ஆபத்துக்காலத்தில் ஆதாரமாக விளங்கும் மொட்டைமாடித் தோட்டம் (டேரஸ் கார்டனிங்) – 1

‘காய்கறி மார்கெட்’ என்பது சர்வசாதாரண வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும்! பெரும்பான்மையான மக்கள் தினமும் சமையலுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்க மார்கெட் செல்கின்றனர். மார்கெட்டில் நமக்குப் பிடித்த காய்கறிகள், ரசமுள்ள பழங்கள் கிடைக்காது, கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். இது பலரின் அனுபவம். அந்த சமயத்தில் ‘உங்கள் வீட்டிலேயே தோட்டம் போடலாம்’ என்று யாராவது கூறினால் நமக்கு அதில் நம்பிக்கை ஏற்படுவதில்லை. ஆனால் அது சாத்தியமே. வீட்டில் தோட்டம் போடுவதற்கு வயல், நிலப்பரப்பு வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே தோட்டம் போடுவதற்கு இடம் ஒரு தடையில்லை. வீட்டின் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் விளிம்பு ஆகிய இடங்களில் தோட்டம் போட முடியும்.

மொட்டைமாடித் தோட்டம்

வரக்கூடிய ஆபத்துக்கால கண்ணோட்டத்தில் இது போன்ற வழிமுறைகள் மிகவும் அவசியம். முக்காலமும் உணர்ந்த மகான்கள் மற்றும் வருங்கால கணிப்பாளர்கள் கூறியுள்ளபடி ஆபத்துக்காலம் ஆரம்பித்து விட்டதால் வரக்கூடிய 5-6 வருடங்களில் பயங்கர ஆபத்துக்காலத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் இன்றுபோல் மார்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்குவது, அதற்கு முதலில் அங்கு செல்வது ஆகியவை முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இன்று கொரோனாவால் காய்கறி வாங்குவதில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன, பொருட்களின் விலைகள் எவ்வளவு உயர்ந்துள்ளன என்பதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். இவ்வாறு இருக்கும்போது வீட்டிலேயே காய்கறி தோட்டம் போடலாம் என்றால் ஏன் அதற்கு முயற்சி செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் வீட்டிலேயே காய்கறிகள், பழங்கள் கிடைக்கும், பணம் சேமிக்கப்படும் மற்றும் வெளியே செல்லும் நேரமும் மிச்சமாகும். இன்று இயற்கை விவசாயத்தின் ஒரு பகுதியாக வீட்டிலேயே மொட்டைமாடித் தோட்டம் போடும் நவீன வழிமுறை வழக்கத்தில் வந்துள்ளது. இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே காய்கறி தோட்டம் எவ்வாறு போடுவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

இந்த கட்டுரையின் அடுத்த பாகத்தைப் படிக்க இந்த இணைப்பில் க்ளிக் செய்யுங்கள் :https://www.sanatan.org/tamil/2569.html

அ. வீட்டுத் தோட்டத்தில் எம்மாதிரியான செடிகளை நடலாம்?

திருமதி கெளரி குல்கர்னி

1. சமையலுக்கு உதவும் காய்கறிகள் : சிவப்பு முளைக்கீரை, கொங்குரா கீரை, பாலக், வெந்தயம், கொத்தமல்லி, சிம்லா மிளகாய், மிளகாய், கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, காரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, கறிவேப்பிலை, முருங்கை, எலுமிச்சை, புதினா, கரும்பு, பூண்டு, இஞ்சி.

2. மூலிகை செடிகள் : துளசி, கற்றாழை, ஆடாதோடை, வல்லாரை, கற்பூரவல்லி, சாத்தாவாரி, சியா விதைகள்

3. பழச்செடிகள் : ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, மாங்காய், அத்தி

4.  பூச்செடிகள் : ரோஜா, சாமந்தி, லில்லி, மல்லிகை, செம்பருத்தி, குண்டுமல்லி போன்றவை.

