ஸ்நானத்தின் வகைகள்,  பிரார்த்தனைகள் மற்றும்  உச்சரிக்க வேண்டிய ஸ்லோகங்கள் 

 1. ஸ்நானத்தின் வகைகள்

இதை தெரிந்து கொள்வதற்கு முன் காலத்தை பற்றிய கீழ்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முன் இரண்டு கடிகா (48 நிமிடங்கள்) உஷத் காலம் எனப்படுகிறது. இது இருளைப் போக்கி ஒளியை வழங்கும் காலம் ஆகும். உஷத் காலத்திற்கு முன் 3 கடிகா (72 நிமிடங்கள்) ப்ரம்மமுஹுர்த்தமாகும். சூரிய உதயத்திற்கு தகுந்தாற் போல உஷத் காலமும் ப்ரம்மமுஹுர்த்தமும் மாறும்.

1 அ. ப்ரம்மமுஹுர்த்ததில் ஸ்நானம் செய்வது

ப்ரம்மமுஹுர்த்ததில் ஸ்நானம் செய்வது என்பது இந்த ஜீவன் மூலம் தேவ பரம்பரையை பின்பற்றுவதாகும். இதனால் கீழ்க்கண்ட பயன்கள் ஏற்படுகின்றன.

1. ப்ரம்மமுஹுர்த்ததில்  ஜீவனின் மனோதேஹம் ஸ்திரமாக உள்ளது. அதனால் இக்காலத்தில் ஸ்நானம் செய்வதால் தூய்மை, பவித்ரம், நிர்மலம் ஆகிய ஸன்ஸ்காரங்கள் ஏற்படுகின்றன.

2. ப்ரம்மமுஹுர்த்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் மற்ற சமயங்களை காட்டிலும் அதிக அளவு செயல்பாட்டில் உள்ளன. ஸ்நானம் செய்வது என்ற ப்ரத்யக்ஷ ஆவாஹன காரியத்தின் மூலமாக தெய்வீக தத்துவம் ஜீவனிடம் ஆகர்ஷிக்கப்படுகிறது. ஜீவனில் ஏற்படும் ஸ்தூல சூட்சும ஸனஸ்காரங்களால் ஈச்வர சைதன்யத்தையும் தெய்வீக அதிர்வலைகளையும் க்ரஹிக்க  முடிகிறது.

3. தூய்மை, பவித்ரம், நிர்மலம் ஆகிய மூன்று ஸனஸ்காரங்கள் மூலமாக ஸங்கல்பம், இச்சா, கிரியா ஆகிய ஈச்வரனின் இந்த மூன்று சக்திகளோடு ஞானசக்தியும் ஜீவனால் க்ரஹிக்கப்படுகிறது. ஈச்வரனின் பூரணத்துவமான சைதன்யத்தோடு ஒன்ற முடிகிறது.

1 ஆ. அப்யங்க ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து குளிப்பது)

1 ஆ 1. பொருள்

அப்யங்க ஸ்நானம் என்பது விடியற்காலையில் உடல் மற்றும் தலையில் எண்ணெய் தேய்த்து பின் வெந்நீரில் குளிப்பதாகும். இது ஜீவனின் நலனுக்காக செய்யப்படும் ஸ்நானம்.

1 ஆ 2. அப்யங்க ஸ்நானத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மஹத்துவம்

குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்ப்பதால் பிண்டத்தின் சேதனா சக்தி அகண்டமாகிறது. அத்தோடு தசைகள், உடலின் வெற்றிடங்கள் விழிப்புற்று பஞ்ச பிராணனை செயல்பட வைக்கிறது. இதனால், உடலின் வேண்டாத வாயுக்கள் கொட்டாவி, ஏப்பம் மூலமாக வெளியேறி உடலின் தசைகளும் வெற்றிடமும் சைதன்யத்தை க்ரஹிக்க தயாராகிறது. இந்த வேண்டாத உஷ்ண வாயுக்கள் சில சமயம் கண்கள், மூக்கு, காதுகள் மற்றும் தோலின் துவாரங்கள் வழியாகவும் அலைகளாக வெளியேறுகின்றன. இதனால் எண்ணெய் தேய்த்த பின் சில சமயம் கண்களும் முகமும் சிவந்து காணப்படுகிறது. – ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்டில் மூலமாக, 12.9.2007, பிற்பகல் 2.08)

