ஸ்நானம் சம்பந்தமான ஆசாரம்

1. ஸ்நானத்தின் மஹத்துவம்

ஸ்நானத்தால் ஜீவனின் தேஹத்தை சுற்றியுள்ள கருப்பு ஆவரணம் நீங்கி, தேஹத்தின் ரஜ – தம துகள்கள் அழிக்கப்பட்டு, தேஹத்தின் ஒவ்வொரு ரோமமும் சைதன்யத்தை க்ரஹிக்கும் சக்தியை பெறுகிறது. வாயை சுத்தப்படுத்தும் போதும், மலமூத்ர விஸர்ஜனத்தின் போதும் வெளியே தள்ளப்படாத கஷ்டம் தரும் துகள்கள் ஸ்நானத்தின் போது முழுவதுமாக நீக்கப்படுகிறது. – ஒரு ஞானி (திரு நிஷாத் தேமுக் மூலமாக,19.06.2007, மாலை 3.51 )

2. ஸ்நானத்தின் பயன்கள்

அ. ஸ்நானத்தால் ஜீவனின் தேஹத்தில் உள்ள ரஜ-தம பிரதானமான துகள்கள் குறைந்து, வாயு மண்டலத்தில் உள்ள ஸாத்வீக அதிர்வலைகளை க்ரஹிக்கும் சக்தி பெருகிறது.

ஆ. ஸ்நானம் ஒரு ஜீவனை சுற்றியுள்ள வெளி மண்டலத்தை நிலைப்படுத்த உதவுகிறது. அதனால் பூஜை செய்யும் போது மனம் உள்முகப்பட்டு அந்த வாயு மண்டலத்தோடு மனம் ஒன்றுபட்டு தெய்வீக அதிர்வலைகளை க்ரஹிக்க முடிகிறது.

இ. அதிகாலை ஸ்நானத்தால் தேஜோபலம், ஆயுள் பலம் ஏற்படுகிறது. கெட்ட கனவுகள் அழிக்கப்படுகின்றன. ஒரு ஜீவன் சூரிய உதயத்திற்கு முன்னால் ஸ்நானம் செய்யும் போது அதன் உள்ளும் புறமும் சுத்தமடைந்து அப்போது காணப்படும் ஸாத்வீக அதிர்வலைகளை க்ரஹிக்க முடிகிறது.

3. ஸ்நானத்தை எங்கு செய்ய வேண்டும்?

3 அ. நதி அல்லது நீர் நிலையில் உள்ள தண்ணீர்

நதி அல்லது நீர் நிலையில் உள்ள தண்ணீர் ப்ரவஹிப்பதால் எழும் நாதம், மறைந்த நிலையில் தேஜ சக்தியை உண்டாக்கி அதை மேம்படுத்துகிறது. இவற்றில் ஸ்நானம் செய்வதால் ஜலத்தின் தேஜ சக்தியின் ஸ்பர்சம் கிடைக்கிறது. அதன் மூலம் உடலின் சேதனா சக்தி விழிப்படைந்து உடலின் வெற்றிடங்களில் உள்ள ரஜ-தம அதிர்வலைகளை விழிப்புறச் செய்து வெளியே தள்ளுகிறது. இது போன்று முதலில் ரஜ – தம பிரதானமான சக்தி தண்ணீரில் வெளிப்பட்டு பின் தண்ணீரிலேயே கரைந்து போகிறது. இதனால் தேஹம் சூட்சும நிலையிலும் தூய்மையாக, பவித்ரமாக மாறுகிறது இவ்வகை ஸ்நானம் உத்தமமானதாக கருதப்படுகிறது. ஜலம் எந்த அளவு பிரவாஹமாக ஓடுகிறதோ அந்த அளவு தேஜ தத்துவ நிலையில் ரஜ-தம துகள்களை தகர்த்தெறிகிறது.

3 ஆ. கிணற்று நீர்

கிணற்று நீர் ப்ரவஹிக்காமல் தேங்கி இருப்பதால் அதில் தேஜ நிலையில் சக்தியை உண்டாக்கி  அதிகப்படுத்தும் ஆற்றல் கிடையாது. ப்ரவஹிக்கும் தன்மை இல்லாததால் ஜலத்தில் ஒரு ஜடத்வம் நிர்மணமாகிறது. இந்த ஜடத்வத்தால் அனேக ரஜ – தம ஜீவஜந்துக்கள், தீய சக்திகள் வசிக்கும் இடமாகிறது. ஜலத்தின் ப்ரவாஹம் எந்த அளவு குறைகிறதோ அந்த அளவு அதில் கஷ்டம் தரும் அதிர்வலைகள் சேர்கின்றன. ஜீவனை சுத்தம் செய்வதில், ரஜ-தம அதிர்வலைகளை அழிப்பதில் இவ்வகை ஜலம் குறைந்த அளவே நன்மை பயக்கின்றன

