‘ஆத்மாவினால் காரியங்கள் நடக்கின்றன’, என்பதை நினைவில் இருத்தி ஆத்மாவுடன் தொடர்பில் இருந்தால் இறைவன் எதிர்பார்க்கும்படியான காரியங்கள் நடந்தேறும் !

‘தினமும் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாம் நமக்கே, அதாவது அஹம்பாவத்திற்கு மகத்துவத்தை அளிக்கிறோம். உண்மையில் சைதன்யமான ஆத்மா இல்லாமல் அஹம் என்பது இல்லை. ஆகையால் நியாயப்படி ஆத்மாவிற்கே மகத்துவம் அளிக்க வேண்டும். ஆத்மாவிற்கு மகத்துவம் அளிப்பது என்றால் ‘ஆத்மாவினால் காரியங்கள் நடக்கின்றன’ என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு காரியத்தையும் செய்தால் அக்காரியம் ஈச்வர இச்சைப்படி நடக்க ஆரம்பிக்கும். அதற்கு ‘ஆத்மாவை நம்முடைய நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்’, அதாவது ஆத்மாவைக் கேட்டுக் கேட்டே எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும். இது போன்று ஆத்மாவுடன் எப்பொழுதும் மனதால் தொடர்பு கொண்டிருந்தால் மனம் சாந்தமடைந்து ஒவ்வொரு காரியமும் இறைவன் எதிர்பார்க்கும்படியாக அமையும்!’

Leave a Comment