இறைவனின் ஸமஷ்டி காரியத்தை பிரதிபலிக்கும் சித்திரங்கள் (பகுதி 1)

1.மனம், புத்தி மற்றும் அஹத்தை அளக்கும் பகவானின் மூன்று அடிகள்

‘26.9.2012 அன்று திரு. ரமேஷ் ஷிண்டே அவர்களிடமிருந்து வாமன ஜெயந்தி நிமித்தமாக ஒரு குறுஞ்செய்தி எனக்கு வந்தது – ‘ஹே பகவானே, எவ்வாறு நீங்கள் ஸ்வர்க்கம், பூமி மற்றும் பாதாளத்தை வியாபித்து உள்ளீரோ அப்படியே என் மனம், புத்தி மற்றும் அஹத்தையும் வியாபிப்பீர்களாக’. இந்த செய்தி என்னை சித்திரம் வரையத் தூண்டியது.

1 அ. பூமி மனத்தைக் குறிக்கிறது, பகவான்
மனதை வியாபிக்கும்போது ஆனந்தம் கிடைக்கிறது

பூமி பகுதி என்பது நம் மனத்தைக் குறிக்கிறது. எவ்வாறு மண்ணைப் பிசைந்து நம் இஷ்டப்படி வடிவமைக்க முடியுமோ அவ்வாறே மனதையும் நம் இஷ்டப்படி வடிவமைக்க முடியும். பகவான் நம் மனதை வியாபிக்கும்போது பூமியே மோக்ஷம் அடையக் கூடிய சாதனம் ஆவதால் மனதில் தெய்வீக ஆனந்தம் உண்டாகிறது.

1 ஆ. புத்தியை பகவான் வியாபிக்கும்போது அது விசாலமாக
மாறி முழு பிரபஞ்சம் பற்றிய ஞானத்தை நமக்கு வழங்குகிறது

நமது தலையே புத்தியின் அடையாளமாக உள்ளது. புத்திக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. பகவான் (வாமனர் தன் மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது வைக்கிறார்) நம் புத்தியை வியாபிக்கும்போது அது விசாலமானதாக மாறி முழு பிரபஞ்சம் பற்றிய ஞானத்தையும் நமக்கு அளிக்கிறது.

1 இ. ஸ்வர்க்கலோகம் நம் அஹத்தை குறிக்கிறது, பகவான் நம்
அஹம்பாவத்தை வியாபிக்கும்போது அதுவே ஸோஹம்பாவமாக மாறி விடுகிறது

ஸ்வர்க்கலோகமே நம் அஹத்தின் அடையாளமாக விளங்குகிறது. மனம், புத்தியைக் காட்டிலும் அதி சூட்சுமமானது அஹம். பகவான் நம் அஹத்தை வியாபிக்கும்போது அதுவே ஸோஹம்பாவமாக மாறி விடுகிறது (‘அஹம் பிரம்மாஸ்மி’ ‘நானே பிரம்மம்’ என்ற ஆன்மீக உணர்வு)

1 ஈ. பகவானின் மூன்றடிகள் நமக்கு என்ன தருகின்றன?

1. பகவானின் மூன்றடிகள் நமக்கு ஞானம், பக்தி, வைராக்கியத்தைத் தருகின்றன.

2. முக்குணங்களான ஸத்வ, ரஜ, தம ஆகியவற்றைக் கடந்து நிர்குண நிலையை அடைய செய்கிறது.

3. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு அப்பால் இட்டுச் சென்று காலத்திற்கு அப்பாற்பட்ட நித்ய நிலையைத் தருகிறது.

4. உடலில் உள்ள சூட்சும மூன்று நாடிகளான இடா, பிங்களா மற்றும் சுஷும்னா ஆகியவற்றைக் கடந்து ஸஹஸ்ரார சக்கரத்தில் அமுத தாரையான சாந்தியை வழங்குகிறது. அதாவது ஆத்ம சாக்ஷாத்காரத்தை வழங்குகிறது.

5. செய்பவன், செய்விப்பவன் மற்றும் செயல் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்து ஒவ்வொரு கர்மாவையும் அகர்மா (அகர்ம செயல்களால் விதி ஏற்படுவதில்லை) ஆக்குகிறது.

–    திருமதி உமா ரவிசந்திரன், சென்னை, தமிழ்நாடு. (4.1.2013)

1 உ. இந்த சித்திரத்தின் சிறப்புத் தன்மை

‘மூவுலகங்களையும் மூவடிகளால் அளந்த பின்னும் பகவானால் இந்த பிரபஞ்சத்தை வியாபிக்க முடிந்தது.’ (குமாரி மதுரா போஸ்லே மூலமாக கிடைத்த தெய்வீக ஞானம், 18.7.2013, இரவு 10.50)

2. பகவானின் அருளால் கலியுகத்தில் சமுத்திர கடைதல் ஸாதகர்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது

2 அ. இந்த சித்திரம் வெளிப்பட தூண்டுகோலாக இருந்த சந்தர்ப்பம்

2 அ 1. பூஜ்ய ராஜேந்திர ஷிண்டே (ஸநாதனின் 6-வது மகான்) அவர்கள் பரிந்துரைத்தபடி ‘தெய்வீக ராஜ்ய ஸ்தாபனம்’ என்ற புனித நூலைப் படிக்கும்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சமுத்திர கடைதல் பற்றிய ஞானத்தை அளித்தார்.