3 இ. குளியலறை நீர்

ப்ரம்மாண்டத்தின் வ்யாபகத்தன்மையோடு ஒப்பிடும்பொழுது வீட்டின் சூழ்நிலை குறுகியதாக உள்ளது. இதனால் அந்த வாஸ்துவில் வசிக்கும் நபர்களின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட அதிர்வலைகளில் நடமாட்டம் அதிகரிக்கிறது. காலப்போக்கில் இந்த அலைகள் அடர்த்தியாகின்றன. கலியுகத்தில் பெரும்பான்மையானவர் ரஜ-தம  பிரதானமாகவே உள்ளனர். இதனால் இந்த அதிர்வலைகளின் உதவியோடு அநேக அதிருப்தி அடைந்த மூதாதையர்களின் லிங்க தேஹம் அங்கே சுற்றுகின்றன. இது போன்ற கஷ்டம் தரும் பாதிப்பை, அதிக உராய்வை ஏற்படுத்தும் அதிர்வலைகள் அந்த குறுகிய வாஸ்துவில் இருக்கின்றன. ஆப தத்துவ கோசம் கொண்ட வாளி தண்ணீரை நோக்கி இவை ஆகர்ஷிக்கப்படுகின்றன.  இவை தண்ணீரோடு கலந்து குளிக்கும் நபரினுள் புகுகின்றன. இதனால் தேஹம் அசுத்தமாவதோடு தீய சக்திகளால் பாதிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இக்காரணங்கள் குளியலறையில் வாளி தண்ணீரில் குளிப்பது தாழ்ந்ததாகவே கருதப்படுகிறது. – ஒரு  வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக)

எப்பொழுதெல்லாம் இயலுமோ அப்போது நதி, கிணறு போன்ற இயற்கை நீர் நிலைகளுக்கு அருகில் குளிப்பது சிறந்தது. இயற்கையான சூழ்நிலையில் குளிப்பதால் பஞ்ச தத்துவத்தின் உதவியோடு தேஹம் தூய்மையாகிறது. அதன் மூலம் தேஹத்தில் உள்ள ரஜ-தம துகள்கள் அதிக அளவு அழிகின்றன. ஜீவனின் பிராண தேஹம், மனோதேஹம், காரணதேஹம், மஹாகாரணதேஹம் ஆகியவை சுத்தமடைந்து எல்லா தேஹங்களும் ஸாத்வீக தன்மையை க்ரஹிக்கும் சக்தி பெறுகின்றன. இதனால் ஜீவன் குறைந்த காலத்திற்குள்ளாகவே நிர்குண நிலையிலான சக்தியையும் உயர் தெய்வங்களின் தத்துவங்களையும் க்ரஹிக்க முடிகிறது. ஜீவனின் வெளி வாயுமண்டலம், ப்ரம்மாண்டத்தின் வாயுமண்டலத்தோடு தொடர்பு கொள்ள முடிகிறது. அதனால் ப்ரம்மாண்டத்தில் உள்ள தத்துவத்தை சிறிதளவு க்ரஹித்து வெளியிடவும் முடிகிறது.

4. அதிகாலையில் ஏன் குளிக்க வேண்டும் ?

அதிகாலையும், பிரம்ம முகூர்த்தமும் ஸ்நானம் செய்வதற்கு உகந்த நேரமாகும்.அதிகாலையில் வாயு மண்டலத்தில் ஸாத்வீக அதிர்வலைகள் அதிகம் இருப்பதால் அந்நேரம் குளிப்பது அதிக மஹத்துவம் நிறைந்ததாகும்.மேலும் ஸ்தூல மற்றும் சூட்சும தேஹங்களின் ஸாத்வீக தன்மை அதிக அளவு அதிகரித்து நீண்ட நேரம் நீடிக்கிறது. தற்காலத்தில் பலருக்கு அந்நேரத்தில் ஸ்நானம் செய்ய முடிவதில்லை.அதனால் முடிந்தவரை, சூர்யோதயத்திற்குப் பின் எவ்வளவு  சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளிக்கவும்.

மதிய நேரத்தில் வாயுமண்டலத்தில் ரஜ-தம அதிர்வலைகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது. ஸ்நானத்தின் மூலம் தேஹம் வாயுமண்டலத்திலுள்ள அதிர்வலைகளை க்ரஹிக்கும் சக்தி பெறுகிறது. அதனால் மதியம் குளிப்பதால் ரஜ-தம அதிர்வலைகளையே தேஹம் க்ரஹிக்கிறது. தேஹம் வெளிப்புறமாக சுத்தம் ஆகிறது ஆனால் உள்ளே சுத்தமாவது இல்லை.

இரவு நேரம் தமோகுண பிரதானமானதால், அந்நேரம் குளிப்பதால் ஸ்தூல மற்றும் சூட்சும தேஹங்களின் ஸாத்வீக தன்மை மிக குறைந்த அளவே அதிகரிக்கிறது. சிறிது நேரமே நீடிக்கிறது. அதனால் அந்த நபருக்கு ஸ்நானத்தால் ஏற்படும் பயன் மிக குறைந்த அளவே கிடைக்கிறது.

