ஆதர்ச ஆளுமையை வளர்த்துக் கொள்வதன் அவசியம்

தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்விதமான கடினமான சூழ்நிலையிலும் மனதின் சமநிலை குலையாமல் இருப்பதற்கும், அதை தைரியமாக எதிர்கொள்வதற்கும், அத்துடன் ஒவ்வொரு காரியமும் ஆதர்சமாக நடப்பதற்கும் ஒருவரின் மனோபலம் மிக உத்தமமாகவும், ஆளுமை ஆதர்சமானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவரின் ஆளுமை குறைகள், அவரின் மனோபலம் குறைய காரணமாகிறது. ஆனால் அவரிடமுள்ள குணங்கள் அவரின் ஆளுமை ஆதர்சமாக மாறுவதற்கு உதவுகிறது. அதனால் ஆதர்ச ஆளுமையை வளர்த்துக் கொள்ள ஒருவர் தன்னுடைய ஆளுமை குறைகளைக் களைந்து நற்குணங்களை மேம்பட செய்வது அவசியமாகிறது. இக்கட்டுரையில் ஒருவரிடமுள்ள சில ஆளுமை குறைகளைக் களைவதற்கு செய்ய வேண்டிய முயற்சிகள் பற்றிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

1.   சுக வாழ்வு வாழ்வதற்கு பெரும்
தடையாக இருக்கும் ‘ஆளுமை குறைகள்’

‘மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:’ என்ற வசனப்படி மனமே மனிதனை பந்தப்படுத்தும் (பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் மாட்ட வைக்கும்) அல்லது மோக்ஷத்தை (பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டு சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் மற்றும் சாந்தி ஆகிய அனுபூதிகளை தினமும் அனுபவிப்பதற்கு) காரணமாகிறது. ஒருவரின் ஆளுமை குறைகள் அவரின் துக்கங்களுக்கு காரணமாகவும் அவரின் குணங்கள் அவரின் சுகங்களுக்கு காரணமாகவும் அமைகின்றன. தினசரி வாழ்வில் பல்வேறு சம்பவங்களில் நாம் நடந்து கொள்ளும் விதத்திலிருந்து நம்மிடமுள்ள குண-குறைகள் தெரிய வருகின்றன. ஆளுமை குறைகளால் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் போராட்டங்களும் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகின்றன. இது போன்று அழுத்தமான சூழ்நிலை உருவாகும்போது அதன் தாக்கம் சுற்றுப்புற சூழலிலும் மற்றவரிடமும் ஏற்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக உள்ள தன்னுடைய ஆளுமை குறை என்ன என்பதை அறிவதற்கான முயற்சி எடுக்கப்படுவதில்லை. அதனால் ஆளுமை குறைகள் அப்படியே தங்கி விடுகின்றன. இதன் பலனாக மன சாந்தி கிடைப்பதில்லை. அதனால் வாழ்வு சுகமயமாவதற்கு ஆளுமை குறைகளாகிய தடைகளை தூர விலக்குவது அவசியமாகிறது.

2.   ஆளுமை குறைகள் ஆன்மீக
முன்னேற்றத்திற்கும் தடையாக இருத்தல்

இறைவனை அடைய செய்யப்படும் முயற்சிகளில் அதாவது ஸாதனையிலும் ஆளுமை குறைகள் (ஆறு பகைவர்கள்) முக்கிய தடைகளாக உள்ளன. ஆளுமை குறைகளின் மூலமாக ஆறு பகை குணங்களான காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் ஆகியவை  வெளிப்படுகின்றன. அதனால் ஸாதனையின் மூலம் கிடைக்கும் சக்தி ஆளுமை குறைகளால் ஏற்படும் தவறுகளால் செலவாகிறது. எந்த அளவிற்கு ஆளுமை குறைகள் அதிகமாக உள்ளனவோ அந்த அளவிற்கு வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி நிலையில் அதிக தவறுகள் ஏற்படுகின்றன; எந்த அளவிற்கு தவறுகள் ஏற்படுகின்றனவோ அந்த அளவிற்கு இறைவனிடமிருந்து தூர விலகி செல்கிறோம். எப்படி பாசி படிந்த நீரினுள் சூரிய கிரணங்கள் புக முடியாதோ அதேபோல் ஆளுமை குறைகளால் ஈச்வர சைதன்யத்தை உள்வாங்க முடிவதில்லை. அதனால் ஸாதகர் இறைவனிடமிருந்து விலகிப் போகிறார். இறைவனோடு இரண்டறக் கலப்பது என்பதுவே எந்த ஒரு யோக வழியில் ஸாதனை செய்யும் ஸாதகரின் லட்சியமாக உள்ளது. எப்படி ஒரு துளி எண்ணெய் தண்ணீருடன் கலக்காதோ அதேபோல் ஆளுமை குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக் கொள்ளாமல் ஸாதகரால் சகல கல்யாண குணங்களின் உறைவிடமாகத் திகழும் இறைவனுடன் ஒன்ற முடியாது. அதனால் ஸாதனையில் தடையாக உள்ள ஆறு பகை குணங்களை வென்று இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு ஆளுமை குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது.