‘நான் அமேரிக்கா செல்வதற்கு சில நாட்கள் முன்பு பூஜ்ய ராஜேந்திர ஷிண்டே (ஸநாதனின் 6-வது மகான்) அவர்கள் ‘தெய்வீக ராஜ்ய ஸ்தாபனம்’ என்ற புனித நூலைப் படிக்குமாறு கூறினார்.’

அதன்படி அந்த நூலைப் படிக்கும்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சமுத்திர கடைதல் பற்றிய ஞானத்தை வழங்கினார். அவரின் அருளால்தான் இக்கட்டுரையை எழுத முடிந்துள்ளது.

2 அ 2. அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைதல்

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அதற்கு அவர்கள் மந்தார மலையை சுற்றி வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கட்டினர். தேவர்கள் வால்பக்கமும் அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று கொண்டு அமுதத்திற்காக கடைந்தனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூர்மாவதாரம் எடுத்து, அதாவது ஆமை உருவெடுத்து மலையை மூழ்காமல் தாங்கினார். இது போன்று சமுத்திரம் கடையப்பட்டு அமுதம் கிடைத்தது. அதன் சில துளிகள் பூமியிலும் விழுந்தன.

2 அ 3. கலியுகத்தில் பாற்கடல் கடைதலில் ஏற்பட்ட மாற்றம்

இன்றைய காலக்கட்டத்தில் அதாவது கலியுகத்திற்குள் உள்ளே கலியுகத்திலும் இது போன்ற சமுத்திர கடைதல் நடந்து வருகிறது. ஆனால் காலத்திற்கேற்றபடி சில கூறுகளும் மாறிவிட்டன. மாறிய வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2 ஆ. சமுத்திர கடைதலின் பல்வேறு கூறுகள் மற்றும் அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்கள்

சமுத்திர கடைதலின் பல்வேறு கூறுகள் உள்ளார்ந்த அர்த்தங்கள்
1. சமுத்திரம் ஸநாதன ஹிந்து தர்மம்
2. கூர்மாவதாரம் பகவான்
3. மந்தார மலை ஆன்மீக உணர்வு
4. வாசுகி பாம்பு ஸாதகர்களின் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை
அ. பாம்பின் தலைப்பகுதி ஸ்ரீகிருஷ்ணனின் கை
ஆ. பாம்பின் வால்பகுதி மகான்களின் ஸங்கல்பம்
5. பாம்பின் இருபுறமும் பிடித்திருப்பவர்கள் ஸாதகர்களும் அவர்களின் தாபமும்
6. அசுரர்கள் லவ் ஜிஹாத், மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள், ஊழல் அரசியல்வாதிகள்  போன்றோர்
7. சிவன் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை அழிப்பவர்
8. அமுதம் ஹிந்து ராஷ்ட்ரம்
2 ஆ 1. ‘ஸநாதன ஹிந்து தர்மம்’ என்ற பாற்கடலை ஸாதகர்கள் கடைதல்

இன்று, ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் மகான்களின் ஸங்கல்ப சக்தியின் அருளைக் கொண்டு ஸநாதனின் ஸாதகர்கள் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை (குறிப்பு 1) என்ற கயிறைப் பிடித்துக் கொண்டு ‘ஸநாதன ஹிந்து தர்மம்’ என்ற பாற்கடலைக் கடைகின்றனர். இந்தக் கயிறு ஆன்மீக உணர்வு என்ற மந்தார மலையை சுற்றி இருக்கின்றது. பகவானின் அவதாரமாகிய ஆமை இந்த மலையை உறுதியாக தன் மேல் சுமந்து கொண்டிருக்கிறது. நமக்கு பகவானின் மீது ஆன்மீக உணர்வு இருந்தால்தான், அவர் நம்மை இந்த பவசாகரத்திலிருந்து கடத்துவிப்பார். ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தன கிரியை தன் சுண்டு விரலால் தாங்கும்போது கோப-கோபியர்கள் குச்சிகளால் தாங்கி உதவினர். அதேபோல் இப்போதும் ஸாதகர்கள் தங்களின் தீவிர ஆர்வம் மற்றும் ஸாதனை ஆகிய பலத்தால் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் தர்மஸன்ஸ்தாபன காரியத்தில் ஈடுபடுகின்றனர். அதனால் ஸாதகர்களின் மூலமாக பகவானே இன்று பாற்கடலைக் கடைகின்றார்.

