அரசாட்சிக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் அரசாட்சி மற்றும் ஆன்மீகத்திலுள்ள வேறுபாட்டைமிகத் தெளிவாகக் கூறி ஆன்மீக வாழ்க்கை வாழ்வதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

1. அரசாட்சியின் தாற்காலிகத் தன்மை

அ. ‘ஒருவர் அரசுப் பதவியில் அமர்ந்த பிறகு அவருக்கு அரசின் சார்பில் பல சுக-சௌகரியங்கள் அளிக்கப்படுகின்றன. அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பும் கிடைக்கிறது.

ஆ. அவரின் பதவிக்காலம் முடிந்த உடனேயே அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன. அவர் திடீரென்று பதவி விலக நேரிட்டால் ஒரே இரவில் அவரின் பொறுப்புகள் திரும்ப வாங்கப்பட்டு இன்னொருவரிடம் அளிக்கப்படுகின்றன.

இ. அரசாட்சி தாற்காலிக சுகத்தையே தர வல்லது.

2. ஆன்மீகத்தின் நிரந்தரத் தன்மை

அ. ஆன்மீகத்தில் பக்தன் பகவானிடம் ச்ரத்தை வைக்கிறான். பகவான் என்ன தருகின்றாரோ அதை பக்தன் ஆனந்தத்துடன் ஏற்கிறான் மற்றும் அதில் திருப்தி அடைகிறான்.

ஆ. பக்தனுக்கு பகவானின் ஸம்ரக்ஷணம் கிடைக்கிறது. அதனால் பக்தனுக்கு காலத்தின் கட்டுப்பாடு இல்லை. பகவான், பக்தன் இவ்வுலகில் இருக்கும்போது அவன் மீது அக்கறை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இறப்பிற்கு பின்னரும் அக்கறை எடுத்து, கவனித்துக் கொள்கிறார். பக்தனை மென்மேலும் உயர் லோகங்களுக்கு அனுப்பும் பொறுப்பு பகவானை சேர்ந்தது.

இ. ஆன்மீகத்தில் யுகயுகாந்தரமாக நிலைத்து நிற்.கும் ஆனந்தம் கிடைக்கிறது.’

– தொகுத்தவர் : திரு. வால்மீகி புகன், சென்னை ( 8.9.2023)

Leave a Comment