வார நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் என்ன பயன் கிடைக்கிறது?

நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் அந்தந்த தெய்வத்தின் தத்துவத்தின் பயன் கிடைக்கிறது. இந்த செயல்பாடு எவ்வாறு நடக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் சிறிது தெரிந்து கொள்வோம்.

 

1. நாள், பண்டிகை, உற்சவம் மற்றும்
விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட தெய்வ
தத்துவத்திற்கு நெருக்கமான நிறத்தில் ஆடையை
அணிவதால் அந்த தெய்வ தத்துவத்தின் பயன் கிடைக்கிறது

வாரத்திலுள்ள ஏழு நாட்கள் ஒவ்வொரு தெய்வத்தின் உபாசனைக்கு உகந்த நாட்களாகும். ஒரு குறிப்பிட்ட நாளின் சூழலில் அந்நாளுடன் சம்பந்தப்பட்ட தெய்வ தத்துவம் அதிக அளவில் செயல்பாட்டில் உள்ளது. பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் போன்றவற்றிற்கும் இது பொருந்தும். அந்நாளில் அத்துடன் சம்பந்தப்பட்ட தெய்வ தத்துவம் அதிக அளவில் செயல்பாட்டில் இருக்கும். அந்த தெய்வ தத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய நிறம் கொண்ட ஆடையை அணிந்து கொள்வதால் சம்பந்தப்பட்ட தெய்வ தத்துவம் அதிக அளவில் ஆகர்ஷிக்கப்படுகிறது. சாதாரணமாகவே இது போன்று ஆடை அணிபவர்களுக்கு தெய்வ தத்துவங்களின் பயன் அதிக அளவு கிடைக்கிறது.

 

1 அ. கிழமையுடன் சம்பந்தப்பட்ட
தெய்வம் மற்றும் அதற்கு உகந்த ஆடை நிறம்

கிழமை தெய்வம் ஆடையின் நிறம் நிறம் எதைக் குறிக்கிறது?
‘திங்கள் சங்கரன் வெள்ளை வைராக்கியம்
செவ்வாய் அ. ஸ்ரீ லக்ஷ்மி
ஆ. ஸ்ரீ கணபதி
மஞ்சள்
சிந்தூரம்
சைதன்யம்
ஞானம்
புதன் பாண்டுரங்கன் நீலம் பக்தி
வியாழன் தத்தா வெளிர் மர நிறம் விரக்தி
வெள்ளி பார்வதி/ஸ்ரீ லக்ஷ்மி மஞ்சள் கலந்த ஆரஞ்சு அதிக சக்தியைத் தரும் தேஜஸ்
சனி மாருதி சிவப்பு கலந்த ஆரஞ்சு கதிக்கு ஒரு உந்துதல்
ஞாயிறு ரவி (சூரியன்) சிவப்பு சக்தி’

–  ஒரு வித்வான் (ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 24.12.2006, காலை 10.21)

 

2. வாரத்தில் நிர்குணத்திலிருந்து
ஸகுணத்திற்கு செல்லும்போது நிறத்தில் ஏற்படும் மாறுதல்கள்

தொகுத்தவர் : செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களும் தேவிக்குரிய நாட்களாக இருக்கும் பட்சத்தில் நிறம் மற்றும் அது வெளிப்படுத்தும் விஷயம் ஏன் மாறுபடுகிறது?

