை
குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக்
கொண்டு பல்வேறு உபாசனை வழிகளின் மூலம் ஸாதனை செய்து வரும் ஸம்ப்ரதாயத்தினர், ஹிந்து தார்மீக தலைவர்கள், ஹிந்துத்வவாதி ஸ்தாபன காரியகர்த்தாக்கள் ஆகியோ-ரிடையே, பரஸ்பரம் அன்பு அதிகரித்து மனதால் ஒருங்கிணைவது ஏன் அவசியம் ஆகிறது?

இவ்விஷயத்தைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் பார்க்கலாம். ஒரு மலையின் மீது ஒரு கோவில் உள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலிருந்தும் இக்கோவிலுக்கு செல்ல வழிகள் உள்ளன. ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரு நபர் என்ற விகிதத்தில் நான்கு நபர்கள் கோவிலை நோக்கி மலையேறிக் கொண்டிருக்கின்றனர். மலையேற ஆரம்பிக்கும் சமயம் அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் உள்ளனர். அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட முடியாது. அவர்கள் மலையேற ஏற அவர்களிடையே உள்ள தூரம் குறைய ஆரம்பிக்கிறது. அவர்கள் நெருங்கி வருகின்றனர். இறுதியாக கோவிலை அடைந்த பின்னரே அவர்கள் தங்கள் இலக்கை அடைகின்றனர்; அத்துடன் அவர்களிடையே உள்ள இடைவெளி முழுவதுமாக நீங்குகிறது. எந்த ஒரு உபாசனை வழியும் ஸம்ப்ரதாயமும் இறைவனை அடையக் கூடிய வழியைக் காண்பிக்கிறது. ஆரம்ப நிலையில் அவர்களிடையே பெரும் வித்தியாசம் தெரிகிறது. ஒவ்வொருவரின் இலக்கும் இறைவனை அடைவதே. ஆன்மீக முன்னேற்றம் என்ற பாதையில் தர்மவிழிப்புணர்வு என்ற சிகரத்தை நோக்கி செல்லும்போது பேதங்களை மறந்து ஒருங்கிணைவது அவசியமாகிறது. பல்வேறு உபாசனை வழிகளின் மூலம் ஸாதனை செய்பவர்கள், ஸம்ப்ரதாயத்தினர், ஹிந்து தலைவர்கள் மற்றும் ஹிந்துத்வவாதி ஸ்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோரிடம் பரஸ்பரம் அன்பு ஏற்பட்டு மனதளவில் ஒன்றுபட்டால்தான் அவர்களால் சமூகத்திலும் அத்தகைய ஐக்கிய உணர்வைக் கொண்டு வர முடியும். அவர்கள் ஸமஷ்டி ஸாதனையின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். தர்மமே ராஷ்ட்ரத்தின் ஆத்மாவாகும். ராஷ்ட்ரமே ஸமஷ்டியின் ஆத்மாவாகும். தர்மவிழிப்புணர்வு ஏற்படுத்துவதால் தர்மவழி நடக்கும் ராஷ்ட்ரத்தை நிர்மாணிப்பது இயலும். தர்மவழி நடக்கும் ராஷ்ட்ர நிர்மாணத்தால் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஆகிய இரண்டு நிலைகளிலும் உலக மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படக்கூடிய ஸாதகமான சூழல் நிர்மாணமாகும். அதனால் ஸம்ப்ரதாயத்தினரின் ஸமஷ்டி ஸாதனை நடந்து அவர்களால் இறைவனோடு ஒன்ற முடியும்.

கேள்வி 5. ஆளுமை குறைகளைக் களைவதற்கு
மகான்களும் முயற்சி செய்வார்களா?

பதில் : ஆமாம். முயற்சி செய்வார்கள். மகான்களின் ஆளுமை குறைகளைக் களையும் முயற்சிகள் கீழ்வருமாறு.

பரம் பூஜ்ய ஏக்நாத் மகாராஜ் : பரம் பூஜ்ய ஏக்நாத் மஹராஜ் அவர்கள் தன்னுடைய ஆளுமை குறைகளை எழுதி தன் குரு பரம் பூஜ்ய ஜனார்த்தன ஸ்வாமியிடம் அனுப்பி வைப்பார். அச்சமயம் பரம் பூஜ்ய ஜனார்த்தன் ஸ்வாமி அவரிடம், ‘உனக்கு தேஹம் என்ற கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அங்கு ஆசை (ஆறு பகைவர்களில் ஒன்று) என்ற பெண் அகந்தை (ஆறு பகைவர்களில் ஒன்று) என்ற கோலுடன் நின்று கொண்டிருக்கிறாள். அதனால் நீ இக்கடிதத்தை எழுதி அனுப்பி உள்ளாய்’. இதன் அர்த்தம் – காம-குரோதாதிகள் என்ற பகைவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். ஏதாவது ஒரு தோஷத்தால் கஷ்டம் நேர்ந்தால் உடனே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.’

ஸந்த் துகாராம் மகாராஜ் : ஸந்த் துகாராம் மகாராஜ் ஒரு நாள் ஸமர்த்த ராமதாஸ் சுவாமிகளைப் பார்க்க வந்தார். அச்சமயம் ஆர்வ மிகுதியால் ஸமர்த்தர் கேட்டார், ‘உங்களுக்கு இந்த உன்னத நிலை எவ்வாறு கிடைத்தது? எவ்வித ஸாதனை செய்து கிடைத்தது? உங்களின் குருபரம்பரை யாது?’. ஸந்த் துகாராம் அதற்கு ‘விட்டல்தாஸ்’ என்பதே என் தினசரி மந்திரம், ‘சைதன்யமே’ என் சம்ப்ரதாயம், நான் என்ன ஸாதனை செய்தேனோ அது வெறும் மனோலயத்திற்காக, நான் எங்கெங்கு கீர்த்தனைகளை பாடுகிறேனோ அங்கங்கு என்னிடமுள்ள தோஷங்களை மக்களிடம் சொல்கிறேன்’ என்று பதில் அளித்தார். தன்னுடைய தோஷத்தை உணர்வது மிகவும் மகத்துவம் நிறைந்தது. நாமெல்லாம் ஸந்த் துகாராம் மகாராஜ் போல் அல்லாமல் நம் தோஷங்களை மற்றவரிடமிருந்து மறைக்கவே பார்க்கிறோம். அதோடு அல்ல, யாராவது நம்முடைய தோஷங்களை சுட்டிக் காட்டினால் அவர் மீது அடங்கா கோவம் எழுகிறது. இது போன்ற லட்சணங்கள் ஆன்மீக ஆர்வலரிடம் இருப்பது இல்லை.’

இக்கட்டுரையில் உள்ள விஷயங்களை கடைபிடித்து ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஆனந்தமயமாக வேண்டும் என்பதே ஸ்ரீகுரு சரணங்களில் செய்யப்படும் பிரார்த்தனை.

தகவல் : ஸனாதனின் நூல் – ஆளுமை குறைகளைக் களைவதன் மகத்துவம்

 

 

 

Leave a Comment