சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 2

செயல் மற்றும் சிந்தனை
அளவில் நடக்கும் தவறுகளுக்கான
சுய ஆலோசனை வழங்க ‘அ1’ வழிமுறை!

ஸத்குரு (திருமதி) பிந்தா ஸிங்க்பால் 

இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறோம். கட்டுரை எண் 1-ல் பல்வேறு சுய ஆலோசனைகளை வழங்குவதன் அசாதாரண மகத்துவத்தைப் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் ‘அ1’ சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். (கட்டுரை எண். 2)

பெரும்பான்மையான ஸாதகர்கள் ‘அ1’ சுய ஆலோசனை வழிமுறையைக் கையாள்கின்றனர். சிந்தனை, செயல் மற்றும் உணர்வு நிலையில் நடக்கும் தவறுகளின் மீது சுய ஆலோசனை வழங்க இந்த சுய ஆலோசனை வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது.

1.   சுய ஆலோசனையின் ஸ்வரூபம்

தவறான சிந்தனை, செயல் மற்றும் உணர்வு பற்றிய விழிப்புணர்வு -> சரியான செயலுக்குரிய கண்ணோட்டம் மற்றும் பரிணாமம் -> தீர்வான யோசனை (நிகழ்வுக்கேற்றவாறு சரியான செயல் மற்றும் சிந்தனை)

‘அ1’ சுய ஆலோசனை வழிமுறையில் மேலே குறிப்பிட்டபடி சுய ஆலோசனை வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறான வாக்கிய அமைப்பால் தவறான சிந்தனை, உணர்வு மற்றும் தவறான செயல் பற்றி ஒரு நபரால் உணர முடிகிறது. பிறகு அது கட்டுப்படுத்தப்பட்டு சரியான செயல் செய்வதற்கான ஸன்ஸ்காரம் ஏற்படுகிறது.

2.   இவ்வகை சுய ஆலோசனையை பயன்படுத்தி
கீழ்க்கண்ட ஆளுமை குறைகளை மற்றும் தவறான
செயல்களை திருத்திக் கொள்ள இயலும்!

மன ஒருமைப்பாடு இல்லாதது, மனோராஜ்யத்தில்  அமிழ்ந்திருப்பது, கவலைப்படுவது, பொறுப்பின்மை, அவசர செயல்பாடு, சோம்பல், பொருட்களை சீராக வைக்காதிருப்பது, நேரத்திற்கு செல்லாமல் இருப்பது, அதிக ஆராய்ச்சி செய்வது, பிறரின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தல், சுயநலம், நம்பிக்கையின்மை, சந்தேகப்படுவது, கர்வப்படுவது, தற்பெருமை, லக்ஷியங்களின் பின் ஓடுதல், சீராக வைப்பதில் அதிக கவனம், தீர்மானிக்க இயலாமல் இருப்பது, சம்ப்ரதாயத்தில்  உழலுதல், ஊழலில் ஈடுபடுதல், நீதிநெறிப்படி நடக்காதது போன்ற ஆளுமை குறைகள்; சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்ற போதைப் பழக்கங்கள்; நகத்தை கடிக்கும் வழக்கம், தெளிவில்லாமல் பேசுதல், எட்டு வயது ஆகியும் படுக்கையில் மலஜலம் கழித்தல் போன்ற தவறான செயல்கள்.

3.   ‘அ1’ என்ற சுய ஆலோசனை வழிமுறைப்படி
வடிவமைக்கப்பட்ட சரியான சுய ஆலோசனைகளின் உதாரணங்கள்

அ. செயலளவில் சுய ஆலோசனை

‘எப்பொழுது என் மகன் சரவணன் அதிக நேரம் டிவி பார்ப்பதை கண்டிக்காமல் இருக்கிறேனோ, அப்பொழுது ‘அவன் மனதில் நல்ல ஸன்ஸ்காரங்களை பதிய வைப்பது என் கடமை’ என்பதை உணர்ந்து அவனிடம் பிரார்த்தனை செய்ய சொல்லி பின் படிக்க வைப்பேன்.’