ஒரு வித்வான் : திங்கட்கிழமை லயத்தின் வெளிப்பாடான ஐக்கியத்தின், அதாவது சிவனின் நிர்குண தத்துவத்தின், எல்லாவற்றையும் உள்ளடக்கிய தன்மையின் சின்னமாக விளங்குவதால் அதற்கு உகந்த வெள்ளை நிறத்தில் ஆரம்பிக்கிறது. பிறகு ஸகுணத்தை நோக்கி செல்லும் பிரவாகம் படிப்படியாக ஞாயிற்றுக்கிழமை அன்று தாழ் நிலையிலுள்ள சிவப்பு நிறத்தின் உதவியால் சக்திரூபமான ஸகுணத்தை வந்தடைகிறது. திங்களுக்கு பிறகு உடனே வரும் செவ்வாய் நிர்குண-ஸகுண தத்துவத்தின் சின்னமாக இருப்பதால் அது காரியங்களை நடத்துவிக்கும் சைதன்யத்தின் சின்னமாக உள்ளது; அதனால் அதன் நிறம் மஞ்சள். அன்றைய தினத்தில் தேவி, காக்கும் உணர்வுடனும் பின்பு ஸகுண நிலையில் சக்தியிடம் ஈர்க்கப்படும் தத்துவத்தின் உதவியால் அழிக்கும் சக்தியாகவும் செயல்படுகிறாள்; அதனால் வெள்ளியன்று பிரம்மாண்டத்திலிருந்து வெளிப்படும் தத்துவம் சக்தி தரும் தேஜ தத்துவத்துடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது; இக்காரணத்தால் வெள்ளியன்று மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறம் ஏற்றது. எப்பொழுது ஸகுண அளவில் செயல்படும் வேளை நெருங்குகிறதோ அப்பொழுது தத்துவத்திலுள்ள செயல்படும் கதி அதிகமாகிறது. – (ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 24.12.2006, மதியம் 12.32)

 

3. பண்டிகையோடு சம்பந்தப்பட்ட
தெய்வ தத்துவத்திற்கு நெருக்கமாக
உள்ள நிறத்தில் ஆடை அணிந்தபோது
ஒரு பெண் ஸாதகருக்கு ஏற்பட்ட அநுபூதி

3 அ. ஸ்ரீ கணேச சதுர்த்தியன்று
சிந்தூர நிறத்தில் (ஸ்ரீ கணேசரின் நிறம்)
ஆடை அணிந்தவுடன் ஏற்பட்ட ஆன்மீக உபாயம்

‘ஸ்ரீ கணேச சதுர்த்திக்கு முந்தைய இரவு என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது, ‘இப்பொழுது கணேச அதிர்வலைகள் பூமியில் ஆகர்ஷிக்கப்படும் பிரமாணம் அதிகரிக்கும்; ஆனால் இவ்வாறு ஆகர்ஷிக்கப்பட்டுள்ளது என்பதை நான் எவ்வாறு உணர்வது? இந்த அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்?’ ஸ்ரீ கணேச சதுர்த்தியன்று காலை நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென்று என் மீது ஆன்மீக உபாயம் நடந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என ஆராயும்போது நான் போட்டுக் கொண்டிருந்த சிந்தூர நிற ஆடையிலிருந்து எனக்கு ஆன்மீக உபாயம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. நான் அணிந்திருந்த சிந்தூர நிறம் ஸ்ரீ கணேசருக்கு உகந்த நிறம் என்பதும் கவனத்திற்கு வந்தது. அப்பொழுது என்னிடமிருந்து ஏப்பம் வரத் துவங்கியது. அதன் மூலம் எனக்குள்ளிருந்த கருப்பு சக்தி வெளியேறியது. ‘ஸ்ரீ கணேச சதுர்த்தியன்று நான் அணிந்துள்ள ஆடையின் நிறம் மற்றும் என் மீது நடக்கும் ஆன்மீக உபாயம்’ ஆகியவற்றிற்கு உள்ள பரஸ்பர சம்பந்தம் விஷயமாக எனக்கு வழிகாட்டுதல் வேண்டும் என்பதற்காக பராத்பர குரு டாக்டரிடம் சென்றேன். அறையின் உள்ளே நுழைந்தவுடன் பராத்பர குரு டாக்டர் கேட்டார், ‘இன்று என்ன கணபதியின் நிற ஆடையை அணிந்திருக்கிறாயா?’ அந்த க்ஷணம் நான் உணர்ந்த அனைத்தும் உண்மை என்பது தெளிவாகியது. பிறகு அவரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபூதியை பகிர்ந்து கொண்டேன். அதற்கு அவர் ‘மேற்கொண்டும் பண்டிகை அல்லது கிழமைகளில் அதற்குரிய தெய்வத்தின் நிறத்தில் ஆடை அணிவதால் என்ன பரிணாமம் ஏற்படுகிறது என்று பயிற்சி செய்வதற்கு ஒரு நல்ல உதாரணம் கிடைத்தது’ என்றார். – திருமதி யோகேஸ்ரீ கோளே, சிங்கப்பூர்.