5. ஸ்நானத்திற்கான முன்னேற்பாடு

அ. மணையில் அமர்ந்து எண்ணெய் தேய்த்துக் குளித்தல்

மணையில் சூட்சும அக்னி தத்துவம் மறைந்த நிலையில் இருப்பதால் உடலை சுற்றி ஒரு தேஜ தத்துவம் நிறைந்த வாயு மண்டலம் உருவாகிறது. மணையின் கீழ் உள்ள வெற்றிடம் பாதாளத்தில் இருந்து வெளிப்படும் கஷ்டம் தரும் அதிர்வலைகளில் இருந்து நம்மைக் காக்கிறது. எண்ணெய் தேய்ப்பதால் உடலின் சேதனா சக்தி விழிப்படைந்து செயல்பட அரம்பிக்கிறது. இதனால் தேஹத்திலுள்ள அணுக்கள், ஸ்நானத்தின் மூலம் கிடைக்கும் சைதன்யம் நிறைந்த அதிர்வலைகளை சரியானபடியும், தேவையான அளவிற்கும் க்ரஹிக்கும் சக்தி பெறுகிறது.

ஆ. சரீரத்தில் சுகந்த எண்ணெய் மற்றும் ஸ்நானப்பொடி  தேய்த்துக் கொண்டு குளித்தல்

பெரும்பாலும் சுகந்த எண்ணெய் மற்றும் ஸ்நானப்பொடி ஸாத்வீகமானதாய் உள்ளது. இயற்கை பொருட்களால் ஆனது. அதன் சுகந்தமும் ஸாத்வீகமானதாக உள்ளதால், அவற்றிற்கு வாயு மண்டலத்தை ஸாத்வீகமாக மாற்றவும், தெய்வீகத்தை க்ரஹிக்கும் சக்தியும் உள்ளது. சுகந்த எண்ணெய் மற்றும் ஸ்நானப்பொடி கொண்டு தேய்ப்பதால் சரீரத்தில் உள்ள ரஜ-தம அதிர்வலைகள் குறைந்து, ஸ்தூல மற்றும் சூட்சும தேஹத்திலுள்ள கருப்பு ஆவரணம் நீங்கி, சரீரம், சுத்தமாகவும், ஸாத்வீகமானதாகவும் மாறுகிறது. மேலும் சரீரத்தில் ஸ்நானப்பொடியைத் தேய்ப்பதால் கபம் மற்றும் கொழுப்பு நீங்குகிறது. சரீரம் ஆரோக்கியமாகவும், சருமம் நிர்மலமாகவும் விளங்குகிறது.

சோப்பை உபயோகப்படுத்துவதால் ஸ்தூல தேஹம் மட்டுமே சுத்தமாகிறது. ஆனால் சூட்சுமமாக ஸ்தூல மற்றும் சூட்சும தேஹத்தில் ரஜ-தம ஆவரணம் ஏற்படுகிறது. குளிக்கும் தண்ணீரில் ஒரு சிறு தேக்கரண்டி அளவு கல் உப்பு போட்டு குளிப்பதால் ஸம்பூர்ண உடலிலுள்ள 106 தேஹசுத்திக்கான சக்கரங்களில் சேர்ந்துள்ள கஷ்டம் தரும் சக்தி அதிகமாக அழிக்கப்படுகிறது.

6. உண்மையான குளியல்

தன் உடலை சுத்தப்படுத்த எந்த அளவு ஒரு மனிதன் முயல்கிறானோ அதைவிட அதிகம் மனம் மற்றும் புத்தியை தூய்மையாகவும் நிர்மலமாகவும் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் இதுவே உண்மையான குளியல் ஆகும். ஜீவனின் தேஹம் மற்றும் அந்தக்கரணத்தில் உள்ள அசுத்தங்களை விலக்கும் செயலையே ஸ்நானம் என்கின்றனர் அதனால் தொடர்ந்து ஸாதனையில் ஈடுபடுவதே உண்மையான குளியல் ஆகும்.

நோத கக் லின்னகாத்ரஸ்து  ஸ்நாத்  இத்யபி தீதேயதே|

– மஹாபாரதம், பர்வ 13, அத்தியாயம் 111, ஸ்லோகம் 9

பொருள்: உடலின் பாகங்களை தண்ணீரில் நனைப்பது ஸ்நானம் இல்லை. புலனடக்கம் என்ற ஜலத்தில் யார் ஸ்நானம் செய்கின்றனரோ அவரே உள்ளும் புறமும் தூய்மையானவர்.

 

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘தினஸரி காரியங்களும் அதற்கு ஆதாரமான சாஸ்திரமும்.’

 

Leave a Comment