ஆ. தொட்டிகளின் தேர்வு

மொட்டைமாடியில் தோட்டம் போடுவதற்கு மண்தொட்டிகள் அல்லது கண்டெய்னர் உபயோகிக்கலாம். தொட்டிகளின்  அடிப்பகுதி முடிந்தவரை மிகக் குறுகலாக இருக்கக் கூடாது. தொட்டியின் மேல் விட்டம் 12 இன்ச் மற்றும் கீழ் விட்டம் 10 இன்ச் ஆக இருக்க வேண்டும். தொட்டியின் விளிம்பு உட்புறமாக இருக்கக் கூடாது. தொட்டி பானை வடிவில் இருக்கக் கூடாது. முடிந்தால் மண்தொட்டிகளை வாங்கவும். அவை கிடைக்காவிட்டால் டின் தொட்டிகள், ப்ளாஸ்டிக் டப்பாக்கள், பெரிய ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், முழு அல்லது பாதி வெட்டப்பட்ட ப்ளாஸ்டிக் ட்ரம் மற்றும் மரத்தாலான தொட்டிகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம். மொட்டைமாடியில் தோட்டம் போடுவதற்கு நர்சரிகளில் கிடைக்கும் ‘க்ரோ பாக்ஸ்’ ஆகியவற்றையும் உபயோகிக்கலாம். மார்க்கெட்டிலிருந்து கண்டேனர்கள் வாங்கும்போது வெளிர் நிறத்தில் இருந்தால் நல்லது. அப்போது அதிக வெப்பம் ஈர்க்கப்படாது.

பாதி வெட்டப்பட்ட ப்ளாஸ்டிக் ட்ரம் தொட்டி

மொட்டைமாடித் தோட்டத்தில் பெரும்பான்மை செடிகளை தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம். எதன் வேர்கள் சிறியதாக உள்ளதோ அவற்றை சிறிய தொட்டிகளில் வளர்க்கலாம். தக்காளி, முள்ளங்கி, காரட் போன்ற செடிகளை மத்ய அளவுள்ள தொட்டிகளில் வளர்க்கலாம். பெரிய செடிகளுக்கு பெரிய கண்டெய்னர் அல்லது ப்ளாஸ்டிக் அல்லது டின் ட்ரம்களில் வைக்கலாம். மேலே செல்லக்கூடிய கொடிகளை சுவர்களில் அல்லது பைப்களில் ஏற்றி விடலாம். அதன் மூலம் கிடைக்கும் இடத்தை முழுமையாக உபயோகிக்க முடியும்.

இ. தொட்டிகள் அல்லது கண்டெய்னர்களில் துளைகள் அவசியம்

க்ரோ பாக்ஸ்

காற்றோட்டம் இருப்பதற்கு தொட்டிகள் அல்லது கண்டெய்னர்களில் துளைகள் இருத்தல் அவசியம். சர்வ சாதாரண ப்ளாஸ்டிக் தொட்டியாக இருந்தால் அதில் அடிப்பகுதியில் 4-5 துளைகள் மற்றும் சுற்றுப்புறத்தில் 10-12 துளைகள் 4-5 இன்ச் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். ப்ளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டில் உபயோகித்தாலும் இது போல் அவற்றில் துளைகள் இருக்க வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் ‘க்ரோ பாக்ஸ்’கள், துளைகளுடன் கிடைக்கின்றன.

ஈ. தொட்டியை எவ்வாறு நிரப்ப வேண்டும்?

தொட்டியை நிரப்புவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று உங்களிடம் உள்ள மண்ணை அந்தத் தொட்டியில் நிரப்பலாம். அல்லது மண், தேங்காய் மட்டை மற்றும் உரம் கலந்த கலவையை நிரப்பலாம். அல்லது தோட்ட வேலை செய்யும் சமயத்தில் மரத்திலிருந்து விழும் காய்ந்த இலைகள், சருகுகள் ஆகியவற்றை மக்கச் செய்து அதை உபயோகிக்கலாம்.

எந்த மண்ணில் கார்பன் அதிகமாக உள்ளதோ அதற்கு அதிக தண்ணீர் விடத் தேவையில்லை. ஏனென்றால் அந்த மண் தண்ணீரை தக்க வைத்துக் கொள்கிறது. சிவப்பு மண்ணில் ஊட்டச்சத்து குறைவு, ஆனால் தண்ணீர் வடிகால் அதிகம்.அதற்கு மாறாக கருப்பு மண்ணில் ஊட்டச்சத்து அதிகம் மற்றும் அதில் தண்ணீர் வடிகால் குறைவு. மொட்டைமாடியில் தோட்டம் போடும்போது ஊட்டச்சத்து அதிகம் கொண்ட தண்ணீர் வடிகால் உள்ள மண்ணே சிறந்தது. நீங்கள் கருப்பு மண்ணை உபயோகித்தால் அதில் கையளவு ஆற்று மண்ணை கலந்து விட வேண்டும்.

