பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபம்

‘தைத்திரீய உபநிஷத்’தில் பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ‘ஸத்யம் ஞானமனந்தம் பிரம்ம’ (வல்லீ 2 அனுவாகம் 1 மந்திரம் 1) என கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ‘இருப்பு, ஞானம் மற்றும் அனந்தத்வம் பிரம்மம் (பிரம்மத்தின் ஸ்வரூபம்) ஆகும். இதில் இருப்பு, ஞானம் மற்றும் அனந்தம் என்ற ஒவ்வொரு வார்த்தையின் மூலம் வெளிப்படும் ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் மேற்கொண்டு அதன் வல்லீ அனுவாகம் 7, 8, 9 -ல் பிரம்மத்தின் ஆனந்தம் சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளது. ‘ஆன்ஹிகதத்வ’-த்தில் பிரம்மத்தை ‘ஸச்சிதானந்த’ என எழுதப்பட்டுள்ளது. ஸத், சித் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் பிரம்மத்தின் ‘ஆனந்த’ ஸ்வரூபம் மட்டும் மனதிற்கு புரியவில்லை.

‘தைத்திரீய உபநிஷத்’தில் கூறப்பட்டுள்ளது ‘ரஸோ வை ஸ: |’ 2-7-1

அர்த்தம் – பரமாத்மா நிச்சயம் ரஸமுள்ளவர். ஆதிசங்கரர் இதற்கான பாஷ்யத்தில் எழுதியுள்ளார் ‘மாம்பழம்-இனிப்பு ஆகிய ஆனந்தம் தரும் திருப்தி தரும் பதார்த்தங்கள் மக்கள் மத்தியில் ரஸமுள்ளவை என பிரபலமானவை. அந்த ரசத்தை பருகும்போது மனிதனுக்கு ஆனந்தம், சுகம் கிடைக்கிறது. பிரம்மநிஷ்டரான, இச்சைகள் அற்ற மற்றும் எதிர்பார்ப்பில்லாத ஒரு ஞானி வெளிப்புற சுகங்களிலிருந்து விலகி இருந்தாலும் வெளிப்புற ரசத்தை உட்கொண்டு ஆனந்தம் அடைவது போல் தோன்றுவார். ஆனால் நிச்சயமாக அவர் அனுபவிக்கும் ரசம் பிரம்மத்தினுடையது ஆகும். ரசத்தின் மூலம் அவருக்கு கிடைக்கும் ஆனந்தத்தின் மூல காரணம் பிரம்மம் ஆகும்.’

உலக ஆனந்தத்திலும் பிரம்மானந்தத்தின் சிறு திவலை உள்ளது ஆனால் உலக ஆனந்தம் வெளிப்புற விஷயங்களைப் பொருத்து உள்ளது. இந்த்ரியங்கள் உலக விஷயங்களிலிருந்து பெரும் சுகத்தை, அதாவது மூக்கால் நல்ல வாசனையை, காதால் இனிய சங்கீதத்தை, சருமத்தால் சுகமான ஸ்பர்சத்தை, கண்களால் கவர்ச்சியான காட்சிகளை மற்றும் நாக்கால் நல்ல ருசியை அனுபவிப்பதால் கிடைக்கும் ஆனந்தம் வெளி விஷயங்களைப் பொருத்து உள்ளது. இது பிரம்மானந்தத்தின் ஒரு சிறு திவலை ஆனாலும் நிரந்தரம் இல்லை. உலக ஆனந்தம் மற்றும் பிரம்மானந்தத்திலுள்ள வித்தியாசம் கீழே தரப்பட்டுள்ளது.

