புடவையின் முக்கியத்துவமும் அதை அணிவதினால் ஏற்படும் பயன்களும்

புடவை நம் கலாச்சாரத்தின் பரிசு

நம் ஹிந்து கலாச்சாரத்தில், புடவையின் முந்தானையை தலையை சுற்றியோ அல்லது தோளை சுற்றியோ அணிவது வழக்கம். அதேபோல், பெண்கள் சேலையின் தலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு வேலையில் ஈடுபடுவதையும் நாம் காண்கிறோம்.

தொட்டிலில் இருக்கும் குழந்தை, அன்னை, தன்னை முந்தானையில் ஏந்தி கொள்ளவேண்டும் என்று ஏங்கும். அக்குழந்தைக்கு அன்னையின் புடவை தலைப்பே பரமேஸ்வரனாகும். குழந்தை வளரும் போதும் அன்னையின் புடவை முந்தானையை பற்றி கொண்டு நடை பழகும். தனது குழந்தைக்கு உணவு ஊட்டியபின் அதன் வாயை துடைத்து விடவும் அன்னையின் முந்தானை உதவுகிறது.

தந்தை மணமகனின் பெற்றோரிடம் தன் பெண்ணை அவர்களின் முந்தானையில் ஏற்றுகொள்ள சொல்லும் வழக்கமும் உண்டு. இத்தகைய புடவையையும் அதனை பற்றிய பெருமையும் விளங்கிக்கொண்டு அதை உடுத்துவதென்பது மிகவும் சிறப்பானதாகும்.

 

ஹிந்துக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க
எப்போதும் புடவை அணிவதன் அவசியம்

மேற்கத்திய உடைகள் ஜீன்ஸ், டி ஷர்ட் மற்றும் சல்வார் குர்தா, சுடிதார் இன்றைய வாழ்க்கை முறையில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. மாறாக இந்திய கலாச்சாரத்தின் அடையாளமும், பாரதீய உடையுமான ஒன்பது கஜ புடவை கிராமபுரங்களில் உள்ள பெண்மணிகளுக்கு மட்டுமே என்றாகிவிட்டது.

எந்த உடைகளுமே அதை உடுத்துபவர்களின் மீது அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகமான ராஜஸீக தாமஸீக உடைகளான ஜீன்ஸ், டி ஷர்ட், சல்வார் குர்தா போன்ற உடைகள் பெண்களை மனகிளர்ச்சி மற்றும் உலகியல் சந்தோஷங்களின் பக்கம் ஈர்க்கின்றது. மாறாக ஸாத்வீகமான உடையான புடவைகள், பெண்களை ஒழுக்கம் மற்றும் தர்மத்தை மதிக்கும்படி செய்கிறது. தர்மத்தை மதித்து, அதன்படி நடப்பது ஆன்மீக உணர்வு மற்றும் இறை பக்தியை அதிகரித்து அந்நபரை ‘கடவுளை உணர்தல்’ எனும் பாதையில் முன்னேறிச் செல்ல வழிவகுக்கின்றது.

மேற்கத்திய ராஜஸீக தாமஸீக உடைகளால், தீய சக்திகளின் எதிர்மறை ஆற்றல், அதை அணிபவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகிறது. இதற்கு நேர்மாறாக, ஸாத்விக உடைகள், அதை அணிபவர்களுக்கு, அத்தகைய எதிர்மறை ஆற்றலை தடுக்கும் பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

 

புடவை உடுத்துதல் அளிக்கும் நல்லொழுக்கமும் பயன்களும்

·         பணிவு, அடக்கம் முதலிய நற்பண்புகளை நல்குதல்.

·         மனதின் ஸ்திர தன்மை அதிகரிக்கிறது. அதன் மூலம், சித்தம் உள்முகப்படுகிறது.

·         தாய்மையுணர்வின் எழுச்சி.

·         புடவை, தெய்வங்களின் ஓர் அடையாளம் என்னும் உணர்வு ஏற்படுதல்.

·         பக்திபாவம் அதிகரித்தல்.

·         தன்னம்பிக்கை அதிகரித்தல்.

·         க்ஷாத்ரவிருத்தி (போர் வீரனின் வீரம்மிக்க மனோபாவம்) அதிகரிக்கிறது.