நீங்கள் சிவப்பு மண்ணை உபயோகித்தால் தேங்காய் மட்டை உரத்தையும் (தேங்காய் மட்டையிலிருந்து உருவாக்கப்படும் இயற்கை உரம். இந்த உரம் செங்கல் வடிவத்திலும் கிடைக்கும்.) அதில் சேர்க்கலாம். காரணம் அது தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. உங்களின் வீடு சமுத்திரத்திற்கு அருகே இருந்தால் தேங்காய் மட்டை உரத்தை உபயோகிக்க வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் சமுத்திரத்திற்கு அருகே உள்ள இடத்தில் ஈரத்தன்மை அதிகம் இருக்கும். அதனால் அங்கு தேங்காய் மட்டை உரத்தை உபயோகித்தால் தண்ணீரின் அளவு அதிகமாகி செடி இறக்கக் கூடும்.

தேங்காய் மட்டை உரம் (தேங்காய் மட்டையிலிருந்து
உருவாக்கப்படும் இயற்கை உரம்.
இந்த உரம் செங்கல் வடிவத்திலும் கிடைக்கும்.)

முதலில் தொட்டியின் அடிப்பாகத்தில் தேங்காய் மட்டையை நன்கு உரித்து பரப்பவும். அதன் மீது காய்ந்த சருகுகளை குச்சிகளை பரப்பவும். அதன் மீது ஒன்றரை முதல் இரு இன்ச் வரை காய்ந்த இலைகளை அழுத்தி வைக்கவும். அதன் மீது மண்ணை நிரப்பவும். தொட்டியின் மேல் பகுதியில் 2 இன்ச் காலியாக விடவும். அதன் மீது செடியை நட்டு மீண்டும் காய்ந்த இலைகளை பரப்பவும். பிறகு அதன் மீது சிறிது தண்ணீர் விடவும்.

வெறும் மண் மட்டுமல்லாமல் மண்ணுடன், தேங்காய் மட்டை உரம் மற்றும் இயற்கை உரத்தை கலந்து உபயோகிக்கவும். தேங்காய் மட்டை உரத்தை 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு பிழிந்து எடுக்கவும். அதை மண்ணுடன் கலக்கலாம். இது போன்ற மண்ணை தொட்டியில் நிரப்பி அதில் காய்ந்த சருகு இலைகள் மற்றும் காய்ந்த வேப்பிலையை பரப்பவும். இது போன்று தொட்டியை நிரப்பி அதில் நீங்கள் செடியை நடலாம், விதையை விதைக்கலாம்.

–    தொகுத்தவர் : திருமதி கெளரி நீலேஷ் குல்கர்னி, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

ஸாதகர்கள், வாசகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு ஒரு விண்ணப்பம்!

இந்த கட்டுரையில் கூறியுள்ளபடி உங்களில் சிலர் தோட்டத்தை அமைக்கும்போது எல்லோருக்கும் பயன்படும்படியான உங்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மிக சுலபமாக நாம் நடைமுறைப்படுத்தக் கூடியவை. இருந்தாலும் குறைந்த இடத்தில் அதிக உற்பத்தி தரக்கூடிய ‘ஹைட்ரோபோநிக்ஸ்’ போன்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற சில வேறு வழிமுறைகளை பயன்படுத்தியிருந்தால் அவ்வழிமுறையின் தகவல்கள் மற்றும் அனுபவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பினால் அது தினசரி ‘ஸனாதன் பிரபாத்’தில் பிரசுரிக்கப்படும்.

திருமதி பாக்யஸ்ரீ ஸாவந்த், ‘ஸனாதன் ஆச்ரமம்’, 24/B, ராம்நாதி, பாந்திவடே, போண்டா, கோவா – 403401

மொபைல் எண் 7058885610

கணினி முகவரி : [email protected]

 

 

Leave a Comment