ஆயுர்வேதப்படி காலங்களுக்கேற்ற உணவு

ஆயுர்வேதப்படி காலங்களுக்கேற்ற உணவு !

பிப்ரவரி – மார்ச் : ஜலதோஷம், இருமலை கட்டுப்படுத்த – ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் அரை ஸ்பூன் சுக்குப் பொடி போட்டு அருந்தவும்! உடற்பயிற்சி செய்யவும்! குளிர்ந்த, பொறித்த, புளிப்பு உணவுகளைத் தவிர்க்கவும் !

ஏப்ரல் – ஜூன் (மழை ஆரம்பிக்கும்வரை) : இக்காலத்தில் வாதம் அதிகரிக்கும். அதனால் –

மண் பாண்டத்திலிருந்து தண்ணீர் அருந்தவும் !

இனிப்பு, எண்ணெய் பசையுள்ள, திரவ உணவுகளை உண்ணவும் !

உப்பு, கார, ‘ஃப்ரீஸ்’ செய்யப்பட்ட உணவுகள் மற்றும் வெயிலில் சுற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்கவும் !

ஸனாதனின் நூல் ‘ஆயுர்வேதப்படி தினசரி காரியங்கள்’

 

மழைக்காலத்திற்கான ஆயுர்வேத குறிப்பு !

 

ஜூன் முதல் செப்டம்பர் : சளி, ஜுரத்தைத் தடுக்க-

எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உண்ணவும் !

வாரத்திற்கொருமுறை உபவாசம் இருக்கவும் !

மதிய தூக்கம், மழையில் நனைதல் மற்றும் ஈர துணிகள் அணிதலை தவிர்க்கவும் !

அக்டோபர் : மழைக்கால நோய்களைத் தடுக்க-

நெய் மற்றும் கசப்பு உணவை உண்ணவும் !

வாரத்திற்கொரு முறை விளக்கெண்ணெய் குடிக்கவும் !

தயிர், எண்ணெய் பதார்த்தம், வயிறு நிரம்ப உண்ணுதல், வெயில் மற்றும் கிழக்கு காற்று ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும் !

ஸனாதனின் ஆங்கில நூல் ‘உணவே பூர்ண பிரம்மம்’

 

ஆயுர்வேதப்படி குளிர்கால விதிமுறை !

 

 

நவம்பர்-பிப்ரவரி வரை குளிர்காலத்தில் அதிகமாகும் பசியை சமனப்படுத்த போஷாக்கான உணவை உண்ணுங்கள் !

எள், வெல்லம், வேர்க்கடலை, கொப்பரை போன்ற எண்ணெய் பசையுள்ள உணவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும் !

சமையலில் கடுகு, ஓமம், பெருங்காயம், மிளகு போன்ற மசாலாக்களை சேருங்கள் !

குளிரால் வறண்ட சருமம் ஏற்படாதிருக்க எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள் !

குளிரைத் தாங்கும் சக்தியைப் பெற உடற்பயிற்சி செய்யுங்கள் !

படியுங்கள் ஸனாதனின் ஆயுர்வேத ஆங்கில நூல்கள்!

 

பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவ தாவரங்களின் தோட்டங்களை நிர்மாணியுங்கள் !

நோய் தாவரம் நோய் தாவரம்
சளி, இருமல், ஜுரம் துளஸி கீரல்கள், புண்கள் துலுக்க சாமந்தி
சரும நோய், நீரிழிவு
நோய்
மஞ்சள் அஜீரணம், இதய நோய் கறிவேப்பிலை
உடல் சூடு அருகம்புல் எரிச்சல், ஆஸ்துமா சோத்துக் கத்தாழை
சிறுநீரக கோளாறுகள் லெமன் க்ராஸ் பெண்களுக்கான நோய் செம்பருத்தி

 

மேலே குறிப்பிட்டது போல் 200
அதிகமான தாவரங்களைப் பற்றி அறிய படியுங்கள்

ஸனாதனின் நூல் இட வசதிக்கேற்றபடி மருத்துவ தாவரங்களின் தோட்டம்

இந்த தாவரங்களை மருந்தாக எவ்வாறு
உபயோகிக்க வேண்டும் என்று அறிய படியுங்கள்

ஸனாதனின் நூல் தாவரங்களின் மருத்துவ குணதர்மம் (2 பாகம்)

Leave a Comment