1 ஆ 3. அப்யங்க ஸ்நானத்தால்  எற்படும் பயன்

அ. எண்ணெய் கொண்டு உடலை நன்கு தேய்ப்பதால் சூரிய நாடி விழிப்படைகிறது . தேஹம் நல்ல தேஜஸோடு விளங்குகிறது. இதனால் உடலின் ரஜ-தம பிரதானமான அதிர்வலைகளை அழிகின்றன. இது ஒரு தூய்மைப்படுத்தும் வழியாகும். சைதன்ய நிலையில் நடக்கும் இந்த நடைமுறையால் தேஹத்தின் சேதனா சக்தி அகண்டமாகி, ஜீவனின் ஒவ்வொரு செயலும் ஸாதனையாகிறது.

ஆ. இந்த கர்மா ஜீவனின் தேஹத்தில் ஸத்வ குணத்தை அதிகரிக்கிறது. ஜீவனின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது. ஸத்வ குணத்தை நோக்கி ஜீவனின் தொடர்ந்த யாத்திரையே அதன் முன்னேற்றம் ஆகும். அதனால் அப்யங்க ஸ்நானம் மிக முக்கியமானது.

இ. அப்யங்க ஸ்நானத்தால் நிர்மாணமாகும் சைதன்ய நிலையில் நடக்கும் ஒவ்வொரு காரியமும் ஸாதனையாகும் இதனால் இச் செயலால் வாயு மண்டலமும் தூய்மையாகிறது. – ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்டில் மூலமாக,12.9.2007, பிற்பகல் 2.08) .

1 இ. சில குறிப்பிட்ட தலைகுளியல்கள்

அஜீரணம், வாந்தி, முடித்திருத்திய பின், உடலுறவிற்கு பின், சவத்தை தொட்ட பின், மாதவிலக்கான பெண்ணைத் தொட்ட பின், கெட்ட கனவிற்கு பின், தீயவரை தொட்ட பின், நாயை தொட்டபின், சண்டாளன் அல்லது சவத்தை தூக்குபவனைத் தொட்ட பின் கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும்.

1 ஈ. புண்ணியத்தை கொடுத்து பாவத்தை போக்கும் ஸ்நானம்

வியாழனன்று புனித அத்தி மரத்தின் கீழ் அல்லது அமாவாசை அன்று நதிதீரத்தில் குளித்தால் புண்ய ப்ரயாகையில் குளித்த பலன் கிடைக்கிறது ஸர்வ பாவங்களும் நாசம் அடைகின்றன. புஷ்ய நக்ஷத்திரத்தின் போது அல்லது வைத்ருதி யோகத்தின்போது நதிதீரத்தில் குளித்தால் ஸர்வ பாவங்களும் நாசம் அடைகின்றன.

1 உ. காம்யஸ்நானம்

செல்வப்ராப்தி, வியாதி நிவர்த்தி போன்ற காம்யங்களை (ஆசைகளை) பூர்த்தி செய்வதற்காக  தர்ம நியாயப்படி செய்யப்படும் ஸ்நானமே காம்யஸ்நானமாகும் – குருதேவ் டாக்டர் காடே ஸ்வாமிஜி

2. ஸ்நானத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய பிரார்த்தனையும் ஸ்நானத்தின் போது உச்சரிக்க வேண்டிய ஸ்லோகங்களும்

2 அ. ஜலதேவதையிடம் பிரார்த்தனை

ஹே ஜல தேவதையே, உன் பவித்திர ஜலத்தால் என் ஸ்தூல தேஹத்தைச் சுற்றியுள்ள ரஜ – தம கஷ்டம் தரும் கருப்பு ஆவரணத்தை நஷ்டமடையச் செய்வாய். வெளிப்புறச் சுத்தத்தோடு என் உள் மனமும் சுத்தமாகவும் நிர்மலமாகவும் ஆகும்படி செய்வாய்.

