சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மை

சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் வீட்டைச்சுற்றி தெய்வங்களின் ஸாத்வீக அதிர்வலைகளாலான ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது. இந்தக் கவசத்தால் சுற்றுப்புற சூழலில் தீய சக்திகளின் நடமாட்டத்தினால் ஏற்படும் கஷ்டம் தரும் அதிர்வலைகளிலிருந்து அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. அதனால் முடிந்தவரை சந்தியாகாலத்திற்குள் வீட்டிற்கு வந்து அதன் பிறகு வெளியே செல்லாதிருக்கவும். பலருக்குச் சந்தியாகாலத்திலேயே தீய சக்திகளால் அதிக கஷ்டம் ஏற்படுகிறது. அகோரி விதியைப் பின்பற்றுபவர்கள் இச்சமயத்தில் சூழலில் நுழையும் தீய சக்திகளை தன் வசப்படுத்திக் கொண்டு அவற்றின் மூலம் வேண்டாத காரியங்களைச் செய்கின்றனர். அதனால் இந்நேரத்தில் பெருமளவு விபத்து, கொலை மற்றும் பலாத்கார காரியங்கள் நடக்கின்றன.

 

தெய்வங்களின் முன்பு
விளக்கேற்றிய பிறகு ஸ்லோக பாராயணம் செய்யவும்!

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தனசம்பதாம் |
சத்ருபுத்திவினாசாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே ||

அர்த்தம் : ஹே தீப ஜோதியே, நீ மங்களங்களைத் தருபவள்; நலன்களை அருளுபவள்; ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் அள்ளித் தருபவள்; எதிரிகளின் புத்தியை நாசம் செய்பவள்; உனக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்!

தீபஜோதி பரப்ரம்ம தீபஜோதிர்ஜனார்த்தன: |
தீபோ ஹரது மே பாபம் தீபஜோதிர் நமோஸ்துதே ||

அர்த்தம் : தீபத்தின் ஒளி பரப்ரம்மமாகும்; தீபத்தின் ஜோதி உலகத்தின் துக்கத்தை விலக்கும் பரமேச்வரனாகும். தீபமே எனது பாவத்தை பொசுக்குகிறது. ஹே தீப ஜோதியே, உனக்கு நமஸ்காரம்.

 

ஸ்லோக பாராயணத்தின் பலன்

அ. ‘சுபம் கரோதி கல்யாணம்…’ போன்ற ஸ்லோக பாராயணத்தின் மூலம் தீபத்தை துதிப்பதால் தீய சக்திகளை அழிக்கும் மாரக (அழிக்கும்)  காரியம் நடக்கிறது.’

ஆ. ஸ்லோக பாராயணத்தின் மூலம் நிர்மாணமாகும் ஸாத்வீக அதிர்வலைகளால் வீடு தூய்மையாகிறது. அதனால் தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.

இ. தீபத்தை ஏற்றிய பிறகு ஸ்லோக பாராயணம் செய்வதால் சிறுவர்களின் ஞாபகசக்தி அதிகமாகிறது. வாக்கு தூய்மை ஏற்படுகிறது. உச்சரிப்பு தெளிவாகிறது.

ஈ. இரவு நேரத்தில் நடமாடும் தீய சக்திகள் குழந்தைகளின் மனங்களில் பயத்தை ஏற்படுத்துகின்றன. ‘சுபம் கரோதி..’ போன்ற ஸ்லோகங்களை சொல்வதால் அவர்களை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது. குழந்தைகளின் மனங்களிலுள்ள பயம் விலகி அவர்களால் பகவானோடு தொடர்பு கொள்ள முடிகிறது. அதோடு தீயனவற்றை எதிர்த்து போராடும் குணமும் வளர்கிறது.

 

குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்பதன் பயன்

அ. ‘விளக்கேற்றும்போது குடும்பத்தினர் அனைவரும் அங்கிருப்பதால் குழந்தைகளின் மனங்களில் நல்ல ஸன்ஸ்காரங்கள் ஏற்படுகின்றன.

ஆ. பிரார்த்தனை சமயத்தில் அனைவரும் ஒன்றுகூடுவது, சிறுவர்கள் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வது, ஒருவரை மற்றொருவர் விசாரிப்பது, ஏதாவது பண்டிகை இருந்தால் அதைப் பற்றிய மகத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்து சொல்வது போன்ற குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் பல காரியங்கள் நடக்கின்றன.

தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘தினசரி காரியங்களும் அதற்கு ஆதாரமான சாஸ்திரமும்’

Leave a Comment