·        தனது நிஜ தன்மை விழிப்படைவதால், மனம் உள்முகப்படுவது அதிகரித்து       வெளிமுகப்படுவது குறைகிறது.

 

புடவை கட்டுவதால் அந்நபருக்கு, தன்னை
சுற்றியிருக்கும் சுற்றுப்புறசூழலில் உள்ள ஸாத்வீகத்தையும்
சைதன்யத்தையும் உள்ளீர்த்து கொள்ளும் தன்மை ஏற்படுதல்

புடவை கட்டுவது என்பது அந்நபரை சுற்றி கட்டப்படும் ஓர் ஆடை. ஆன்மீக விஞ்ஞானத்தின்படி, புடவை கட்டுபவர் தன்னை சுற்றியிருக்கும் சுற்றுப்புறசூழலின் ஸாத்வீகத்தையும் சைதன்யத்தையும் உள்ளீர்த்து, அதை வட்ட வடிவத்தில் தக்க வைத்து கொண்டு அதன் மூலம் நீண்ட நேரத்திற்கு நன்மை அடைகிறார்.

செயற்கை இழைகளாலான புடவைகள் கட்டுவதற்கு வசதியாக இருகின்றது என்றாலும், அவை குறைந்த அளவே சுற்றுப்புறசூழலில் உள்ள ஸாத்வீகத்தையும் சைதன்யத்தையும் உள்ளீர்க்க முடியும். மாறாக, பட்டு, பருத்தி போன்ற இயற்கை இழைகளாலான புடவைகள் ஸாத்வீகத்தையும் சைதன்யத்தையும் அதிகமாக உள்ளீர்த்து கொள்ளும் ஆற்றலுடையது. ஆகவே, இத்தகைய புடவைகளை கட்டுவதன் மூலம் அதிகளவு ஆன்மீக நன்மையடைய முடிகிறது.

 

ஸாத்வீகமான காட்சியை காண்பது ஆன்மீக ரீதியில்
நம் மனம் மற்றும் புத்தியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது

புடவை மற்றும் வேஷ்டி முதலான ஸாத்வீகமான உடைகள் அணிந்துள்ள நபரை நாம் பார்க்கும்போது சக்தி, ஆனந்தம் மற்றும் சாந்தத்தின் அதிர்வலைகள் வெளிப்பட்டு நம் மனதில் பதிவாகி, நேர்மறை எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

ஸாத்வீகமான உடையணிந்த நபரை காணும் போது, நம் சூட்சும உடலில் உள்ள சக்தி நிலைகளான சக்கரங்களில், நேர்மறை தாக்கம் ஏற்படுகின்றது. அதனால் ஆன்மீக நிவாரணம் ஏற்பட்டு மாந்த்ரீகத்தின் தாக்கம் குறைகிறது.

 

புடவை கட்டுவதற்கு நீண்ட நேரமானாலும் அதன்
முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை கட்ட ஆரம்பித்தல்

துவக்கத்தில் புடவை கட்டுவதில் பயிற்சியின்மை காரணமாக சிரமம் ஏற்படினும், பழக பழக ஒரு சில தினங்களுக்குள் அது எளியதாகிவிடும். அவ்வாறு இல்லையெனில் பெண்கள் எவரும் அதை உடுத்தியிருக்க மாட்டார்கள். முற்காலத்தில் பெண்கள் ஒன்பது கஜ நீளமான புடவையை அணிந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆரம்பத்தில் புடவை கட்டுவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பது குறித்த இடையூறு தொடர்ந்து கட்டும் பழக்கத்தில் எளிதாகிவிடும் எனும்போது அதை பற்றிய கவலை எதற்கு?

மேற்கூறிய தகவல்கள் மூலம் புடவை ஆன்மீக ரீதியில் அளவில்லாத நன்மையை வழங்குகிறது என்பதனை ஒருவர் மறந்து விடாமல், அப்புடவையை உடுத்துவதில் பெருமை கொள்ளவேண்டும்.

தகவல் : ஸனாதனின் புனித தமிழ் நூல் ‘ஆன்மீக கண்ணோட்டப்படி ஆடைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?’

Leave a Comment