தத்த பூஜைக்கு முன்னால் தத்த தத்துவம் சம்பந்தமான கோலத்தை வரையவும்

முக்கியமாக வியாழக்கிழமை, தத்த ஜயந்தி அன்று வீடு அல்லது கோவிலில் தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் ஸாத்வீக கோலத்தை வரையவும். இந்த கோலத்தை வரைவதன் மூலம் அங்குள்ள சுற்றுப்புற சூழல் தத்த தத்துவத்தால் நிரம்பி பக்தர்களுக்கு நன்மை அளிக்கிறது. தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் சில கோலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கோலங்களில் மஞ்சள், நீலம், ரோஸ் போன்ற ஸாத்வீக நிறங்களை நிரப்பலாம்.

சப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்த மற்றும் அதன் சக்தி சேர்ந்தே உள்ளன. இந்த ஆன்மீக தத்துவப்படி கோலங்களின் ரூபம் மற்றும் நிறத்தை சிறிது மாற்றினாலும் அதன் அதிர்வலைகள் (சக்தி, ஆன்மீக உணர்வு, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தி) எவ்வாறு மாறுகிறது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11 புள்ளி 11 வரிசை

தத்தாவின் வெளிப்பட்ட ஆன்மீக உணர்வை விழிப்படையச் செய்யும் கோலம். (தத்தாவின் மூர்த்தி ரூபத்தை பூஜை செய்யும்போது வரைய வேண்டிய கோலம்)

6 புள்ளி 6 வரிசை

தத்தாவின் வெளிப்படாத ஆன்மீக உணர்வை விழிப்படையச் செய்யும் கோலம். (இந்த கோலத்தை தத்தாவின் பாதுகையை அல்லது தத்தாவை அத்திமர ரூபத்தில் பூஜை செய்யும்போது வரையவும்)

வெளிப்பட்ட ஆன்மீக உணர்வு அதிர்வலைகளைக் கொண்ட கோலத்தின் திசையை மாற்றும்போது வெளிப்படாத ஆன்மீக உணர்வு அதிர்வலைகள் நிர்மாணமாகின்றன. அதே நிறங்களை இந்த கோலத்திலும் நிரப்பலாம்.

தத்த சம்பந்தமான ஆன்மீக உணர்வு மற்றும் ஆனந்த அதிர்வலைகளை நிர்மாணித்து வெளிப்படுத்தும் கோலம்

6 புள்ளி 6 வரிசை

(இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த கோலத்தை தத்தஜயந்தி அன்று போடவும்)

(தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘தத்த’)

Leave a Comment