உலக ஆனந்தம் பிரம்மானந்தம்
1.இந்த்ரியங்கள் மற்றும் மனதைப் பொருத்தது 1.இந்த்ரியங்கள் மற்றும் மனதைப் சாராதது
2. அலுப்பு ஏற்படும் 2. அலுப்பு ஏற்படாது
3. தாற்காலிக ஆனந்தம் 3. நீடிக்கும் நித்ய ஆனந்தம்
4. ஜீவாத்மாவுக்கு கிடைக்கிறது 4. ஜடத்வ சம்பந்தம் இல்லாததால் ஆத்மா தன் ‘ஆனந்த’ ஸ்வரூபத்தில் லயித்திருத்தல்

ஸந்த் துகாராம் மகாராஜ் இத்தகைய பிரம்மானந்தத்தை அனுபவித்துள்ளார் அதை வெளிப்படுத்தியும் உள்ளார் –

1.      துகா ம்ஹணே ந யே ஜாணீவ் அந்தரா | அந்தரீ யா தாரா ஆனந்தாசா ||

இங்கு துகாராம் மகாராஜ் கூறுகிறார், இப்போது வெளியுணர்வு உள்ளுக்குள் வருவதில்லை, உள்ளே ஆனந்த ஸ்தானம் ஏற்பட்டு விட்டது.

2.      ந ஜாலா பிரபஞ்ச ஆஹே பரபிரம்ம | அஹம்ஸோஹம் பிரம்ம ஆகளலே ||
தத்வமஸி வித்யா ப்ரம்மானந்தீ ஸாங்க | தேசி ஜாலா அங்கே துகா ஆதா ||

துகாராம் மகாராஜ் கூறுகிறார், பிரபஞ்சம் இல்லை, பரபிரம்மமே உள்ளது. எனக்குள்ளும் அந்தர்யாமியாய் உள்ள பிரம்மத்தை என்னால் உணர முடிகிறது. ‘அந்த பிரம்மமே நீ ஆகும்’ என்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய வித்யை பிரம்மானந்தத்தைப் பற்றியதே. துகாராம் இப்போது தானே அந்நிலையை எட்டியுள்ளார்.

இருந்தாலும் இக்கட்டுரையை எழுதியவருக்கு மனதிற்குள் ‘பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபம் என்பது என்ன?’ என்ற கேள்வி மீதம் இருந்தது. இக்கேள்விக்கான விடை தேடுவதற்கு பல வருடங்கள் ஆயின. சில வித்வான்கள் மற்றும் ஆன்மீக ஸ்தாபனங்களுக்கு இக்கேள்வியை அனுப்பினேன் விடை கேட்டேன். ஆனால் பிரம்மானந்தத்தின் ஸ்வரூபம் மட்டும் விளங்கவில்லை.

பிரம்மத்தின் ஸ்வரூபம் ஒன்றேயாக இருந்தாலும் சிறப்பு வித்வான்கள் மூலமாக பல்வேறு வார்த்தைகளில் அது விவரிக்கப்பட்டுள்ளது. ருக்வேதம் கூறுகிறது – ‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ 1.164.46

அதாவது அவர்கள் ஒன்றேயான பிரம்மத்தை வெவ்வேறு விதங்களில் வர்ணிக்கின்றனர். உதாரணத்திற்கு – ஸந்த் ஏக்நாத் மகாராஜ் அந்த பிரம்மானந்த ஸ்வரூபத்தை இவ்வாறு வர்ணிக்கிறார் –

தேவீ ஜாவோனியா அஞ்ஞான் | உர்லா ஜோ ஞானாபிமான |
தோ ஹீ த்யாகிலியா ஜாண | சித்ஸமாதான ஸ்வானந்தே || ஏக்னாதி பாகவதம் 12-604

அதாவது பிரம்மஞானம் வந்து அஞ்ஞானம் போயிற்று மற்றும் ஞானம் ஏற்பட்டது என்ற எண்ணத்தையும் தியாகம் செய்தாகிவிட்டது, உள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஆனந்தத்தால் சமாதான நிலை ஏற்பட்டுள்ளது.

பிரம்மலீன் சுவாமி ராமஸுகதாஸ் கூறுகிறார் – எது உள்ளதோ (இருப்பு) அதுவே ‘ஸத்’ ஆகும், அதன் ஞானம் என்பது ‘சித்’ (சைதன்யம்) ஆகும் மற்றும் துக்கம், ஏமாற்றம், நம்பிக்கையின்மை ஆகியவை சிறிதும் பாதிக்காத நிலையே ‘ஆனந்தம்’ ஆகும்.