2 ஆ. நாமஜபம் மற்றும் ஸ்லோக உச்சாரணத்துடன் ஸ்நானம்  செய்வதன் மகத்துவம்

நாமஜபம் மற்றும் ஸ்லோக உச்சாரணத்துடன் ஸ்நானம் செய்வதால் ஜலத்தின் சைதன்யம் விழிப்படைகிறது. தேஹத்தில் அது பட்டவுடன் ஒவ்வொரு அணுக்களிலும் சைதன்யம் நிறைகிறது. இதனால் தேஹமே சைதன்யமாகி அன்று முழுவதும் செய்யப்படும் காரியங்களை சைதன்ய நிலையில் செய்யும் ஆற்றலை பெறுகிறது.

2 இ. ஸ்நானத்தின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

1.       கங்கே ச யமுனே  சைவ கோதாவரி  ஸரஸ்வதி |
          நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்  குரு ||

– நாரதா புராணம், பூர்வபாகம், பாதம் 1, அத்யாயம் 27, ஸ்லோகம் 33

பொருள்: ஹே கங்கே, யமுனே, கோதாவரி, சரஸ்வதி, நர்மதே, ஸிந்து, காவேரி நீங்கள் அனைவரும் இந்த குளிக்கும் நீருக்குள் வாருங்கள்

2.       கங்கா ஸிந்து சரஸ்வதி ச யமுனா கோதாவரி நர்மதா|
          காவேரி சரயூ  மகேந்திரதனயா சர்மண்வதி வேதிகா||
         க்ஷிப்ரா  வேத்ரவதி மஹாஸுரநதி க்யாதா ஜயா கண்டகி |
         பூர்ணா: பூர்ணஜலை: ஸமுத்ரஸஹிதா: குர்வந்து மே மங்கலம்||

பொருள்: கங்கா, ஸிந்து, சரஸ்வதி, யமுனா,கோதாவரி, நர்மதா, காவேரி, சரயூ, மஹேந்திரதனயா, சம்பல், வேதிகா, க்ஷிப்ரா, வேத்ராவதி, மஹாஸுரநதி, ஜயா மற்றும் கண்டகி நதிகள் பவித்ரமாகி பரிபூரணமாகி ஸமுத்திரத்தோடு கலந்து எனக்கு நல்லது செய்யட்டும்.

3.       நமாமி கங்கே  தவ பாத பங்கஜம் ஸுராஸுரை: வந்திதம் திவ்ய ரூபம் |
          புக்திம் ச முக்திம் ச ததாஸி நித்யம் பாவானுஸாரேண ஸதா நராணாம் ||

பொருள்: ஒவ்வொரு மனிதனின் பக்திபாவத்திற்கு ஏற்ப ஸர்வ உலக சுகங்கள், மோகங்கள் மற்றும் மோக்ஷத்தை அளிக்கும் ஹே கங்கா மாதா, எல்லா தெய்வங்களும் அசுர கணங்களும் உன் சரண கமலங்களில் வந்தனம் செய்கின்றன. அப்பேர்ப்பட்ட சரணங்களுக்கு என் வந்தனம்.

4.       கங்காகங்கேதி யோப்ரூயாத் யோஜானாம் சதைரபி |
          முச்யதே ஸர்வ பாபேப்யோ யோஜனானாம் ஸகச்சதி|
          தீர்த்தராஜாய நம: |

பொருள்: பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கங்கையை ஸ்மரித்து மூன்று முறை ‘கங்கா, கங்கா, கங்கா’ என உச்சரிப்பவர்களுக்கு பாவங்கள் அனைத்தும் அழிந்து விஷ்ணுலோகம் ஸித்திக்கிறது.

5.       பாபோஹம்  பாப  கர்மாஹம் பாபாத்மா பாப ஸம்பவ: |
         த்ராஹி மாம் கிருபயா கங்கே ஸர்வ பாப ஹரா பவ ||

பொருள்: நானே பாபகர்மா. நான் பாவத்தின், தீயவற்றின் உருவமாக உள்ளேன். கெட்ட விஷயங்களால் செய்யப்பட்டுள்ளேன். ஹே கங்காமாதா, பாவங்களைப் போக்கி என்னை காப்பாற்று தாயே.

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘தினஸரி காரியங்களும் அதற்கு ஆதாரமான சாஸ்திரமும்.’

Leave a Comment