3 ஆ. உபாசனை தெய்வத்திற்கு ஏற்ப
உபாசகர்கள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடையின் நிறம்

உபாசனைக்குரிய தெய்வம் ஆடையின் நிறம்
‘பக்திவழிக்குரிய உபாசனை தெய்வம்
அ. ரிஷி
ஆ. சர்வ சாதாரண கீழ்நிலை தெய்வம்
இ. அப்ஸரா, யக்ஷ, கின்னர மற்றும் கீழ்நிலை தெய்வம்
ஈ. உயர் நிலை தெய்வம்
கேசரி
சிவப்பு
ஆரஞ்சுவெள்ளை மற்றும் மஞ்சள்
தாந்த்ரீகர்களின் உபாசனை தெய்வம்
அ. சர்வ சாதாரண தாந்த்ரீகன்
ஆ. மாயாவி மாந்த்ரீகன்
இ. மோகினி மாந்த்ரீகன்
கருப்பு
பளீரென்ற மஞ்சள்
ரோஸ்’

–  ஒரு வித்வான் (ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, ஜேஷ்ட கிருஷ்ண சஷ்டி, கலியுக வருடம் 5110 (26.5.2008, இரவு 9.47)

குறிப்பு – தாந்த்ரீக உபாசகர்கள் பற்றிய (அகோரி வழியில் உபாசனை செய்பவர்கள்) தகவல் வெறும் விஷய பூர்த்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது. சர்வ சாதாரண பூஜகருக்கு இந்த தகவல் தேவையில்லை.

 

4. ஹிந்து தர்மத்தில் கருப்பு நிறம் விலக்கப்பட்டுள்ளது

‘ஸ்நானம் தானம் தபோ ஹோம: பித்ருயக்ஞச்ச தர்பணம் |

பஞ்ச தஸ்ய வ்ருதா யக்ஞா கிருஷ்ணவர்ணச்ய தாரணாத் || (ஸ்ம்ருதிவசன்)

அர்த்தம் : ஸந்த்யா, ஸ்நானம், தானம் தவம், ஹோமம், பித்ருயக்ஞம், தர்ப்பணம் ஆகிய தார்மீக காரியங்களை கருப்பு ஆடை அணிந்து கொண்டு செய்தால் அவை உபயோகமில்லாமல் போகின்றன.

ஹிந்து பெண்கள்-ஆண்களுக்கு கருப்பு ஆடை விலக்கப்பட்டுள்ளது. கருப்பு நூல் ஆடையை அணிவது நல்ல ஆசாரம் இல்லை, ஆசாரத்திற்கு விரோதமானது ஆகும். கருப்பு நிற நூலால் நெய்யப்பட்ட ஆடையை அணிவது பாதகமான செயலாகும். கருப்பு நிற தலைப்பாகை, தொப்பி, கைக்குட்டை, ஷர்ட், புடவை ஆகியவற்றை அணிவது சாஸ்திரபற்றுள்ள ஸ்ரத்தையுள்ள ஹிந்துக்களுக்கு துக்கம் தரக்கூடிய செயலாகும். தண்ணீரில் பிழிந்தெடுக்கப்பட்ட ஆடைகள் மடி வஸ்திரங்களுக்கு உகந்தது; ஆனால் கருப்பு நிற ஆடை தண்ணீரில் நனைக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு பவித்ர காரியத்திலும் உபயோகிப்பதற்கு உகந்தது அல்ல. கருப்பு நிற ஆடை அணிந்து சமைப்பது மற்றும் பரிமாறுவது ஆகியவையும் விலக்கப்பட்ட செயல்களாகும்.’ – குருதேவ் டாக்டர் காடேஸ்வாமிஜி

தகவல் : ஸனாதனின் நூல் ‘ஆன்மீக கண்ணோட்டப்படி ஆடைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?’

Leave a Comment