இருந்தாலும் ஆனந்தத்தின் ஸ்வரூபம் கட்டுரையாளருக்கு முழுவதும் விளங்கவில்லை.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான் –

தத்ஸ்வயம் ——- காலேனாத்மனி விந்ததி || கீதை 4.38

அர்த்தம் – இந்த ஞானம் தகுந்த சமயத்தில் ஒருவருக்கு உள்ளிருந்தே ஸ்புரிக்கிறது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் மேற்கூறிய கூற்றுப்படி இந்த கட்டுரையாளருக்கு தகுந்த சமயத்தில் பிரம்மானந்தம் பற்றி உள்ளிருந்தே புரிதல் ஏற்பட்டது, அது கீழே தரப்பட்டுள்ளது –

1.      தூய்மையற்ற சித்தத்தில் பிரம்ம ஸ்வரூபத்தின் ஒளி படாது. மனிதன் ஸாதனை செய்வதே சித்தசுத்தி ஏற்படத்தான். ஸாதனையால் சித்தசுத்தி ஏற்பட்டால் ஒருவர் நன்றியுணர்வு மிகுந்தவராகிறார். எதை செய்ய வேண்டுமோ அதை செய்தோம் என்ற சமாதானம் (திருப்தி) அவருக்கு ஏற்படுகிறது.

2.      மனிதன் ஆத்மஞானம் கிடைப்பதற்காக கடுமையாக முயற்சிக்கிறான். பயிற்சி, சிந்தனை-மனனம் ஆகியவற்றை செய்து ஆத்மாவைப் பற்றிய, பிரம்மத்தைப் பற்றிய ஏட்டறிவு கிடைக்கிறது. பிறகு சுத்த சித்தத்தில் அந்த ஆத்மஞானத்தைப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படுகிறது. மனிதன் அறிந்தவன் ஆகிறான். எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொண்ட சமாதானம் ஏற்படுகிறது.

3.      எதைப் பெறுவதற்காக ஒருவனின் சித்தசுத்தி ஏற்பட்டதோ எந்த ஆத்மஞானத்தை பெறுவதற்காக ஒருவனின் ஞானஸாதனை ஆரம்பமானதோ அந்த பிரம்மத்துடன் ஒன்றுவதற்கான தகுதியை அதன் பின்னேயே பெறுகிறான். மனிதன் அடைந்தவனாகிறான். எதை அடைய வேண்டுமோ அதை அடைந்தோம் என்ற சமாதானம் அவனுக்கு கிட்டுகிறது.

4.      இது போன்று நன்றியுள்ளவனாக, அறிந்தவனாக, அடைந்தவனாக ஆகும்போது நீடித்த நிரந்தர சமாதானம் கிட்டுகிறது.  எந்தவித வெளிக்காரணிகளையும் சார்ந்து இல்லாமல் நிரந்தர நீடித்த சமாதானமே பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபம் ஆகும்.

மேலும் சில விவரங்கள்

1.      ஆத்மஞானம் அடைந்த, துரீய நிலையில் உள்ள (மகாகாரண தேஹத்தின் நான்காவது நிலை), சாக்ஷி உணர்வு கொண்டவர், பிரம்மானந்தத்தை அனுபவித்தாலும் பிராரப்த கர்மாவை அனுபவித்து கழிக்க தேஹத்துடன் இருக்கிறார், கழிந்த பின் தேஹத்தை விட்டு மோக்ஷப்பதவியை அடைகிறார்.

2.      துரீய நிலைக்கு மேல் உன்மனி நிலை உள்ளது. அதில் தேஹபுத்தி இருப்பதில்லை. இருப்பு, ஞானம், அனந்தத்வம் மற்றும் ஆனந்த உணர்வு ஆகிய எதுவும் இருப்பதில்லை. தேஹம் இருந்தும் முக்தி அடைந்தவராக உள்ளார். ஆனால் மோக்ஷத்தை அடைவதற்கு உன்மனி நிலை அவசியம் என்பது இல்லை. துரீய நிலையில் இருக்கும்போதே தேஹத்தை விட்ட பின் மோக்ஷத்தை அடைய முடியும்.

–    அனந்த் ஆடவலே

7.12.2023

 

|| ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து ||

Leave a Comment