2 ஆ 2. பாற்கடலைக் கடைந்தபோது எப்படி ஆலகால விஷம் வெளிப்பட்டதோ அதேபோல் இன்று ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் வெளிப்படுகின்றன.

நம்மிடம் தீவிர ஆர்வம் இருக்கும்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் மகான்களின் ஸங்கல்ப சக்தி விழிப்படைகின்றன. அப்போது அவர்களே நம் மூலம் ஸாதனையை நடத்துவிக்கின்றனர். பாற்கடலை கடைதலை ஒத்த இந்த காரியத்தில் எல்லா ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் ஆலகால விஷமாக வெளிப்படுகின்றன. லயத்தின் அதி தேவதையான பகவான் சிவன் ஸாதகர்களின் இந்த ஆளுமை குறைகளையும் அஹம்பாவத்தையும் அழிக்கிறார்.

2 ஆ 3. பாற்கடலைக் கடையும்போது அசுரர்களால் தடங்கல்கள் ஏற்பட்டாலும் பகவானே இந்த பொறுப்பை ஏற்றுள்ளதால் நமக்கு அமுதமான ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ கிடைக்கும்

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் பணியில் ஈடுபட்டனர். இன்றைய கோர கலியுகத்தில் அசுரர்கள் வெளியே இல்லாமல் மனிதர்களுக்கு உள்ளேயே இருந்து கொண்டு லவ் ஜிஹாத், மதமாற்றம், பசுவதை, கோவில்களை கையகப்படுத்துதல், ஊழல் ஆகிய காரியங்களில் ஈடுபட்டு ஸாதகர்களின் இந்த காரியத்தில் தடங்கல்களை ஏற்படுத்துகின்றனர். இருந்தாலும் ஸாதகர்களுக்கு பகவானின் அருள் இருப்பதால் அவர்களின் இப்பணியை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது; க்ஷண நேர ஸங்கல்பத்தால் இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களை படைத்த அந்த பரம்பொருளுக்கு எதுவுமே முடியாதது இல்லை. அதனால் அவரே இந்த கடைதலின் பொறுப்பை ஏற்றுள்ளார். ஸாதகர்கள் மற்றும் ஹிந்துத்வவாதிகளின் இந்த உண்மையான முயற்சிகளின் பலனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அமுதமாகிய ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை அருளப் போகிறார்.

இந்த சித்திரத்தை வரையும்போதும் அதைப் பற்றி சிந்திக்கும்ப்போதும் எனக்கு அதிக ஆனந்தம் ஏற்பட்டது. ‘ஹே பராத்பர குரு டாக்டர் ஆடவலேஜி, என் நன்றியை உங்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எங்களை நீங்களே கவனித்துக் கொள்கிறீர்கள். உங்களின் திருவடிகளில் எப்போதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.’

2 இ. இந்த சித்திரத்தின் சிறப்புத் தன்மைகள்

‘பகவான் ஸ்ரீகிருஷ்ணனே வாசுகி பாம்பின் இருபுறங்களிலும் இருந்து கொண்டு ஸாதகர்கள் மூலமாக இருபக்கமும் இழுக்கிறார். அவர் ஸாதகர்களின் ஆழ்மனங்களை கடைந்து விஷமாகிய அஹம், ஆளுமை குறைகள், அறியாமை ஆகியவற்றை வெளியேற்றுகிறார். அவரே பகவான் சிவனாகவும் மாறி விஷத்தைப் பருகுகிறார். ஆழ்ந்த நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் ஸாதனை செய்யும்போது விஷம் வெளியேறுவதால் சித்தசுத்தி ஏற்படுகிறது.  அத்தகைய தூய மனதிலே தான் பகவான் குடிகொள்கிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணனே அமுதக் கலசத்தை கையில் ஏந்தி ஸாதகர்களின் ஆழ்மனதிற்குள் நுழைந்து ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தத்தை (ஞான அமுதத்தைப் பருகுவதால் கிடைக்கும் ஆனந்தம்) நல்குகிறார். (குமாரி மதுரா போஸ்லே மூலமாக கிடைத்த திவ்ய ஞானம், 18.7.2013, இரவு 10.50 )

குறிப்பு 1 : வ்யஷ்டி ஸாதனை என்பது தனிப்பட்ட ஆன்மீக பயிற்சி; ஸமஷ்டி ஸாதனை என்பது சமூக நலனுக்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி)

தகவல் : ஸநாதனின் புனித நூல் ‘பாலக உணர்வை வெளிப்படுத்தும் சித்திரங்கள் (பகுதி 2) (தர்மத்தைப் பற்றிய செய்திகளைத் தரும் ஸ்ரீகிருஷ்ணனின் சித்திரங்கள்)’

Leave a Comment