(இந்த சுய ஆலோசனையில் சரவணன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுய ஆலோசனையை வடிவமைக்கும்போது சம்பந்தப்பட்டவரின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால வரையறைக்குள் முடிக்கப்பட வேண்டிய காரியமாக இருந்தால் அந்த தேதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.)

ஆ. சிந்தனை அளவில் சுய ஆலோசனை

‘எப்பொழுதெல்லாம் மாமியாருடன் பேசும்போது மன அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்பொழுது ‘நேர்மையாக ஒளிவு மறைவில்லாமல் அவரிடம் பேசுவதால் வீட்டில் சுமுகமான சூழ்நிலை ஏற்படும்’ என்பதை உணர்ந்து இனி மனம் விட்டு அவரிடம் பேசுவேன்.

4.   நான்கு நிலைகளில் சுய ஆலோசனை வழங்குதல்

இந்த சுய ஆலோசனை வழிமுறையில்

அ. தவறு ஏற்பட்ட பின்னர்
ஆ. தவறு ஏற்படும்போது
இ. தவறு ஏற்படுவதற்கு முன்னால் மற்றும்
ஈ. சரியான செயல் நடைபெறுவதற்காக சுய ஆலோசனை

என்று நான்கு நிலைகளில் சுய ஆலோசனை வழங்க வேண்டி உள்ளது. தவறான செயல் பற்றிய விழிப்புணர்வு எந்த நிலையில் ஏற்படுகிறதோ அதற்கு அடுத்த நிலைக்கான சுய ஆலோசனையை வழங்க வேண்டும்.

5.   ஆன்மீக உணர்வு பூர்வமாக சுய ஆலோசனை
வழங்குவதன் மகத்துவம் மற்றும் உதாரணங்கள்

சுய ஆலோசனையை மானசீக நிலையில் வழங்குவதோடு கூட ஆன்மீக உணர்வுபூர்வமாகவும் வழங்குவதால் சுய ஆலோசனை அதிக பலனளிப்பதாக மாறுகிறது. இந்த அநுபூதி பல ஸாதகர்களுக்கு கிடைத்துள்ளது. சுய ஆலோசனையை வெறும் மானசீக கண்ணோட்டத்தில் வழங்க வேண்டுமா அல்லது ஆன்மீக உணர்வுபூர்வமாக வழங்க வேண்டுமா என்பது அவரவர் நிலையைப் பொருத்தது. இரு வகைப்பட்ட சுய ஆலோசனைகளின் உதாரணங்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

அ. மானசீக நிலையில் சுய ஆலோசனை

‘எப்பொழுது அம்மா என்னிடம் மாலையில் தோட்டத்திற்கு தண்ணீர் விடும்படி கூறுகிறாரோ , அப்பொழுது ‘மறதி காரணத்தால் தண்ணீர் விட தவறி விடுவேன்’ என்பதை உணர்ந்து உடனே எழுதி வைத்துக் கொண்டு மாலை தோட்டத்திற்கு தண்ணீர் விடுவேன்.’

(‘மாலை தோட்டத்திற்கு தண்ணீர் விடுவேன்’ என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட நேரத்திற்குள், அதாவது மாலை 6 மணிக்குள் தண்ணீர் விடுவேன் எனக் கூறலாம்.)

ஆ. ஆன்மீக உணர்வு நிலையில் சுய ஆலோசனை

‘எப்பொழுது அம்மா என்னிடம் மாலையில் தோட்டத்திற்கு தண்ணீர் விடும்படி கூறுகிறாரோ , அப்பொழுது ‘மறதி காரணத்தால் தண்ணீர் விட தவறி விடுவேன்’ என்பதை உணர்ந்து உடனே எழுதி வைத்துக் கொண்டு ‘ஹே இறைவா, இந்த சேவையை நான் நேரத்துடன் சரியானபடி முடிக்கும்படி நீயே அருள்வாய்’ என பிரார்த்தனை செய்வேன்.’

– (ஸத்குரு) திருமதி பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (23.12.2017)

 

Leave a Comment