3.   ஸாதனையில் ஆளுமை குறைகளைக்
களையும் முயற்சியையும் சேர்த்துக் கொள்வதன்
இன்றியமையாத தன்மை

ஸாதனை செய்வதால் ஆளுமை குறைகள் தானே விலகி விடும் என்று சிலர் நினைக்கின்றனர். தத்துவ கண்ணோட்டத்தில் இது தவறில்லை என்றாலும் செயல்முறையில் இது நடக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. ஸாதனை செய்வதன் நோக்கம், இறைவனை அடைய ஆர்வம், அந்தக்கரணத்தில் இறைவன் மீது ஏற்பட்டுள்ள கேந்திரம், செயல்முறை ஸாதனை ஆகிய பல விஷயங்களைப் பொருத்தே இது அமைகிறது. ஸாதனையின் நோக்கம் ஆறு பகை குணங்களைக் களைவது ஆகும். அதாவது எல்லா விதங்களிலும் செயல்-எதிர்விளைவு ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் ஆகும். இருந்தாலும் ஆளுமை குறைகள் என்பவை சித்தத்தில் ஜன்மஜன்மாந்திரமாக பதிந்துள்ள ஸன்ஸ்காரங்கள் என்பதால் மிக ஆழமாக பதிந்துள்ள அவற்றை நீக்குவது என்பது சுலபமல்ல. ஸாதனையில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டு மனோலயம் புத்திலயம் ஏற்படும் வரை அதாவது சித்தத்திலுள்ள ஸன்ஸ்காரங்கள் அழிக்கப்படும் வரை மனமும் புத்தியும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் ஆளுமை குறைகளும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மனதில் ஏற்படும் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் விகல்பங்களால் ஸாதனையின் மூலம் ஆனந்தம் கிடைக்காமல் ஸாதகர் மனதளவில் மாட்டிக் கொள்கிறார். அதனால் ‘ஸாதனையின் மூலம் ஆளுமை குறைகள் தானே விலகி விடும் என்று எண்ணாமல் ஆளுமை குறைகளைக் களைவதற்கு அயராத முயற்சி எடுப்பது இன்றியமையாததாகிறது.

4.   ராஷ்ட்ரத்தின் பரிதாபகர நிலையை சரி செய்வதற்கு
நல்ல ஸன்ஸ்காரங்கள் உள்ள சமூகம் அவசியமாகிறது

தனி மனிதன் மற்றும் சமூகத்தின் நலன் பரஸ்பரம் இருவரையும் சார்ந்து உள்ளது. தனி மனித வாழ்வில் சமூக நிலையின் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தனி மனித நலனை கருத்தில் கொள்ளும்போது சமூக நலன், தேச நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. இன்றுள்ள சமூக அமைப்பில் பல துர்குணங்கள் அதிக அளவில் கோலோச்சுகின்றன. இதை நாம் தினசரி வாழ்வில் அனுபவிக்க முடிகிறது. பாரதத்தில் அரசியல்வாதிகள், பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் தார்மீக தலைவர்கள் ஆகிய நான்கு முக்கிய சமூக அங்கத்தினர்கள் இடையே ஆளுமை குறைகள் மிகுந்து காணப்படுகிறது. அதனால் வெறும் அரசுத் துறைகளில் மட்டுமல்ல, சமூக, நீதி, கல்வி ஆகிய அனைத்து துறைகளிலும் சிறிதளவோ பெரிதளவோ தரம் தாழ்ந்துள்ளது. அனைத்து தேசவாசிகளும் தர்மம் மற்றும் நீதியை மறந்துள்ளனர். பெருமளவு நடக்கும் தர்ம நிந்தனையால் தேசம் இத்தகைய தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள தீய குணங்களைக் களைந்து நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது சமூக அங்கத்தினர் ஒவ்வொருவரின் கடமையாகிறது. சமூகத்தை நல்வழிப்படுத்தவும் சமூகத்தினரிடையே ஒற்றுமையைக் கொண்டு வரவும் ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் குணங்களை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமாகிறது.

தகவல் : ஸனாதனின் நூல் ‘ஆளுமை குறைகளைக் களைவதன் மகத்துவம் மற்றும் குணங்களை வளர்ப்பதன் செயல்முறை’

Leave a Comment